Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார்

Featured Replies

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார்

போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது

 போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்திற்குள்ளான சிரியாவைச் சேர்ந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஜெர்மனியின் கிழக்கில் உள்ள கெம்னிட்ஸ் நகரில், அவரின் வீட்டை சோதனையிட்டதில் பெருமளவு வெடிபொருட்களை கண்டறிந்ததையடுத்து போலிஸாரால் அவர் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேடப்பட்டுவரும் நபரான 22 வயதாகும் ஜபெர் அல்பக்கர் சோதனையிட்ட போது வீட்டில் இல்லை; சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் சமீபத்தில் வந்த அகதிகள் கூட்டத்தில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரும் வந்ததாக சில ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-37599801

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகாயத்தாலை சிவனே எண்டு தன்ரை பாட்டிலை போன மூதேவியை கூப்பிட்டு நடுவீட்டுக்கை வைச்சிருக்கிற கதைதான் இப்ப ஜேர்மனியிலை நடக்குது....

  • கருத்துக்கள உறவுகள்

Der gesuchte 22-jährige Syrer Jaber Albakr soll aktuell das auf dem Bild zu sehende auffällige schwarze Kapuzenshirt tragen. (Quelle: Landeskriminalamt Sachsen)

இவரைத்தான்.... தேடுகின்றார்கள்.  படம்:  Landeskriminalamt Sachsen 

  • தொடங்கியவர்
On 9.10.2016 at 9:43 AM, நவீனன் said:

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதியை தேடிவரும் போலிஸார்

போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது

 போலிஸார் சந்தேக நபரின் வீட்டில் சோதனையிட்ட போது

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்திற்குள்ளான சிரியாவைச் சேர்ந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஜெர்மனியின் கிழக்கில் உள்ள கெம்னிட்ஸ் நகரில், அவரின் வீட்டை சோதனையிட்டதில் பெருமளவு வெடிபொருட்களை கண்டறிந்ததையடுத்து போலிஸாரால் அவர் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேடப்பட்டுவரும் நபரான 22 வயதாகும் ஜபெர் அல்பக்கர் சோதனையிட்ட போது வீட்டில் இல்லை; சந்தேகத்திற்குரிய நபருடன் தொடர்புடையதாக கருதப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் சமீபத்தில் வந்த அகதிகள் கூட்டத்தில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரும் வந்ததாக சில ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-37599801

நேற்று இரவு இவர்  கைது செய்யபட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அகதி கைது

ஜெர்மன் போலிஸார்

 

ஜெர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிரியாவைச் சேர்ந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

22 வயதாகும் ஜபெர் அல்பக்கர், ஜெர்மனிக்கு சமிபத்தில் அகதியாக வந்து, பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலிஸார், அல்பக்கரை லெய்ப்சிக் நகரில் கைது செய்துள்ளனர்.

தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக சனிக்கிழமையன்று, கெம்னிட்ஸ் நகரில் இருக்கும் அல்பக்கரின் வீட்டில் போலிஸார் சோதனை நடத்தினார்; அங்கு அவர்கள் 400 கிராம் வெடிபொருட்களை கைப்பற்றினர் மேலும் மற்றொரு நபரையும் கைது செய்தனர்.

அல்பக்கர், பெர்லினில் உள்ள ஒரு விமான நிலையத்தை இலக்கு வைத்திருக்கலாம் என்று ஜெர்மானிய ஊடகங்கள் செய்தி வெளியுட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/global-37607187

  • தொடங்கியவர்
ஜேர்மனியில் வைத்து சிரியர்களால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்
 
 

article_1476185315-Germany_11102016_GPI.ஜேர்மனியில் தாக்குதல்களை நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த சிரியாவைச் சேர்ந்த நபரொருவர், நேற்றுதத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்கு, சக சிரியர்களே உதவியதாக அறிவிக்கப்படுகிறது.

ஜாபெர் அல்பகர் என்ற 22 வயதான குறித்த நபர், அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 1.5 கிலோகிராம் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், பொலிஸாரிடமிருந்து தப்பியிருந்தார்.

கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள், வெடிக்க வைப்பதற்குத் தயாரான நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிடும் பொலிஸார், தற்கொலை அங்கியொன்றைத் தயாரிக்க, அவர் முயன்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களாக அவரைத் தேடிய பொலிஸார், கிழக்கு நகரமான லெய்ப்ஸிக்கில் வைத்து, அவரைக் கைது செய்தனர். அவ்வாறு அவர் கைது செய்யப்படுவதற்கு, சிரியாவைச் சேர்ந்த மூவரே உதவியதாகத் தெரிவித்தனர்.

