Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படைத் தளபதிகளை அழைத்து விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு

Featured Replies

கடற்படைத் தளபதிகளை அழைத்து விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற இராணுவப் படையினருக்கான காணிகள் வீடுகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவன்ட் கார்ட் நிறுவன மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட எட்டு பேரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டமை அதிருப்தியை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான பிரச்சினைக்கு பாதுகாப்பு அமைச்சே பதிலளித்திருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன வழக்கு தொடர்பில்  இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சரியான முறையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவு போன்றன அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படத் தொடங்கினால் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/2806

சிங்கள-பௌத்த அரசின் நல்லாட்சி முகமூடி விலகி உண்மையான பயங்கரவாத முகம் வெளிப்படுகிறது!

  • தொடங்கியவர்
கோட்டா மீதான விசாரணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு
 
 
கோட்டா மீதான விசாரணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் படைத் தளபதிகளை ஊழல் மோசடி விசாரணை களுக்கு உட்படுத்துவது தொடர்பில்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.
 
சி.ஐ.டி, எப்.சி.ஐ.டி மற்றும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக கடும் தீர்மானங்களையும் எடுக்க தான் பின்நிற்கப் போவதில்லை என்றும்  ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவைக்கும்  விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றையதினம் முப்படையினர் மத்தியில் உரை யாற்றுகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 கடந்த ஆண்டு முன்னாள் இராணுத் தளபதிகள் மூவரை விசாரணையொன்றிற்காக அழைத்திருந்தனர். நான் அப்போது யுத்தத்தை வழிநடத்திய படைத் தளபதிகளை விசாரணைகளுக்காக அழைத்ததற்காக  எனது அதிருப்தியையும், கண்டத்தையும் வெளி யிட்டிருந்தேன். அதேபோல் கடந்த மாதம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இந்த செயலுக்கு நான் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கி ன்றேன்.
 
குறிப்பாக யுத்தத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்தில் நிறுத்தியது தொடர்பில் எனது கடும் அதிருப்தி யையும், கண்டனத்தையும் பதிவுசெய்துகொள்கின்றேன். இந்த   நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்ததற்கான நோக்கமொன்று இருக்கின்றது. அதற்கான கொள்கைகளும் இருக்கின்றன. இந்த சுயாதீன ஆணைக்குழுக்களில் உள்ளவர்களும் தமக்குரிய விடயதானங்கள் என்ன என்பது தொடர்பில் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும். அரசொன்றை நிர்வகிப்பது, தேசிய பாதுகாப்பு, மற்றும் இராணுவ முகாமைத்துவம், இராணுவ நிர்வாகம் தொடர்பில் எந்தவித அறிவும் இல்லாத தரப்பினர், இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்பட முடியாதவர்கள் மூலைகளுக்குள் இருந்துகொண்டு பிழையாக செயற்படுவது தெரிகின்றது.
 
பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமானால் அவை தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒரு முறை இருக்கின்றது. அவற்றுக்கு பின்பற்ற வேண்டிய வரைமுறைகள் இருக்கின்றன. சட்டங்கள் இருக்கின்றன.  அதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவோம், நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் இருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தெளிவுபடுத்த வேண்டும். இந்த இடத்தில் சுயாதீன விசாரணை ஆணைக்குழுக்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சிலர் வாதி டலாம். ஆனால் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளரை மாத்திரமே அரசியல் சாசன சபை நியமித்தி ருக்கின்றது. ஆனால் அவற்றுக்கான செயலாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர் நாயகத்தை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியை கொண்டு நடத்துவதற்காகவே அரசியல் சாசனத்தில் அரசியல் சாசன சபைக்கும், ஜனாதிபதிக்கும் இவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. 
 
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை கைதுசெய்து நீண்டகாலமாக சிறையில் அடைத்துவைத்துள்ளதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்ட  ஜனாதிபதி, குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
 
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் கடற்படைத் தளபதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது சிலர் மிகவும் மோசமாக அதனை விமர்சித்திருந்தனர். அரசியல் லாபங்களுக்காக அரசாங்கத்தையும் கடுமையாக சாடியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதியும் குற்றம்சாட்டியிருந்தார்.  ஆனால் நான் இந்த இடத்தில் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் குறிப்பிட்டாக வேண்டும். நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நீதிபதிகளுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து அழுத்தம் பிரயோகிக்க அல்ல. சுயாதீன விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தலையிடுவதற்கும் அல்ல. அதேபோல் சட்டமா அதிபரின் நடவடிக்கைகளில் தலையிட்டு பாரிய ஊழல், மோசடிகள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், கொள்ளைகளில் ஈடுபட்டர்களை விடுவிப்பதற்காக நான் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்கில்லை.
 
நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர். இதற்கமைய 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெற்றிபெறச் செய்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தியது உண்பதற்கும், உடுப்பதற்கும் வசதிக ளையும்கேட்டல்ல. வீதிகளை அமைத்துக் கொடுக்குமாறும் கேட்டல்ல. நாட்டில் செய்ய வேண்டிய அரசியல் மறுசீரமைப்பை வேண்டியே என்னை ஆட்சிபீடம் ஏற்றினர். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கே என்னை ஆட்சிபீடம் ஏற்றினர்.
 
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு. இவற்றை நிறைவேற்றும் போது நான் எவருக்கும் அடிபணியவும் மாட்டேன். எவரையும் பாதுகாக்கவும் மாட்டேன். அதேபோல் நாடாளுமன்றத்திற்கு மக்கள் ஆணையை நிறைவேற்றும் அதிகாரம் இருப்பது போல் ஜனாதிபதியாக தெரிவுசெய்த எனக்கும் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்புக்களும் இருக்கின்றன. இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது.
 
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் போது முப்படையினரை பாதுகாப்பது, முப்படையினரின் கௌரவத்தை பாதுகாப்பது, முப்படையினருக்கான வசதிகளை செய்துகொடுப்பது, இவை அனைத்து நாடுகளிலும் அரசுகளாலும், அரச தலைவர்களாலும் செய்துகொடுக்க வேண்டிய கடமைகளாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டேன். அதற்கு அனுமதிக்கவும் மாட்டேன். சில தரப்பினர் இன்று நீதிமன்றத்தை முன்னிலைப்படுத்தி இராணுவ அதிகாரிகள் சிலரை கைதுசெய்திருக்கின்றனர். ஒரு வழக்கொன்றில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை கைதுசெய்து கடந்த பத்து மாதங்களாக சிறையில் அடைத்திருக்கின்றனர்.  குற்றம் செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். குற்றத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பிணை வழங்கி அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்குகளை தொடர்ந்து கொண்டு நடத்தலாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தர விட்டுள்ளேன்.
 
விடுதலை செய்வது, பிணை வழங்குவது, வழக்குத் தொடர்வது என்பது அடிப்படை மனித உரிமையாகும். இவற்றை மீறி செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.  கடந்தகாலங்களில் இவை தொடர்பில் பகிரங்கமாக நான் பேசவும் இல்லை. ஆனால் தொடர்ந்தும் அப்படியிருக்க முடியாது. இவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பல நடவடிக்கைகளை செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தேன். இந்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படையாகவும், தெளிவாகவும் நான் அங்கு குறிப்பிட்டேன். சி.ஐ.டி, எப்சீ.ஐ.டி, ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்க அமைய செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டேன்.
 
அதேபோல் இந்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களின் அதிகாரிகள் பக்கச்சார்பின்றி எந்தவித அரசியல் தலையீடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிபணியாது தமது கடமையை நிறைவேற்ற வேண்டும். அதனைவிடுத்து அரசியல் நிகழ்ச்சி நிரல்களை விசாரணைகளில் திணிக்க முற்பட்டால் அது தான் அவர்கள் இழைக்கும் மிகப்பெரிய தவறாகவும் அமையும்.

http://onlineuthayan.com/news/18861

மைத்திரிக்கு தனது புதல்வர்களின் ரவுடிச் செயலை மறைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில், தனது சுயரூபத்தைக் காட்ட தொடங்கியுள்ளார்.

அதனால் மிக மோசமான சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள், போர்க்குற்றவாளிகள் மீதான கண்துடைப்பு விசாரணைகளையும் கண்டிக்க முடிவெடுத்துள்ளார். 

  • தொடங்கியவர்

ஜனாதிபதியின் கருத்துக்கு ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கண்டனம்

trancparancy-international
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு அணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள் மீது கடுமையான தொனியில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். சுயாதீன நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையீடு செய்ய முடியாது என லக்ஸான் டயஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதி இவ்வாறு விமர்சனம் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரான கருத்துக்களை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி விமர்சனம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/2873

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இனமதவெறிக் கறை படிந்த நீதித்துறையை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த 60+ வருடங்களில்  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எவைக்கும் தேவையான முழுமையான நீதியை, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்த சரித்திரம் இல்லை.

