Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை - ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி

Featured Replies

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை - ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி

தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Cr-Vy52VMAAq6zy.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன.

கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென 70 ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு “செல்வ - பண்டா” ஒப்பந்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் டி.எஸ் சேனாநாயக்க கைச்சாத்திட்டார். 1960 ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க “டட்லி - சில்வா” ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டார். இவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முன்னாள் அரசியல் தலைவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை துரதிஷ்ட வசமாக நிறைவேற்றப்படவில்லை.

 இந்நிலையில் பிரச்சினைகளில் உள்ள தார்மீக தன்மைகளை  உணர்ந்துக்கொண்டு நாம் செயற்படும் போது எம்மை விமர்சிக்கின்றனர். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே நாம் இந்த தேசிய அரசாங்கத்தை எற்படுத்தியுள்ளோம்.  நாம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்றார். 

http://www.virakesari.lk/article/11191

  • தொடங்கியவர்

இரண்டு கட்சிகளும் ஒரே யோசனைகளையே கொண்டுள்ளன

 

அன்று 70 ஆண்டுகளுக்கு முன்னர் 1946ம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேர்கர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ். சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி ஜனாதிபதி இவ்வாறு கூறியதுடன், மேலும் உரையாற்றும் போது,

நாங்கள் பிரச்சினைகளின் ஆழம் பற்றி இணம் காண வேண்டும். நாங்கள் புத்தியுடனும் முதிர்ச்சியுடனும் பிரச்சினைகளை நோக்கி பார்க்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 62 இலட்சத்து 50,000 பேர் எமக்கு வாக்களுத்தது நாம் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளுக்காகவே என்றும், அவற்றை நிறைவேற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற எமது ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 65வது ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனைகளும், இன்று இங்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையே.

ஆகவே இரு கட்சிகளினதும் யோசனைகளில் ஒற்றுமை இருக்கிறது. இருகட்சிகளுடைய ஒற்றுமையான ஒரே யோசனையை கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றும் ஜனாதிபதி இங்கு கூறினார்.

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து இனத்தவர்களுக்கும் பொருந்தக் கூடியவாறான புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அர்ப்பனிப்புடன் செயற்படுவோம்.

சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆகவே பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம் என்று நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி கூறினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=83506

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனையின் வயதை விடவும் இளமையானவர் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 

'சிறுபிள்ளை வேளான்மை வீடுவந்து சேராது' பழமொழி. பார்க்கலாம்...... :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Paanch said:

இனப்பிரச்சனையின் வயதை விடவும் இளமையானவர் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 

'சிறுபிள்ளை வேளான்மை வீடுவந்து சேராது' பழமொழி. பார்க்கலாம்...... :unsure::rolleyes:

 அவர் தானாக உணர்ந்து இதை சொல்லவில்லை. மங்கள   ஓடி, ஓடி களைத்துவிட்டார். எல்லோரும் கையை விரித்து விட்டார்கள் போலுள்ளது. நிகழக் கூடிய விபரீதத்தினை உணர்ந்து வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார். சிங்களவருக்கும் பல வாக்குறுதிகளை  கொடுத்து, வீரவசனம் பேசும்பொழுதே தெரியும் ஏதோ மழுப்பி புலுடா விடுகினம், ஒருநாள் உண்மையை ஒப்புக்கொண்டே  ஆக வேண்டும்  எண்டு. அதுதான் கொஞ்சமாய் கசிய விட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

70 ஆண்டு காலம் தீர்க்கப்படாத பிரச்சனையை நான் எப்படித் தீர்ப்பேன் என்று சொல்லாமல் சொல்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.