Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவசேனை : புதிய திசைகள்

Featured Replies


தமிழ் மக்களது நீண்ட கால விடுதலைப் போராட்டத்தில் தமிழ் தலைமைகள் என அறியபட்டவர்கள், நண்பர்கள் எதிரிகளை இனங்காண்பதில் தொடர்ந்து தவறிழைத்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாவே இலங்கையில் ஏனைய மதத்தினரிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்றுவோம் என்ற கோசத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இந்து தீவிரவாதிகளுக்குச் செங்கம்பள வரவேற்பு கொடுக்கும் நிகழ்வும் பார்க்கப்பட வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை விட சில தமிழ் தலைவர்கள் பொது பல சேன போன்ற தீவிர பௌத்த அமைப்புகளுடன் இரகசிய வேலைத் திட்டங்களையும் ஆரம்பிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
 
இந்துத்துவ வெறியை மராட்டியர் மத்தியில் ஊட்டி அதை தென்னிந்தியருக்கு எதிராக அதுவும் குறிப்பாக மும்பாய் தமிழர்களுக்கு எதிரான மராட்டிய இன வெறியாக வெளிப்படுத்தியதுடன்; தென்னிந்தியர்களை மதராசிகள், லுங்கிவாலாக்கள் என்று பரிகசித்து அவர்கள் மேல் பல தாக்குதல்களை மேற்கொண்ட ஒரு இனவாத, மதவாத அமைப்பே ஷிவ் சேனவாகும். இந்தியாவின் பலபகுதிகளில் மதக் கலவரங்களில் நேரடியாகப் பங்கு பற்றிய ஆர்.எஸ்.எஸ், அதன் பினாமியான விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் அனுசரணையுடனேயே இலங்கையில் சிவசேனை அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதனை அதன் ஸ்தாபகர் சச்சிதானந்தம் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகள் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும். இந்தப் புதிய அமைப்பு பலரது கவனத்தை ஈர்த்தமைக்கான முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று. தற்போது வவுனியாவிலும் திருகோணமலையிலும் தமது அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இவ்வமைப்பு 25 மாவட்டங்களிலும் உள்ள இந்துக்களைக் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் நீண்ட காலமாகவே பல தளங்களிலும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழர் பகுதியெங்கும் முளைத்திருக்கும் பௌத்த விகாரைகள் அம்மக்களால் பௌத்த ஆக்கிரமிப்புச் சின்னங்களாகவே பார்க்கப் படுகின்றன; இந்த நிலை தமிழர்கள் மத்தியில் தமது இன, மத அடையாளம் குறித்த அச்ச நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. தமிழ் தேசத்தின் அபிலாஷைகளை ஒட்டி தமது நிகழ்ச்சி நிரலைக் கொண்டிராத கையறு நிலையிலிருக்கும் தமிழ் தலைமைகளின் ஒரு பகுதியினர் இப்போது வசதியாக மதவாதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
பெளத்த மத ஆதிக்கம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதை எந்தக் காலத்திலும் எதிர்க்காதவர்கள்; முஸ்லீம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய தீவிரவாதம் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை என்றும் கண்டிக்கவோ, எதிர்க்கவோ துணியாதவர்கள்; கத்தோலிக்க சபைகளின் ஆதிக்க நாடுகளுடனான உறவுகளையும் சக தமிழ் பேசும் மக்களை நிறுவனமயப்பட்டு மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் கண்டிக்காதவர்கள்; இன்று தமிழ் பேசும் இந்துக்களில் ஒரு பகுதியினர் அன்னிய சக்திகளான ஷிவ் சேன என்னும் இந்து மதவெறி அமைப்பை நாடிச்செல்வதை கண்டிப்பெதென்பது, வெறும் சந்தர்ப்பவாத, சுயநல பண்பு அன்றி வேறொன்றுமல்ல. பெளத்தம்,இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்து அனைத்தினதும் மதவாதம் என்பது பொதுவில் ஒன்றுதான்; அது சமூகத்தை நஞ்சாக்கி,மக்களை வெறியர்களாக்கி ஒருவரையொருவர் எதிரியாக்கும் வேலையையே செய்கிறது.
 