On 13/10/2016 at 3:37 PM, போல் said:

மைத்திரிக்கு தனது புதல்வர்களின் ரவுடிச் செயலை மறைக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில், தனது சுயரூபத்தைக் காட்ட தொடங்கியுள்ளார்.

அதனால் மிக மோசமான சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள், போர்க்குற்றவாளிகள் மீதான கண்துடைப்பு விசாரணைகளையும் கண்டிக்க முடிவெடுத்துள்ளார். 

அமைதியாக இருந்த மைத்திரி கொந்தளித்தது ஏன்? பின்னால் செயற்பட்ட மர்மநபர்கள் யார்?

இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை காலமும் அமைதியான முறையிலேயே அரசாங்க நடவடிக்கைகள் நகர்ந்து சென்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் ஜனாதிபதியை ஊடகவியலாளர் ஒருவர் குழப்பி விட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைக்கு காரணம் தேசிய பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் மற்றும் ஜனாதிபதி இணைப்பு செயலாளர் ஒருவர் வழங்கிய தகவல்கள் என தெரியவந்துள்ளது. கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துடன் ஜனாதிபதியின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான நடவடிக்கையின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்புபட்டுள்ளதாக ஜனாதிபதியுடன் தாய்லாந்து விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஊடாகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தாய்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்பியதும் அவரின் இணைப்பு செயலாளரும் இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் உறுதி செய்துள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவினை ஏற்று பொலிஸார் செயற்படவில்லை எனவும், பிரதமரின் தலையீடே அதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை ஜனாதிபதி கடுமையான உரையாற்றுவதற்கு முன்னரே அவரால் என்ன விடயங்கள் பேசப்படவுள்ளன என்பது தொடர்பில், குறித்த ஊடகவியலாளரும், இணைப்பு செயலாளரும் தமது நட்பு வட்டாரங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி - பிரமருக்கு இடையில் முரண்பாடான நிலை தோற்றுவித்த போதும், நீண்ட நேர பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக நிலைக்கு எட்டப்பட்டுள்ளதாக குறித்து சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/121056?ref=right_featured

  • கருத்துக்கள உறவுகள்

"டபிள் கேம்,   சம்பந்தன்" , எப்ப.... அங்கை போனாரோ, 
அப்பவே,,,, மைத்திரிக்கு, வயித்தாலை.... அடிக்கத் தொடங்கி விட்டது.
சம்பந்தன்  ஐயாவை, ஊருக்கு அனுப்புங்க  மைத்த்ரி,  உங்களுக்கு "சனி"  கழிஞ்ச மாதிரி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கள் மோதல்! கோத்தபாயவை கடுமையாக திட்டிய நாமல்! கடுப்பில் பசில்

கடந்த சில தினங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாத பிரதிவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டமையே இதற்கான காரணமாகும். எனினும் ஜனாதிபதியின் கருத்துக்கு கோத்தபாய ராஜபக்ஷ நன்றி தெரிவித்திருந்தார்.

சீன விஜயத்தில் ஈடுபட்டுள்ள கோத்தபாய அங்கிருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையிலுள்ள சிலருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

கோத்தபாயவின் இந்த நடவடிக்கையானது, ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தெடார்பில் கோத்தபாய ராஜபக்ஷவை நேற்றிரவு நாமல் கடுமையாக திட்டியதாக தெரிய வருகிறது. அத்துடன் தவறான வேலையை அல்லவா செய்துள்ளார் என நாமல் அங்கிருந்தவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். அவர் எதற்கு அங்கு இருந்து இங்கு கருத்து வெளியிட வேண்டும். அதன் ஊடாக அடுத்த முறையும் மைத்திரி தலைவராகிவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு என்றால் அவர் குறித்து எவ்வித நம்பிக்கையும் இல்லை. எப்படியிருந்தாலும் நாங்கள் அவருடனே (பசில்) இருக்க வேண்டும். ஏன் என்றால் அவரால் மாத்திரமே இதனை செய்ய வேண்டும். ஏனினும் என்ன தான் செய்வதென நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் நாமல் மற்றும் பசிலின் இணைப்பு அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த இருவரும் சில காலங்களால் கீரியும் - பாம்புமாக செயற்பட்டுள்ளனர்.

எனினும் பசிலும் இதே கருத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாய அனைத்தையும் கெடுத்து விட்டார் என பசில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோத்தபாய தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்று போன்று இன்றும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/politics/01/121113?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.