Jump to content

இராணுவச் சப்பாத்துக்கள் தீர்மானிக்கப்போகும் ஓயாத அலைகள் ஐந்து


nallavan

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

இந்தக் கட்டுரை எழுதுவதாகச் சொல்லி சில மாதங்கள் போய்விட்டன. இறுதியாக முகமாலை வழியாக ஆனையிறவைக் கைப்பற்ற சிங்களப் படைகள் முயற்சித்து அடிவாங்கிய பொழுதில் நான் இதைச் சொல்லியிருந்தேன். ஓயாத அலைகள் ஐந்துக்கான காலம் நெருங்கிவருகின்ற படியால் கிடைக்கும் கொஞ்சநஞ்ச நேரத்தில் இந்த "ஆய்வுக் கட்டுரை"யை எழுதிவிடவேண்டுமென்று முயற்சித்து எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரையை வாசிக்க முன் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல் ஒன்றேயொன்றுதான். அந்த முகமாலை முறியடிப்புச்சமரில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் சடலங்கள் எழுபத்தைந்து வரையானவை இலங்கை அரசிடம் புலிகளால் கையளிக்கப்பட்டன. அப்படிக் கையளிக்கப்பட்ட அனைத்துச் சடலங்களும் இராணுவச் சப்பாத்துக்கள் அணிந்திருந்தபடியே கையளிக்கப்பட்டன என்பதுதான் அந்த அதிமுக்கியமான தகவல்.

இதைவிட உங்களுக்கு இராணுவ, புவியியல், பொருளியல், அரசியல் அறிவு எதுவுமே வேண்டியதில்லை, இந்த "ஆய்வுக்கட்டுரை"யை வாசிக்க.

இராணுவச் சப்பாத்துக்களுக்கு புலிகளிடம் எப்போதுமே தனி மவுசும் மரியாதையும் இருந்து வந்துள்ளது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் நடந்த கரந்தடித் தாக்குதல்களாகட்டும், முகாம் தாக்குதல்களாகட்டும் - அவற்றில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் வரிசையில் தவறாமல் முக்கிய இடம்பிடிப்பவை இந்த இராணுவச் சப்பாத்துக்கள். ஒருசோடி சப்பாத்து கைப்பற்றப்பட்டாலும் அது கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாட விவரத்தில் கட்டாயம் வந்தே தீரும்.

யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு இது ஞாபகம் இருக்கும்.

இது யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரைக்கும் தொடர்ந்தது. ஜெயசிக்குறு முறியடிப்புச் சமராகட்டும், அல்லது எங்காவது நடந்த பதுங்கித்தாக்குதலாகட்டும் அவற்றில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் வரிசையில் இராணுவச் சப்பாத்தும் இடம்பெறும். ஆனையிறவைப் பிடித்து யாழ்ப்பாணத்தை நெருக்கி, பின் யாழ்ப்பாணத்துள் நின்ற இடங்களை விட்டுவிட்டு வந்தபின்னும், தீச்சுவாலையை முறியடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி உலகத்துக்குப் பலத்தை நிருபித்த பின்னும், கட்டுநாயக்காவை அடித்து நொருக்கி தன்னிகரில்லாத இயக்கமாக பறைசாற்றிய பின்னும், மணலாற்றில் அவ்வப்போது நடந்த எதிரியின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பில் ஒருசோடி சப்பாத்துக் கைப்பற்றப்பட்டாற்கூட அதையும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விவரத்தில் வெளியிட்டவர்கள் புலிகள்.

ரணில் வென்ற பாராளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் மணலாற்றில் 'வெடிவைத்த கல்' என்ற இடத்தில் நடைபெற்ற சிறுமோதலில் ஒரு ஏ.கேயும் ஒருசோடி சப்பாத்தும் கைப்பற்றப்பட்டதைப் பத்திரிகையில் வெளியிட்டார்கள்.

இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால், இராணுவச் சப்பாத்துக்கு அவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் புலிகளால் கொடுக்கப்பட்டது என்பதைச் சுட்டவே.

போராளிகளிடத்திலும் இராணுவச்சப்பாத்துக்கு தனி மவுசு உண்டு. "கெமுனு வோட்ச் " படைப்பிரிவினரின் சப்பாத்தில் கூடுதல் விருப்பம். சண்டை நடக்கும்போது தமக்கு விரும்பிய சப்பாத்தொன்றை எங்காவது தேப்பிடித்து அணிந்துகொண்டு மிகுதிச் சண்டையைப் பிடிப்பர். போராளிகள் அனைவருக்கும் இயக்கத்தால் இராணுவச்சப்பாத்துத் தேவை நிவர்த்தி செய்யப்பட்டிருக்காது. இவற்றை சில ஒளிவீச்சுக் காட்சிகளில் காணலாம். நிறையப்பேர் செருப்போடுதான் களத்தில் நிற்பர். சிலர் வெறுங்காலோடும் நிற்பர்.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர்க் காலத்தில் கனகரான்குளத்தில் நடந்த சண்டைக்காட்சியொன்றில் ஒருபோராளி PK - MPMG இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்க, மற்றப் போராளி காப்பெடுத்தபடி அவ்விடத்திலிருந்த இராணுவத்தினனின் சடலத்திலிருந்து சப்பாத்தைக் கழற்றிக்கொண்டிருப்பார். இராணுவச் சப்பத்துக் கழற்றும் காட்சிகள் வேறிடங்களிலும் வருகின்றன.

முன்பு அரசிடம் ஒப்படைக்கப்படும் இராணுவச் சடலங்களில் சப்பத்துக்கள் இருப்பதில்லை. அவை கைப்பற்றப்பட்ட தொகுதியில் வந்துவிடும். அப்படி சில சப்பாத்துக்கள் கொடுக்கப்பட்டால் அவை தொடர்ந்து பாவிக்க முடியாதவையாக இருக்கும். காலிலிருந்து கழற்ற முடியாமலிருந்தாலும் சடலத்தோடே அவை கொடுக்கப்படும்.

இப்படியாக, முக்கியமான இராணுவத் தளபாடமாக, விட்டுக்கொடுக்க முடியாததாக, போராளிகளால் பெரிதும் விரும்பப்பட்டதாக இதுவரை காலமும் இருந்த இராணுவச்சப்பாத்து விடுதலைப்புலிகளால் விட்டுக்கொடுக்கப்பட்டது அண்மையில் நடந்த இராணுவச் சடலங்கள் கையளிப்பில்.

அன்று கையளித்த அனைத்துச் சடலங்களும் இராணுவச் சப்பத்துக்களோடு கையளிக்கப்பட்டன. அத்தோடு கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் விவரத்தில் இராணுவச்சப்பாத்து இடம்பெறவேயில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது உணர்த்தும் பாடமென்ன?

இது சொல்லும் சேதியென்ன?

இங்குத்தான் இருக்கிறது மிகப்பெரிய சேதி.

அதாவது புலிகள் இராணுவச் சப்பாத்து விடயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டார்கள்.

சடலங்களோடு சப்பாத்தையும் சேர்த்துக் கையளிக்குமளவுக்கு புலிகள் இராணுவச் சப்பாத்துக்களில் தன்னிறைவு பெற்றுவிட்டார்கள்.

இது இரண்டுவழிகளில் சாத்தியப்பட்டிருக்கலாம்.

1.

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் ஆயிரக்கணக்கான சப்பாத்துக்களை வன்னியில் கொண்டுவந்து குவித்துள்ளார்கள் என்று கருதலாம்.

இதில் இன்னும்பல செய்திகள் அடங்கியுள்ளன. இராணுவச் சப்பாத்துக்களையே கப்பல்கப்பலாகக் கொண்டு வந்து குவித்தார்களென்றால் இன்னும் என்னென்ன சாமான்கள் கொண்டுவந்து குவித்திருப்பார்கள்? ஏவுகணைகள், டாங்கிகள் (டாங்கிகளைக் கொண்டுவந்து இறக்க முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் இதை மறந்துவிடவும். ஆனால் யாழ்க்களத்தில், புலிகளிடமிருக்கும் டாங்கி கப்பலால் கொண்டுவந்து கொட்டியதென்று முன்பு எழுதித்திரிந்தவர்கள் இதையும் சேர்த்துப் படித்துச் சந்தோசப்படலாம்), ஆட்லறிகள், எறிகணைகள் என்று எவ்வளவு சாமான் கொண்டு வந்து இறக்கியிருப்பார்கள்?

அண்மையில் ஈழத்தமிழரின் மூத்த, முதுபெரும், மாண்புமிகு இராணுவ - அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் சொன்னதுபோல் 'அக்னி' ரக ஏவுகணைகள் ஏராளம் கொண்டுவந்து குவித்திருப்பார்கள்.

நினைக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா?

ஆம், இவையெல்லாம் சேர்ந்து ஓயாத அலைகள் ஐந்தின் மீதான நம்பிக்கையை இன்னும் வலுவாக்குகிறது.

