Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதால் சிங்கள மக்களுக்கு இழப்பு எதுவும் ஏற்படமாட்டாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு

Featured Replies

தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதால் சிங்கள மக்களுக்கு இழப்பு எதுவும் ஏற்படமாட்டாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு
 
 
தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதால் சிங்கள மக்களுக்கு இழப்பு எதுவும் ஏற்படமாட்டாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு
நல்லிணக்கம் என்பது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதிலேயே தங்கியுள்ளது. விளையாட்டு நிகழ்வுகளால் இந்த நல்லிணக்கத்தை பெற்று விட முடியாது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதால் சிங்கள தேசம் எதையும் இழந்து 
விடப்போவதில்லை. நாம் பிரிவினைவாதம் பேசவில்லை ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வையே கேட்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
28 ஆவது தேசிய விளையாட்டு விழா முதன் முறையாக யாழ்ப்பாணத்தில்  இன்று காலை 9.00 மணியளவில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது
14256644_1820762684824049_894726512_n.jpg
இளைஞர்கள் ஓர் ஐக்கிய இலங்கையையே  எதிர்பார்த்தனர் எனினும் அரசின் அடக்குமுறை காரணமாகவே கிளர்ந்தெழுந்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர்.இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்த யுத்தம் யாரும் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல ஆனாலும் தனது கண்களுக்கு முன்னாள் தனது இன மக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதையும் கொலை செய்யப்படுவதையும் கடத்தப்படுவதையும் கண்ட எந்த இள இரத்தமும் சும்மா வேடிக்கை பார்க்க மாட்டாது.
 
1958 ,1961 , 1977 , 1983 களில் நடைபெற்ற கலவரங்களில் இதைக்கண்ணுற்றார்கள்.பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலைக் கொண்டு வந்து நமது இளஞர்கள்  பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்தினார்கள். இவைகளைக் கண்டு மௌனமாய் 
இருக்க முடியாது என்ற சூழ்நிலையிலையே  போர் புரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இவைகளை முடிந்த கதையென சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 
 
வீட்டுக்கு இரண்டு மூன்று பேர்களை இழந்தவர்கள் இவைகளை முடிந்த கதையென எப்படிக் கூறுவார்கள் அவர்களின் இழப்புக்கான விமோசனம்தான் என்ன?தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர்கள் கேட்பதில் அநீதி என்ன 
இருக்கிறது ?இவை அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது .இதைக் கேட்டால் என்னை பிரிவினைவாதி என விமர்சிக்கிறார்கள் கிணற்றுக்குள் இருப்பவனை வெளியே எடுத்தபின்பே  உடன்பாடு பற்றிப் பேச வேண்டும்.  இந்த தேசிய சம்மேளனம் போன்ற சம்மேளனங்களில் அரசியலை உள்நுழைக்காதீர்கள்.அப்படி உள்நுழைத்தால் கடுமையான விபரீதங்கள் வந்து சேரும்
அடுத்தவாரம் மட்டக்களப்பில் பாரிய முத்தமிழ் விழாவை நடாத்தவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார் .

http://onlineuthayan.com/news/17405

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:
தமிழரின் பிரச்சினையை தீர்ப்பதால் சிங்கள மக்களுக்கு இழப்பு எதுவும் ஏற்படமாட்டாது-முதல்வர் விக்கி தெரிவிப்பு
 

இழப்பு இருக்கு முதல்வரே ,சிங்கள மக்களிடமிருந்து உருவாகும் சிங்கள தலைவர்கள் எப்படி அரசியல் செய்வது?tw_tounge_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, putthan said:

இழப்பு இருக்கு முதல்வரே ,சிங்கள மக்களிடமிருந்து உருவாகும் சிங்கள தலைவர்கள் எப்படி அரசியல் செய்வது?tw_tounge_wink:

உந்தவிசயத்திலை நாங்களும் போட்டிக்கு நிப்பம்.....ஏனெண்டால் நாங்கள் பிறகு என்னத்தை வைச்சு மேடைக்கு மேடை கட்டப்பொம்மன் வசனங்களை எடுத்துவிட்டு பார்லிமெண்ட் போறது.:grin:

சம்சுமாவை கேட்டால் பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது என்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.