Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம்.

Featured Replies

சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம்.

யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

இன்று காலை 8-00 மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தவராஜா-பூபதி (வயது 50 - கற்குழி றோட், சாவகச்சேரி) என்பவர் பலியாகியுள்ளார் மேலும் 16 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காலை 7-30 மணியளவில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 5 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

-Tamilnet-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

1 killed, 21 civilians injured in Jaffna bomb explosions

One elderly woman was killed and twenty one civilians injured, seven seriously, in two incidents of bomb explosions in Chavakachcheri and Manipay, Tuesday morning, sources in Jaffna said. Although reports say six Sri Lanka Army (SLA) troopers were injured in the Chavakachcheri explosion, the Military Command has not confirmed injuries to the troops.

Thavarajah Poopathi, 50, from Katkuli Road, Chavakachcheri was killed and sixteen civilians wounded, seven of them seriously, when a bomb hidden in a motorbike exploded inside the Chavakachcheri town area along Thanankilappu, Kerativu road branching towards the east from the town at 8:00 a.m Tuesday morning.

The seriously injured were transferred to the Jaffna Teaching Hospital, while the other seven are receiving treatment at Chavakachcheri Government Hospital, hospital sources said.

The Chavakachcheri attack was targetted against a SLA vehicle, according to sources. Although the Thanankilapu road is sparsely used by the general public, most of those injured were travelling towards the Chavakachcheri market to buy provisions, sources said.

Meanwhile, five civilians walking along Karainagar road in Manipay were injured when a bomb hidden by the road side exploded at 7:30 a.m. Tuesday, sources said. The injured were immediately taken to Jaffna Teaching Hospital for treatment.

Civil sources said they suspect SLA troopers and collaborating paramilitaries to be behind the Manipay explosion, to create fear among the local population as part of Colombo's counter-insurgency campaign.

The explosion took place amidst increasing number of disappearances of youths and school students, many abducted during curfew hours.

-tamil net

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் குண்டு வெடிப்பு -2 பலி -– 20 பேர் காயம்

இன்று செவ்வாய்கிழமை காலை சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வேறு வேறு குண்டு வெடிப்புகளிக் போது வயதுபோன பெண் உட்பட இருவர் கொல்லப்பட்டும் 20 பேர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவுவதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் குண்டு வெடிப்பில் சாவகச்சேரி கற்குழி வீதியை சேர்ந்த 50 அகவையுடைய தவராஐh பூபதி என்பவர் கொல்லப்பட்டும் மற்றும் 16 பொதுமக்கள் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். சாவகச்சேரி தனங்கிளப்பு கேரதீவு பகுதியில் உந்துருளியில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு இன்று காலை 8 மணியளவில் வெடித்ததிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் யாழ்பாணம் ஆசிரியர் வைத்திய சாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் ஏனையவர்கள் சாவகச்சேரி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது 6 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் சிறீலங்கா இராணுவத்தினர் இதனை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காரைநகர் வீதி மானிப்பாய் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்ததில் 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இதன்போது ஒரு சிறீலங்கா படையினருக்கும் காயங்களோ பாதிப்புகளோ இடம்பெறவில்லை. காயமடைந்தவர்கள் யாழ்பாணம் ஆசிரியர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபின் காயமடைந்தவர்களில் ஒருவர் இறந்துந்ள்ளார்.

குடிசார் தகவலின் படி மானிப்பாயில் இடம்பெற்றகுண்டு வெடிப்பானது இராணுவ துணைக்கூலிக்குளுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • தொடங்கியவர்

பிந்திக்கிடைத்த தகவலின் படி ஒரு இராணுவ வீரரும், 3 பொதுமக்களும் பலியானதாகவும், 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21005

Edited by யாழ்வினோ

ஈராக் பாணியில சனத்தை பீதியில வைத்திருக்க முயற்சி?

மானிப்பாயில நடந்தது இராணுவதுணைக்குழு எண்டால் சாவகச்செரியில வைச்சது என்ன துணையில்லாக்குழுவா ? அல்லது ஓட்டியகுழுவோ அல்லது ஓட்டாதகுழுவா வைச்சது

நல்லாய் இருக்கு செய்தி

ஆமி செத்தா விடுதலைப்புலிகள் வைச்சது அப்பாவிச் சனம் செத்தா துணைக்குழு துணையில்லாக்குழுவா

எண்டு கதைச்சு சனத்துக்கு தெரியும் இப்பிடியே எங்கட சனம் தான் சாகுது சிங்களவன் பக்கம் பாத்தான் மனிதாபிமானம் பாக்கிறது எண்டு தொடரு எங்கட ஆக்களின்ரை கதை கெக்க நல்லா கிடக்கு பாதிக்கப்பட்ட மக்களிட்டை பொய் கதைச்சாத் தெரியும் மனிதாபிமானம் பொறுமை எல்லாம் எங்கட சனம் சொல்லிக்குடுக்ககும் முக்கியாய் செஞ்சொலைப்பிள்ளையளின்றை பெற்றோர் எப்பதான் இதுக்கெல்லாம் தலைவர் முடிவெடுக்கப் பொறாரோ ???