இனி விழுவதே கடைசி அடி. எல்லாமே தூள் தூளாகப் போகிறது.

2.

புலம்பெயர்ந்த தமிழ் நுட்பியலாளர்களின் உதவியுடன் வன்னியில் தாமே சுயமாக இராணுவச்சப்பத்துக்களை உற்பத்தியாக்கத் தொடங்கியிருக்கலாம்.

அப்படித் தொடங்கியிருந்தால் இதிலும் பெரிய விசயமுண்டு.

தமிழீழத் தனியரசுக்கான முக்கியமான கட்டுமானமொன்று இப்போதே வன்னியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஈழத்திலிருந்து சப்பாத்து ஏற்றுமதியில் கோடிக்கணக்காக உழைக்கலாம். தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் இந்தச் சப்பாத்துத் தொழிற்சாலை முக்கியமான மைல்கல்லாக - இல்லையில்லை அத்திவாரக்கல்லாக இருக்கும்.

இராணுவச் சப்பாத்துக்களைச் செய்யத் தொடங்கியவர்கள் வேறென்னவெல்லாம் செய்யத் தொடங்கியிருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இவற்றை இங்கே நான் எழுதுவதை விட நீங்களே அவரவரின் திறமைக்கேற்றவாறு கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள்.

எதி்ர்காலத்தில் நாங்கள் பெரும் வல்லரசாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதே தெரிகின்றன.

பார்த்தீர்களா வாசகர்களே!

சாதாரணமாக நாம் நினைக்கும் இராணுவச்சப்பாத்தில் எவ்வளவு பெரிய விசயம் அடங்கியிருக்கிறதென்று?

இந்த இராணுவச் சப்பாத்து விவகாரம் எமக்கும் சொல்லும் சேதிகளைப் புரிந்துகொண்டீர்களா?

குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களுக்குரிய செய்தியைப் புரிந்துகொண்டீர்களா?

விரைவில் நடக்கவிருக்கும் ஓயாத அலைகள் ஐந்துக்கான மணியோசை - அல்ல காலடியோசை இராணுவச் சப்பாத்து வடிவத்தில் உங்கள் காதுகளில் விழுகிறதா?

இதேநேரம் இன்னொரு கேள்வி பிறக்கிறது.

இனிவரும் இராணுவநடவடிக்கை 'ஓயாத அலைகள்" என்ற தொடர் பெயரில் ஐந்து என்ற இலக்கத்தோடு நடத்தப்படுமா?

அல்லது புதிய ஈழப்போரென்பதால் (நாலாம் கட்ட ஈழப்போர்) வேறு புதுப்பெயரில் நடத்தப்படுமா?

மணலாற்றுப்பக்கம் நடத்தப்படும் நடவடிக்கை இதயபூமி - 2 எண்டு நடத்தப்படுமா?

இதுபோன்ற அதிமுக்கிய கேள்விகள் இருக்கின்ற.

இதுபற்றியும் விரைவில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இருக்கிறேன்.

நன்றி.

பின்பு சந்திப்போம்.

  • Replies 61
  • Created
  • Last Reply
Posted

ஐயோ,ஐயோ, இன்னும் சின்ன பிள்ளை தனமாவே இருகிங்க!

முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போட்டதை கேள்விபட்டிருக்கேன், ஆனால், சப்பாத்துக்கும், சண்டைக்கும்(ஈழப்போருக்கும்) முடிச்சு போட்டதை இங்கே தான் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மூக்கி,

இதில எது சின்னப்பிள்ளைத் தனம் எண்டு சொன்னா தெரிஞ்சு கொண்டு பெரியபிள்ளைத்தனமா நடந்துகொள்ளுவோமெல்லோ?

சப்பாத்துக்கும் சண்டைக்கும் நான் சொன்ன தொடர்பு உங்களுக்கு விளங்கேலயோ?

இன்னும் 'சின்னப்புள்ளத்தனமாவே" இருக்கிறியளே? :P

Posted

ஆய்வாளர் நல்லவன் அவர்களே புலம் பெயர்ந்தவர்களின் தாராள என்ன அளவுக்கு அதிகமான என்றால் கூட மிகையாகாது என்று நினைக்கிறேன், பங்களிப்பினால் புலிகளின் பலம் மலை போல் சமாதான காலத்தில் வழர்ந்து விட்டதை எண்ண புல்லரிக்கிறது.

புலிகளின் அதீதபலத்தை அந்த இறுதி யுத்தத்தில் ஓரே நேரத்தில் பாவித்து எல்லாம் தூள் தூள் ஆகினால் இலங்கைத்தீவு கடலுக்கை தாண்டு விடாதா? புலிகளுக்கு குடுத்தது எல்லாம் காணும் ஈழம் கிடைச்சா பிறகு குடுத்து பதவிகள் கடவுச்சீட்டுகள் எடுப்பம் இல்லாட்டி குடுக்காதவையிட்ட பறிப்பம் என்று விடுவது சாலச்சிறந்தது போல் இருக்கிறதே?

எது எப்படியோ மக்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். சிறீலங்காவின் போர்முனையை மழுங்கடித்து பின்பக்கமாக வழைத்து சுருட்டி விட்டார்கள் என்று பரபரப்பாக செய்திகள் வந்திருந்தது. ஆனால் இப்பே மொளனம் காக்கிறார்கள் பல இடங்களில் பின்வாங்குகிறார்கள். யுத்த நிறுத்த உடன்படிக்கைப்படி இருந்த பல இடங்கள் இழக்கப்படுகிறது. 70வீத கட்டுப்பாட்டு நிலம் 7வீதமாகிவுடுமோ என்று தவிக்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

இந்த முறை பலமான நிலையில் இருந்து பின்வாங்குவதால் தான் ஜசிஆர்சி யுஎன்எஜ்சிஆர் போன்ற நிறுவனங்களிடம் அகதிகளை பேச்சுவார்த்தை நடத்தி கைய்யளித்து விட்டு வெளியேறினார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் என்றால் இந்த சர்வதேச அமைப்புகள் பலமானவர்களோடு தான் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது. இந்த மிகவும் சிக்கலான அரசியல் இராணுவ இராஜதந்திரப் பார்வை சாதாரண மக்கள் விளக்க முடியுமா?

வெற்றிக் களிப்பில் பொங்கல் கொண்டாடும் வெதமாத்தையாவும் எச்சிலைகளிற்கும் இடி என இறங்கும் அந்த இறுதிப்பாச்சல் எப்போ ஆரம்பிக்கும் என்பது உங்கள் கணிப்பு? புலம் பெயர்ந்தவர்கள அந்த பாச்சல் பற்றிய செய்தி தேனாக காதில் பாய்வதற்காக மிகவும் சோகமாக குழம்பிய நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சின்னத்திரைகளை?

புறணி பாடிய நக்கித்தின்னும் கூட்டம் எல்லாம்; எல்லாம் பறணி பாட இன்னும் எவ்வளவு கால அவகாசம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? அந்த 22 ஆம் திகதியின் விசேடம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தயவுசெய்து இப்படியான சின்னபிள்ளைத்தனமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதை நிறுத்துங்கள்.

Posted

மூக்கி,

இதில எது சின்னப்பிள்ளைத் தனம் எண்டு சொன்னா தெரிஞ்சு கொண்டு பெரியபிள்ளைத்தனமா நடந்துகொள்ளுவோமெல்லோ?

சப்பாத்துக்கும் சண்டைக்கும் நான் சொன்ன தொடர்பு உங்களுக்கு விளங்கேலயோ?

இன்னும் 'சின்னப்புள்ளத்தனமாவே" இருக்கிறியளே?

உங்களுக்கு அட்வைஸ் பன்னுற அளவுக்கு நம்மிடம், அதற்க்கான, அறிவோ, தகுதியோ, வயதோ, அனுபவமோ இல்லை.. :blink:

நானும் கொஞ்சம் சின்னபிள்ளை தனமாக தான் யோசித்து பார்த்தேன்.. :P :lol:

முன்னெரெல்லாம், நாம் சப்பாத்தை என்ன, எதை வேண்டுமென்டாலும் கழட்டி பொட்டு கொடுக்கலாம். ஆனால், இப்போ, எமது போராட்டம் சர்வதேசமயபடுத்தபட்டிருகிறத

Posted

Well done Nallavan. Taking shoe as a simple sample to explain a real

fact.

Posted

ஆள் ஆளுக்கு ஆய்வுக்கட்டுரை எண்டு எழுதி எனப்பா சனத்தைக் குழப்புறியள்?

நல்லவன் உமக்கு சப்பாத்து ஆய்வாளர் எண்டு பட்டம் தாறம் இப்படி குழப்பாதையும்.எது ஆய்வுக் கட்டுரை எது நக்கல் கட்டுரை எண்டு வித்தியாசம் தெரியாத அளவுக்கு சனம் குழம்பிக் கிடக்கு.

