Jump to content

'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது'


Recommended Posts

'ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் பிரான்ஸில் இருந்தே கசிந்தது'

 

 
படம்: ராய்ட்டர்ஸ்.
படம்: ராய்ட்டர்ஸ்.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் பிரான்சிலிருந்தே கசிவானதாகவும், இந்தியாவிலிருந்து அல்ல என்றும் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவர்ட் கேமரூன் என்பவர் ஆஸ்திரேலியாவின் முன்னணி புலனாய்வு நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை.

'Restricted Scorpene India' என்ற தலைப்பில் உள்ள அந்த ஆவணத்தில் மிக மிக நுட்பமான போர் யுக்திகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் 4,457 பக்கங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் கடலுக்கடியில் செயல்படும் சென்சார் குறித்தும், 4,209 பக்கங்களில் நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும், 4301 பக்கங்களில் போர் யுக்திகள் குறித்தும், 6,841 பக்கங்களில் தொலை தொடர்புகள் குறித்தும், 2138 பக்கங்களில் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகையின் கூற்றின்படி இந்த ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டும் பிரான்ஸ் நாட்டால் இந்தியாவுக்காக கணினியில் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டு டிசிஎன்எஸ் நிறுவனத்தின் சப் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் ஓர் அதிகாரியால் இந்த ஆவணம் நீக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு நிருபர் ஸ்டீவர்ட் கேமரூன் அளித்த தனிப் பேட்டி வருமாறு:

இந்தத் தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்?

2011-ம் ஆண்டு பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் ஊழியர் கசியவிட்ட தகவலைத்தான் நான் இப்போது வைத்துள்ளேன். இதுதான் என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல் என்பதை மீண்டும் நான் அழுந்தக் கூறவிரும்புகிறேன். இந்தத் தகவலை நானே தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய வழிவகையில்லை.

டிசிஎன்எஸ் நிறுவன ஊழியர் மூலம் கசியவிடப்பட்ட தகவல்களாகும் இது. இதனை அவர் தென் கிழக்கு ஆசியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார், அதாவது தனது நம்பகத்தன்மைக்கான உத்தரவாதமாக இதனை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தகவலை அளிக்கவில்லை. இந்த நபர் பல்வேறு காரணங்களுக்காக தரவுகளை ஒன்று திரட்டியுள்ளார், ஒரு தனியார் நிறுவனம் அந்தக் கசிவுத் தகவல்களை பெறுவதில் முடிந்தது. பிறகு இந்த தரவு வேறொரு நாட்டில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு தருணத்தில் எந்த வித பாதுகாப்பு அக்கறைகளும் இல்லாமல் ஆஸ்திரேலிய நிறுவனத்திற்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் இவைதான் என்னிடம் தெரிவிக்கப்பட்ட தகவல்கள். ஆனால் கசிவு இந்தியாவிலிருந்து வந்ததாக நான் நம்பவில்லை. அது பிரான்சிலிருந்தே கசியவிடப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தின் தன்மை என்ன?

யார் வசம் இந்தத் தரவுகள் உள்ளன என்பதைப் பொறுத்த விஷயம் அது. ஆனால் கசியவிடப்பட்ட இந்தத் தரவுகள் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியவை. பெரிய அளவிலான தரவுகள். ஸ்கார்பீனின் போர் யுக்திகள், போர்முறை தொழில்நுட்ப அமைப்பு, அதன் காலம், அது தாக்கவல்ல தூரம் என்று எந்த ஒரு கடற்படையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாதது.

இந்தத் தரவுகள் எதிராளி நாட்டிடம் சென்றுள்ளதா என்பதை அறியும் நிலையில் நான் இல்லை. பகை உளவுத்துறையிடம் சிக்கியிருந்தால் பதற்றமடையத் தேவையில்லை. ஆனால் பகைநாட்டிடம் சிக்கியிருந்தால் அது ஸ்கார்பீன் நீர்முழ்கிக் கப்பல் திட்டத்திற்கு பெரும் சவாலாக முடியும்.

டிசிஎன்எஸ் என்ற நிறுவனம் சந்தையில் பெரும் ஒப்பந்தங்களை பிடித்துள்ளது, சமீபத்தில் ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே கார்ப்பரேட் போட்டிப் பகை காரணமாக இந்த கசிவு நடந்திருக்குமா?

இது எனக்கு தெரியாது. ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தைக் கையகப்படுத்த ஜப்பான், பிரான்ஸ் ஜெர்மனி நாடுகளிடையே கடும் போட்டி இருந்ததென்னவோ உண்மை. கார்ப்பரேட் பழிவாங்கலாக இந்தக் கசிவு நடவடிக்கை இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் இல்லை. அப்படியும் கூட இருக்கலாம் ஆனால் என்னிடம் அதற்கு நிரூபணம் இல்லை.

இந்த செய்தியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

ஆஸ்திரேலியாவில் கூட இந்த செய்திக்கு கடும் எதிர்வினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பிரதமரும், அமைச்சகமும் இதன் முக்கியத்துவத்தை குறைவாகவே மதிப்பிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் சமரசத்துக்குள்ளாகும் என்று கருத வேண்டிய தேவையில்லை, ஆனால் கேள்வி சாதாரணமானது: இந்திய ஆவணங்கள் கசியும் போது ஆஸ்திரேலியாவுக்கும் இது நடக்காது என்பது என்ன நிச்சயம்? இதுதான் இப்போதைக்கு நம் கேள்வி.

http://tamil.thehindu.com/india/ஸ்கார்பீன்-நீர்மூழ்கிக்-கப்பல்-ரகசியங்கள்-பிரான்ஸில்-இருந்தே-கசிந்தது/article9026380.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.