Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

ஐயா மோகன்,

நாம் தமிழில் எழுதியவை பிரசுரிக்கபட்ட பக்கங்களில் தோன்றும் போது இடையிடையே எழுந்தமானமாக கேள்விக் குறிகள் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? அதாவது உதாரணத்திற்கு இவ்வாறு தோன்றுதல்:

மணியத்தாரும�

�� கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க..

எனது இரண்டாவது கேள்வி என்னவென்றால், எனது பேர்சனல் போர்ட்டோ ஏன் நான் எழுதும் கருத்துக்களிற்கு பக்கத்திலுள்ள எனது 'மாப்பிளை' யென்ற ஐக்கொனுக்கு கீழ் தோன்றுது இல்லை?

Edited by கலைஞன்

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply

ஐயா மோகன்,

நாம் தமிழில் எழுதியவை பிரசுரிக்கபட்ட பக்கங்களில் தோன்றும் போது இடையிடையே எழுந்தமானமாக கேள்விக் குறிகள் தோன்றுவதை எவ்வாறு தவிர்க்கலாம்? அதாவது உதாரணத்திற்கு இவ்வாறு தோன்றுதல்:

மணியத்தாரும�

�� கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க..

எனது இரண்டாவது கேள்வி என்னவென்றால், எனது பேர்சனல் போர்ட்டோ ஏன் நான் எழுதும் கருத்துக்களிற்கு பக்கத்திலுள்ள எனது 'மாப்பிளை' யென்ற ஐக்கொனுக்கு கீழ் தோன்றுது இல்லை?

முதலாவாது கேள்விக்கு பதில்

சொற்களுக்கு இடையில் இடைவெளி விடுவதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும்.

மேலே எழுதியதையே இடைவெளி இல்லாது கீழே எழுதியுள்ளேன். வித்தியாசம் பாருங்கள்.

சொற்களுக்குஇடையில்இடைவெளி

  • தொடங்கியவர்

ஐயா மோகன்,

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி! யாழ் கள நண்பர்கள் இனி அழகு தமிழில் கேள்விக் குறிகளின் பிரச்சினையின்றி எழுதுவதற்கு உங்கள் பதில் உதவியுள்ளது என நினைக்கின்றேன். நன்றி!

இப்பக்கங்களில் ஒருவரின் பதிவிற்கு கீழே உள்ள "Add replay" பட்டனை கிளிக் பண்ணவரும் பெட்டியின் கீழே Attachments என ஒரு பகுதி இருக்கின்றது. அதன் வலது பக்கத்தில் Browse என்றும் அதன் பக்கத்தில் பச்சை பின்னணியில் Upload என்றும் இருக்கிறது. இதை எதற்கு எங்கே பாவிக்கவேண்டும். upload பண்ணினால் எங்கே அந்த பையில் எங்கே தென்படும். யாராவது விளக்குவீர்களா? நன்றி

  • தொடங்கியவர்

ஐயா மோகன்,

நான் எழுதிய கருத்தை நான் எடிட் செய்யும் ஒப்சனை எனது ஒப்சன்ஸ்சில் காணவில்லை. கருத்துக்களை எடிட் செயும் ஒப்சன்ஸ்ஸைப் பெருவது எவ்வாறு?

  • 6 months later...
  • தொடங்கியவர்

வணக்கம் நிருவாகத்திடமும், சக கள உறவுகளிடமும் ஒரு கேள்வி/ ஆலோசனை...

யாழில் இரண்டு விதமான படைப்புக்கள் வருகின்றன. ஒன்று சுயபடைப்பு. மற்றையது வெட்டி ஒட்டுவது. கவிதைப் பூங்காடு, கதைகள், ஊர்ப்புதினம், நகைச்சுவை... என அனைத்துப் பகுதிகளிலும் இந்த இரண்டு விதமான ஆக்கங்களும் கலந்து இருக்கின்றன.

எனது கேள்வி அல்லது ஆலோசனை என்னவென்றால் யாழில் இவை இரண்டையும் பிரித்து வெவ்வேறு பகுதிகளினுள் போடமுடியுமா?