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாயில நடந்தது இராணுவதுணைக்குழு எண்டால் சாவகச்செரியில வைச்சது என்ன துணையில்லாக்குழுவா ? அல்லது ஓட்டியகுழுவோ அல்லது ஓட்டாதகுழுவா வைச்சது

நல்லாய் இருக்கு செய்தி

ஆமி செத்தா விடுதலைப்புலிகள் வைச்சது அப்பாவிச் சனம் செத்தா துணைக்குழு துணையில்லாக்குழுவா

எண்டு கதைச்சு சனத்துக்கு தெரியும் இப்பிடியே எங்கட சனம் தான் சாகுது சிங்களவன் பக்கம் பாத்தான் மனிதாபிமானம் பாக்கிறது எண்டு தொடரு எங்கட ஆக்களின்ரை கதை கெக்க நல்லா கிடக்கு பாதிக்கப்பட்ட மக்களிட்டை பொய் கதைச்சாத் தெரியும் மனிதாபிமானம் பொறுமை எல்லாம் எங்கட சனம் சொல்லிக்குடுக்ககும் முக்கியாய் செஞ்சொலைப்பிள்ளையளின்றை பெற்றோர் எப்பதான் இதுக்கெல்லாம் தலைவர் முடிவெடுக்கப் பொறாரோ ???

சம்பவம் நடக்கிறத்துக்கு முதலே புலம்பெயர்ந்த ஊடகங்களுக்கு யார் செய்யுறது என்று தெரிந்திடும்.

மக்கள் இறந்தால் என்ன கஸ்டப்பட்டால் என்ன வெற்றி வெற்றி என்று செய்தி கிடைக்கனும். அப்பதான் கீரை கடையிறது போல ஆய்வு எழுத ரைம் பாஸ் பண்ண அத இணையத்தில பேஸ்ட் பண்ண வசதியா இருக்கும். :rolleyes:

  • தொடங்கியவர்

யாழில் இருவேறு இடங்களில் கிளேமோர்த் தாக்குதல் இரு படையினர் பலி.

யாழில் இருவேறு இடங்களில் சிறிலங்கா படையினர் மீது கிளேமோர்த் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. யாழ். சண்டிலிப்பாய் பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் இனந்தெறியாதோரால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதில் இன்று காலை 8.25 மணியளவில் படையினரின் கனரக வாகணம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த படையினர் பலாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.

-Sankathi-

  • தொடங்கியவர்

(2 ஆம் இணைப்பு) யாழ். குண்டு வெடிப்புக்கள்: 2 பொதுமக்கள் உட்பட 3 பேர் பலி- 20 பேர் காயம்.

யாழ். சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் வயதான மூதாட்டி ஒருவர் உட்பட 2 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சாவகச்சேரி புதிய சந்தைக்கு அருகே உந்துருளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டும், மானிப்பாய் காரைநகர் வீதியில் காலை 7.30 மணியளவில் மற்றொரு குண்டும் வெடித்தன.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளது.

சாவகச்சேரி சம்பவத்தில் கற்குழி தெருவைச் சேர்ந்த தவராஜா பூபதி (வயது 50) கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையாக காயமடைந்தவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சாவகச்சேரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

மானிப்பாய் காரைநகர் வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அந்தக் குண்டு வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் இராணுவ வாகனமோ அல்லது இராணுவ சுற்றுக்காவலோ இருந்திருக்கவில்லை.

காயமடைந்தவர்கள் உடனடியான யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மானிப்பாய் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவத் துணைக்குழுவினருமே காரணம் என பொதுமக்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ள வேளையில், இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

-Puthinam-

ஏனப்பு சனம் சாகிறது தான் விருப்பமோ ? அப்ப சிங்கள சனத்திற்கு வைக்க வேண்டியது தானே அவைக்கு மட்டும் மனிதாபிமானம் நல்லெண்ணம் எங்கட தமிழ் சனம் சாகேக்க மட்டும் கெட்டாத்தான் கோபம் பொத்து தொ ? தம்பி உம்மட சொந்தங்களை சிங்கள ஆமியின்ர கையாலையும் எங்கட புலிகளின்ர கைகளாலையும் இழந்தா தான் தெரியும் இழப்பு எண்டா என்ன வென்று அது வரையும் இப்பிடி எழுதினா வாசிக்க கரைச்நலாய் தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

(3 ஆம் இணைப்பு) யாழ். குண்டு வெடிப்புக்கள்: 3 பொதுமக்கள் உட்பட 4 பேர் பலி- 20 பேர் காயம்

[செவ்வாய்க்கிழமை, 23 சனவரி 2007, 09:45 ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ். சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சாவகச்சேரி புதிய சந்தைக்கு அருகே உந்துருளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டும், மானிப்பாய் காரைநகர் வீதியில் காலை 7.30 மணியளவில் மற்றொரு குண்டும் வெடித்தன.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளது.

சாவகச்சேரி சம்பவத்தில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் சாவகச்சேரி, கற்குழி தபால் கந்தோர் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த தவராஜா பூபதி (வயது 57) என்பவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையாக காயமடைந்தவர்கள் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சாவகச்சேரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

மானிப்பாய் காரைநகர் வீதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அந்தக் குண்டு வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா தருமராசா (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற சமயத்தில் இராணுவ வாகனமோ அல்லது இராணுவ சுற்றுக்காவலோ இருந்திருக்கவில்லை.

காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் சாவகச்சேரி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்தவர் சாவகச்சேரி டச்சு வீதியைச்சேர்ந்த வையாபுரி ஜானகி (வயது 52) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மானிப்பாய் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவத் துணைக்குழுவினருமே காரணம் என பொதுமக்கள் கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ள வேளையில், இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நன்றி- புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.