Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிசோதனைக்காக வடக்கு மாகாணசபையில் காத்திருந்து வீடு திரும்பிய முன்னாள் போராளிகள்!

Featured Replies

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சில போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அங்கு வருகை தந்தபோராளிகளே காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர்.

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு திருமண நிகழ்வெனவும், அனைவரும் திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளதால் குறித்த போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டை சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=38314

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Athavan CH said:

முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு திருமண நிகழ்வெனவும், அனைவரும் திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளதால் குறித்த போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

வேலை நேரத்தில... எல்லாருக்கும் லீவு கொடுத்தவன் எவன்?

வெட்கம் கெட்டவர்களுக்கு......
கேக் வெட்டவும், கலியாணமும் தான் முக்கியமோ.......
முன்னாள் போராளியை.... வட மாகாண சபையும், புறக்கணிக்குது என்றால்....
அந்தச் சபைக்கு பொறுப்பானவர்களின் செயலுக்கு, இறைவனின்....சாபம் கிடைப்பது, நிச்சயம். :mellow:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அரசியலின் பலிக்கடாக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

வேலை நேரத்தில... எல்லாருக்கும் லீவு கொடுத்தவன் எவன்?

வெட்கம் கெட்டவர்களுக்கு......
கேக் வெட்டவும், கலியாணமும் தான் முக்கியமோ.......
முன்னாள் போராளியை.... வட மாகாண சபையும், புறக்கணிக்குது என்றால்....
அந்தச் சபைக்கு பொறுப்பானவர்களின் செயலுக்கு, இறைவனின்....சாபம் கிடைப்பது, நிச்சயம். :mellow:

இவர்கள் தவறாக வழிநடாத்தப் படுகின்றனர். சட்டம் தெரிந்த விக்கியர் கூடவா, இதில் அரசியல் செய்வது?

இது வேறு ஒரு திரியில் எனது பதிவு: 

இவர்கள், உண்மையிலே, சுகாதார அமைச்சர் சொன்னது போல, முதல் யாழ் ஆஸ்பத்திரிக்கு அல்லவா செல்லவேண்டும். 

முதல் மருத்துவ ஆய்வை மேற்கொண்டு, அடிப்படையில் இப்படி பிரச்சனை இருப்பது போல் படுகிறது, என்றால் மேலதிக ஆய்வுக்காக வைத்தியர்கள் சிபார்சு செய்வதே சரியான வழிமுறை.

அப்படி செய்தால், அரசுக்கு வேறு வழி இருக்காது.

இதற்குள் அரசியலை இழுத்து....

முறையாக அணுகப் படும் வரை, அரசும், அரசியல்தான் செய்யும்.

யாழ் வைத்தியசாலை, இலண்டன், அமெரிக்க, அவஸ்திரேலிய, கனடிய, அமெரிக்க, தமிழ் டாக்டர்களின், அரச அங்கீகாரத்துடனான பங்களிப்பில் சிறந்த உபகரணங்கள் கொண்டதாகவும், சிறந்த சேவையளிக்கும் நிறுவனமாக மாறிவருவதால், சிங்களமக்கள் பெருமளவில் சிகிச்சைக்காக வருகின்றனர். அதையே சுகாதார அமைச்சர் ரஜித்தா, யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வைத்தியர்கள் அமெரிக்க கடற்படை வைத்தியர்களிலும் பார்க்க திறமையானவர்களே என்றார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வைத்தியசாலையில் சேவை செய்பவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்களே, பரிசோதனையின் பெரும்பாலானவைகள் கொழும்புக்கே அனுப்பி வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் சாதித்தியமுண்டு. இது சிறந்த வழி எனத்தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாழ் வைத்தியசாலையில் சேவை செய்பவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்களே, பரிசோதனையின் பெரும்பாலானவைகள் கொழும்புக்கே அனுப்பி வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும் சாதித்தியமுண்டு. இது சிறந்த வழி எனத்தோன்றவில்லை.

அவர்கள் அங்கே கிடைக்கக் கூடிய, அரச வைத்திய சிபார்சுக் கடிதத்துடனேயே அடுத்த நடவடிக்கை குறித்து பேச முடியும்.

அல்லது அரசியல் நோக்கத்துடன் வெறும் கையால் அவல் போடுகிறார்கள் என்ற தென்இலங்கை குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாது.

உதாரணமாக ஒருவர் எதிர்காலத்தில் டாக்டராக படிக்க கனவு காணலாம்.... ஆனால் அஞ்சாப்பு, ஒ லெவல், ஏலெவல் என்ற முறையாக போகாமல்...பள்ளிக்கே போகாமல், நான், டாக்டராகோணும்...... டாக்டராகோணும் என்று துள்ளினால் எப்படி..?

சுகாதார அமைச்சர் ரஜித்த, இனவாதமற்ற சிறந்த சிங்கள அரசியல்வாதி. அவர் சொன்னது சரியானது. 

முன்னாள் போராளிகள் முதலில் வைத்தியசாலை போக வேண்டும். அவரகளது சந்தேகத்தை பரிசீலனை செய்வது டாக்டர்கள் தான், அரசியல்வாதிகள் அல்ல.

டாக்டர்களிடம் போவதில் உள்ள தடை என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 பரிசோதனையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு அது வெளிவரும் பட்ஷத்தில் அது தவறு என்று நிரூபிக்கவும், மாற்றிஅமைக்கவும் சந்தர்பங்கள் நிறைய உண்டு நாதமுனி. கடந்தகால அனுபவங்கள் ஏராளம். முந்தய  தேர்தலின்போது மோசடிகள் இடம்பெற்றது எனக்கூறிய ஆணையாளர் முடிந்ததும் அப்படி ஏதும் இடம்பெறவில்லை என்று கையை விரித்த்துவிட்டார். வன்னியில் அரசு செய்த அட்டூழியங்களை வெளியிட்ட தமிழ் வைத்தியர்கள் பின் மாற்றிப்பேசியதும் நீங்கள் அறிந்ததே. வீணாக நம் தமிழ் வைத்தியர்களை இக்கட்டில் மாட்டி விடுவது நல்லதல்ல. எதுவானாலும் இரகசியமான ஆனால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விசேடமாக இலங்கை அரசால் நிராகரிக்கவோ, தட்டிக்கழிக்கவோ முடியாத வகையில் செய்ய முடியுமானால் செய்வதே நல்லது. இல்லையெனில் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் போல, அந்தப் போராளிகளை மேலும் சிக்கலில் மாட்டி விடும். போர்க்குற்றமே நடைபெறவில்லை, விசாரணையே  தேவையற்றதென வாதிடும், மகிந்தர் குடும்பத்தையும், நாடடையும் காப்பாற்றி வி ட்டோம் என்பவர்கள் நாட்டில்  இதை சரியாக செய்ய முடியும் என நான் எண்ணவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.  ஒரு சாதாரண குற்றத்துக்கே நீதி கிடைக்காத நாடு இது. இது எனது அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22 August 2016 at 0:49 AM, satan said:

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள், நாம் பரிசீலனை செய்தோம், பிரச்சனை இருப்பது போல படுகிறது,மேலதிக பரிசீலனை தேவை என்று சொல்லியிருந்தால்... இன்று இந்த விடயம் ஐ.நா வரை போயிருக்கும்.

அரசியல்வாதிகள் கைகளில் சிக்கி நாறிவிட்டது. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.