Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.!

Featured Replies

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.!

 

my3.jpg

கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப்பட்ட காணிகளே இவ்வாறு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், பலாலி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் 1927 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதாக பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

இதுவரை வடக்கில் 7185 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/12960

  • தொடங்கியவர்

யாழில் வீடுகளை கையளித்த ஜனாதிபதி.! (படங்கள் இணைப்பு)

 

 

கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.

21.jpg

05.jpg

 

18.jpg

 

16.jpg

15.jpg

14.jpg

13.jpg

12.jpg

11.jpg

10.jpg

09.jpg

06.jpg

04.jpg

03.jpg

unnamed.jpg

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

 

19.jpg

 

 

20.jpg

17.jpg

08.jpg

07.jpg

http://www.virakesari.lk/article/12979

  • தொடங்கியவர்



'மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்'
 
 

article_1477924175-01.JPG

“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று(31) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இனங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இறுதியில் மோசமான யுத்தமாக மாறி நாட்டுக்கு மிகப்பெரும் அழிவைக் கொண்டுவந்தன. நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்றார்.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் மரணமடைந்தமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் அல்லது தெற்கில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது எல்லோருடையவும் பொறுப்பாகும் என்றும் கூறினார்.

இதேவேளை, “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பொறுப்பாகும்” என்றும் குறிப்பிட்டார்.

article_1477924308-pm-%285%29.jpg

யுத்த நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி, யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில்  தங்கியிருந்த 971 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ், 100 வீடுகளைக்கொண்ட இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் பங்களிப்புடன் யாழ். பாதுகாப்பு தலைமையலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் ஐந்தாவது பொறியியல் சேவைப் பிரிவினால் இதற்கான தொழிநுட்ப மற்றும் ஆள்வளப் பங்களிப்புகள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் 26 வருடங்கள் அகதி முகாம்களில் தங்கியிருந்த 100 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது. தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இந்த வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு விசேட குறிப்பும் சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

மைலிட்டி பிரதேச பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 454 ஏக்கர் காணிகள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் மாவட்ட செயலாளரிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் டி எம் சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

article_1477924285-pm-%283%29.jpg

http://www.tamilmirror.lk/185074/-ம-ண-ட-ம-ய-த-தம-ஏற-பட-மல-ப-ர-த-த-க-க-ள-வத-அன-வர-னத-ம-ப-ற-ப-ப-க-ம-

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இராணுவக் குடியிருப்புத் திட்டமா.. அல்லது சிவில் திட்டமா...??! சொறீலங்கா என்ன இராணுவ ஆட்சி நடக்கும் நாடா.

வடக்கு என்று வந்தால்.. மைத்திரியை இராணுவம் தான் கட்டுப்படுத்துது போல. :rolleyes:

உதென்ன வீடா இல்ல புறாக் கூடா..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் தான் ... அதே நேரம் இவர்களால் அழிக்கப்பட்ட வீடுகளுக்கும் சொத்துக்களுக்கு இது ஈடாகுமா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றது.....எதோ நல்லது நட்ந்தால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

'மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்'

எனி யுத்தம் ஏற்பட்டால் அழிவது சிங்கள தேசமாக மட்டுமே இருக்கும். அந்தளவுக்கு சிங்கள ஆக்கிரமிப்பு வியாபித்து வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இதென்ன இராணுவக் குடியிருப்புத் திட்டமா.. அல்லது சிவில் திட்டமா...??! சொறீலங்கா என்ன இராணுவ ஆட்சி நடக்கும் நாடா.

வடக்கு என்று வந்தால்.. மைத்திரியை இராணுவம் தான் கட்டுப்படுத்துது போல. :rolleyes:

உதென்ன வீடா இல்ல புறாக் கூடா..??! :rolleyes:

1978 ஆம் ஆண்டளவில் ஜெஆரும்,பிரேமதாசாவும்...இதே கீரிமலையில் வீடுகளை கட்டி கொடுத்தார்கள்....கீரிமலையில் அப்படி என்ன அர்சியல் முக்கியத்துவம் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

1978 ஆம் ஆண்டளவில் ஜெஆரும்,பிரேமதாசாவும்...இதே கீரிமலையில் வீடுகளை கட்டி கொடுத்தார்கள்....கீரிமலையில் அப்படி என்ன அர்சியல் முக்கியத்துவம் இருக்கு...

கீரிமலை ஆழ்கடல் பகுதி. வடக்கை முற்றுகைக்குள் வைக்கனுன்னா.. உந்த ஆழ்கடல் ஆதிக்கம் சிங்களவனுக்கு மிக அவசியம். உதை பறிகொடுத்திட்டு.. பலாலிக்கும் வர முடியாமல்.. காங்கேசந்துறைக்கும் போக முடியாமல்.. தவிச்ச தவிப்பு அவங்களுக்குத் தான் தெரியும். சிங்களவனின் இன்றை எல்லாம் நகர்வுகளும்.. எதிர்காலத்தில் தமிழர்கள்.. இராணுவ ரீதியில் பிரச்சனைகளை கையில் எடுக்கக் கூடாது என்ற வகைக்கு மிகத் திட்டமிட்டு நகர்த்தப்படுகிறது.

எங்கடையள.. பிச்சைப் பாத்திரம் ஏந்தச் செய்து.. அதில் கிள்ளிப் போடுவதை அரசியலாக்கி.. சிங்களவன் தன்ர அரசியலை எல்லா வகையிலும் மிக கவனமாக திட்டமிட்டு நகர்த்திக் கொண்டு போறான்.

போர்க்குற்றமும் இல்லை.. இனப்படுகொலையும் இல்லை.. நில ஆக்கிரமிப்பும் இல்லை. படை விலகல் கோரிக்கையும் இல்லை. இப்ப இருப்பது.. ஒன்னே ஒன்னு தான்.. சிங்களவனுக்கு ஏற்ற வகையில் வாழத் தெரிந்து கொள்வது. 

இது தான் எம்மவர்கள் எம் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சாணக்கிய அரசியலின் விளைவு. :104_point_left:tw_angry:

யாழ்  குடா நாட்டை தூண்டாடனுன்னா.. நாவற்குழி அவசியம். அங்கு ஒரு சிங்கள வீட்டுத்திட்டம். ஜே ஆர் அப்பவே ஆரம்பிச்சுட்டான்.

வடக்குக் கடலை துண்டானுன்னா.. கீரிமலை அவசியம். அங்கும் ஒரு சிங்கள... வீடமைப்பு.. குடியேற்றம்.. எல்லாம் வந்தாச்சு. :104_point_left:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.