Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போட இடமளிக்க முடியாது!

Featured Replies

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இரனைமடுவில் பௌத்த சிலை நிர்மாணிப்பதனை தடுக்குமாறு கோரி வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் குறித்து சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை.

இரணைமடு என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான பகுதி என நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும்.

மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்த அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆடவிட்டு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்.

இதற்கு முன்னரும் பிரபாகரனின் சிலையை அமைப்பதற்கு சிலர் முயற்சித்தனர்.இவை எல்லாம் வடக்கு மக்களின் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக மேற்கொள்ள முயற்சிகளாக மட்டும் கருதப்பட வேண்டும்.

இரணைமடுவில் இராணுவத்தினர் பௌத்த சிலை அமைப்பது அரசாங்க காணியிலாகும்.

இன்னமும் அரசாங்கத்திடமே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் 70 வீதமான மக்கள் சிங்கள பௌத்தர்களாகும்.வட மாகாணசபையில் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகளை செய்தாலும், மத்திய அரசாங்கம் இவ்வாறான கருத்துக்களை வெறும் வொய்ஸ் கட்டாக மட்டுமே பார்க்கும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/114747

  • தொடங்கியவர்

ரஞ்சன் ராமநாயக்க தனது இனமதவெறி ஆட்டத்தை ஹிருணிகா போன்றவர்களுடன் நிறுத்திக் கொள்வது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் வடக்குக் கிழக்கில் சிங்கள ஆட்சியாளர்களினதும் ஆக்கிரமிப்பு இராணுவத்தினதும் ஆட்டத்துக்கும் ஆட முடியாது. இதை சர்வதேசத்திடம் சொல்லுங்க விக்கி ஐயா. சர்வதேசம் என்ற அந்த ஒற்றைச் சொல்லைத் தவிர... இப்ப சிங்களவனுக்கு ஒரு பயமும் இல்லை.. என்பது தெரிந்ததே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இதற்கு முன்னரும் பிரபாகரனின் சிலையை அமைப்பதற்கு சிலர் முயற்சித்தனர்.இவை எல்லாம் வடக்கு மக்களின் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக மேற்கொள்ள முயற்சிகளாக மட்டும் கருதப்பட வேண்டும்.

இரணைமடுவில் புத்தர் சிலை வைப்பதும் தெற்கில்  பிரபல்யம் அடைய என்பதும் ஒரு காரணம் தானே.

இவரில்  ரம்புக்வலவின் இரத்தம் ஓடுகிறது என்பது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்யிறதெல்லாம்...... அடாத்து வேலை.
அதுக்குள்ளை..... ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கொழுப்புக் கதையும் கதைக்க வேண்டி இருக்கு.  :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.