சனத்தை இப்படிக் குழப்பி வச்சது ஆய்வுக் கட்டுரைகளா இல்லை இந்த நக்கல் கட்டுரைகளா என்று தனியா ஒரு ஆய்வு செய்ய வேணும்.

ஆனா புலிகளின் அமைதி எமது எதிரிகள் முதல் ,சர்வதேசம் வரை பலரைக் குழப்பி இருக்கு.அரசியல் ரீதியா சிந்திக்கக் கூடியவர்களுக்கும், களத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்களுக்கும் , வரலாற்றைத் திருப்பிப்பார்ப்பவர்க்கும் குழப்பம் இருக்காது.ஆனா களத்தில் இருந்து தொலைவில் இருக்கும் புலத்தில் இருப்பவர்களுக்கு இந்த அமைதி குழப்பத்தையே தரும்.இதனை விளக்க கட்டுரைகள் ,விளக்கங்கள் அவசியம் ஆகின்றன.இதனை எழுதுவோர் வரலாற்றைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை எழுப்புவதுடன், எமது பலத்தை கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிதர்சமான உண்மைகளில் இருந்து எழுத வேண்டும்.பலம் பற்றிய கற்பனைப் புனைவுகளால் எழுதப்படும் 'ஆய்வுக்கட்டுரைகள்' தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு பலம் சேர்க்காமால் மக்களை பங்களிப்புச்செய்யாதா ஆட்டுமந்தைக் கூட்டமாகவே வைத்திருக்கும்.ஆகவே நிதர்சமான உண்மைகளை அறியாதவர்கள் தயவு செய்து தமது கற்பனைக் குதிரையை நம்பி இவ்வாறான கட்டுரைகளை எழுதாமல் விடுவதும் இவற்றை புல ஊடகங்கள் பிரசுரிகாமல் இருப்பதுவும் மிக அவசியம் ஆகிறது.

களத்தில் இருந்து புலத்தை நோக்கியா ஆய்வுகள் ,விளக்கங்கள் இராணுவ நோக்கங்களைப் பாதிக்கா வண்ணம் வர வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது.தமிழத் தேசியத் தொலைக் காட்சியின் நிலவரம் நிகழ்ச்சி இதற்கு நல்ல உதாரணம்.இவ்வாறனவை இணயத்திலும் கட்டுரைகளாக விளக்கங்களாக வெளி வந்தால் இந்த புல ஆய்வாளர்களினால் ஏற்படுத்தப்படும் மயக்கத்தை தெளிவிக்கலாம்.இது களத்தில் இருந்தே சாத்தியப்படக்கூடிய ஒன்று. நிலாந்தன் முதலானோர் இவை பற்றி சிந்தித்து இணயத்திலும் புல ஊடகங்களிலும் தமது பங்களைப்பை மேலும் விரிவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தாரகியின் இழப்பு இன்னும் ஈடு செய்ய முடியாததாகவே இருக்கிறது.

Posted

ஆள் ஆளுக்கு ஆய்வுக்கட்டுரை எண்டு எழுதி எனப்பா சனத்தைக் குழப்புறியள்?

நல்லவன் உமக்கு சப்பாத்து ஆய்வாளர் எண்டு பட்டம் தாறம் இப்படி குழப்பாதையும்.எது ஆய்வுக் கட்டுரை எது நக்கல் கட்டுரை எண்டு வித்தியாசம் தெரியாத அளவுக்கு சனம் குழம்பிக் கிடக்கு.

சனத்தை இப்படிக் குழப்பி வச்சது ஆய்வுக் கட்டுரைகளா இல்லை இந்த நக்கல் கட்டுரைகளா என்று தனியா ஒரு ஆய்வு செய்ய வேணும்.

ஆனா புலிகளின் அமைதி எமது எதிரிகள் முதல் ,சர்வதேசம் வரை பலரைக் குழப்பி இருக்கு.அரசியல் ரீதியா சிந்திக்கக் கூடியவர்களுக்கும், களத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்களுக்கும் , வரலாற்றைத் திருப்பிப்பார்ப்பவர்க்கும் குழப்பம் இருக்காது.ஆனா களத்தில் இருந்து தொலைவில் இருக்கும் புலத்தில் இருப்பவர்களுக்கு இந்த அமைதி குழப்பத்தையே தரும்.இதனை விளக்க கட்டுரைகள் ,விளக்கங்கள் அவசியம் ஆகின்றன.இதனை எழுதுவோர் வரலாற்றைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை எழுப்புவதுடன், எமது பலத்தை கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை நிதர்சமான உண்மைகளில் இருந்து எழுத வேண்டும்.பலம் பற்றிய கற்பனைப் புனைவுகளால் எழுதப்படும் 'ஆய்வுக்கட்டுரைகள்' தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு பலம் சேர்க்காமால் மக்களை பங்களிப்புச்செய்யாதா ஆட்டுமந்தைக் கூட்டமாகவே வைத்திருக்கும்.ஆகவே நிதர்சமான உண்மைகளை அறியாதவர்கள் தயவு செய்து தமது கற்பனைக் குதிரையை நம்பி இவ்வாறான கட்டுரைகளை எழுதாமல் விடுவதும் இவற்றை புல ஊடகங்கள் பிரசுரிகாமல் இருப்பதுவும் மிக அவசியம் ஆகிறது.

களத்தில் இருந்து புலத்தை நோக்கியா ஆய்வுகள் ,விளக்கங்கள் இராணுவ நோக்கங்களைப் பாதிக்கா வண்ணம் வர வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது.தமிழத் தேசியத் தொலைக் காட்சியின் நிலவரம் நிகழ்ச்சி இதற்கு நல்ல உதாரணம்.இவ்வாறனவை இணயத்திலும் கட்டுரைகளாக விளக்கங்களாக வெளி வந்தால் இந்த புல ஆய்வாளர்களினால் ஏற்படுத்தப்படும் மயக்கத்தை தெளிவிக்கலாம்.இது களத்தில் இருந்தே சாத்தியப்படக்கூடிய ஒன்று. நிலாந்தன் முதலானோர் இவை பற்றி சிந்தித்து இணயத்திலும் புல ஊடகங்களிலும் தமது பங்களைப்பை மேலும் விரிவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தாரகியின் இழப்பு இன்னும் ஈடு செய்ய முடியாததாகவே இருக்கிறது.

நல்லவன் அவர்களே

தங்கள் ஈடுபாடு புரிகிறது.நீங்கள் சின்னப்பிள்ளைத்தனமாக ஒன்றும் கூறவில்லை.இது ஒருவழிக்கு யதார்த்தமே.உங்களுக்கு தெரியுமா? ஊரில் கிடுகு வண்டில் போகுமே!வெயில்காலங்களில் இந்தக்கிடுகு வண்டிலுடன் நாய் ஒன்று ஒண்டிக்கொள்ளும்.வண்டில் போனால் நாயும் போகும் வண்டில் நின்றால் நாயும் நிற்கும்.ஆனால் இந்தநாயின் நினைப்புத்தான் தனி!நாயின் நினைப்பெல்லாம் தான் தான் வண்டியை இழுத்து செல்வதாக.......வழியில் இப்படி சிலபல விடயங்களை சந்திக்கத்தான் வேண்டும்.

Posted

போராட்டத்தின் அடிப்படைப் பலம் போராட்டத்தின் நியாயப்பாடுகளை உணர்ந்து அதற்காக உழைக்க பங்களிக்க தயாரானவர்கள். இந்த அடிப்படைப் பலம் இருந்தால் அது இராணுவ, பொருளாதார, அரசியல், இராஜதந்திர பலங்களாக தேவை அறிந்து தகுந்த நேரத்தில் இடத்தில் வெளிவரும்.

புலிகளின் இராணுவ பலம் என்ற போதைக்கு அடிமையான மந்தைகள் போராட்டத்திற்கு பலமாக இருக்க முடியாது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் இந்த போதைப்பொருளை தயாரிக்கும் மற்றும் பிரசுரிக்கும் ஒலி ஒளிபரப்பும் "மாமாக்கள்" தமது தவறை உணர்ந்து எமது போராட்டத்திற்கான அடிப்படைப் பலத்தைக் உறுதிய செய்ய உழைக்க வேண்டும்.

இல்லை அது கடினம் போட்டிக்கு போதைப் பொருள் வியாபாரம் செய்யிறது இலகு என்றால் "விடியலின் ஆண்டே வருக" என்று ஒவ்வெரு புதுவருடத்தையும் கொண்டாடிக் கொண்டு சந்தோசமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நாரதர்,

என்னால் நல்ல கட்டுரை எழுதமுடியும்.

புலிகள் பற்றியும் அவர்களின் பலம், பலவீனம், யுத்தகளம் பற்றியும் எங்கள் புலத்து ஆய்வாளர்களைவிடவும் எனக்கு அதிகளவாகவும் சரியாகவும் தெரியுமென்றே நினைக்கிறேன்.

