Jump to content

ஈழ விடுதலைப் போரில் தனது ஒரு காலை இழந்த யாழ்ப்பாண இளைஞனின் அசத்தல் நடனம்...இலங்கை நாட்டு சிங்கள தொலைக்காட்சியில்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
46 நிமிடத்திலிருந்து பாருங்கள்....
 

 

சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் 
இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.


என் கால் நடமாடுமையா
உன் கட்டளைகள் வெல்லும்வரையும்..
நீ உண்டு உண்டு என்ற போதும்
இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது
நிற்காது ஒரு போதும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, விசுகு said:
 
 
 
46 நிமிடத்திலிருந்து பாருங்கள்....
 

 

சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் 
இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.


என் கால் நடமாடுமையா
உன் கட்டளைகள் வெல்லும்வரையும்..
நீ உண்டு உண்டு என்ற போதும்
இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது
நிற்காது ஒரு போதும்...

விசுகு அவர்களே இணைப்புக்கு நன்றி.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

 

விசுகு அவர்களே இணைப்புக்கு நன்றி.   

 

நன்றி  சகோதரா

எனக்கு இணைப்பு கிடைக்கல (வரல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி, விசுகு &  நொச்சி.

Link to comment
Share on other sites

22 hours ago, விசுகு said:
 
46 நிமிடத்திலிருந்து பாருங்கள்....

சிங்கள தேசத்தின் தொலைக்காட்சியிலும் 
இந்த பாட்டை தெரிவு செய்து பாடும் இவனது பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.

என் கால் நடமாடுமையா
உன் கட்டளைகள் வெல்லும்வரையும்..
நீ உண்டு உண்டு என்ற போதும்
இல்லை என்ற போதும் சபை ஆடிய பாதமிது
நிற்காது ஒரு போதும்...

