Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம்

Featured Replies

கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம்

 

 

கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்  பகுதியில்  பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளதுடன்  பொலிஸ்  ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.asd2.jpg

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.

இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில்  உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும்  தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.  

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இ

தனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் கலகம்  அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு  நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும்  வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/12745

  • தொடங்கியவர்
கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்
 
 
கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது  இந்தநிலையில்  குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது
 
இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.
1477405394_download.jpg
இதனையடுத்து  பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.
 14874907_786298558175895_406930026_n.jpg
இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.
 
இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
 14874907_786298558175895_406930026_n%20%281%29.jpg
இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.
 14801114_786298561509228_7062127_n.jpg
இதேவேளை  வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
14813597_786286681510416_1635076966_n.jpg
 
14825552_786286648177086_1270869107_n.jpg

 

 

http://onlineuthayan.com/news/19381

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் பெரும் பதற்றம் பொலிஸ் ஒருவர் காயம்

 

 

police-prm-1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்  பகுதியில்  பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளதுடன்  பொலிஸ்  ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.   இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில்  உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும்  தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.
police-prm-2
இந்தநிலையில்  அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் கலகம்  அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு  நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தற்போதும்   அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

police-prm-6police-prm-7police-prm-8police-prm-9police-prm-10police-prm-11police-prm-12police-prm-13police-prm-14police-prm-15

police-prm-3police-prm-4police-prm-5

http://globaltamilnews.net/archives/4587

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

2016 முடிவதற்குள் ஏன் தீர்வு வரவில்லை என்று இனி யாருமே சம், சுங் அவர்களைக் கேள்விகேட்க முடியாது...?

இந்த நிலையைத் தோற்றுவிக்க அடித்தளம் அமைத்தவன் சிறந்த சாணக்கியனாக இருக்கவேண்டும். :(

  • தொடங்கியவர்
ஏ-9 வீதியின் குறுக்காக ஆர்ப்பாட்டம்
 
 

article_1477411407-IMG_0090.JPG

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏ - 9 வீதியின் குறுக்காக டயர்களை எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.  ஏ - 9 வீதியை தடை செய்து, ஒருவர் வாகனங்களை மறித்துள்ளார். அவரை அப்புறப்படுத்த அங்கு வந்த பொலிஸார் ஒருவரை, அந்நபர் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து, அங்கு குழப்பம் ஏற்பட்டு, கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அதிகளவான பொதுமக்கள் கூடியமையால், பதற்றம் ஏற்பட்டது. தாக்கியவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, அங்கு குழப்பம் பெரிதாகியுள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் வெடிக்கும் நிலை அங்கு காணப்படுகின்றது.

article_1477411428-IMG_0053.JPG

article_1477411436-IMG_0054.JPG

article_1477411474-IMG_0055.JPG

 

http://www.tamilmirror.lk/184742/ஏ-வ-த-ய-ன-க-ற-க-க-க-ஆர-ப-ப-ட-டம-

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடாத்தப்பட்ட நாடக மோதல்!!! (Video) Share

கிளிநொச்சியில் இராணுவ புலனாய்வாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடாத்தப்பட்ட நாடக மோதல்!!! மக்களை ஏமாற்ற நடந்த சிறப்புக் காட்சிகள் இதோ !!!!

 

 

 

 முற்று முழுதாக இராணுவத்தரப்பாலும் பொலிஸ் தரப்பாலும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட மோதல் காட்சிகள் இவை!!!

மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு சிங்களவர்களால் நடாத்தப்படும் வானவில் ஆடைத்தொழிற்சாலையைத் திறக்கச் செய்து அதனைக் காரணம் காட்டி  பஸ்கரிப்பில் அத் தொழிற்சாலை இயங்குவதாகக் காட்டி அதைத் தாக்கப் போவதாக வதந்தியை பரவச் செய்து இராணுவ ஒட்டுக் குழுக்களாலும் புலனாய்வாளர்களாலும் அப்பகுதி கலவரப்படுத்தப்பட்டது. இங்கு காட்டப்படும் காட்சிகளில் பொலிசாருக்கு சோடாப் போத்தலால் தாக்க முயல்பவரின் உலக மகா நடிப்பும் பொலிசார் அவனைத் துரத்தி அடிப்பது போல் தடவுவதும் இங்கு வெளிப்படையாக் காட்டப்பட்டுள்ளது.

இங்கு கூடியிருந்த அனைத்து ரவுடிகளும் புலனாய்வாளர்களும் மூக்கு முட்டக் குடித்துவிட்டே காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான சாராயச் செலவு படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனை முழுமையாக வீடியோ எடுத்தது இராணுவப் புலனாய்வாளர்களின் வழி நடத்தலில் செயற்படும் டான் ரீவியும் ஐ.பிசி ஒளிபரப்புச் சேவையுமே ஆகும். அவர்களுக்கே இது முன் கூட்டி தெரிவிக்கப்பட்தும் குறிப்பிடத்தக்கது.

[2016-10-25 10:00:24]

http://newtamils.com/fullview.php?id=29269

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.