Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம்

Featured Replies

பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம்

  • 160826103605_france_burkini_ban_624x351_

ஃபிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    160820060945_france_burkini_swim_suit_62

வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது.

 

160817161648_france_512x288__nocredit.jp

 

முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த தடை சட்டப்படி செல்லுமா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் வேறொரு நாளில் இறுதி முடிவு எடுக்கும்.

160826103521_france_burkini_ban_640x360_

 

நீதிமன்ற உத்தரவை அடுத்து, புர்கினி அணிந்ததால் அபராதம் விதிக்கப்பட்டோர் தங்களுடைய அபராதத் தொகையை திரும்ப்ப் பெற முடியும் என்று நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global/2016/08/160826_france_burkini

  • தொடங்கியவர்

புர்கினி ஆடை தடையால் பிரான்சில் உருவாகும் சூறாவளி சர்ச்சை

 
 
  160826154555_franch_burkini_640x360_reut

பிரான்ஸின் உல்லாச ஓய்விட நகரில் சர்ச்சைக்குரிய புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்திருப்பதன் மூலம் சுமார் 30 பிரெஞ்சு மேயர்கள் அந்த நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிவில் உரிமைகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அன்று வீல்நோவ் லூபெய் நகரில் நடைமுறையாகி வரும் புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை இடைநிறுத்தம் செய்வதாக பிரான்சின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

160827041157_burkini_france_640x360_gett 

தடை தொடரும்

இருப்பினும், பல மேயர்கள் தாங்கள் இந்த நீச்சல் உடைக்கு விதித்திருக்கும் தடையை தொடரப்போவதாக தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனித உரிமை வழக்கறிஞர் ஒவ்வொரு நகரத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டு கவுன்சிலால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, வீல்நோவ் லூபெய் நகரில் நடைமுறையிலுள்ள இந்த தடை, அடிப்படை சுதந்திரத்தை கடுமையாகவும் சட்டப்பூர்வமற்ற முறையிலும் மீறுவதை தெளிவாக கண்டறிந்திருக்கிறது.

160826165018_france_burkini_512x288_ap.j 

ஆனால், நீஸ், பிரிஜூ நகர ஆட்சியாளர்களும், சிஸ்க்கின் கோர்சிகா கிராம ஆட்சியாளர்களும் இந்த புர்கினி முழுநீள நீச்சல் உடைக்கான தடையை தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்கின்றனர்.

“நம்முடைய கடற்கரைகளில் ஷரியா சட்டத்தில் உள்ள, நட்புணர்வுள்ள சட்டம் வேண்டுமா அல்லது பிரான்ஸ் குடியரசின் விதிமுறைகள் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது” என்று வீல்நோவ் லூபெய் தீர்ப்பை பற்றி கருத்து தெரிவிக்கையில் மேயர் லயனல் லூக் கூறியிருக்கிறார்.

160826134514_burkini_640x360_reuters_noc

 

பிரதமர் ஆதரவு

பொது இடங்களில் இஸ்லாம் அரசியலை உறுதி செய்வது தான் புர்கினி முழு நீள ஆடைகள் என்று இதனை தடை செய்வதற்கு ஆதரவு தெரிவித்து பிரான்ஸ் பிரதமர் மானுவல் வெல் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

நகரங்களின் மேயர்கள் இன்னும் இந்த தடையை செயல்படுத்துவது குறுகிய காலம் தொடரலாம் என்று உள்நாட்டு கவுசிலின் வழங்கறிஞரான பிரான்சுவா மோலினி என்பவர் லெ முன்ட் செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அந்த மேயர்கள் நிர்வாகத் தீர்ப்பாயங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கும் அவர், அந்த தீர்ப்புகள் அதனை விட உயரிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

    160827123510_burkini_512x288_reuters_noc

புர்கினி முழு நீள நீச்சல் ஆடைக்கு தடையா?

இந்த நகரங்கள் விதித்திருக்கும் தடையில் புர்கினி முழு நீள நீச்சல் உடைகள் எதுவும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தெரிவிக்கப்படவில்லை.

