Jump to content

30 வகை தீபாவளி பலகாரம்!


Recommended Posts

30 வகை தீபாவளி பலகாரம்!

 

 

லகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, அல்வா முதல் அதிரசம் வரை பண்டிகை விருந்து படைக்க உங்களை தயார்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த புஷ்பலதா.

        p151aa.jpg

வரகு சீப்பு சீடை

தேவையானவை: வரகு அரிசி மாவு – 1 கப், உளுத்தம் மாவு – கால் கப், கடலை மாவு – கால் கப், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

1.jpg

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு  பிசைந்துகொள்ள வேண்டும்.
முறுக்கு சீடை சீப்பு சீடைக்கான அச்சைப் போட்டு மாவை உள்ளே வைத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்துவிடவும். பிழிந்த மாவை சிறியதாக கட் செய்து, கட் செய்தவற்றின் இரண்டு ஓரங்களையும் ஒட்டிவிட வேண்டும். பார்ப்பதற்கு சின்ன குழல் போல இருக்கும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்துவைத்த சீப்பு சீடைகளைப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.


வெஜிடபிள் பாம்பே அல்வா

தேவையானவை: காய்கறி விழுது - அரை கப் (பீட்ரூட், கேரட், பீன்ஸ், மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து விழுதாக அரைக்கவும்), சோள  மாவு -அரை கப், சர்க்கரை - 2 கப், நெய் - அரை கப், பாதாம்,முந்திரி, வெள்ளரி விதை (உடைத்தது) -   கால் கப், வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 3 கப்.

2.jpg

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் காய்கறி விழுது, சோள மாவு,  தண்ணீர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி இல்லாமல் கலக்கவும்.  பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை சற்று நிறம் மாறியதும் தீயை இன்னும் குறைத்து, அவ்வப்போது சிறிது நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய்யில் பொரித்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதை  சேர்த்துக் கிளறவும். கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, நன்கு ஆறவிட்டு, துண்டுகள் போட்டு பரிமாறவும்.


தால் வெஜ் கத்லி

தேவையானவை:  கடலைப் பருப்பு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் பவுடர் - கால் கப், காய்கறி கூழ் - அரை கப் (பீட்ரூட், கேரட், பீன்ஸ், சௌசௌ, மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைக்க வும்), வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய் - 4 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை - விருப்பமான அளவு.

3.jpg

செய்முறை:  கடலைப்பருப்பை  கிள்ளு பதமாக வேகவைத்து நீரை வடித்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.  அடிகனமான வாணலியில் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை, காய்கறி கூழ் சேர்த்து ஒற்றை கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு, கடலைப்பருப்பு பவுடர் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி வரும்போது, அவ்வப் போது நெய்யை சேர்த்துக் கிளற வும். பிறகு பால் பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறி,  கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கலவையைக் கொட்டி, ஆறியதும் விருப்பமான வடிவங்கள் செய்து, நட்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: கலவையை  இரண்டு வெவ்வேறு நிற காய்கறி கொண்டு தனித்தனியாகக் கிளறி, ஒன்றன் மேல் ஒன்றாக பரப்பி ஆறியவுடன் வில்லைகள் போட்டும் பரிமாறலாம்.


கோதுமை பாதுஷா

தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கெட்டியான நெய் - அரை கப், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - அரை கப், எண்ணெய் - பொரிக்க.

4.jpg

செய்முறை: சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் உதிரி யாக ஆகும் வரை கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கூடு மானவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவை சிறுசிறு உருண் டைகளாக உருட்டி,  உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து, சூடான சர்க்கரைப் பாகில் அமிழ்த்தி எடுக்கவும். செர்ரி அல்லது கலர் தேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக் கவும்.


பைனாப்பிள் பூந்தி

தேவையானவை:  கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பைனாப்பிள் ஜூஸ் - கால் கப், பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள், எண்ணெய் - பொரிக்க.

5.jpg

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.


ராகி அப்பம்

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை  கப், தயிர் - கால் கப், வெல்லம்  - ஒன்றரை கப் எண்ணெய் - கால் கப், நெய் - கால் டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

6.jpg

செய்முறை: ராகி மாவு, கோதுமை மாவு, கோகோ பவுடர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றா கச் சேர்த்து சலிக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒரு பாத்திரத்தில் வெல்லப்பாகு, தயிர், ஏலக்காய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். அத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.