அல்பகரின் புகைப்படத்தை அலைபேசியில் கொண்டு, பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், தனது வீட்டில் தன்னோடு இருப்பவர்கள், அந்தப் புகைப்படத்தில் இருப்பவரை மடக்கிப் பிடித்துள்ளதாகவும், அவரது வீட்டுக்கு, பொலிஸார் வர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

நகரத்தின் ரயில் நிலையத்தில் அம்மூவரையும் சந்தித்துள்ள அல்பகர், அவர்களோடு இணைந்து, வீட்டில் இருப்பதற்கு உதவி கோரியுள்ளார். அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற அம்மூவரும், அதன் பின்னரே, பொலிஸாரால் அவர் தேவைப்படும் விடயத்தை அறிந்துள்ளனர்.

"அவர் எங்களுக்கு, இலஞ்சம் தர முயன்றார். ஆனால், எவ்வளவு பணத்தை அவர் தந்தாலும், அவரை விடப் போவதில்லையென நாம் தெரிவித்தோம். அதன் பின்னர், மின்சாரக் கம்பியொன்றை எடுத்து, அவரைக் கட்டிவைத்து விட்டு, பொலிஸார் வரும்வரை காத்திருந்தோம்" என்று தெரிவித்த அம்மூவரில் ஒருவரான, மொஹமட் ஏ என மாத்திரம் அடையாளங்காணப்பட்ட நபர், "அவருடன் நான் மிகவும் கோபமாக இருந்தேன். இதைப் போன்றதொன்றை, என்னால் அனுமதிக்க முடியவில்லை. குறிப்பாக, எங்களுக்கான கதவுகளைத் திறந்த ஜேர்மனியில் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" எனவும் குறிப்பிட்டார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் படி, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன், அல்பகருக்குத் தொடர்பிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவரது இலக்கு என்ன என்பது தொடர்பாக, உறுதியான எவ்விடயத்தையும் காண முடியவில்லையென, பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு, முஸ்லிம்களிடமிருந்து போதிய எதிர்ப்பு வெளிப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு, பொதுவாகக் காணப்படுவதோடு, நேற்று இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலும், அதேபோன்றதொரு கருத்து, டொனால்ட் ட்ரம்ப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சக முஸ்லிம்களாலேயே, அல்பகர் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டமை, கவனிக்கத்தக்க ஒரு விடயமாக அமைந்துள்ளது.

http://www.tamilmirror.lk/183732/ஜ-ர-மன-ய-ல-வ-த-த-ச-ர-யர-கள-ல-ப-ட-க-கப-பட-ட-ஐ-எஸ-ஐ-எஸ-சந-த-கநபர-

  • கருத்துக்கள உறவுகள்
On 11.10.2016 at 6:43 PM, நவீனன் said:
ஜேர்மனியில் வைத்து சிரியர்களால் பிடிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேகநபர்
 
 

article_1476185315-Germany_11102016_GPI.

http://www.tamilmirror.lk/183732/ஜ-ர-மன-ய-ல-வ-த-த-ச-ர-யர-கள-ல-ப-ட-க-கப-பட-ட-ஐ-எஸ-ஐ-எஸ-சந-த-கநபர-

இவர் விளக்கமறியலில் தனக்குத் தானே தூக்கு மாட்டித்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
On 12.10.2016 at 11:54 PM, வாத்தியார் said:

இவர் விளக்கமறியலில் தனக்குத் தானே தூக்கு மாட்டித்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

ramkumar_13.png   article_1476185315-Germany_11102016_GPI.

சமீபத்தில் நடந்து கொண்டு இருக்கும்,  சிறை மரணங்களுக்கு..... 
தமிழ் நாட்டு சிறையில்... வயர் கடித்து, தற்கொலை செய்து கொண்ட... ராம் குமாரின் செய்தியை,
ஜேர்மனி சிறைச் சாலைகளும், பின் பற்றுகின்றன போல்... உள்ளது.

இந்த... சிரியா  அல் பக்கரை உயிருடன் பார்க்கும் போதே....  தூக்கில் தொங்கிய மாதிரித்தான் உள்ளது.
இவரது... மறியலுக்கு மட்டும், நான்கு பேர் காவல் காத்திருக்க, தூக்கில் தொங்கி செத்தான்... எனும் போது,
எவ்வளவு... கில்லாடியாய் இருந்திருப்பான்.... அந்த அல்பக்கர்.

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.