Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலேயே நீதி கிட்டும்-சுமந்திரன்

Featured Replies

காணாமற்போனோர் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலேயே நீதி கிட்டும்-சுமந்திரன்
 
 
காணாமற்போனோர் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலேயே நீதி கிட்டும்-சுமந்திரன்
காணாமல்போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிவதற்கான காணா மல்போனோர் அலுவலகச் சட்டம் மிகவும் முக்கியமான ஒரு சட்டம் என தெரி வித்ததுள்ள  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த சட்டத்திற்கு அமைய அமைக்கப்படவுள்ள காணாமல்போனோர் அலுவலகத்தை யும் வரவேற்றுள்ளார்.
 
எவ்வாறாயினும் குறித்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதி லேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது தங்கியுள்ளதாகவும் கொழும்பில் அனுட்டிக்கப்பட்ட சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
 
 நாடாளுமன்றில் கடந்த 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலக  சட்டத்தில் பாதகமான விடையங்கள் என கருதப்பட்ட அனைத்து சரத்துக்களையும் நீக்கிவிட்டு தமக்கு சாதகமாக அமையக்கூடிய வகையிலேயே நிறைவேற்றியதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்து ள்ள நிலையிலேயே சுமந்திரன் குறித்த சட்டத்தை பாராட்டிப் பேசியியிரு க்கின்றார்.
 
சுதந்திரத்திற்கான மேடை மற்றும் வீதி எதிர்ப்பு அமைப்புக்களுடன் இணைந்து காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் போனோர் அலுவலக சட்டம் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
 
இந்த நிகழ்வில் தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு அமைச்சர் மனோ கணே சன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பிரிட்டோ பெர்ணாண்டோ, நிமல்கா பெர்ணாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கலந்துரையாடலை அடுத்து லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள கண் வைத்தியசாலை வரை பேரணியாக சென்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள், சுமார் ஒரு மணித்தியாலம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இதேவேளை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் கலந்துகொண்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றும் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றது. 
 
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட காணாமல்போனோரின் உறவினர்கள் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தி காணாமல் போக செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

http://onlineuthayan.com/news/16994

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் அரை நீதியாவது நீங்கள் வாங்கி தந்தியள் என்றால் நீங்க தான் அடுத்த  தே. த  ...(தேத்தண்ணித் தலைவர்}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.