Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம்

Featured Replies

யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம்
 
 
யாழ்.நல்லூர் பகுதியில் வாள்களுடன் நடமாடும் இளைஞர்களால் அச்சம்
யாழ். நல்லூரில் சமீபநாட்களாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் இரவுவேளைகளில்   நடமாடி திரிவதை அவதானிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
அண்மைக்காலங்களாக வாள்வெட்டுச்  சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள நிலையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடி வருகின்றனர்.
 
இவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றமையால் அத்தியாவசிய தேவைக்காக கூட தமது பிள்ளைகளை வெளியில் அனுமதி ப்பதில்லை என அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார். 
 
பெருமளவில்  இராணுவம், பொலிஸார்,விசேடஅதிரடிப்படையினர்,பொலிஸ் புலனாய்வாளர்கள், இராணுவபுலனாய்வாளர்கள் பெரு மளவில் கடமையில் இருந்தும் துணிகரமாய் வாள் வெட்டுகும்பல்கள் சுதந்திரமாக  உலாவுவது எப்படி எனவும் மக்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.

http://onlineuthayan.com/news/19590

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவில்  இராணுவம், பொலிஸார்,விசேடஅதிரடிப்படையினர்,பொலிஸ் புலனாய்வாளர்கள், இராணுவபுலனாய்வாளர்கள் பெரு மளவில் கடமையில் இருப்பது சிங்களரே, இவர்கள் இருப்பதாதல்தான், துணிகரமாய் வாள் வெட்டுகும்பல்கள் சுதந்திரமாக  உலாவுகின்றது. அவர்கள் இல்லையென்றால் இவர்களும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவனிக்க கவனிக்கவேண்டியது என்னவெனில் இரு பல்கலைக்க்கழக மாணவர்களது கொலைக்குப் பின்பு, இப்படியான  பிரச்சனை அதிலமாகிவிட்டது அதாவது யாழ் குடாநாட்டின் பொறுக்கிகள் வீட்டில் வெந்ததைத் திண்டு விட்டு வீட்டுக்காவது உதவியாக ஒருக்காது ஆயுதங்கள் தூக்கிய பலன் சிங்களப் புலனாய்வை  குடாநாட்டில் மேலதிகமாக இறக்கிவிட்டு ரவுடிகளை இல்லாதொழிக்கிறோம் எனும்பெயரில்  அப்பாவிகள் இரையாக்கப்படப்போகிறார்கள்

அதற்கான முன்னெடுப்பே யாழ் குடாநாட்டின் வன்முறைகும்பல் எனும் பெயரில் புலநாய்வாளர்கள் ஆயுதங்களுடன் களம் இறங்கியுள்ளது.

இதற்கான பொறுப்பை தறுதலைகளது பெற்றோரும் குடாநாட்டின் சாராய வியாபரிகளும்  குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள நிதிநிறுவனங்களும் உதயன் உட்பட்ட வெகுஜனத்தொடர்புடாதனங்களும் யாழ் குடாநாட்டின் பிரபல பாடசாலை நிர்வாகங்களுமே ஏற்றுகொள்ளவேண்டும்

யாழின் இணுவில் பகுதியைச் சேர்ந்தவரை தலைமையாகக் கொண்டியங்கும் சன்னா குழுவில் தீவிர செயற்ப்பாட்டாளர்கள் எடுபிடிகள் உட்பட கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்டோர் யாழில் பிரபல பாடசாலையைச் சேர்ந்தவர்கள்

அதில் அங்கம்வகிக்கும் ஒருவர் யாழ்குடாநாடு முழுவதும் மாவா எனும் போதைப்பாக்கு வினியோகஸ்தர்

இன்னமும் தகவல்கள் நிறைய இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழைவெட்டுக்கு ...... ஐயர் மார் யாரும் வாழ் கொண்டு போயிருப்பார்கள்......
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ...........
அந்த மாதிரி யாராவது பயந்து இருக்கலாம். 

 

அல்லது ஆவா .... பூவா போன்றவர்கள் 
ஆயுத பூஜைக்கு நல்லூருக்கு எடுத்து வந்தார்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக இங்கு கருத்தெழுதுபவர்கள் இப்படியான விடையங்களையிட்டு கருத்தெழுதும்போது கொஞ்சம் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் இதில் கிண்டலாகக் குறிப்ப்பிட எதுவுமில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாய்ச் சொன்னீர்கள் எழுஞாயிறு இங்கே இருப்பவர்கள் அந்த வாள் வெட்டு குழுவை எல்லாம் ஒரு விளையாட்டாக நினைச்சிருக்கினம்...அது எங்கட இனத்தையே அழிக்க போகுது என்று அவர்களுக்கு தெரியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.