டேட்ஸ்  எள்ளு உருண்டை

தேவையானவை: பேரீச்சை - 200 கிராம், எள் - 50 கிராம், முந்திரி - 6, ஏலக்காய்த்தூள் -ஒரு சிட்டிகை, தேன் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

7.jpg

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். பேரீச்சையை பொடியாக நறுக்கி, நன்கு மசிக்கவும். அத்துடன் ஏலக்காய்த்தூள், நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டை களாக உருட்டி பரிமாறவும்.


பிரெட் - பனீர் பால்ஸ்

தேவையானவை: பனீர் - 100 கிராம், பிரெட் தூள் - 75 கிராம் (பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக் கவும்), பால் பவுடர் - 25  கிராம், சர்க்கரை - 100 கிராம், முந்திரி (பொடித்தது) - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், செர்ரி/டூட்டி ஃப்ரூட்டி - அலங்கரிக்க.

8.jpg

செய்முறை: பனீரை துருவவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பிசுபிசுப்புப் பதம் வந்ததும் அதில் துருவிய பனீர் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். அத்துடன்  பால் பவுடர், பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு பிரெட்தூள் சேர்த்து உருண்டைகள் பிடிக்க வும். செர்ரி/டூட்டி ஃப்ரூட்டி தூவி அலங்கரிக்கலாம்.


சாக்லேட் சந்தேஷ்

தேவையானவை: பனீர் (துருவியது) - ஒரு கப் பொடித்த சர்க்கரை - கால் கப், கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், முந்திரி - அலங்கரிக்க.

9.jpg

செய்முறை: துருவிய பனீரை நன்கு பிசைந்து மிருதுவாக்கவும். அத்துடன் கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிசையவும். வாண லியைச் சூடாக்கி இந்தக் கலவையைச் சேர்த்து சில நிமிடங்கள் புரட்டி எடுத்து ஆறவிடவும். பிறகு, உருண்
டைகளாக உருட்டி மேலே முந்திரி வைத்து அலங் கரிக்கவும்.


மில்லட் பொரிவிளங்காய் உருண்டை

தேவையானவை: ராகி (கேழ்வரகு) - கால் கப், கம்பு - கால் கப், வரகு - கால் கப், கோதுமை - கால் கப், கொள்ளு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சுக்குப்பொடி - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

10.jpg

செய்முறை: தானியங்கள் மற்றும் பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி கலந்து வைக்கவும்.

ஒரு  பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரையும்வரை கொதிக்கவைத்து, வடிகட்டி, மீண்டும் கெட்டியாக பாகு காய்ச்சவும். பாகை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலந்து, கையில் நெய்யை தொட்டுக்கொண்டு உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்


கேரட் - கோகனட் பர்ஃபி

தேவையானவை: தேங்காய்த் துருவல் - கால் கப், கேரட் துருவல் - கால் கப், சர்க்கரை - ஒரு கப்,  ஏலக்காய் - 4 (பொடித்துக் கொள்ளவும்).

 11.jpg

செய்முறை: வாணலி யில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும். கலவை சுருண்டு வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற
விட்டு துண்டுகள் போடவும்.


ரோஸ் டைமண்ட்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோள மாவு -  2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ரோஜா இதழ்கள் - கால் கப், ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க.

12.jpg

செய்முறை: கோதுமை மாவுடன் சோள மாவு, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுபோல கெட்டியாகப் பிசைந்து, உருட்டி, சிறு சிறு டைமண்ட் வடிவ துண்டுகளாக நறுக்கி, ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தட்டில் எடுத்து வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி துண்டுகளை மொறுமொறுப் பாக பொரிக்கவும். அகல மான பாத்திரத்தில் சர்க் கரை, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் ரோஜா இதழ்களைச் சேர்த்துக் கலந்து கொதிக்கவிட்டு இரட்டைக் கம்பி பதம் வந்ததும் இறக்கிவைத்து, ரோஜா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த கோதுமைத் துண்டுகளை அதில் சேர்த்துப் புரட்டி எடுத்து, தட்டில் கொட்டி ஆறவைத்து எடுத்து வைக்கவும்.


கோகோ கேக்

தேவையானவை: கோவா (இனிப்பு இல்லாதது) - 2 கப், மைதா - ஒரு கப், கோகோ பவுடர் - 5 டீஸ்பூன், சர்க்கரை - 4 கப், நெய் - சிறிதளவு.