என்னளவில் என்ன நடக்கிறது; என்ன நடக்கப்போகிறது என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். குழம்புபவர்களைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. குழப்புபவர்களில் சிலவேளை எரிச்சல் வருவதுண்டு.

அப்போது இப்படியான 'ஆய்வுக் கட்டுரைகள்' எழுதத் தோன்றும்.

நீங்கள் சொல்வது போல் நக்கல் கட்டுரைகளுக்கும் நல்ல கட்டுரைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் சிலர் தவிப்பது உண்மைதான்.

ஆனால் தாம் எழுதுவது நல்ல கட்டுரையென்று பறைதட்டிக்கொண்டு எழுதும் சிலரின் கட்டுரைகளில் இருக்கும் தகவற்பிழைகளைச் (அரசியற் கருத்துக்களை விடுங்கள்; புலிகள் பின்பாங்குவது தந்திரோபாயமாகவே என்பதைத் தவிர வேறெந்த அரசியல் சிக்கலும் இப்போது ஈழத்தமிழரிடம் இல்லவே இல்லை. நானும் அதையேதான் சொல்கிறேன்) சுட்டினாற்கூட அவ்வெழுத்தாளரின் ரசிகர் மன்றக் குஞ்சுகளின் தொல்லை தாங்க முடியாது.

இப்படி இரசிகர் மன்றங்கள் வைத்திருப்பவர்களால், ஆதாரத்தோடு வைக்கப்படும் எதிர்விமர்சனங்களைப் புறக்கணிப்பவர்களால் (தனிமடல்களைப் புறக்கணித்தல் முக்கியமானது)

ஒருபோதும் முழுமையான கட்டுரைகளைத் தரமுடியாது.

சிவராமின் இடத்தை இனி வெளியிலிருந்து ஒருவரால் நிரப்ப முடியாது என்றே எனக்குப் படுகிறது.

இப்போது எழுதுபவர்களுக்கு இராணுவ விடங்களில் தேர்ச்சியில்லை. எழுதும் தகவலை நாலிடத்தில் சரிபார்ப்பதைக் கூடச் சோம்பேறித்தனத்தாலோ என்னவோ தவிர்க்கப்பார்க்கிறார்கள்.

ஆனானப்பட்ட டி.பி.எஸ் ஜெயராச்சே, 120 மி.மீ ஆட்லறி 15 கிலோமீற்றர் அடிக்கலாம் 122 மி.மீ ஆட்லறி 30 கிலோமீற்றர் அடிக்கலாம் எண்டு எழுதேக்க எங்கட ஆய்வாளர்மார் எந்த மூலைக்கு?

Posted

என்ன செய்வது இங்கு ஆய்வு(?)கட்டுரை எழுதியவர்கள்

மற்றவர்களை பார்த்து கண்ணில் பூளை வடியுது என்று சொல்லி கொண்டு தங்கள் மூக்கில் சளி வடிவதை கவனிப்பது இல்லை.

Posted

நல்லவன்,

இதை நான் குருக்கிஸுக்கும் உங்களுக்கும் சேர்த்தே சொல்லுறன்.யாரையும் எழுதாதேங்கோ எண்டு சொல்ல ஏலாது, எனெண்டா எழுதுவது அவர் அவரின் கருத்துச் சுதந்திரம்.எங்களால இப்படி நீங்க எழுதினா இப்படி நடக்கும் எண்டு விமர்சனத்தை தான் முன் வைக்கமுடியும்.அதை அறிவு பூர்வமா நிதானமா வைக்க வேணும்.அப்பத் தான் எல்லாருக்கும் என்ன சொல்ல வாறம் எண்டது விளங்கும்.விளங்க்கப் படுத்த வேண்டியது உங்கட பொறுப்பே ஒழிய ஒருத்தனுக்க விளங்கேல்ல எண்டு அவனைத் திட்டித் தீர்க்கிறதால அவனுக்கு விளங்கப் போறதில்லை.

இந்த ஆய்வுகளில் இருக்கிற பிழைகளை அதால ஏற்படப் போற பாதிப்புக்களை விளக்கி எழுதுங்கோ, அது தான் இப்ப தேவையா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குறுக்காலபோவான்,

உம்மட முதல் கருத்தில நிறையக் கேள்வி கேட்டிருக்கிறீர்.

நான் என்னத்தையண்ண சொல்லிறது?

ஒண்டுமட்டும் சொல்லலாம்.

உந்த அஞ்சு வருச நிறைவுக்குப் பொறுத்திருக்கிறம் எண்ட கதை, புலத்தில - குறிப்பா ஐரோப்பாவில புறுபுறுக்கிற சனத்தின்ர வாயை அடைக்க அவிழ்த்துவிடப்பட்ட கதை.

பொறுத்திருக்கிறதுக்கு வேற காரணங்கள். அவை வேவு, பயிற்சி, நீண்ட சமருக்குத் தேவையான ஆயுத ஆட்பலத்தைத் திரட்டல் என்பவையுட்பட பல விசங்களாக இருக்கும். நிச்சயமாக அஞ்சு வருச நிறைவுக் கொண்டாட்டத்துக்கான பொறுத்தல் அன்று.

மேலும் ஆவணியில் செய்தது போல் சும்மா நொட்டிப்பாக்கிற வேலயெல்லாம் இனி சரிவராது. எடுத்தேன் கவிழ்த்தேன் எண்டு பாய ஏலாது. ஏனெண்டா கரணம் தப்பினா மரணம் எண்ட நிலைக்கு வந்தாச்சு. சின்னப்பிசகும் நிரந்தரப்பின்னடைவாகப் போகும் சாத்தியமுள்ளது. குறிப்பிட்ட ஆட்பல இழப்போடு மிகுந்த ஆட்பலத்தைத் திரட்டக்கூடிய மக்கள் கூட்டத்தைக் கைப்பற்றவேண்டிய தருணமிது. ஆட்பலத்தில் முடிவுநிலைக்கு வந்தாயிற்று. இனி நடக்கப்போகும் களச்சாவுகள், புதிய இடங்களும் மக்கள்கூடடமும் கைப்பற்றப்பட்டாலே நிரப்பப்படும் நிலை. எனவே மிகக்கவனமாக நூறுவீத வெற்றிச் சாத்தியத்துடன்தான் களமுனை திறக்கலாம். அதுவரைக்கும் பொறுமை காக்க வேண்டியதுதான். அந்த இடைப்பட்ட காலத்தில் கடின இழப்பைத் தரும் எந்தச் சமரையும் (வன்னி மீதான படையெடுப்பைத் தவிர்த்து) தவிர்ப்பதே தந்திரம். மூர்க்கமான தாக்குதல் நடத்தப்பட்டால் வாகரை போல இன்னும் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டியும் வரலாம்.

வாகரையை இலங்கை இராணுவத்தால் பிடிக்க முடியாது என்று அது பிடிபடும் கணம்வரை எழுதிக்கொண்டிருந்தவர்கள் இனியும் அப்படித்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

களத்து வெற்றிச் செய்திக்கு மட்டுமே காத்திருக்கும் மனநிலையை மக்களிடம் விதைத்தது யார்?

இதில் எல்லோருக்கும் பங்குண்டு.

அனைத்துக்குமான அடிப்படை விசயமாக போர்தான் கற்பிதப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மக்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை.

சண்டைபிடிச்சால்தான் காசு தருவம் எண்ட நிலைக்கு வந்திட்டினம்.

"என்னடா காசு வேண்டிப்போட்டு இன்னும் கிபிரை அடிக்கேல" எண்டு சனம் கேக்குதுகளெண்டால், கிபிரையெல்லாம் குருவி சுடுற மாதிரிச் சுட்டுப்போடலாம் எண்டு கயிறு திரித்த இணைய ஆய்வாளர்கள் மேலதான் பிழைசொல்ல வேணும்.

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி புலிகள் எப்படியும் ஒரு பெருவெற்றியைப் பெற்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் சரி. இந்த சர்வதேச, சிங்கள அரசியல் ஆட்டத்தை எதிர்கொள்வதற்கு இருக்கும் ஒரேவழி அதுதான்.

அதை எப்போது எப்படிச் செய்வது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதைச்செய்ய இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொண்டு பொறுத்திருப்பது நன்று.

மாறாக மக்களைக் குசிப்படுத்துகிறோம் தெளிவுபடுத்துகிறோம் என்ற பேரிலும், மக்களை மனமுடையாமல் பார்க்கிறோமென்ற பேரிலும் புழுகுமூடடைகளை அவிழ்த்துவிட்டு இணையக் கம்பு சுத்திக்கொண்டிருப்பது ஒருவிதத்தில் எதிர்விளைவையே தரும். ஆசைகாட்டி ஆசைகாட்டி உருவேற்றிவிட்டப்பட்ட மக்கள் ஒருகட்டத்தில் 'என்னடாப்பா ஒண்டையும் காணேல' எண்டு தங்கட விசனத்தைச் சொல்லத்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஒரு ஆராய்வு. சாப்பாத்திலேயே உப்படி ஒரு சாதனை நடக்கின்றது என்று புரிய வைத்த நல்லவனுக்கு நன்றிகள். மிகச் சிறந்த சப்பாத்து ஆராய்வளராக வர வாழ்த்துகின்றேன்

Posted

நல்லவன், எனக்கு உந்த விளக்கத்தில திருப்த்தி இல்லை.