அதாவது சுய ஆக்கங்களிற்கு என்று ஒரு பகுதி, மற்றையது வெட்டி ஒட்டுவதற்கு என்று ஒரு பகுதி...

இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பல வெட்டி ஒட்டப்படும் படைப்புக்கள் இருக்கின்றன. கள உறவுகள் யாரோ எழுதிய கண்டதையும் வெட்டி ஒட்டுவதால் இவற்றிற்கு விமர்சனம் அல்லது பதில் கருத்து எழுதும்போது சில சிக்கல்கள், மற்றும் குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒரு படைப்பாளி தனது சொந்த படைப்பை யாழில் இணைக்கும்போதும், ஒரு கள உறுப்பினர் ஒரு படைப்பை வெட்டி ஒட்டும் போது வித்தியாசம் இருக்கின்றது.

சுய படைப்புக்கள் யாழில் பிரிக்கப்படும் போது எமது படைப்பாளிகளை - கள உறவுகளை நாம் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கும்.

பல தடவைகளில் ஏராளமான வெட்டி ஒட்டப்படும் பகுதிகளுடன், எமது கள உறவுகளின் ஓரிரண்டு சுய படைப்புக்கள் இடம்பெறும்போது அந்த ஓரிரண்டு படைப்புகளை இனம் காணமுடியாது போகின்றது. ஒவ்வொரு தலைப்பாக உள்ளே சென்று ஆராய்ந்து வாசித்து அது வெட்டி ஒட்டப்பட்டதா அல்லது சுய படைப்பா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு அனைவருக்கும் நேரம் கிடைக்காது.

மேலும், சில/பல தடவைகளில் யாரோ செய்த ஆக்கங்களிற்கு அதாவது வெட்டி ஒட்டிய படைப்புகளிற்கு அதை வெட்டி ஒட்டுபவர்கள் வக்காளத்து வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். வெட்டி ஒட்டுபவர்களால் அதை உண்மையாக உருவாக்கிய படைப்பாளிக்கு மட்டுமே தெரிந்த பல விடயங்களிற்கு பதில் கூறமுடியாது.

வெட்டி ஒட்டப்படும் படைப்புக்கள், சுய படைப்புக்களில் இருந்து பிரிக்கப்படும் போது யாழுக்கும், அவற்றை உருவாக்கிய கள உறவுகளிற்கும் பல நன்மைகள் கிடைக்கும் என நினைக்கின்றேன்..

இப்படி பல விடயங்கள் இந்த வெட்டி ஒட்டுதல், மற்றும் சுய படைப்புகளினுள் இருக்கின்றன... இதுபற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

நன்றி!

Edited by கலைஞன்

ம்ம்ம் நல்ல ஒரு ஆலோசனையை கொணர்ந்திருக்கிறீங்க. கவிதைப்பகுதிக்குள் பல க்விதைகள் சுட்ட கவிதைகள். அவற்றை சுட்ட கவிதைகல் என்ற ஒரு பகுதிக்குள் போடலாமே என பல நாட்கள் நானும் எண்ணுவதுண்டு. இப்போ நீங்களே சொல்லி இருக்கிறீங்க. ம்ம் சுய படைப்புகள் பிறர் படைப்புக்கள் என பிரிப்பின் அவற்றை படிக்கவும் கருத்தாடவும் இலகுவாக இருக்கும் என நினைக்கின்றேன்.

குருவே உங்கள் யோசனை நல்ல யோசனை தான் குருவே நான் நீங்க சொன்ன மாதிரி கதை,புதினம்,கவிதை பகுதியில் ஓட்டுறதில்லை ஆனா மற்ற பகுதிகளிள் ஓட்டுறனான்............ஆனால் அந்த பக்கங்கள் வெறிசோடி கிடக்கும் அது தான் அவ்வாறு செய்யிறனான்............. :lol:

நீங்கள் சொல்வது போல இரு பிரிவுகளாக செய்தால் மிகவும் நல்லது என்று தான் யோசிகிறேன்......... :lol:

  • தொடங்கியவர்

உங்கள் ஆதரவுக்கு நன்றி! :D

உங்கள் ஆதரவுக்கு நன்றி! :D

குருவே ஆதரவோ என்ன கட்சி தொடங்கிட்டீங்களா இந்த பக்கம்........... :P

உங்கள் ஆலோசனைகளை உள்வாங்கிக்கொண்டோம். நன்றி. இவற்றை சாத்தியப்படுத்தமுடியுமா என்பது பற்றி ஆராய்கிறோம். உடனடியாக மாற்றங்களைச் செய்ய முடியாது. களத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் நேரத்தில் - இதனைச் சாத்தியப்படுத்துவது பற்றியும் யோசிக்கிறோம்.

  • தொடங்கியவர்

வலைஞன் மிக்க நன்றி! நான் கருத்துக்கள் வாசிக்கும் போது கள உறவுகள் எழுதிய சுய ஆக்கங்களிற்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன். யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள் மழழைச் சொல் கேளாதோர்..எனக்கு இங்குள்ள மழழைகள் எழுதுபவற்றை வாசிக்கவே எப்போதும் பிடிக்கும்... :lol:பி/கு: யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்மழலை சொல் கேளாதோர்... எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்... மழலை?

  • தொடங்கியவர்

பல்வேறு காரணங்களின் நிமித்தம் நான் சில மாதங்களின் முன் யாழ் களத்தில் கருத்து எழுதுவதற்கு எனக்கு போட்டுக்கொண்ட சுயகட்டுப்பாடுகளை இன்றிலிருந்து நான் வாபஸ் வாங்கிக்கொள்கின்றேன் என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத் தருகின்றேன்...

இப்போது இருக்கும் கருத்துக்கள விதிகளே என்னைக் கட்டுப்பாடாக வைத்திருக்க தாராளமாகப் போதும் என நினைக்கின்றேன்...

குருவே இதை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் குருவே சுயகட்டுபாடு எல்லாம் தேவையில்லை குருவே....................அது சரி வாபஸ் பெற்று விட்டு பிறகு மீண்டு பதவிக்கு வாற மாதிரி நீங்களும் அப்படி ஒன்றும் செய்ய மாட்டீங்க தானே குருவே........ :P :P :lol:

  • தொடங்கியவர்

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! :lol:

குருவே இவ்வாறு நீங்க செய்யிற நல்ல விசயங்கள் எல்லாவற்றிற்கும் நான் ஆதரவு தருகிறேன் நான் நல்ல விசயம் செய்வனோ தெரியாது ஆனாலும் நீங்க ஆதரவு தாங்கோ குருவே........... :P

  • தொடங்கியவர்

ஆதரவு தருவது பிரச்சனை இல்லை. எமது ஆச்சிரமத்தினுள் போலிசு நுழையாமல் இருந்தால் சரி... :P

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கேள்வி:

நான் இன்று சரியான யூசர் நேம், பாஸ் வேர்ட்டை கொடுத்த போதும் யாழினுள் என்னால் நுழைய முடியவில்லை. பிழையான யூசர் நேம் அல்லது பாஸ் வேர்ட் என்று மீண்டும், மீண்டும் மெசேஜ் வந்தது!!

பின் நான் வெவ்வேறு கணனிகளாக மொத்தம் மூன்று கணனிகளில் முயற்சி செய்து ஒன்றும் பயன் அளிக்காத நிலையில், இறுதியில் forgot my password பகுதிக்கு சென்று எனது ஈ மெயில் முகவரியை இட்டேன்.

இதன்பின் சில நிமிடங்கள் கழித்து பழைய யூசர் நேம், பாஸ் வேர்ட்டுடன் உள்ளே நுழையக் கூடியதாக இருந்தது. ஆனால், எனது ஈ மெயிலுக்கு மறந்த பாஸ்வேர்ட் பகுதியில் இருந்து மெயில் வரவில்லை...

கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன். எனது, நான் இங்கு யாழில் செய்யும் லொள்ளுகள் தாங்க முடியாது நிருவாகம் என்னை கருத்துக்கள் எழுதமுடியாதபடி தடை செய்துவிட்டதோ என்று முதலில் யோசித்தேன்... :D

இப்படியான அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டு உள்ளதா? :D அதாவது சரியான யூசர் நேம், பாஸ்வேர்ட்டை இடும்போதும் யாழினுள் நுழைய முடியாத நிலை ஏற்படுதல்.. அல்லது நிருவாகம் தான் எனது தொல்லை தாங்கமுடியாது நான் உள்ளே நுழைய முடியாதபடி என்னை சிறிது நேரம் இடை நிறுத்தி வைத்து இருந்ததா? :D

யாராவது விசயம் தெரிந்தவர்கள் எனது கேள்விக்கு விடை தாருங்கள்..

ஆச்சிரமதிற்கு பொலிஸ் நுழையவிடுவனா............இராணுவமே நாம வைத்திருகிறோம் பிறகு ஏன் பொலிசிற்கு பயப்பிடுறீங்க குருவே.......... :P :D

குருவே தொல்லை தாங்காம நிறுத்தி வைத்திருகாது என்று நினைக்கிறேன் ஏன் என்றா உங்களோட சேர்ந்து லொள்ளு பண்ணிணது மதிபுகுரிய கேணல் நான் தானே எனக்கு ஒன்றும் நடக்கவில்லை ஆகவே அப்படி இருகாது என்று நினைக்கிறேன்.........எனக்கு இப்படி ஒரு நாளும் நடக்கவில்லை.......ஒருக்கா தடை செய்த போதும் எழுத தான் முடியவில்லை ஆனா தனிமடல் எல்லாம் பாவிக்கலாம்............அது தான் ஜெனரல் வாழ்கையில 5நிமிசம் தடை அரசியல் வாழ்கையில இது எல்லாம் சகஜம் தானே குருவே.......... :P :D

  • தொடங்கியவர்

உங்கள் தகவலிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி! :lol:

---------------------------------------------------------------------------------------------------------

இன்னொரு கேள்வி:

நாங்கள் உறுப்பினர்கள் பெரும்பாலும் யாழின் முகப்புப் பகுதிக்கு போவதில்லை. ஆனால், பல சமயங்களில் நான் முகப்பு பகுதியினுள் போகும் போது கீழ்வரும் படத்தில் தோன்றுவது போன்ற நிலமை காணப்படுகின்றது. அதாவது படைப்புக்களம் எனக்கு தெரிகின்றது. அதற்கு அருகில் உள்ள மற்றைய பிரேம் - உலகநடப்பு, இனியபொழுது, புலம் போன்றவை உள்ள பகுதி தெரியவில்லை. இது ஏன்? உங்கள் கணனிகளிலும் முகப்புப் பகுதியில் பாகங்கள் இப்போது மிஸ் பண்ணி உள்ளாதா? அல்லது தெளிவில்லாமல் இருக்கின்றதா? இவ்வாறான குழப்பத்தை நான் அடிக்கடி முகப்புப் பகுதியில் கண்டுள்ளேன். ஏன்?

51610388cf1.jpg

32302751qd0.jpg

முகப்பில் இப்படிக் காண்பிப்பதற்கான காரணம்:

கருத்துக்களத்தில் சில நீளமான பெயர்களைத் (unicode) தமிழில் மாற்றியிருந்தோம். அந்தப் பெயர்களின் unicode அளவு நீளமாக இருப்பதால் பெயர்கள் உடைந்து காணப்பட்டன. அதனால் முகப்புப் பகுதியில் கருத்துக்கள ஆக்கங்களை எடுத்துக் காண்பிக்கும் செய்தியோடையும் (rss feed) குழம்பிவிட்டது. மீண்டும் அந்தப் பெயர்கள் ஆங்கில எழுத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. சிறிது நேரத்தில் முகப்பில் காண்பிக்கப்படும் பிழை சரிப்படுத்தப்பட்டுவிடும்.

நன்றி

  • தொடங்கியவர்

வலைஞன் விளக்கத்திற்கு நன்றி!

