Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூரண அதிகாரப் பகிர்வுக்கு சுவிஸ் ஒத்துழைக்கும்

Featured Replies

பூரண அதிகாரப் பகிர்வுக்கு சுவிஸ் ஒத்துழைக்கும்

சம்பந்தனிடம் உறுதியளித்தது அந்நாட்டு தூதுக்குழு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் முழு­மை­யான அதி­கா­ரப் பகி ர்வை பெற்றுக் கொள்­வ­தற்கு பூர­ண­மான பங்­க­ளிப்பை வழங்­கு­வோ­மென பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­பிடம் சுவிட்­சர்­லாந்து சபாநாயகர் தலை மையிலான தூதுக்­குழு நேற்று உறு­தி­ய­ளித்­துள்­ளது.  

இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள சுவிட்­சர்­லாந்து சபாநாயகர் பிரிஸ்டா மார்க்வோல்டர் தலைமை யிலான தூதுக்­கு­ழு­வி­ன­ருக்கும் பிர­தான எதிர்க்­கட்­சி­யான  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான முக்­கிய சந்­திப்­பொ­ன்று நேற்று வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்றத்தில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடைபெற்றது.

 இந்தசந்திப்பின்போதேசுவிட்சர்லாந்துதூதுக்குழுவினர்மேற்கண்டஉத்தரவாதத்தை  வழங்கியுள்ளனர். பூரண... இச்­சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா­சம்­பந்தன், யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் பங்­கேற்­ற­தோடு சுவிட்­சர்­லாந்து தூதுக்­கு­ழு­வினர் சார்பில் அந்­நாட்டின் தேசிய சமஷ்டிப் பேரவை சபா­நா­யகர் பிரிஸ்டா மாரக் வோல்ட், அந்­நாட்டு பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் பிலிப்சோர்ப் சுவிட்­சர்­லாந்த்தின் இலங்­கைக்­கான தூதுவர் றைன்ஸ் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இச்­சந்­திப்­புக்­கு­றித்து கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் எம்.பி. கூறு­கையில், நாம் சுவிட்­சர்­லாந்து தூதுக்­கு­ழு­வி­னருடன் முக்­கிய சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்தோம். இது மிகவும் ஆக்க பூர்­வ­மா­ன­தாக அமைந்­தி­ருந்­தது. 

குறிப்­பாக ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நீண்­ட­கா­ல­மாக காணப்­படும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தீர்­வொன்றைப் பெற்றுக் கொள்ளும் முனைப்­புடன் ஆட்­சி­யா­ளர்­களும் நாமும் நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கின்றோம்.

அதன் பிர­காரம் சுவிட்­சர்­லாந்தில் பிராந்­தி­யங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் தொடர்­பாக கவனம் செலுத்­தினோம். குறிப்­பாக பிராந்­தி­யங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களைப் வழங்­கு­வது தொடர்­பாக நாம் கவனம் செலுத்­தினோம். 

அதே­வேளை பிராந்­தி­யங்­க­ளுக்கு அதி­காரங்கள் முழு­மை­யாக பகி­ரப்­பட வேண்­டு­மாயின் நிதி கையா­ளுகை தொடர்­பான அதி­கா­ரமும் வழங்­கப்­படும் பட்­சத்­தி­லேயே அது பூர­ணத்­து­வ­மாக அமையும் என்­பதை அக்­கு­ழு­வினர் எம்­மிடம் எடுத்­து­ரைத்­தனர்.

பல்­லி­னங்கள் வாழும் இந்­நாட்டில் அனை­வரும் பாது­காப்­பா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் இருப்­பதை உறு­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் முழு­மை­யான அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­வ­தற்கு தாம் முழுமையான பங்களிப்பையும் உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அக்குழுவினர் எமக்கு உறுதிப்பட தெரிவித்தனர்.

அத்தோடு மீள்கட்டுமான உதவிகளையும் சுவட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்குமெனவும் அக்குழுவினர் உறுதியளித்தனர் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-08#page-1

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே ஒத்துழைத்தாலும் சகோதரயாமார் ஒத்துழைக்கமாட்டினம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.10.2016 at 11:59 AM, putthan said:

உலகமே ஒத்துழைத்தாலும் சகோதரயாமார் ஒத்துழைக்கமாட்டினம்.....

ஏன் எங்கடை சகோதரங்கள் பெரிய திறமே? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.