Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரன் போட்ட குண்டு!

Featured Replies

விக்­கி­னேஸ்­வரன் போட்ட குண்டு!

viki01-315caf9d4f1afff2662743e6d5a9c1db39a8fd1f.jpg

 

'தனது உயி­ருக்கு உலை வைக்­கவும் தென்­னி­லங்­கையில் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன' என்ற அவ­ரது குற்­றச்­சாட்டு பார­தூ­ர­மா­னது. இல­கு­வாக ஒதுக்கித் தள்ளி விட­மு­டி­யா­தது.அதனால் தான், பல்­வேறு தரப்­பு­களில் இருந்தும் அவ­ருக்கு உரிய பாது­காப்பு அளிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்து வலுப் பெற்­றி­ருக்­கி­றது.

தனது உயி­ருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடு­தலைப் புலிகள் மீது போடு­வ­தற்கு தென்­னி­லங்­கையில் சதித்­திட்­டங்கள் தீட்­டப்­ப­டு­வ­தாக தமக்குத் தகவல் கிடைத்­தி­ருப்­ப­தாக, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், கடந்த முதலாம் திகதி புதி­ய­தொரு குண்டைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார்.

யாழ்ப்­பா­ணத்தில் நடந்த, மூத்த அர­சியல் ஆய்­வாளர் மு.திரு­நா­வுக்­க­ரசு எழு­திய, ''இலங்கை அர­சியல் யாப்பு- டொனமூர் தொடக்கம் உத்­தேச சிறி­சேன யாப்பு வரை'' என்ற நூலின் அறி­முக விழா­வுக்கு அனுப்­பி­யி­ருந்த சிறப்­பு­ரையில் தான் இந்த விட­யத்தை அவர் கூறி­யி­ருக்­கிறார்.

எழுக தமிழ் நிகழ்­வுக்குப் பின்னர், அதன் விளை­வாக தென்­னி­லங்­கையில் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ரான தீவி­ர­மான பிர­சாரப் போர் ஆரம்­பித்த பின்னர், அர­சியல் நிலைப்­பா­டுகள் சார்ந்து அவர் அதிகம் கருத்து வெளி­யிட்ட முதல் நிகழ்­வாக அது அமைந்­தி­ருந்­தது.

இந்த நிகழ்வில் அவர் நேர­டி­யாகப் பங்­கேற்­க­வில்லை. பல்­வேறு கருத்­துக்கள், நிலைப்­பா­டு­களைக் கொண்ட தமிழ் அர­சியல் கட்­சி­களை ஒரே மேடையில் அமர வைத்த அந்த நூல் அறி­முக விழாவில், கலந்து கொள்­வ­தற்கு விக்­னேஸ்­வ­ரனும் இணங்­கி­யி­ருந்தார். ஆனால் கடை­சியில் அவர் தனது உரையை மாத்­தி­ரமே அனுப்­பி­யி­ருந்தார்.

அந்த உரை, நிகழ்வின் தலை­வ­ராக இருந்த பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­ப­லத்தால் வாசிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்த உரையில் தான் தனது உயி­ருக்கு உலை வைக்கும் திட்­டங்கள் தெற்கில் தீட்­டப்­ப­டு­வ­தாக தாம் அறிய முடிந்­துள்­ள­தாக முத­ல­மைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவர் இந்தக் கருத்தை, அதற்கு முன்­னரோ, பின்­னரோ தனது வாயினால் ஒரு­போதும் கூற­வில்லை. எனினும் எழுத்­து­மூல உரை அவ­ரது வாய் மொழி உரையை விட வலி­மை­யா­னது என்­பதால், அவர் இந்தக் கருத்தில் இருந்து ஒரு போதும் பின்­வாங்க முடி­யாது. 

அதே­வேளை, தனது உயி­ருக்கு உலை வைக்­கவும் தென்­னி­லங்­கையில் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்ற அவ­ரது குற்­றச்­சாட்டு பார­தூ­ர­மா­னது. இல­கு­வாக ஒதுக்கித் தள்ளி விட­மு­டி­யா­தது.