வடிவா சொல்ல வேணும் எங்கை எங்கை எல்லாம் எப்ப எப்படி அடுத்த அடி இடியாக இறங்கப்போகுது என்று. பாச்சல் எப்படி இருக்கும் எண்டு படத்திலை கீறி விளங்கப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிங்களம் எப்படி எல்லாம் சிதறி ஓடும் பதை பதைக்கும் எண்டும் விபரமாக வாசிக்க ஆசையா இருக்கு. அதுபற்றி விளக்கமாக எழுதவும். முடிந்தால் ஒரு தொடராக எழுதவும். சின்னத்திரை சீரியல் போல் வாசிக்க நல்லா இருக்கும்.

வாகரை போல வேற இடமும் விட்டுக் குடுக்கிறதோ? என்ன விளையாட்டா? இதுக்கே நாங்கள் எவ்வளவு நொந்து போனம் எண்டு தெரியுமோ? நாங்கள் மேற்குலகில் money back gurantee இக்கு பழக்கப்பட்டிட்டம். இன்னும் அடிக்கேல்லை காசைத் திருப்பித்தா எண்டு கேக்கேல்லை எண்டதை முதலில் நினைச்சு சந்தோசப்படுங்கோ. அள்ளி குடுத்த தூண்கள் கெடியேத்தம் திருவிழா பாக்க முடியாமல் குழம்பியிருக்கிற சோகம் விளங்கவில்லை உங்களுக்கு.

அதுபோக குடுத்த காசுக்கு படங்கள் பிடிச்சு அனுப்பினாத்தான் இனி காசு தாறதைப்பற்றி யோசிக்கலாம் இப்பவே சொல்லிப் போட்டம்.

ஆள்பலப் பிரச்சனையா? பலவீனமா? நெருக்கடிகளா? அதுகள் எங்கடை அகராதியிலேயே இல்லை. நாங்கள் இஸ்ரேல் மாதிரி ஆனா சிறீலங்கா தான் யோசிச்சுக் கொண்டிருக்கு தான் இஸ்ரேல் மாதிரி எண்டு. இப்ப அடிச்சா பாவம் சிறீலங்கா கொஞ்சம் பலமானபிறகு அடிச்ச அடிபாடு சுவார்சியமாக இருக்கும் எண்டு பாத்துக்கு கொண்டிருக்கிறம்.

திருப்பியும் சொல்லுறம் கிபிர் எல்லாம் சின்ன விசையம் உங்களுக்கு விளங்கேல்லை எண்டதுக்காக எங்களுக்கும் விளங்கேல்லை எண்டு அடம் பிடியாதையுங்கோ. டிபிஎஸ் 2 எறிகணையையும் உம் வேற வேற கோணத்திலை வைச்சு அடிச்ச போற தூரம் அந்த நேரம் அடிச்ச காத்தின்ரை தாக்கங்கள் எண்டு எதாவது விளக்கம் தந்திருப்பார் அதுகளை வடிவா வாசிக்காமல் அப்படி ஒரு மூத்த ஆய்வாளரில குறை பிடிக்கிறது அழகல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நாரதர்,

கடுமையான சொற்பிரயோகங்கள் தவறாக இருக்கலாம்.

யாரையும் எழுதாதே என்று நானெங்கே சொன்னேன்?

என்னால் முடிந்தளவுக்கு ஒரு கட்டுரை. அவ்வளவுதான்.

இந்தக் கட்டுரையிலேயே சில நக்கல் வசனங்களை நீக்கிவிட்டு நேரடியா இராணுவச்சப்பாத்து விசயத்தையும் ஆயுதபலப் பெருக்கத்தையும் தொடர்புபடுத்தி கட்டுரையெழுதிவிட்டு அதை அனுப்பினால் தமிழ்நாதம் பிரசுரிக்காது என்று நினைக்கிறீர்களா?

எழுதப்படும் பல ஆய்வுக்கட்டுகரைவிட இந்தக்கட்டுரை எந்தவிதத்திலும் மாறுபட்ட தொனியைக் கொண்டிருக்கவில்லை.

ஒரு கடற்சண்டை பகலில் நடந்து அதிலொரு டோறா கரும்புலித் தாக்குதலின்றி தாண்டுவிட்டால் உடனே அதற்கொரு ஆய்வு. விதம் விதமான ஆய்வு. எப்படி உது சாத்தியம், உதில ஏதோ பெரிய விசயமிருக்கு, அது மிகப்பெரிய பாய்ச்சலென்று கட்டுரை.

1998 இன் இறுதிப்பகுதியில் முல்லைத்தீவுக் கடலில் நடுப்பகலில் சண்டைப்படகில் இருந்து 23 மி.மீ கனோனால் ஒரு சுப்பர் டோறாவைத் தாக்கி மூழ்கடித்து அதேசமரில் வீரச்சாவடைந்த கடற்புலி கப்டன் மேனன் தொடக்கிவைத்தது, நேரடிச்சூட்டில் டோறாவைத் தகர்க்கும் நிகழ்வு.

அதுபோல் ஆவணி மாதச் சண்டையில் புலிகளால் கைப்பற்றப்படாத, கரையோரத்தில் சில காவலரண்கள் மட்டும் கைப்பற்றப்பட்ட மண்டைதீவில் ஆட்லறி, டாங்கித் தளங்களும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன என்ற செய்தியும் அவைதொடர்பான கட்டுரைகளும். ஆயிரம் பொதுமக்களும் ஐநூறு வரையான கடற்படையினரும் பத்திரமாக இருந்த மண்டைதீவில், இல்லாத ஆட்லிறி - டாங்கித் தளங்கள் அழிக்கப்பட்டன எங்கள் ஆய்வாளர்களால். (அந்த நேரத்தில் எல்லா ஊடகங்களுமே புழுகிக்கொண்டிருந்தன. அதில் தனித்துச் சுட்ட ஏதுமில்லை. ஆனால் அதன்பின் வந்த ஆய்வுகளில் தொடர்ந்தும் அவை சொல்லப்பட்டதுதான் பிரச்சினை)

இதைவிடவும், கிபிரைச் சுகமா விழுத்தலாம், சுப்பர் டோறாவையும் மிஞ்சும் வேகத்தில் புலிகளின் படகுகளின் வேகமுண்டு போன்ற அபத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது காணலாம்.

பட்டியலிட வெளிக்கிட்டால் நிறையவரும். எனக்கே நிறையவிசயம் மறந்துபோச்சு.

புலிகளிடம் 'அக்னி' ஏவுகணை (அல்லது அக்னி என்ற சொல்லுக்கூடாக அந்த ரக ஏவுகணைகள்) இருப்பதாகவும் அதைவைத்து சிங்களப் படைகளின் கட்டளை மையங்கள் தாக்கப்படும் என்றும் ஓர் ஆய்வாளர் தற்போது எழுதியது தொடர்பாக உங்கள் கருத்தென்ன?

நாளைக்கு 'என்னடாப்பா இன்னும் புலிகள் பலாலிக்கு 'அக்னி' ஏவுகணை அடிக்கேலயோ?' எண்டு மக்கள் கேக்கப்போறதுக்கு ஆர் காரணம்?

இதே யாழ் களத்தில் நடந்தது நாரதருக்குத் தெரியாதோ?

அரூஸ் எழுதின ஒருகட்டுரையில இருந்த பிழையைச் சுட்டின எனக்குத் (இதை நாரதர், குறுக்காலபோவான் உள்ளிட்டோரும் ஏற்றுக்கொண்டனரென்பது வேறு) தரப்பட்ட பட்டம், "விபச்சாரிக்குப் பிறந்தவன்".

இப்படிப்பட்டவர்களைத்தான் ரசிகக்குஞ்சுகள் என்றேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிலவற்றை சொந்தப் புத்தியில் ஊகித்துக் கதைக்கலாம். நிலைமையுணர்ந்து கதைக்காமலும் விடலாம்.