தமிழ் பேசும் மக்கள் மீதோ, தமிழ் மக்கள் மீதோ, தமிழ் தேசத்தின் மீதோ இதில் ஏதாவது ஒன்றின் மீதோ அக்கறை கொள்ளும் சக்திகள் அனைத்துவகை மதவாதங்களையும், மத மேலாதிக்கங்களையும் எதிர்பாவர்களாக மட்டுமே இருக்க முடியும். சமூக அக்கறை என்பது எமக்கு வசதியான, எமக்கேற்ற நேரத்தில் வெளிப்படுவதல்ல. அது சமூகத்தின் மீதான அனைத்து அநியாயங்களின் மீதும் எழுவதாகும்.
 
விஷ்வ இந்து பரிஷத் போன்ற சிவசேனையின் இரட்சகர்கள் தமிழ் தேசிய போராட்ட வரலாற்றில் தமிழர்கள் பக்கம் நின்ற வரலாறே கிடையாது. குறைந்த பட்சம் தமிழர் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்ட போது கூட இவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டியது கிடையாது. சித்தாந்த ரீதியில் இவர்கள் இந்து, பௌத்த, சீக்கிய மற்றும் சமண சமயங்களை (இந்திய) மண்ணின் மதங்களாக ஏற்றுக் கொண்டு ஏனைய மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் மீதே காழ்ப்புணர்வுகளை உமிழ்பவர்கள். அந்த வகையில் சச்சிதானந்தம் வழங்கிய பேட்டிகளில் தவிர்க்க முடியாமல் பௌத்தத்தைச் சற்று சாடியிருந்தாலும் அவரது பிரதான இலக்காக இஸ்லாம், கிறிஸ்தவ மதமாற்றம் குறித்த கோபமே வெளிப்படுகிறது. ஆகவே சிவசேனை அமைப்பு பௌத்த அமைப்புகளுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய மதங்களுக்கு எதிரான இந்திய இந்து தீவிரவாத அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
 
தமிழ் மக்களிடையே இந்து உணர்வைப் புகுத்த முயன்ற முயற்சிகள் முன்னைய நாட்களில் தோல்வி கண்டிருக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல்களில் மதச் சார்பற்ற முறையில் தமது பிரதிநிதிகளைத் தமிழ் மக்கள் தெரிவு செய்த வரலாறுகள் நிறையவே உள்ளன. இந்துத் தீவிர வாதிகள் தமிழ் தேசத்தை வெறும் மதக் குழுக்களாகக் குறுக்கி விடும் திட்டத்துடன் காலூன்ற முனைவது தமிழ் மக்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டிய விடயம்.
 
புதிய திசைகள்
19/10/2016

தமிழரின் சொத்துக்களை அழிப்பவர்களுக்கும், அபகரிப்பவர்களுக்கும், கள்ளக்காணி பிடிப்பவர்களுக்கும், அடுத்தவர் நிலங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை நிறுவும் ------கும்பலுக்கும், மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதத்தின் பேரால் மதவெறி கொண்டு மதமாற்ற திருட்டு வியாபாரம் செய்யும் ------சர்வதேச ---- ஈழத்தில் உதயமான சிவசேனை பாரிய அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

புதிய திசைகள் என்ற பெயரில் இயங்கும் இத்தகைய ------ சர்வதேச ---- அவர்களின் புலம்பல்கள் மூலம் ஈழத்தில் உதயமான சிவசேனை அந்தக் ---- கும்பலுக்கு அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

இந்துக்கள் இந்து உணர்வு பெற்றால் தமிழரின் சொத்துக்களை அழிப்பவர்களுக்கும், அபகரிப்பவர்களுக்கும், கள்ளக்காணி பிடிப்பவர்களுக்கும், அடுத்தவர் நிலங்களில் திருட்டுத்தனமாக சிலைகளை நிறுவும் ------ கும்பலுக்கும், மக்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதத்தின் பேரால் மதவெறி கொண்டு மதமாற்ற திருட்டு வியாபாரம் செய்யும் ------ சர்வதேச ----- ஈழத்தில் உதயமான சிவசேனையால்  அவர்களது ----- செய்ய முடியாமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது,