13.jpg

செய்முறை: அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகிய வற்றைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

மற்றொரு அடிகனமான பாத் திரத்தில் மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி பரப்பவும். ஆறிய பின் துண்டுகள் போடவும்.


திடீர் ரசகுல்லா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 2 அல்லது 3 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பிஸ்தா (பொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்.

14.jpg

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதில் பாலை சில சில துளிகளாக விட்டு உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வரும்வரை பிசைய வும். தேவையான அளவு உருண்டைகள் உருட்டி வைக்கவும். சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஏலக்காய்த்தூள் கலந்து வைக்கவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் செய்து வைத்த உருண்டைகளின் மீது சர்க்கரைப் பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பைத் தூவிப் பரிமாறவும்.


இன்ஸ்டன்ட் ரசமலாய்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 2 கப், இன்ஸ்டன்ட் பாதாம்பால் மிக்ஸ்  - 10 டேபிள்ஸ்பூன், சர்க்கரை  - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்  - ஒரு சிட்டிகை, பிஸ்தா, பாதாம்  (பொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்.

 15.jpg

செய்முறை: பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதில் பாலை சில சில துளிகளாகச் சேர்த்து உருண்டை பிடிக்கும் பதத்துக்கு வரும்வரை பிசைய வும்.  தேவையான அளவு உருண் டைகள் உருட்டி ஃப்ரிட்ஜில் வைக் கவும். இன்ஸ்டன்ட் பாதாம்பால் மிக்ஸை கால் கப் பாலில் கரைத்து வைக்கவும். மீதி பாலில் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அதில் கரைத்த பாதாம் மிக்ஸ் பாலைச்  சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும். பாதாம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் தூவவும். இதுதான் ராப்டி. பரிமாறும்போது, செய்துவைத்த பாதாம் ராப்டியில் பிரெட் உருண்டைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: பிரெட் உருண்டைகளுக்குப் பதில் ரெடிமேட் ரசகுல்லாவில் ஜீராவை வடித்துவிட்டு அதை பாதாம் ராப்டியில்  ஊறவைத்தும் பரிமாறலாம்.


பிரெட் ஜாமூன்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 6, பால் - கால் கப், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க.

16.jpg

செய்முறை: பிரெட்டின் ஓரங் களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். அதில் பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து விரல்களால் பிசைந்து, தேவையான அளவு உருண்டை கள் உருட்டிவைக்கவும்.  சர்க்கரை யுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, பிசுபிசுப்பு பதம்  வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும் எண்ணெயை மிதமாகச் சூடாக்கி, பிரெட் உருண்டைகளைச் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்.


ராகி லட்டு

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், சூடான பால் - 2 அல்லது 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால்  டீஸ்பூன், முந்திரி - 5.

17.jpg

செய்முறை: சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடராக்க வும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரியைப் வறுத்தெடுக்கவும். அதே வாணலி யில் ராகி மாவைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து ஆறவைக்கவும். மாவு சூடு ஆறியதும் அதில் சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், சூடான பால் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, மாவை லட்டுகளாகப் பிடிக்கவும்.


சாமை அதிரசம்

தேவையானவை: சாமை அரிசி மாவு - 2 கப், துருவிய வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க.

18.jpg

செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலரவைத்து, மெஷினில் கொடுத்து அரைக்கவும். வெல்லத் துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாகு காய்ச்சி இறக்கி, சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்துக் கிளறவும் (அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது). இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை 2 நாட்கள் அப்படியே வைத்து, பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் வட்டமாகத் தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.


கொள்ளு சுகியன்

தேவையானவை: கொள்ளுப்பொடி -  ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், மைதா - கால் கப், எண்ணெய் - பொரிக்க, உப்பு - கால்  டீஸ்பூன்.

19.jpg

செய்முறை: கொள்ளை குக்கரில் வேகவைத்து, நீரை வடித்து  ஆறவைத்து, மிக்ஸியில் பவுடராகத் திரிக்கவும்.தேங்காய்த் துருவலை வாணலியில் லேசாக வறுக்கவும். அடுப்பில் வாண லியை வைத்து வெல்லம் சேர்த்து, வெல்லம் மூழ்கும் வரை தண்ணீ­ர் விட்டு கொதிக்கவிடவும். பாகு கொதித்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி, கொள்ளுப்பவுடர், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கலந்து, பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்­ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் (மைதா மாவு தீய்ந்துவிடாமல்) பொரித்தெடுக்கவும்.


