Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இந்தியத் தூதரகம் மறைமுகமாக தன் நாச வேலையை ஆரம்பித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்தியத் தூதரகம் மறைமுகமாக தன் நாச வேலையை ஆரம்பித்துள்ளது

 

 

sp-1அக்டோபர் மாதம் 9 ம் திகதி யாழ்ப்பாணம் 2016 யாழ் மண்ணில் சிறீலங்கா அரச தொலைகாட்சி வசந்தம் டிவி ( ITN) இலங்கை அரச வானொலி வசந்தம் FM ( ITN ) மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகிந்த சிந்தனையில் உருவான ஒரே குரல் ஒரே தேசம் அரச தொலை தொடர்பு நிறுவனம் (SRILANKA TELECOM) ஆதரவில் தென்னிந்திய இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகன் ஹரி பாஸ்கர் மற்றும் மலையகத்தை பின்னணியாக கொண்ட ஐங்கரன் மீடியா நிறுவனத்திற்க்கு பணம் கொடுத்து பொருத்தமற்ற சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்தியத் தூதரகம் மறைமுகமாக நடாத்த உள்ளனர்

இந்நிகழ்வானது செப்டம்பர் 24 ம் திகதி மிகவும் வெற்றிகரமாக யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் மாபெரும் எழுச்சி பேரணிக்கு கிடைத்த வெற்றியை மழுங்கடித்து கேலியாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில்தான் இந்நிகழ்வு நடைபெற உள்ளது .

• இராணுவத்தால் கையடக்கபட்ட மக்களின் நிலங்கள் திருப்பி வழங்காமை 
• விசாரணை இன்றி சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் தற்போதைய உண்ணாவிரத போராட்டம் 
• தமிழர் பிரதேசங்கள் புத்த மயமாக்கல் 
• சிங்கள குடியேற்றம் 
• காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல் 
• இனப்படுகொலைக்கான அனைத்துலக விசாரணை 
• இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்படாமை 
• சரணடைந்த போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டைமை 
• வடக்கில் அபிவிருத்தியும் தொழில் வாய்ப்பும் புறக்கணிக்கப்பட்டவை 
இது போன்ற பல பிரச்சினைகளுக்கு ஈழத் தமிழர் முகம் கொடுத்து இருக்கும் வேளையில் திரை மறைவில் இந்திய அரசின் தேவைக்கு ஏற்ப இன் நிகழ்ச்சி இப்போது நடைபெறுவது வருந்ததக்கது .

தமிழீழ தமிழ் மக்கள் என்றென்றும் S. P. பாலசுப்ரமணியம் மற்றும் கங்கை அமரன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பாசமும் கொண்டவர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்போது இதுபோன்ற மேலும் பல்வேறு நிகழ்சிகளை யாழ் மக்கள் வரவேற்பார்கள்.

http://www.kuriyeedu.com/?p=16577

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

இந்நிகழ்வானது செப்டம்பர் 24 ம் திகதி மிகவும் வெற்றிகரமாக யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் மாபெரும் எழுச்சி பேரணிக்கு கிடைத்த வெற்றியை மழுங்கடித்து கேலியாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள்.

அதுவும் நடக்கட்டும் இதுவும் நடக்கட்டும்......மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் ....60 வருடமாக மக்கள் குரல் எழுப்பிகொண்டேயிருக்கின்றார்கள்.....பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை .......இதில என்ன மழுங்கடிக்க கிடக்குது.எத்தனையோ போராட்டங்களை மழுங்கடித்தார்கள் இருந்தும் மக்கள் தளரவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் சொல்லது போல் அவர்கள் செய்வதை செய்யட்டும்.
மக்கள் தம் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை...மாறவும் மாட்டார்கள்.

சினிமாவுக்கும் கேளிக்கைக்கும்  மயங்க இதுவொன்றும் இந்தியா அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரவு, ஒரு நாள் என்சாய் பண்ணட்டும்... 

சும்மா.... :107_hand_splayed: (போதும்)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் நினைவு தூபியில்  மாலையை  போட்டு விட்டு நிகழ்வை ஆரம்பிக்கட்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.