Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பல்கலை விரிவுரையாளர் தெரிவு பத்துவருட வழக்கு தீர்த்து வைப்பு

Featured Replies

கிழக்கு பல்கலை விரிவுரையாளர் தெரிவு பத்துவருட வழக்கு தீர்த்து வைப்பு
 
 
கிழக்கு பல்கலை விரிவுரையாளர் தெரிவு பத்துவருட வழக்கு தீர்த்து வைப்பு
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவிக்கான ஆட்தெரிவில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் 5 லட்ச ரூபா இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
 
பிரதம நீதியரசரினால் விசேடமாக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்தி ரமணி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகிய இரண்டு நீதிபதிகளைக் கொண்ட குழாம் ஒன்றின் முன்னிலையில் இந்த மேன் முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
பத்து வருடங்களாகத் தொடர்ந்த இந்த வழக்கில் இரண்டு பேரைக் கொண்ட நீதிபதிகள் குழாமினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் செவ்வாய்கிழமை நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டதுடன், வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சமாதான உடன்பாட்டில் கையெழுத்திட்டதையடுத்து வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கான ஆட்தெரிவில் ஏற்பட்ட ஒரு பிணக்கு காரணமாக நிர்வாகத்திற்கு எதிராக அந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்த ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணையின் போது, பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்ட போதிலும், பல்கலைக்கழகத்தின் சார்பில் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலை யாகவில்லை.
 
இதனையடுத்து எதிர்த்தரப்பினர் எவரும் இல்லாமலேயே, ஒருமுக விசாரணைக்கு நீதிம ன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது.
 
விசாரணையின் முடிவில் வழக்கு தொடர்ந்தவருக்கு கிழக்குப் பல்கலைக்கழகம் 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த இடைக்கால உத்தரவு கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாகத்தினர் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகி வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காமைக்கான காரணங்களை தெளிவுபடு த்தியதுடன், இழப்பீடாக 10 லட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.
 
இந்த விண்ணப்பத்தின் மீதான விசாரணைகளை நடத்திய மாவட்ட நீதிபதி பல்கலைக்கழக நிர்வாகத்தின் விண்ணப்பத்தை நிராகரித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் பூரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
 
பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின்பேரில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திர மணி, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிளைக் கொண்ட குழாமினால் இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டது,
 
பல தவணைகள் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், இறுதியாக கிழக்குப் பல்கலைக்க ழகம் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்ப ட்டது.
 
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை இழப்பீட்டுத் தொகையை, காசோலையில் செலுத்தவும் இறுதி சமாதான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்குமாக இரு தரப்பினரும் மட்டக்களப்பு சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் முன்னிலையாகியிருந்தனர்.
 
நீதிமன்ற அழைப்பாணை மற்றும் உத்தரவுகளை பல்கலைக்கழக அதிகாரிகளிடம் அலட்சியம் செய்வது அழகல்ல. அத்தகைய போக்கு இனிமேல் இருக்கக் கூடாது என்பதைப் பல்கலை க்கழக துணைவேந்தர் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்படி அங்கு முன்னிலையாகியிருந்த பல்கலைக்கழக துணைப்பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தினார்.
 
நீதிமன்ற அழைப்பாணைகளுக்கு உரிய மதிப்பளித்துச் செயற்பட வேண்டியது அவசியம். நீதிமன்ற அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்தில் சமூகமளிக்காத காரணத்தினாலேயே இந்த வழக்கில் இழப்பீடு செலுத்த வேண்டிய நிலைமைக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆளாகியது என்பதையும் நீதிபதி இளஞ்செழியன் கிழக்குப் பல்கலைக்கழக துணைப்பதி வாள ருக்குச் சுட்டிக்காட்டினார்

http://onlineuthayan.com/news/18197

கொடுமையிலும் கொடுமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.