குல்கந்து போளி

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ரோஜா குல்கந்து  - கால் கப், தேங்காய்த் துருவல் - கால் கப், சர்க்கரை - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - கால் கப், நெய் - தேவையான அளவு.

21.jpg

செய்முறை: மைதா மாவில் மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மேலும் பிசைந்து தனியே வைக்கவும். வாணலியில் சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கெட்டியாகும்வரை வதக்கி, கடைசியாக குல்கந்து, ஏலக்காய்த்தூள் அரிசி மாவு சேர்த்து ஒருமுறை கிளறி உடனே இறக்கி ஆறவிடவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை ஒரு பெரிய நெல்லிக் காய் அளவு உருண் டையாக உருட்டி எண்ணெய் தடவிய இலை அல்லது பிளாஸ்டிக் கவர் மீது வைத்து அப்பளம் அளவுக்கு மெல்லிய தாகத் தட்டவும். தேவையான அளவு குல்கந்து பூரணத்தை, மாவின் நடுவில் வைத்து, மூடி, மீண்டும் சமமாக கால் அங்குல கனத்துக்கு போளி யாகத் தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு போளியை சேர்த்து, சிறிது நெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.


மைக்ரோவேவ் ஸ்வீட் இட்லி

தேவையானவை: கோதுமை மாவு  - கால் கப், மைதா மாவு - அரை கப், வெல்லம் - ஒரு கப், வாழைப்பழம் - ஒன்று, பால் - கால் கப், தயிர் - கால் கப், எண்ணெய் - கால் கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்  - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

20.jpg

செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சல்லடையில் சலிக்கவும். ஒரு பாத்திரத்தில் பால், தயிர், வெல்லத்தை ஒன்றாகச் சேர்த்து வெல்லம் கரையும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். இத்துடன் எண்ணெய், ஏலக்காய்த்தூள்  மற்றும் வாழைப்பழ விழுது சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். பிறகு, சலித்த மாவுக் கலவையைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

அகலமான மைக்ரோவேவ் தட்டில் எண்ணெய் தடவி, அதன் மீது மைதா மாவு தூவவும். அதன்மேல் கலந்து வைத்த மாவை இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி ஊற்றி, மைக்ரோ வேவ் ஹையில் வைத்து, மாவின் தடிமனைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, சற்று ஆறியதும் தட்டிலிருந்து எடுத்துவிடவும்.  உடனே பரிமாறவும்.


பாலக் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பாலக் கீரை - அரை கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

22.jpg

செய்முறை: பாலக் கீரையை சிறிதளவு தண்ணீரில் வேகவிட்டு, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்க வும். ஓமம், மிளகு, சீரகம் ஆகிய வற்றை கொரகொரப்பாகப் பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் வெண்ணெய், அரைத்த பசலைக் கீரை (தேவைப்பட்டால் தண்ணீர்) சேர்த்து மாவை நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், முறுக்கு அச்சில் மாவைப்போட்டு மிதமான சூட்டில் எண்ணையில் பிழிந்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.


சாமை பட்டர் முறுக்கு

தேவையானவை: சாமை அரிசி மாவு - 1 கப், கடலை மாவு - கால் கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

23.jpg

செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் உலர விட்டு தண்ணீரை வடித்து, துணியில் பரப்பி நன்கு உலரவிட்டு மெஷினில் கொடுத்து அரைத்து ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். தேவையானவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன் றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் சேர்த்து சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.


ராகி முறுக்கு

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - 3 கப், அரிசி மாவு - 2 கப், உளுந்து மாவு - ஒரு கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எள், சீரகம், ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

24.jpg

செய்முறை: உளுந்தை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து மாவாக அரைக்கவும். ராகி மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, எள், ஓமம், சீரகம், பெருங்காயத் தூள், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர்விட்டு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, முறுக்கு அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும்.


புழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு

தேவையானவை: புழுங்கல் அரிசி - 3 கப், கடலை மாவு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க.

25.jpg

செய்முறை:  புழுங்கல் அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, அதனு டன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். இத்துடன்  கடலை மாவு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து பிசையவும். ஒரு கரண்டி சூடான எண்ணெயை மாவின் மேல் ஊற்றி, மீண்டும் நன்றாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கு குழலில் ஒற்றை நட்சத்திர  அச்சைப்போட்டு மாவை உள்வைத்து, எண்ணெயில் வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும் (ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் கவர் மீது பிழிந்து எடுத்தும் எண்ணெயில் சேர்க்கலாம்).


