Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொத்துக்குண்டுகள் பயன்பாட்டினால் அவலநிலையில் திண்டாடும் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ; செல்வம் எம்.பி.

Featured Replies

கொத்துக்குண்டுகள் பயன்பாட்டினால் அவலநிலையில் திண்டாடும் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ; செல்வம் எம்.பி. 

 

 

இறுதி யுத்­தத்தில் கொத்துக் குண்­டுகள், இர­சாயனப்பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதன் கார­ண­மாக இன்னும் எமது மக்கள் துன்­பப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ன்­றார்கள் என பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வரும் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்க­ல­நாதன் நேற்று சபையில் தெரி­வித்தார்.

4672.jpg

தற்­போது பிறக்கும் குழந்­தைகள் கூட அதன்பாதிப்­புக்­குள்­ளா­வ­தாக சுட்­டிக்­காட்­டிய அவர் உடலில் குண்டு துகள்­களை சுமந்து கொண்­டி­ருக்கும் அனை­வ­ரையும் பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கால­நிலை மாற்றம் தொடர்­பான பரீஸ் உடன்­ப­டிக்கை ஒப்­பு­த­ல­ளித்தல் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்இ கடந்த காலத்தில் நடை­பெற்ற யுத்­தத்தின் கார­ண­மாக எமது மக்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். மக்­களின் சொத்­துக்கள், உயிர்கள் என்­பன இழக்­கப்­பட்­டமை ஒரு புற­மி­ருக்­கையில் இயற்கை வளங்­களும் முற்­றாக சிதை­வ­டைந்­துள்­ளன.

இறுதி யுத்­தத்தின் போது கொத்துக் குண்­டுகள், இர­சா­யனப் பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் எமது மக்கள் இன்றும் துன்­பங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றனர். அதன் விளை­வுகள் தற்­போது பிர­தி­ப­லிக்­கின்­றன. தற்­போது பிறக்­கின்ற குழந்­தைகள் கூட பாதிப்­புக்­குள்­ளா­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கின்ற நிலையில் யுத்தம் நிறை­வ­டைந்து 7 வரு­டங்­க­ளா­கின்­றன.

இந்த கால பகு­தியில் பல பாட­சாலை மாண­வர்கள், இளைஞர், யுவ­திகள், பொது­மக்கள் அவ்­வப்­போது மயங்கி விழும் நிலைகள் காணப்­பட்­டுள்­ளன. இவர்கள் உடலில் குண்­டுத்­து­கல்­க­ளுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளுக்­கு­ரிய மருத்­துவச் சிகிச்சை வழங்­கப்­பட வேண்டும். இவர்­களை பாது­காப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும். நல்­லி­ணக்கம் தொடர்­பாக கவனம் செலுத்தும் அர­சாங்கம் உட­ன­டி­யாக இவ்­வி­டயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என இச்­ச­பையில் வலி­யு­றுத்­து­கின்றேன்.

அதே­நேரம் இயற்கை வளங்கள் நிறைந்த வன்­னிப்­பி­ர­தேசம் யுத்­தத்தின் கார­ண­மாக முற்­றாக அழி­வ­டைந்­துள்­ளது. இதனால் வெப்ப நிலை அப்­பி­ர­தே­சத்தில் அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு பொது­மக்கள் முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதே­போன்று இயற்கை அனர்த்­தங்­களும் அண்மைக் கால­மாக அதி­க­ரித்­துள்­ளன.

விசே­ட­மாக மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் கட­ல­ரிப்பு அதி­க­ரித்­துள்­ளது. மறு­புறம் நீர் நிலை­களில் நீர் வற்­று­வ­தனால் முனை­ப்பான விவ­சாய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆகவே சூழல் சம நிலையை பேணு­வ­தற்­கு­ரிய செயற்­றிட்­டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

இதேபோன்ற நிலைமைகள் தான் கிழக்கு மாகாணத்திலும் காணப்படுகின்றன. ஆகவே குறித்த பரீஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் எதிர்காலத்தில் இலங்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

http://www.virakesari.lk/article/11185

  • கருத்துக்கள உறவுகள்

கொத்துகொண்டுகள் வீசியதட்கு போதிய ஆதாரம் இல்லை 
                                                                                                -சுனக்கிறன்- 

முதலில் இந்த செல்வம் மக்களுக்கு என்ன செய்தார் என்று கூற வேண்டும், தேர்தலின் பொது றிசாத் தரும் வேலை வாய்ப்புக்காகவும் பணத்துக்காகவும் அவருக்கு போடா வேண்டாம் மாவீரர் தியாகத்துக்காக எனக்கு போடுங்கோ என்று சொன்ன உத்தம ராசா இவர், அதாவது நான் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை , ஆனால் மக்களுக்கு உதவி செய்ப்பவனுக்கு போட வேண்டாம் என்ற அறிவாளி இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சட்டப்புத்தகத்தோட சீறிக்கொண்டு வரப்போறார் சிங்கம்.   உடுவில் விஷயத்தில நிக்கிறார் என்கிற துணிவில செல்வம் கதைக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.