முகமாலையில் கடைசியாக நடந்த முறியப்புச் சமரில் (நானெழுதிய சப்பாத்துச் சமர்) புலிகள் 22 பேர்வரை இழப்பென்று தகவல் வெளியிட்டனர். விசயம் தெரிந்தவர்கள் ஓரளவு நடந்ததை ஊகிக்கலாம். ஆனால் அதைப்பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தவர்கள், கப்டன் இசையரசி (அல்லது இசையழகி, இசைச்செல்வி?) தான் வீரச்சாவடைந்தவர்களுள் கூடிய இராணுவ நிலையுடையவர், எண்டபடியா உது பெரிய இழப்பில்லை, ஆக 22 பேர்தான் எங்கடபக்கம் விழுந்தது என்றவாறு சொல்லித் திரிந்தனர். அதேசமரில் தென் தமிழீழப்போராளி லெப்.கேணல் ருத்திரையன் (பெயரில் எழுத்துப்பிழையிருக்கலாம்) என்ற தளபதி வீரச்சாவடைந்ததை புலிகள் அறிவித்தபின்னரும் (இவ்வறிப்பு இங்கு நிறையப்பேருக்குத் தெரிந்தே இராது) அதே கப்டன் இசையரசியுட்பட்ட 22 கணக்கைத்தான் காவித்திரிந்து கருத்தாடினார்கள். சூட்டோடு சூடாக இன்னொருமுறை படையினர் முகமாலையால் முன்னேற வேண்டுமென்ற ஆசையை வெளிப்படுத்தியும் கருத்துக்கள் வந்தன. (அந்த இடத்தில், படையினரின் இன்னொரு முன்னேற்ற முயற்சி மிகப்பெரும் ஆழிவைக் கொண்டுவரும் என்று எழுதியிருந்தேன்.)

எமது தரப்பில் ஏற்படும் இழப்புக்கள், காயங்கள், அணிச்சிதைவுகள், அணிகளை மீளக்கட்டமைக்க எடுக்கும் கால அவகாசம் போன்றவற்றைக் கருத்திலெடுக்காமல் போர்க்காவடி தூக்குவது எங்களுக்கு வழமையாகிவிட்டது. அச்சமர் நடந்த நேரத்தில் வன்னியில் நடந்த வீரச்சாவு நிகழ்வுகள் பற்றி அறியக்கிடைத்தவர்களுக்குத் தெரியும். ஏற்கனவே ஆவணிச்சமரில் நடந்த பேரிழப்புப் பற்றியும் யோசித்திருந்தால் அந்த நேரத்தில் நிலைமையின் விபரீதம் புரிந்திருக்கும்.

2006 இல் வீரச்சாவடைந்த எண்ணூற்றுச் சொச்சம் மாவீரர்களின் விவரத்தை வெளியிட்டபின் இதைப் பேசுவது தவறல்லவென்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

I.V.Sasi,

எங்கையெங்க பூளை வடியுது எண்டு நான் ஏற்கனவே பல இடங்களில சொல்லியிருக்கிறன்.

இப்ப ரெண்டொரு விசயம் மேல போட்ட கருத்திலயும் சொல்லியிருக்கிறன்.

ஆனா எனக்கு எங்க சளிவழியுது எண்டு உங்களால சொல்ல முடியுமோ?

சொல்ல முடியாது. சொல்ல முடிஞசா பூளையளுக்கு வால்பிடிச்சுக்கொண்டு இருப்பியளோ?

அதைச்சொல்ல முடியாத இடத்தில் நீங்கள் பொத்திக்கொண்டு போறதுதான் சரி. அதைவிட்டு சும்மா புதுமொழியள் சொல்லிச் சளாப்பாதையுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த பன்னாடை ஆய்வாளர்களுக்கு ஒன்றும் புரிவது இல்லை புலத்தில் சும்மா வேலைவெட்டி இல்லாத ஆக்களுக்கு ஆய்வு எழுதினமாம்

கருணாக்கு பின் புலிகளின் என்னிக்கை குறைந்து விட்டது 75 ஆர்மியின் சப்பாத்ததை கூட போடுவதுக்கு புலிகளால் ஆள் பிடிக்க முடியவில்லை

சமாதாண காலத்தில் புலிகள் பலர் விலகியும் திருனமனமும் செய்து கொண்டு போய்ட்டார்கள் அதை விட சுனாமியும் கொன்ஞ்சததை கொண்டு போய்ட்டுது

பிறகு யாழ்பிடிக்க என்று தொடங்கிய சண்டையும் பிச்சு கொண்டு போய்ட்டுது

800 போராளிகளை பலி கொண்டு போனது அதோடு நாளுக்கு நாள் ஒரு இரானுவம் இறக்குதோ இல்லையோ மாசத்துக்கு 50 க்கு மேல தமிழ் நாய்களும் போராளிகளும் இறக்கினம் இனி பெரும் பாச்சல் கதை எல்லாம் நடக்காது வெரூம் இந்த ஒப்பந்ததை வைச்சு வன்னி பிடிக்க வரும் போது தடுப்பு சம்ர் மட்டும் தான் செய்ய முடியும் அதுவும் சனத்துக்கு சாப்படும் மருந்து கொடுக்காம நாலு பக்கமும் நிண்டு பலகுழல் அடியும் செல்லும் விமானமும் கடலாலும் அடிவிழும் வன்னி சனம் ஓமந்தை இல்லை அனுராதபுர த்தில் மூட்டை முடிச்சோடு வந்து நிக்காட்டி பாருங்கள் பன்னாடை நக்கல் ஆய்வாளர்களே...

இதை எல்லாததையும் விட அதிமுக்கிய அடி ஒன்று வெகு விரைவில் கிடைக்கும்

அது தான் புலிகள் தான் தமிழரின் ஒரே ஒரே பிரதிநிதிகள் என்ற வாதர்க்ர்குக்கு ஆப்பு வைக்க போவது வேறு யாரும் இல்லை இதை மக்களிடம் சொல்லி வாக்கு வாங்கிய அரை லூசுகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவும் வெகு விரவில் நடக்கும் அப்போதும் ????????????????

Posted

I.V.Sasi,

எங்கையெங்க பூளை வடியுது எண்டு நான் ஏற்கனவே பல இடங்களில சொல்லியிருக்கிறன்.

இப்ப ரெண்டொரு விசயம் மேல போட்ட கருத்திலயும் சொல்லியிருக்கிறன்.

ஆனா எனக்கு எங்க சளிவழியுது எண்டு உங்களால சொல்ல முடியுமோ?

சொல்ல முடியாது. சொல்ல முடிஞசா பூளையளுக்கு வால்பிடிச்சுக்கொண்டு இருப்பியளோ?

அதைச்சொல்ல முடியாத இடத்தில் நீங்கள் பொத்திக்கொண்டு போறதுதான் சரி. அதைவிட்டு சும்மா புதுமொழியள் சொல்லிச் சளாப்பாதையுங்கோ.

புலிகள் பலமாக இருக்கிறார்கள் பெரிய தாக்குதல் செய்ய போகிறார்கள் பதுங்குகிறார்கள் என்று சில ஆய்வாளர்கள் எழுதினால் அது ஒரு வகை நீர் குறுக்காலபோனவர் மற்ற வகை.

நீங்கள் இருவரௌம் புலம்பெயர் ஆய்வாளர்களின் ஆய்வுகளை விமர்சனம் சரியாக செய்ய முடிந்தால் செய்யுங்கள் இல்லையேல் இந்த நக்கல் ஆய்வுகள் எல்லாததையும் கோவனத் தூண்டை போட்டு முடிவையுங்கள்.

முகமாலையில் எதத்னை போராளிகள் நிக்கிறார்கல் என்று தளபதி சொறுனம் அண்ணைக்கும் தெரியாது கிழக்கில் எத்தனை போராளிகள் என்ன என்ன ஆயுதங்களோடு நிக்கிறார் என்று தளபதி தீபன் அண்ணைக்கும் தெரியாது.

ஆனா இங்கு ஊகத்தின் அடிப்படையில் எழுதிய ஆய்வுகளுக்கு திரு குறுக்கால போனவருக்கும் திரு உமக்கும் அதை வைச்சு நக்கல் ஆய்வுகள் எழுத தெரியுது என்றால் நீங்கள் இருவரும் தான் புலிகளின் பலம்பற்றி தெரிந்தவர்கள் அது தான் சொன்னேன் உமது முக்கில் சளிவைடியும் போது மற்ற்வர்கள் கண்ணில் பூளை வடியுது என்று சொல்ல வேண்டாம்.

புலிகளை பொறுத்த மட்டில்

எதிரியிடம் பலத்தை காட்டு

ஆய்வாளர்களிடம் பலவினத்தை காட்டாதே

அது எதிரியிடம் சேர முன் நிவர்த்தி செய்.

Posted

நல்லவன்,

யாழ்க்களத்தில் குடுக்கிற பட்டத்துக் கெல்லாம் ஏன் டென்சன் ஆகுறீங்க.இப்படியெண்டா இங்க எழுதேலாது. எல்லாருக்கும் எல்லாப் பட்டமும் கிடைக்கும், கிடைச்சிருக்கு.

நீர் அருசின் கட்டுரையில நான் என்ன எழுதினான் எண்டு நாபகப்படுதினா அது பற்றி எழுதலாம். நான் பொதுவாத் தெரின்சதத் தான் எழுதிறனான்,எதாவது தெரியாத விசயம் எழுதி இருந்தாச் சொல்லும் திருத்திக் கொள்ளுறன்.