ராகி தட்டை வடை

தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், பொட்டுக்கடலை - கால் கப், பச்சை மிளகாய் - 2, ஓமம் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க.

26.jpg

செய்முறை: பச்சை மிளகாய், ஓமம், சீரகம்,  கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, அரைத்த விழுது, பொட்டுக்கடலை ஆகியவற்றைப் போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  வடை மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை சற்று தடி மனான தட்டைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெய் வடித்துப் பரிமாறவும்.


குதிரைவாலி மசாலா முறுக்கு

தேவையானவை: குதிரைவாலி அரிசி மாவு  - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், புதினா இலை - ஒரு கைப்பிடி, பூண்டு - 3 பல், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க.

27.jpg

செய்முறை: காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், ஓமம், பூண்டு, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத் தில், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண் ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்துக்கு நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவைப் போட்டு, எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


முடக்கத்தான் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கடலை மாவு -  அரை கப், வெண்ணெய் - அரை டீஸ்பூன், ஓமம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், முடக்கத்தான் இலை, புதினா - தலா ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

28.jpg

செய்முறை: முடக் கத்தான், புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமம், மிளகுத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் இலைச் சாறு சேர்த்து (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்), முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


சோயா வடை

தேவையானவை: சோயா விதை - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - அரை டீஸ்பூன்,  கறி வேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

29.jpg

செய்முறை: சோயா விதை களை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, கிரைண்டரில் கெட்டி யான விழுதாக அரைக்கவும் (தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது). அரைத்த மாவுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, முழு மிளகும் சேர்த்து நன்கு அடித்துக் கலந்து உருண்டைகளாக உருட்டி, லேசாகத் தட்டையாக்கி நடுவில் விரலால் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.


ஸ்பைசி டைமண்ட்ஸ்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, சாட் மசாலா பவுடர் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

30.jpg

செய்முறை: கோதுமை மாவுடன் கார்ன் ஃப்ளார், மிளகாய்த்தூள், சீரகத்தூள், ஆம்சூர் பவுடர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை சப்பாத்திகளாகத் தேய்த்து விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் தூவி கலந்து வைக்கவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

55 minutes ago, நவீனன் said:

30 வகை தீபாவளி பலகாரம்!

தீபாவளிக்கு இம்புட்டையுமா மனுஷன் தின்பான் - வயிறு வெடிச்சிடாது?:grin:

ஆமா தீபாவளி சனிக்கிழமையா ஞாயிற்றுக்கிழமையா ?
சடடெண்டு யாராவது சொல்லுங்கப்பா. இஞ்ச காலண்டரில் சனி எண்டு போட்டிருக்குது. புலத்தில் ஞாயிறாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சனி தான் தீபாவளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18.10.2016 at 11:29 PM, ஜீவன் சிவா said:

தீபாவளிக்கு இம்புட்டையுமா மனுஷன் தின்பான் - வயிறு வெடிச்சிடாது?:grin:

ஆமா தீபாவளி சனிக்கிழமையா ஞாயிற்றுக்கிழமையா ?
சடடெண்டு யாராவது சொல்லுங்கப்பா. இஞ்ச காலண்டரில் சனி எண்டு போட்டிருக்குது. புலத்தில் ஞாயிறாமே?

 

எங்கடை தமிழ் கொண்டாட்டங்களெண்டால் வடை பாயாசம் சாம்பார் சோத்தோடை நிண்டிருக்கும்.....இது பெரிய இடத்து சமாச்சாரமெல்லே.......அதுதான் 68 பலகாரம் காட்ட வேண்டிக்கிடக்கு..:grin:

Link to comment
Share on other sites

12 hours ago, ஜீவன் சிவா said:

தீபாவளிக்கு இம்புட்டையுமா மனுஷன் தின்பான் - வயிறு வெடிச்சிடாது?:grin:

ஆமா தீபாவளி சனிக்கிழமையா ஞாயிற்றுக்கிழமையா ?
சடடெண்டு யாராவது சொல்லுங்கப்பா. இஞ்ச காலண்டரில் சனி எண்டு போட்டிருக்குது. புலத்தில் ஞாயிறாமே?

 

இம்புட்டையும் உங்களை சாப்பிட சொல்லவில்லை.. இதில் விரும்பியது 2 அல்லது 3 பலகாரத்தை செய்து சாப்பிடலாம்..:)

சனிக்கிழமைதான் தீபாவளி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.