கடற்கரையில் அணியும் ஆடைகள் என்று பொதுவாக குறிப்பிட்டு, அவை மதச் சார்பற்ற கோட்பாட்டிற்கு ஏற்றதாகவும், மரியாதைக்குரிய நல்ல பொது நடத்தைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியவாத கடும்போக்குவாதிகளால் பாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நீஸ் மற்றும் பாரிஸ் தாக்குதல்களுக்கு பிறகு மதம் சார் ஆடைகள் பொது ஒழுங்கிற்கு வழங்குகின்ற பாதிப்புக்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    160823204200_france_cannes_beach_fine_bu

உலக அளவில் விவாதப் பொருள்

ஆனால், இந்த தடைகளை பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும், முஸ்லிம்கள் பாரபட்சமுடன் இலக்கு வைக்கப்படுவதாக பிரான்சிலும், உலகளவிலும் சூடான விவாதங்களை இந்த புர்கினி ஆடைக்கான தடை எழுப்பியிருக்கிறது.

    160824164226_burkini_woman_640x360_vinta

இந்தத் தடையை செயல்படுத்தும் வகையில், கடற்கரையோரங்களில் காவல்துறையினர் இருப்பது போன்றும், பெண்ணொருவர் ஆடையின் ஒரு பகுதியை கழற்றுவது போலவும் படங்கள் பரவியபோது இந்த சர்ச்சை ஆழமாகியது.

சட்டப்படி இந்த தடை செல்லுபடியாகுமா என்று உள்நாட்டு அரசக் கவுன்சில் இறுதி தீர்மானத்தை பின்னர் எடுக்கும் என்று தெரிகிறது.

    160820085727_burkini_640x360_afpgetty_no

புர்கினி ஆடை தடைக்கு இடைநிறுத்தம்; தீர்ப்பின் தாக்கம்

பெரு நகராட்சி ஆட்சியாளர்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தையும் எடுத்துவிடுவதற்கு முன்னுதாரணமாக இந்த உயரிய நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு விளங்கிவிடும் என்று கருதப்படுகிறது.

மக்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதில் தலையிடுவதற்கு முன்னால், பொது ஒழுங்கிற்கு அதனால் அச்சுறுத்தல் உள்ளதா என்பதை சோதித்து அறிய வேண்டும் என்று முக்கிய கருத்தை இந்த நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மதச்சார்பற்ற கோட்பாடு நாட்டுக்குரியது. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. நாடு தான் மதச் சார்பற்றது. மக்கள் அல்ல. மக்கள் அவரவர் மத நம்பிக்கைகளில் நிலைத்திருக்கலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

160818084015_france_burkini_512x288_epa_

 

பிரச்சினை தீர்ந்த பாடில்லை

இந்த தீர்ப்பை கடற்கரையோர நகரங்கள் சில, இன்னும் கடைபிடிக்காமல் தடையை தொடரலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அழைக்கப்பட்டு நிறுத்த ஆணையிடப்படும்.

அத்தோடு இந்த பிரச்சினை நின்றுவிடப் போவதில்லை.

புர்கினி அணிவது தற்போது அரசியல் பிரச்சனையாகிவிட்டது. இதனை தடைசெய்வதற்கு வலது சாரி குழுக்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலான வரவிருக்கும் அதிபர் தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தப்படும் பிரச்சனையாக இது இருக்குமென பார்க்கப்படுகிறது. .

http://www.bbc.com/tamil/global/2016/08/160827_france_burkini_row

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதனின் இயல்பு வாழ்க்கைக்கு எது தடையாக இருக்கின்றதோ அது தடை செய்யப்பட வேண்டும்.:cool:
அது சரி முஸ்லீம்கள் எதற்காக ஆயுதம் தூக்க வெளிக்கிட்டார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?
இனியும் பலஸ்தீனம் தான் காரணம் என்று பதில் வந்தால் கொலை விழும்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.