---------------------------------------------------------------------------------------------------------------

ஒரு யோசனை:

புதிய உறுப்பினர்களை நாற்சந்திப் பகுதியில் எழுதுவதற்கு அனுமதித்தால் என்ன? சிலர் முன்பு களத்தை துஷ்பிரயோகம் செய்து எழுதியதால், மேலும் அது யாழ் முகப்பு பக்கத்தில் வெளிக்காட்டப்பட்டதால் புதிய நடைமுறை பயன் தந்தது.

ஆனால்..

நாற்சந்தியில் எதை எழுதினாலும், கள உறுப்பினர்களை தவிர வேறு ஒருவரும் பார்க்கமுடியாது. முகப்பு பக்கத்திலும் வெளிக்காட்டப்படாது. எனவே, நாற்சந்தியில் புதியவர்களையும் எழுத அனுமதிப்பதால் பாதகமான விளைவுகள் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை என நினைக்கின்றேன்.

இதன் மூலம் புதியவர்களிற்கு கருத்து எழுதுவதில் சிறிது சுதந்திரம் கிடைக்கின்றது. புதிய உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இணைய முன்வரக்கூடும்..

இதைவிட, யாழ் அரிச்சுவடி பகுதியை நாற்சந்திக்கு நகர்த்துவதும் நல்லது என நினைக்கின்றேன்.

ஏனென்றால், இப்போது யாழ் அரிச்சுவடியை அனைவரும் பார்வையிட முடியும். ஏன் எல்லாருக்கும் எம்மை அறிமுகம் செய்யவேண்டும்? சக கள உறுப்பினர்களிற்கு எம்மை அறிமுகம் செய்தால் போதும் தானே? விருப்பம் உள்ள விருந்தினர்கள் யாழில் உறுப்பினர்களாக இணைந்து கள உறவுகளை பற்றிய மேலதிக தகவல்களை பார்வவயிடலாம் தானே?

நாற்சந்திக்கு நகர்த்தப்படும்போது நாம் சில விசயங்களை புதியவர்களுடன் ஓரளவு மனம் திறந்து கதைக்கலாம் என்று நினைக்கின்றேன். இதேபோல் புதியவர்களுக்கும் இது சிறிதளவு பாதுகாப்பாக இருக்கும்.

இதுபற்றி நிருவாகம், மற்றும் கள உறவுகள் என்ன நினைக்கின்றீர்கள்??

ஜெனரல் கலைஞனின் கருத்திற்கு பூரண ஆதரவை நான் வழங்குகிறேன்...........இந்த திட்டம் நல்லா இருக்குது உடனடியா அமுலுக்கு கொண்டுவரம்படி நிர்வாகத்தை பணிவண்படுடன் கேட்டு கொள்கிறேன்............. ;)

அப்ப நான் வரட்டா.......... :P

இப்படிக்கு ஜெனரல் ஜம்மு பேபி...... :P

  • தொடங்கியவர்

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி! :lol:

குருவே எனக்கும் ஒரு யோசனை அதாவது காலகண்ணாடியிற்குள்ள கருத்து எழுதுவதால்..............செய்த ஆக்கங்கள் பளிசிடமுடியாம செல்கிறது என்று நினைகிறேன் கருத்துகள் எழுதுவதிற்கு ஒரு திதி திறந்தா எப்படி இருக்கும் இதை பற்றி என்ன நினைகிறீங்க...........ஜெனரலின் இந்த யோசனையை ஜெனரல் கலைஞன் அவர்களிடன் சமர்பிகிறேன் அவரும் உடன்பாடு தெரிவிக்கு நிலையில் இதை நாங்கள் சர்வதேசமட்டதிற்கு கொண்டு செல்வோம்......... :P :lol:

  • தொடங்கியவர்

ஓம் அப்படி செய்யலாம், ஆனால்... புது திரியை துவங்கி நாம் மட்டும் அங்கு எழுதி பிரயோசனம் இல்லையே? எழுதுபவர்கள் எல்லோரும் அங்கு வந்து விமர்சனம் எழுதமுன்வர வேணுமே? எல்லோரும் தமது விமர்சனங்களை புதிய தலைப்பின் கீழ் எழுதமுன்வந்தால் உது ஒரு நல்ல யோசனைதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.