Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவுத்தூபிக்கு அனைவருக்கும் முன்னால் சென்ற மாவை

Featured Replies

தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார்.

இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து விட்டு 10 நிமிடங்களில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/118856?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழில் மிஸ் பண்ணினதை பிடிக்கனுமில்ல.

எதுஎப்படியோ தம் மண்.. இனம் என்று தம் இன்னுயிர்களை தியாகம் செய்த போராளிகள் எப்போதும் நெஞ்சில் வைத்துப் பூஜிக்கப்பட வேண்டியவர்கள்... மக்களால்... நினைவு கூறப்பட வேண்டியவர்கள். அது இப்படியாவது நிகழ்வது மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியில் இருந்து ,மாவையை  நீக்குவதற்கு  நிர்ப்பந்திக்கப்படலாம் .= ஊடகப்பேச்சாளர்  சு மந்தி tw_blush:

  • தொடங்கியவர்

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி

தியாகத் தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.

இன்று காலை திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றி நினைவு நிகழ்வை ஆரம்பித்தனர்.

இதில், மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி தமது உணர்வு பூர்வ அஞ்சலிகளைச் செலுத்தினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன் போது யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட மாணவரான தியாகத் தீபம் திலீபனுக்கு அதிகளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

தமிழ் மக்கள் தமக்குரிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தாயக மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்யும் பொருட்டு நீர் ஆகாரம் ஏதுமின்றி 12 தினங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தன் இன்னுயிரை அர்ப்பணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபனின் நினைவு தினம் யாழில் இன்று இடம்பெற்று வருகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/118881?ref=home

  • தொடங்கியவர்

யாழ் நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் 1987ஆம் ஆண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகிகள் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியின் முன்பாக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிக்குத் திலீபன் உண்ணா விரதமிருந்து உயிர் நீத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் மேற்குப் புறமாகக் கூடிய முன்னாள் போராளிகளும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.

திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் நினைவு தீபம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளர் க. அருந்தவபாலன், வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ். சுகிர்தன், எஸ்.சிவநேசன், அ.பரஞ்சோதி, தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சு.நிஷாந்தன், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் உணர்வு பூர்வ மலரஞ்சலி செலுத்தினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அதனைத் தொடர்ந்து பலர் திலீபனின் தியாகங்களையும், தமிழ்மக்களுக்காக அவர் செய்த அர்ப்பணிப்புக்களையும் நினைவு கூர்ந்து உரையாற்றினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த நிகழ்விற்குத் வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மூத்த அரசியல் வாதி வீ. ஆனந்தசங்கரி ஆகியோரும் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை, திலீபனின் நினைவாகக் கலந்து கொண்டிருந்த தாயாரொருவர் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி அனைவரையும் உருக வைத்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்துடன் இன்று காலை முதல் திலீபனின் நினைவிடத்தில் வீதியால் செல்பவர்கள் பலரும் அவ்விடத்தில் இறங்கி நின்று வீரவணக்கம் செலுத்திவிட்டுச் செல்கின்றமையை அவதானிக்க முடிந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/118880?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

மாவையருக்கு பேரணியோட, மூளையில கொஞசம் உறைக்கத் தொடங்கிட்டுது போல கிடக்குது. அதுதான் இரு தலைக்கு கொள்ளி எறும்பு போல, யாராவது பார்க்கமுதல் ஓடவேணும் என்று  ஓடியிருப்பார்.

  • தொடங்கியவர்

தியாகி திலீபனின் சக்தி தமிழினப் படுகொலைக்கு பெரும் துணை நின்ற ஹிந்திய கொலைகாரக் கும்பலின் அடிவருடிகள் பலரையும் இன்று திலீபனின் முன்னால் நான் முந்தி நீ முந்தி என்று மண்டியிட வைத்துள்ளது.

இதை ஈழத் தமிழ் மக்கள் கவனிக்கத் தவறவில்லை!

Edited by போல்

  • தொடங்கியவர்

தியாகி திலீபனுக்கு மன்னாரில் இரு இடங்களில் அஞ்சலி

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று மாலை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

மாலை 5.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வின் போது சுடர் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவீ அஞ்சலி செலுத்தப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த நிகழ்வில் அருட்தந்தை ஜெகதாஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினார் எஸ்.ஆர்.குமரோஸ், மன்னார் சமாதாக அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க், சமூக சேவையாளர் சிந்தாத்துறை, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மாலை 6.15 மணியளவில் தனது குடும்பத்துடன் நினைவு கூறினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வின் போது தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி,மலர் தூவி தனது குடும்பத்தினருடன் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.tamilwin.com/community/01/118915?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.