மேலும் உந்த அக்கினி ஏவுகணை விசயம்.எழுதினவர் என்ன தகவலின் அடிப்படையில எழுதினார் என்று எனக்குத் தெரியாது.புலிகளிட்ட என்ன என்ன ஏவுகணை இருக்கு எண்டும் எனக்குத் தெரியாது.ஆனா புலத் தமிழர்களில் உள்ள தொழில்னுட்பவியலளர்களை, பல்கலைக் கழக மாணவர்களை ஒருங்கு படுத்தி அவர்கள் மூலம் தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களை உள்வாங்கி இவ்வாறான தொழில் நுட்பங்களை வன்னிக்கு கொண்டு போகலாம் என்பது முக்கியம் என்று தெரியும்.அவ்வாறு செய்வதற்கு ஊடகங்கள் ஏற்படுத்தும் புலிகள் பற்றிய கற்பனை வடிவம் தடையா இருக்கும்.புலிகளிட்ட இதெல்லாம் இருக்காம் நாங்கள் ஏன் வீணாக் கஸ்ட்டப்படுவான், ஏன் வீண் வம்பு எண்டு ஒதுங்கி இருக்கத் தான் சொல்லும்.உண்மையான களத்தேவைகள் கள யதார்த்தம் எழுதப்படாத போது வெறும் கற்பனைகளே யதார்தமாகும்.வெறும் கற்பனைகாளல் போரை வெல்ல முடியாது. கற்பனைகள் கலைகிற போது ஏமாற்றமே மிஞ்சும்.

யாழ்க் களத்திலும் சிலரின் கருத்துக்கள் இதனையே பிரதிபலித்தன.கற்பனைகளை வளர்க்காமல் யதார்த்தைதை எழுதி போரில் நாம் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் எழுத வேண்டும்.அப்போது தான் இந்த தளம்பல்களைச் சரிக்கட்டலாம்.எவ்வாறு தாம் விரும்பும் கற்பனையை கள யதார்த்தமா சிங்களம் நினைத்து விழப்போகிறதோ அதே போல் நாமும் கற்பனைகளில் மிதக்க வேண்டாமே.புலிகள் தங்கள் பலம் பலவீனம் பற்றி எப்போதும் சரியான மதிப்பீடுகளை கொண்டிருப்பதாலேயே தொடர்ந்து அவர்களால் போராடக் கூடியதாக இருந்து வந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இஞ்ச சிலருக்கு நானெழுதினா நக்கலாப்படுது.

இதையே அரூஸ் அல்லது இதயச்சந்திரன் ஆக்கள் எழுதினா அது ஆய்வாப்படுது.

நல்ல வேடிக்கை.

சசி,

இன்னும் சளி எங்க வடியுது எண்டு நீங்கள் சொல்லவேயில்லை. அதைவிட்டிட்டு என்னையும் குறுக்சையும் முடிச்சுப்போட்டு பொத்தாம் பொதுவா மூக்குச்சீறிப்போட்டுப் போறியள்.

ஏதோ, புலத்து ஆய்வாளரும் "ஒருவகை" எண்டு ஒத்துக்கொண்டியளே, அதுவே காணும்.

புலிகளின்ர பலம், பலவீனம் ஆருக்கு வடிவாத் தெரியுமெண்டது பிரச்சினையில்லை. புழுக வேண்டாம் எண்டுதான் சொல்லிறன். சனத்தை ஒரு போதை மயக்கத்தில வைச்சிருக்கிறதைத்தான் வேண்டாமெண்டிறன்.

அதுசரி, நாங்களென்ன புலி பாயாது எண்டே சொல்லிறம்? பாயுமெண்டுதானே சொல்லிறம்?

ஆர்யாவுக்கு புலத்துப் பன்னாடை ஆய்வாளர் பற்றிச் சரியா விளங்கியிருக்கு. ஆனா நாங்கள் வந்து ஒரு கட்டுரை எழுதும்வரைக்கும் ஏன் தங்கடை உணர்வுகளை அடக்கியிருக்கினம் எண்டு தெரியேல. முதலே உதுகளை களத்தில எழுதியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரு நாரதர் அவர்களே இங்கு புலிகளிடம் ஏவுகனை இருக்கு அது இருக்கு என்று எழுது ஆய்வாளர்களை பற்றி விமர்சனம் வைக்க யாருக்கும் தடையோ இல்லை கட்டுப்படோ இல்லை ஆனா எதிர் ஆய்வு என்ற பெயரில் நக்கல் பன்னலாம? ஏன் இவர்கள் சரியான முறையில் ஆய்வுகள் வைக்களாமே?

எனக்கு சரி என்று படும் ஒரு கனக்கின் விடை பிழை என்றால் பிழை பிடித்தவன் தானே சரியான விடையை சொல்ல வேண்டும்? அல்லது பிழைக்கான காரனத்தையாவது சொல்லாமே?

இல்லை எனக்கு இந்த விடை பிழை என்று 100% தெரியும் ஆனா சரியான விடை எது என்று தெரியாது என்ற பன்னாடை ஆய்வளர்கள் ஆய்வு எழுதாம பேசாமல்

மூளையில் முடங்கி இருக்கலாம் மூடன் போல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆர்யாவுக்கு புலத்துப் பன்னாடை ஆய்வாளர் பற்றிச் சரியா விளங்கியிருக்கு. ஆனா நாங்கள் வந்து ஒரு கட்டுரை எழுதும்வரைக்கும் ஏன் தங்கடை உணர்வுகளை அடக்கியிருக்கினம் எண்டு தெரியேல. முதலே உதுகளை களத்தில எழுதியிருக்கலாமே?

நான் மேலே சொன்ன மாதிரி நான் புலத்தில் ஆய்வளர்கள் எழுதுவதை எல்லாம் வாசிதாலும் அதுக்கு விமர்சனம் எழுதுவதுக்கு புலிகளின் உண்மையான பலம் தெரிந்தவன் இல்லை.

தெரியாத ஒன்றுக்கு விமர்சனம் வைப்பது என்பது கண்டு பிடிக்காத கனக்குக்கு விடை எழுதுவது போல.

உங்களை யாரும் ஆய்வோ இல்லை விமர்சனமோ வைக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ஆனா ஆய்வுகள் என்ற பெயரில் நக்கல் நயாண்டி செய்யாதிர்கள்

அதைத்தான் பன்னாடைத்தனம் என்று சொல்லுவது.

ஆய்வை வையுங்கள் அதுவும் குறிப்பாக யார் யாரின் கட்டுரைகளில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால் அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொல்லுங்கள்

இல்லையேல் யாழ்களத்தில் இந்த தலைப்பில் பக்கங்கள் தான் கூடுமே ஒழிய தெளிவுகள் கிடக்காது.

Posted

இக்கட்டுரை நக்கலானாலும் அரசியல் ஆய்வாளர் எனச்சொல்லிக்கொண்டு திரியும் சிலருக்கு சுடக்கூடிய கட்டுரை.அதுவும் பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி எழுதினது ரொம்ப ஓவர் அவர் சிவராமின் கட்டுரைஇயை இக்காலத்துடன் நோக்குகிறாராம்??? எப்படியப்பா அது நடந்தது 2004 இல் இப்ப 2007 எப்படி கள நிலவரம் எல்லாம் சரிவரும் அதுவும் அவர் எழுதிய கடைசி பாகத்தில இப்படி மேதாவித்தனமாக தொடங்குகிறார்

இத்தொடரின் இந்தப் பகுதியை எழுதுவதற்காக கூடுதலாக இன்னும் ஒருவார காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஏனெனில் கிழக்கில் வாகரையை கைப்பற்றுவதற்கான முன்முயற்சிகளில் இராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருந்ததே காரணம்.

இப்போது வாகரையை இராணுவம் ஆக்கிரமித்து விட்டது. எனவே இப்போது கிழக்கு நெருக்கடி பிரச்சினையின் வேறு ஒரு பரிமாணத்துக்குள் பொருந்திக்கொண்டுள்ளது. கடந்த வாரம் பிரதேசவாதம் குறித்து விரிவாக ஆராய இருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இப்போதைய கிழக்கின் சூழலில் அந்த ஆய்வு பொருத்தமற்ற ஒன்றாகவே உள்ளது.