Edited by நிழலி
கள விதிகளை மீறி எழுதப்படட அவச் சொற்கள் நீக்கம். கள விதிகளை தொடர்ந்து மீறாது கண்ணியமாக கருத்தாடவும்

 

  • தொடங்கியவர்
1 hour ago, போல் said:

புதிய திசைகள் என்ற பெயரில் இயங்கும் இத்தகைய ------ சர்வதேச ---- அவர்களின் புலம்பல்கள் மூலம் ஈழத்தில் உதயமான சிவசேனை அந்தக் ---- கும்பலுக்கு அச்சுறுத்தலாக வந்துள்ளது தெரிகிறது,

Quote

பெளத்த மத ஆதிக்கம் தமிழ் பேசும் அனைத்து மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதை எந்தக் காலத்திலும் எதிர்க்காதவர்கள்; முஸ்லீம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய தீவிரவாதம் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக்கொண்டிருப்பதை என்றும் கண்டிக்கவோ, எதிர்க்கவோ துணியாதவர்கள்; கத்தோலிக்க சபைகளின் ஆதிக்க நாடுகளுடனான உறவுகளையும் சக தமிழ் பேசும் மக்களை நிறுவனமயப்பட்டு மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகளையும் கண்டிக்காதவர்கள்; இன்று தமிழ் பேசும் இந்துக்களில் ஒரு பகுதியினர் அன்னிய சக்திகளான ஷிவ் சேன  என்னும் இந்து மதவெறி அமைப்பை நாடிச்செல்வதை கண்டிப்பெதென்பது, வெறும் சந்தர்ப்பவாத, சுயநல பண்பு அன்றி வேறொன்றுமல்ல.

 

சைவர்கள் (இந்துக்கள்) தமது சமய உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை சைவர்கள் (இந்துக்கள்) ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற பாணியில் எழுதும் "புதிய திசைகள்" விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

பல பொய்களை புனைந்து சைவர்களை / இந்துக்களை எச்சரிக்கும் "புதிய திசைகள்" நிச்சயம் விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

இந்த விஷமிகளுக்கு சில ஊடகவியலாளர் என்று தமக்கு தாமே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஷமப்  பேர்வழிகளின் ஆதரவும் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை!  

 

19 minutes ago, போல் said:

சைவர்கள் (இந்துக்கள்) தமது சமய உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பை சைவர்கள் (இந்துக்கள்) ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற பாணியில் எழுதும் "புதிய திசைகள்" விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

பல பொய்களை புனைந்து சைவர்களை / இந்துக்களை எச்சரிக்கும் "புதிய திசைகள்" நிச்சயம் விஷமிகளின் கூட்டமாகவே தெரிகிறது.

இந்த விஷமிகளுக்கு சில ஊடகவியலாளர் என்று தமக்கு தாமே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஷமப்  பேர்வழிகளின் ஆதரவும் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை!  

 

இது முஸ்லிம்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, Dash said:

 

சிங்களவனோ, முஸ்லிமோ தெற்கின்  தமிழனோ - சிவசேனாவின் வருகைக்கு எந்த அலட்டலும் இல்லை.

வடக்கில் உள்ள சிலர் மட்டும் வரவேற்புத் தெரிவிக்கின்றனர்.  சிவசேனாவின் வருகை நல்லதுதான்.

அரசின் அழைப்பின்பேரில், சிவசேனை வந்திருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள்.

59 minutes ago, Dash said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Alternative said:

தமிழர்கள் நீண்ட காலமாகவே பல தளங்களிலும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர்

தமிழர்களுக்கு சவால்கள் இருக்கு என்று நாங்கள் சொன்னால் உவையள் சொல்லிவினம், இலங்கையர் என்றுதான் நாம் பார்க்க வேண்டும் தமிழர் சிங்களவ்ர் என்று பிரித்து பார்க்க கூடாது என்பார்கள்.

இந்துக்களுக்கு சவால்கள் இருக்கு என்று நாங்கள் சொன்னால் அவையள் தமிழருக்கு சவால் இருக்கு என்பினம்...உலகத்திலயே யாழ்ப்பாணத்தானிடம் தான் பிற்போக்கு தனம் இருக்கு என்று விளக்கங்களும் வியாக்கியாணங்களும் வேற கொடுப்பினம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.