அதனால் தான், பல்­வேறு தரப்­பு­களில் இருந்தும் அவ­ருக்கு உரிய பாது­காப்பு அளிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்து வலுப் பெற்­றி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா. சம்­பந்­த­னுக்கு தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா எழு­தி­யுள்ள கடிதம் ஒன்றில், அர­சாங்­கத்­துடன் பேசி விக்­னேஸ்­வ­ர­னுக்கு உரிய பாது­காப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கோரி­யி­ருக்­கிறார்.

இன்­னொரு பக்­கத்தில், அர­சியல் தலை­மை­க­ளுக்கு இரா­ணுவப் பாது­காப்பு அளிக்­கப்­படக் கூடாது என்ற இறுக்­க­மான நடை­முறை இருந்­தாலும், சிவில் பாது­காப்பு கட்­ட­மைப்­பு­களால் அவ­ருக்கு உரிய பாது­காப்பை அளிக்க முடி­யாது போனால், தாம் பாது­காப்பு வழங்கத் தயார் என்று இலங்கை இரா­ணுவம் கூறி­யி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை முன்­னி­றுத்தி அர­சியல் செய்யும் தரப்­புகள், வழக்­கத்­துக்கு மாறாக இந்த விட­யத்தில் மௌனம் காத்து வரு­வது ஆச்­ச­ரி­ய­மா­னது.

முத­ல­மைச்­சரால் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு பார­தூ­ர­மா­ன­தாக இருக்கும் அதே­வேளை, அதில் எந்­த­ள­வுக்குப் பொறுப்­பு­ணர்வு உள்­ளது என்ற கேள்வி இருக்­கி­றது.

குற்­றச்­சாட்­டுகள் எதையும் எவ­ராலும் சுமத்­து­வது இல­கு­வா­னது. அதனை நிரூ­பிப்­பது தான் கடி­ன­மா­னது. ஆதா­ரங்கள் ஏது­மின்றிக் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்தி விட்டு, அவற்றை நிரூ­பிக்க முடி­யாமல் திண­று­வது போன்ற பாத­க­மான நிலை வேறேதும் இருக்க முடி­யாது.

அர­சி­யலில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனால் அண்­மைக்­கா­லத்தில் கூறப்­பட்ட பல குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­படைத் தன்­மைகள் மற்றும் உண்மைத் தன்­மைகள் குறித்த நிறை­யவே சந்­தே­கங்­களும், கேள்­வி­களும் இருக்­கின்­றன.

உதா­ர­ணத்­துக்கு, வடக்கு மாகா­ணத்தில் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் எண்­ணிக்கை தொடர்­பாக அவரால் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு.

வடக்கில் ஒன்­றரை இலட்சம் படை­யினர் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்டை சுமத்தி வந்­தாலும், அதனை ஆதா­ர­பூர்­வ­மாக அவரால் இது­வ­ரையில் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

வடக்கில் காணா­மற்­போனோர் தொடர்­பாக இதற்கு முன்னர் கூறப்­பட்டு வந்த புள்­ளி­வி­ப­ரங்­க­ளுக்கு முர­ணான வகையில், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனால், திரட்ட முடிந்த புள்­ளி­வி­ப­ரங்கள் மிகக் குறைந்­த­ள­வே­யாகும். 

அண்­மையில் ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த போது, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனால் காணா­மற்­போ­ன­வர்கள் பற்­றிய விப­ரங்கள் அடங்­கிய ஆவணம் ஒன்று கைய­ளிக்­கப்­பட்­டது.

அந்த ஆவ­ணத்தில் காணா­மற்­போன சுமார் 4000 பேரின் விப­ரங்­களே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. இது அவரே வெளி­யிட்ட தகவல் தான்.

அது­போ­லவே, முன்னாள் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வின் போது வி ஊசி செலுத்­தப்­பட்­டது தொடர்­பாக முத­ல­மைச்சர் கூறிய குற்­றச்­சாட்டும் கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

அதனை இது­வ­ரையில் அவ­ரது தலை­மை­யி­லான மாகா­ண­ச­பையின் சுகா­தார அமைச்சு நடத்­திய மருத்­துவ பரி­சோ­த­னை­களால் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

அது­மாத்­தி­ர­மன்றி, நூற்­றுக்கும் அதி­க­மான முன்னாள் போரா­ளிகள் கடந்த ஏழு ஆண்­டு­களில் பல்­வேறு நோய்­களால் மர்­ம­மாக மர­ண­மா­கி­யி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்ட போதும், அதனை உறு­திப்­ப­டுத்தும் புள்ளி விப­ரங்கள் கூட சரி­யாகத் திரட்­டப்­ப­ட­வில்லை.