அதாவது இவர் இராணுவ ஆய்வாளராம் வாகரை கள நிலவரம் மாறும் வரை காத்திருந்தவராம் யாரப்பா நம்புகிறீர்கள்

இதே நபர் தான் இதையும் எழுதினார் தேசத்தின் குரல் கால மான நேரத்தில்

எனது ஞாபகம் சரியானதெனில் 2004 ஓகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். எனது கட்டுரை ஒன்று வெளியாகி நான் கொஞ்சம் பிரபலமாகியிருந்த காலப்பகுதி அது. அந்தக் கட்டுரை கருணா விவகாரத்தை மையப்படுத்தியிருந்ததால் அளவுக்கு அதிமாகவே புகழ்மழையில் நனைந்து கொண்டிருந்தேன். ஒரு மாலை நேரம் எனது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இருந்த குரல் 'பாலாஅண்ணை உங்கட கட்டுரை தொடர்பாக கதைக்கோணுமாம். கொடுக்கிறேன். கொஞ்சம் பொறுங்கோ" என்ற செய்தியை சொன்னபடி தொலைபேசி கைமாறும் சத்தங்கள் கேட்டன.

;அந்தக் கணத்திலிருந்து எனது கால்கள் நிலத்திலிருந்து இரண்டு அடி மேலெழுந்த பிரமையை அடைந்தேன். நான் அவரை பல முறை சந்தித்திருந்த போதும் அவை நேரடியான சந்திப்புக்கள் அல்ல. என்னை அவருக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் வாய்ப்புக்களும் குறைவு. பிறகு எப்படி இது சாத்தியம்?

ஏற்கனவே கட்டுரை குறித்த புகழ்மழையில் நனைந்து கொண்டிருந்தபடியால் பாலாண்ணை நேரடியாப் பாராட்டப்போகிறார் போல கிடக்குது என்று நினைத்ததும் எனக்கு தலை கால் புரியவில்லை. நாளைக்கு இதை யார் யாருக்குச் சொல்லி புழுகலாம் என்பதிலேயே மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி பட்டம் என்ற தலைக்கனத்துடன் கொஞ்சம் தூக்கலாகவே 'வணக்கம்" என்று இழுத்துச் சொன்னேன்.

மறுமுனையில் 'நீரோ பரணி" என்ற அந்த சிம்மக்குரல் கேட்டது.

இது என்ன கதை வேறை மாதிரிப் போகுது போல கிடக்குது. பேச்சுத் தொனி வேறை மாதிரிக் கிடக்குது என்ற யோசனையுடனும் பதட்டத்துடனும் 'ஓம்" என்றேன்.

எனது பதில் கிடைத்ததுதான் தாமதம் பல்குழல் எறிகணையிலிருந்து குண்டு மழை பொழிவதுபோல் வசவுகளும் திட்டுக்களும் என்னை நோக்கி அவர் வாயிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தன. பிரம்மரிசிப் பட்டமும் வேண்டாம் ஒரு புடலங்காயும் வேண்டாம் ஆளை விட்டாலே போதும் என்ற அளவிற்கு நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டேன்.

அவர் பேசியதில் கொஞ்சம் 'டீசன்டான" சொற்கள் என்றால் அவர் இடை இடையே கேட்ட 'லைன்ல நிக்கிறியோடாப்பா" என்பதுதான். மற்றவை எதுவுமே எழுத்தில் பதிவு செய்ய முடியாதவை

http://www.tamilnaatham.com/articles/2006/...ani20061218.htm

அனால் ஆள் பாலா அண்னாவிடம் பேச்சுவாங்கியும் திருந்தல தன் மேதாவித்தனத்தை கற்பனை குதிரையை தட்டவிட்டு எழுதிக்கொண்டுதாஅன் இருகிறார் இன்னமும்.முதலில அருள்ஸ் எழுதின கட்டுரையை யாழில இணைத்து திட்டு வாங்கியது நான் தான் அவரின் கிபிரை சாமால இலகுவாக சுட்டுட்டு ஏரியில் எறிந்திட்டு போகலாம் என எழுதியதை வாசித்து புளாங்கிதம் அடைந்தே அதை இணைத்தேன் அப்போதே நான் யாழ் களத்தில் இணைந்திருந்தேன் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பாக்கும் தன்மை அப்போது இருக்கவில்லை தமிழ்நாதத்தில போடுராங்கல் எண்டால் உண்மையாக இருக்கும் என நம்பினேன் ஆனால் குறுக்ஸ்,நாரதர் மற்றும் நல்லவன் எழுதிய பதில்களும் தொடர்ந்து யாழ்களத்தில் உறுபினராக இருபதாலும் இப்போது உண்மை எது என வீளங்க கூடீயதாக் இருக்கிரது புலிகள் சாமை பாவிக்க்க முடியுமானால் செஞ்சோலை சிறுமிகள் கொல்லப்பட்ட போதும் ஏன் பாவிக்கவில்லை என எண்னினேன் இதுக்கெலாம் காரணம் கேடு கெட்ட ஆய்வாளரே.நான் முன்னம் யோசித்தது போல கனபேர் யோசிப்பீனம்.இது புலிகள் மீது அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என இப்போது எனக்கு தெரியும்

மற்றது ஜெயராஜ் அவர்க்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் இக்பால் அத்தாஸ் முதல் சிங்கள பத்திரிகையாளர் முதல் வாகரை ஆக்கிரமிப்பை புலிகளின் தந்திரோபாய பின்வாங்கலாக தான் எழுதி இருகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.[அவர் என்ன போஉள் படக்கூறினாரோ நானறியேன் http://www.tamilnaatham.com/articles/2007/...jeyaraj/25.html] ஆனால் என்னைஇ பொறுத்தவரையில் சிங்கள ஊடகங்கள் தம் க்கடமையை செவ்வனே செய்கின்றன.வீணாண நம்பிக்கையை சிங்களவர்ளிடம் வளர்க்காவில்லை இதை வாசிச்சுட்டு இனி தங்கட மேதாவித்தனத்தை பாவிச்சு கொண்டு பிரான்ஸில இருந்து பரணி வேஎல்ஸில இருந்து அரூள்ஸ் என அரை வேக்காடுகள் வெளிக்கிட்டுரும்.நாமே நமக்கு குழியை போடுகிறோம் ஏண்டால் இதுதான் உதாரணம் இவற்றை பிரசுரிக்கும் தமிழ்நாதம் இணையம் கொஞ்சம் யோசித்து இப்படியாணவர்களின் ஆய்வுக்களை போடாமல் விடுவது நல்லது

அண்மையில் தமிழர் இணைப்பகத்தில் ஏதிலி என்ற ஒரு உறவு ஒரு படத்தை பிரசுரித்திருந்தார் அதை பார்த்தவுடன் சிரிப்புத்தான் வந்தது பதிவு இணையத்தை எண்ணுகையில்!!!!

80291pathivu.jpg

படத்தில் அதிக்காலை 1.30 மணி இன்னும் காலையே வரவில்லை ஆனால் இன்றுகாலை 11 மணிக்கு சுட்டு கொல்லப்பட்டார் என செய்தி.இது எப்படி சாத்தியம்.நான் இணையத்தை நடத்துபவர்களை குறை சொல்ல வரவில்லை ஆனால் கொஞ்சம் யோசித்து 100% உண்மைகளை எழுதுங்கள் எனா கேட்டு கொள்கின்றேன்.

இதை சொல்லத்தான் ஞாபகம் வருகின்றது பதிவு இணையம் அண்மையில் போசாலை முகாம் மீது அதிரடி தாகுதல் என செய்தி வெளியிட்டது ஆனல் அங்கு நடந்ததோ கிரனைட் எறியப்பட்டது ஆனால் செய்தியை வாசித்த கள உறவு ஒருவர் நித்திரை கொள்ளாமல் இணையத்தோட அன்றிரவு முழுக்க இருந்தவர்.அது மட்டுமல்ல பருத்துதுறையில் ஒருதொகுதி போராளிகள் தரை யிரக்கம் என பதிவில செய்தி இதை பாத்திட்டு ஒருவன் என்னத்தை யோசிப்பான்???

கொன்ஞ்சம் யோசித்து பிந்தினாலும் சரியாண செய்திகளை தயவு செய்து வெளியிடுங்கள்.உங்களது சேவையை மனமார பாராட்டுகின்றேன் ஆனால் உங்களுடைய மதிப்பை இப்படிப்பட்ட தவறுகளால குரைத்துக்கொள்ளாதீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சேர் என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார்  முன்வைத்துள்ளனர். இந்நிலையில்   இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், https://tamilwin.com/article/what-happen-srilanka-free-medical-sector-udaruppu-1734869196
    • 23 DEC, 2024 | 09:55 AM   பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், வாகன சாரதிகள் மது  போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில்  சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி,  பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற நிலையில் உள்ள டயர்கள் அல்லது கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான, குறைப்பாடுகளுடன் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அந்தந்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.   இதேவேளை,வாகனங்களை சோதனையிடுவதற்கு 24 மணிநேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகளை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/201927
    • பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ்  மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம்  திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்  மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. எனினும்  தற்போது  மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்தைத்  தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டுக்  கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் எமது  வெற்றி தங்கியிருக்கின்றது. இது உங்களுக்குரிய கட்டிடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது” இவ்வாறு  ஆளுநர்  தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413554
    • இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314028
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.