Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு

Featured Replies

:rolleyes:கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு

கிழக்கில் அண்மைக் காலமாக இடம் பெற்ற தமிழ் முஸ்லிம்களுக்கு இடையி லான அசம்பாவிதங்களை அடுத்து அங்கு நிரந்தர நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 52 நிறுவனங்களின் கூட்டமைப் பான முஸ்லிம் கவுன்ஸில் கடந்த திங்கட் கிழமை கருணா அணியினரைச் சந்தித்துப் பேசியுள்ளது

இச்சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கருணா அணியினரின் அலுவல கத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இரு தரப்பினராலும் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், பொதுச் செய லாளர் எம்.டிஎம். ரிஷ்வி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டுத் தலைவர் ஜப்ரி ஹனீபா, அகில இலங்கை ஜமாத்தே இஸ் லாமியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக் டர் எம்.ரீ.எம். மஹுஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரஷீட் எம். இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் அரசியல்துறைப் பொறுப் பாளர்களான வி. திலீபன், ஏ.பிரதீப், செய லாளர் திருமதி எஸ். பத்மினி, அரசியல் துறை உறுப்பினர் எஸ். குணாளன், சமாதான செயலகப் பொறுப்பாளர் எஸ். மகேஷ், பேச்சாளர் அஷாட் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு இரண்டு மணி நேரம் இடம்பெற்றது.

சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங் கள்:

1 காத்தான்குடியில் அண்மையில் ஏற் பட்ட துரதிஷ்டமான சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

2 தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் நீண்ட காலமாக இருந்து வந்த நட்புறவை மீண்டும் கட்டி யெழுப்புவதற்கும், இதைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் அதை அடியோடு இல்லாமல் செய் வதற்கும் நடவடிக்கை எடுத்தல். இரு தரப் பையும் உள்ளடக்கிய நல்லிணக்க குழுவை இதற்கென அமைத்தல்.

3 இனங்களுக்கிடையிலான பிரச்சினை கள் ஏற்படும்போது அவை இக்குழுவிற் குக் கொண்டு வரப்பட்டு இக்குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

4 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த தமிழ் முஸ்லிம் உறவை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிக ளும் விட்டுக் கொடுப்புடன் செயற்படுதல்.

5 முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிர தேசங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கள் ஆயுதங்களுடன் நடமாடக் கூடாது என்ற கட்சியின் நிபந்த னையை நடைமுறைப்படுத்தல்.

6 இலங்கை முஸ்லிம்களின் சுய நிர்ணய உரிமையைத் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு அவர்களை முழுமை யான தேசிய இனமாக அங்கீகரிக்கின்றது.

7 அமைதிப் பேச்சுக்களின்போது முஸ்லிம்கள் தனித்தரப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முத்தரப்புப் பேச்சாக அது அமைய வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு வலியுறுத்து கின்றது.

8 தமிழ் முஸ்லிம்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படின் இரு தரப்பினரும் வன்முறையில் இறங்காது பிரச்சினையைப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வருதல்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஜனாதிபதி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகி யோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

எங்வைத்துப் பேசபபோகிறோம் என்று சொல்லிவிட்டுப்

பேசக்கூடாதா? அவனை?????????????

Edited by Iraivan

  • தொடங்கியவர்

கருணாவிடம்மட்டும் பேசினாலே போதும். முழுக்குழப்பத்தி

ற்கும் அவன்தான் காரணம்

கருணாவிடம்மட்டும் பேசினாலே போதும். முழுக்குழப்பத்தி

ற்கும் அவன்தான் காரணம்

துரோகிகள், போக்கிரிகள் சம்மந்தமான நியூசுகளை விழுந்தடித்து விபரிச்சு நீங்கள் தான் அவனுகளுக்கு காசில்லா விளம்பரம் செய்கின்றீர்கள். இவனுகளை நாம் அணுக வேண்டிய முறை இப்படியல்ல. ஆனால், இப்படித்தான்: சமாதானம் = சரணாகதி(கையைதூக்குதல் + காலைபிடித்தல்) + துரோகம்

  • தொடங்கியவர்

அருமை அருமையிலும் அருமை

சமாதானம் = சரணாகதி(கையைதூக்குதல் + காலைபிடித்தல்) + துரோகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.