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு வி ஊசி செலுத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு உண்­மை­யாக இருக்­கு­மானால், அதனை விடப் பெரிய போர்க்­குற்ற ஆதாரம் வேறேதும் இருக்க முடி­யாது. அப்­ப­டி­யொரு ஆதா­ரத்­துடன் முன்னாள் போரா­ளி­களை விடு­விக்கும் அள­வுக்கு முன்­னைய அர­சாங்கம் முட்­டாள்­த­ன­மாக நடந்து கொண்­டி­ருக்கும் என்று நம்­ப­மு­டி­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும், பொறுப்­பு­வாய்ந்த முத­ல­மைச்­ச­ராக அந்தக் குற்­றச்­சாட்டை இது­வ­ரையில் நிரூ­பிக்­க­வில்லை என்­பதே இங்­குள்ள முக்­கி­ய­மான விடயம்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யிடும் கருத்­துக்கள், வெறு­மனே வடக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற வகையில் மாத்­திரம் முக்­கி­யத்­துவம் பெற­வில்லை.

முன்னாள் நீதி­ய­ரசர் என்ற வகை­யிலும் கூட அவ­ரது கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. உன்­னிப்­பாக நோக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே, இது­போன்ற குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தும்­போது, அவற்றின் உண்­மைத்­தன்­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வதில் கரி­சனை காட்ட வேண்டும் என்­பதில் மாத்­தி­ர­மன்றி, அதன் எதிர்­வி­ளை­வு­க­ளை­யிட்டும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

குற்­றச்­சாட்­டு­களின் உண்­மைத்­தன்­மைகள் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­படும் போது, முத­ல­மைச்­சரின் எல்லா நிலைப்­பா­டுகள் தொடர்­பா­கவும், சந்­தே­கத்­துடன் பார்க்­கப்­படும் ஒரு நிலையை ஏற்­ப­டுத்தி விடும்.

அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வானால் அதன் ஒட்­டு­மொத்த பாதிப்­பு­க­ளையும் தமிழ் மக்­களே சுமக்க வேண்­டிய நிலைக்கு உள்­ளா­வார்கள்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் அர­சியல் படு­கொ­லைகள் ஒன்றும் புதிய விட­ய­மல்ல. பிர­த­ம­ராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க பௌத்த பிக்கு ஒரு­வரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். 

ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரே­ம­தாச குண்டு வெடிப்­புக்குப் பலி­யானார். 

ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரிகா படு­கொலை முயற்சி ஒன்றில் தனது கண்ணை இழக்க நேரிட்­டது. 

அது­போல காமினி திச­நா­யக்க, லலித் அத்­துலத் முதலி, அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்கம், நீலன் திருச்­செல்வம், லக்ஸ்மன் கதிர்­காமர் என்று ஏரா­ள­மான அர­சியல் படு­கொ­லை­களை இலங்­கையின் வர­லாறு கண்­டி­ருக்­கி­றது.

எனவே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இத்­த­கை­ய­தொரு குற்­றச்­சாட்டைச் சுமத்­திய போது அதனை யாரும் விளை­யாட்­டுத்­த­ன­மாக எடுத்துக் கொள்­ள­வில்லை.

எவ்­வா­றா­யினும், போர்க்­கா­லத்­தி­லேயே அதி­க­ள­வி­லான அர­சியல் படு­கொ­லைகள் நிகழ்ந்­தி­ருந்­தன. அந்தக் கால­கட்­டங்­களில் புலி­க­ளாலும் அர­சியல் படு­கொ­லைகள் நிகழ்த்­தப்­பட்­டன. 

புலி­களின் பெயரைப் பாவித்து வேறு தரப்­பி­ன­ராலும் அர­சியல் படு­கொ­லைகள் நிகழ்த்­தப்­பட்­டன. அத்­த­கைய கொலை­க­ளுக்கு அர­சாங்­கத்தின் முழு­மை­யான ஆசீர்­வா­தமும் இருந்­த­தாக பர­வ­லாக நம்­பப்­பட்­டது.

போருக்குப் பின்னர், அத்­த­கைய சம்­ப­வங்கள் குறைந்து. அண்­மைக்­கா­லத்தில் அத்­த­கைய நிகழ்­வுகள் ஏதும் இடம்­பெ­ற­வில்லை என்ற உண்­மையை நாம் மறந்து விட­லா­காது.

இலங்­கையில் இப்­போது, ஒப்­பீட்­ட­ளவில் அதி­க­ளவு ஜன­நா­யகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை கொண்ட ஒரு ஆட்சி நில­வு­கின்ற சூழலில் அர­சியல் படு­கொ­லை­க­ளுக்­கான வாய்ப்­புகள் மிக அரி­தா­கவே உள்­ளன. 

அத­னையும் மீறி ஒரு அர­சியல் படு­கொலை இடம்­பெ­று­மானால் அது அர­சாங்­கத்­தையும், சிங்­கள இன­வாத சக்­தி­க­ளுக்கும் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

அதுவும் விக்­னேஸ்­வரன் போன்ற ஒரு­வரின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது சாதா­ர­ண­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாது. இதனை தெற்­கி­லுள்ள எல்லா சக்­தி­க­ளாலும் இல­கு­வா­கவே புரிந்து கொள்ள முடியும்.

அதை­விட, விக்­னேஸ்­வரன் இருக்கும் வரையில் தான் தென்­னி­லங்கை கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு அர­சியல் செய்­வது இல­கு­வாக இருக்கும். எனவே பொன் முட்டையிடும் வாத்து ஒன்றை அறுத்துப் பார்க்க அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்.

அதற்கும் அப்பால், விக்னேஸ்வரனுக்கு தீங்கிழைத்து விட்டு அந்தப் பழியைப் புலிகள் மீதும் அவ்வளவு இலகுவாக போட்டு விட முடியாது. புலிகள் இயக்கம், இப்போது இலங்கையில் இல்லை என்பது மாத்திரமன்றி, விக்னேஸ்வரன் ஒன்றும் புலிகளுக்கு எதிரான கொள்கையைப் பரப்புகின்ற ஒருவருமல்ல. 

புலிகளின் தனிநாட்டுக் கொள்கை தவிர்ந்த மற்றைய கோட்பாடுகளுக்கு அவர் இசைவானவராகவே இருக்கிறார். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களால் அவர் கொண்டாடப்படுகிறார்.

இதனால், அவரைப் புலிகள் குறிவைத்தனர் என்று எவரையும் எவராலும் அவ்வளவு இலகுவாக நம்ப வைத்து விட முடியாது.

எனவே, முதலமைச்சர் தனது குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களை வெளியிடும் வரை அல்லது கிடைக்கும் வரையில் அதனை அவரது அரசியல் குண்டாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது நன்றாகவே அரசியல் செய்யவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள், ஒரு வழக்கறிஞரும், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித்துறை நடுவராகவும் பணியாற்றியவர், தற்போது அரசியல்வாதியாகி அரசியல் அனுபவத்தையும் பெற்றுவருகின்றார். இத்தனை அனுபவங்களைக் கொண்டுள்ள அவர் ஆதாரம் இன்றி எதனையும் வெளியிடுவார் என்று எண்ணுவதே அறிவீனமாகும்.

இதுவரை அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தெரிவிக்கும்படி எவருமே கேட்டதாகத் தெரியவில்லை. கேட்டால் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற நிலையைத் தாங்களாகவே தேடிக்கொள்ள வேண்டிவரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். முதல்வர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை பற்றி ஈழத்தமிழினம் நன்றாக அனுபவித்து அறிந்துள்ளது, ஆனாலும் அவர்கள் அதனை வெளிவந்து முகம்காட்டிச் சொல்லமாட்டார்கள். ஏனெனில் சிறகு விரியுமுன் பறந்தால்... அழிவுதான் என்ற உண்மையையும் அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்க தெரிந்த மனிதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.