இணைப்புக்கு நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் பின்போ அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊமைகளாக உள்ளோம். அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன். 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம். நாங்கள் அங்கு சென்றடைந்த போது இரவு 8 மணி இருக்கும். அங்கே நிறைய அக்காக்கள் பெரிய மண்டபத்தில் (hall) எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய கணக்கேடுகளில் பச்சைநிற எழுதுகோலை வைத்துக்கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள். (அப்ப எங்களுக்கு பெரிய பெரிய புத்தகங்கள் காசேடு, பேரேடு என்றும் பச்சைப் பேனையால கணக்காய்வு செய்யினம் என்றும் தெரியாது). அப்போது ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் இரவு ஆயிட்டுது அந்த அறையில் கொண்டு போய் உங்கட பைகளை (bags) வைச்சிட்டு வந்து முகம், கைகால கழுவிப்போட்டு வந்து சாப்பிட்டிட்டு படுங்கோ”என்றார். எங்களுக்கும் வந்த புதுசு தானே நல்ல பிள்ளைகளாக போய் சாப்பிட்டு விட்டு வந்து பயணம் செய்து வந்த களைப்பில் தூங்கி விட்டோம். அடுத்த நாள் காலை 4.30 மணியளவில் ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் எழும்பி போய் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணத்துக்கு வாங்கோ” என்றார். நாங்களும் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டு வந்தோம். நாங்கள் வந்த புதிது என்றபடியால் எங்கள் ஐவரையும் அன்று மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதி எல்லோரும் ஓட்டப் பயிற்சிக்கு சென்று விட்டு வந்தார்கள். மக்கள் குடியிருப்புக்குள் எங்கள் முகாம் இருந்தபடியால் விடிவதற்கு முன் ஓட்டப் பயிற்சியை முடித்து விட்டு வர வேண்டும். நாங்கள் ஐவரும் குளித்து சீருடை அணிந்து வரவேற்பறையில் வந்து இருந்தோம். ஒவ்வொரு அக்காமாரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனார்கள். அப்போது உயர்ந்த மெல்லிய வெள்ளை நிற கம்பீரமான தலையை இரண்டாக பின்னி வளைத்து கட்டிய, வெள்ளை நிற மேற்சட்டையும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் இடுப்பில் கறுப்பு நிற பட்டியும் அணிந்த படி ஒரு உருவம் எங்களிடம் வந்து தனது பெயர் பூம்பாவை என்று அறிமுகம் செய்தது. பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகான கம்பீரமான எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற தோற்றம் பூம்பாவை அக்கா. அறிமுகப்படலத்தின் போது சொந்த ஊரை விசாரித்த போது நானும் அவாவும் ஒரே ஊர். என்னை தனது ஊர்க்காரி என்று தான் அழைப்பார். இப்படித் தான் எனக்கும் பூம்பாவை அக்காவுக்குமான உறவு ஆரம்பித்தது. தெல்லிப்பளை,யாழ்ப்பாணம் பூம்பாவை அக்கா யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பகுதியிலுள்ள தெல்லிப்பளை எனும் ஊரில் திரு.திருமதி சண்முகலிங்கம் இணையருக்கு மகளாக ஜெயசக்தி எனும் இயற்பெயருடன் 01.11.1971 அன்று பிறந்தார். அவர் சிறு அகவை முதல் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் முதன்மை நிலை வகித்தார். மேலும் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் போன்றவற்றிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். 1990 – 1991 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைத்தும் தாய் நாட்டின் மீதும் மக்களின் மீதும் தலைவர் மீதும் இருந்த பற்றின் காரணமாக பல்கலைக்கழகக் கல்வி பயிலும் வாய்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு எமது போராட்டத்தில் 1992 இல் இணைந்தார். முதலில் அரசியற்துறையில் இருந்து பின்பு 1993 ஆம் ஆண்டில் நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு வந்தார். அங்கு தான் அவரின் ஆற்றலும் ஆளுமையும் திறமையும் வெளிப்பட்டது. எமது நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் மிகப் பெரிய ஆளுமையாக அவர் இருந்தார். ஆரம்ப காலத்தில் அவர் சேரன் வாணிபத்தின் எழிலகம், புடவை வாணிபங்களில் கணக்காய்வை மேற்கொண்டார். பின்பு அவரின் திறமை கண்டறியப்பட்டு நீண்டகாலம் கடைசி வரை நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராகத் திறம்படச் செயற்பட்டார். வன்னியில் குப்பி விளக்கின் உதவியுடன் தரையில் பாய் விரித்து அதில் வாணிபங்களின் ஆவணங்களை எல்லாம் விரித்து வைத்தபடி இரவிரவாக உறக்கமில்லாமல் கணக்காய்வு செய்வார். வேலை என்று வந்துவிட்டால் அவருக்கு உணவு, தண்ணீர், உறக்கம் எல்லாம் மறந்தேபோகும். வேலையை முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவிற் கொண்டு செயற்படுவார். (அப்போது வன்னியில் மிகவும் கடினமான போராட்ட சூழல் நிலவிய காரணத்தினால் முகாம்களில் வசதியான முறையில் பணிபுரிய முடிவதில்லை. ஏதோ கிடைத்த வளங்களைக் கொண்டு தான் நிறைவான முறையில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்). அந்தக் காலப்பகுதியில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு போராளி பத்து பணியாளர்கள் புரியும் வேலையை தனி ஒருவராக நின்று பணிபுரியும் அளவிற்கு எமது அமைப்பினால் கற்கைநெறிக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு, புடம் போடப்பட்டனர். அந்த வகையில் பூம்பாவை அக்காவும் தனது கணக்காய்வுப் பணியினை கூடுதல் பணிச்சுமைக்கு நடுவிலும் தனது பணியினை திறம்பட அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார். நிறுவனங்களில் கணக்காய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதே வேளை தேவையான போது கண்டிப்பாகவும் மிகவும் ஆளுமையுடனும் செயற்படுவார். பூம்பாவை அக்கா இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்புக்கு குறைவிருக்காது. எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். முன்னர் அவர் அரசியற்துறையில் இருந்தபோது யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து மரக்கறிகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று திண்ணைவேலிச் சந்தையில விற்ற கதையை மிகவும் நகைச்சுவையாக அடிக்கடி சொல்லுவார். பின்னரும் அந்த நினைப்பில எங்கட முகாமில் இருந்த மொழி அக்காவின் தலைப் பின்னலை பிடித்து மாட்டுவண்டி ஓட்டி அவாவிடம் முறைப்பையும் திட்டையும் பரிசாக வாங்குவார். ஏதாவது வேலை செய்து களைப்படைந்து விட்டார் என்றால் அவரின் வாயில் இருந்து “அப்பனே முருகா! பழம் பிள்ளையாரே! வைரவக் கிழவா!” என்ற சொல் தான் அடிக்கடி வரும். தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் அவருக்கு எவ்வளவு பற்று, நம்பிக்கை இருந்ததோ அதற்கு அடுத்த படியாக கடவுள் மீதும் பற்று அதிகம். கந்தசஷ்டி விரதத்தை தன்னால் இயன்றளவு தொடர்ந்து பிடித்து வந்தார். அதே போல மாவீரர் நாள், திலீபன் அண்ணா நினைவு நாள் போன்றவற்றிற்கும் அன்று பகல் முழுவதும் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து இரவு மட்டும் உணவு உண்ணுவார். நாங்கள் சில பேர் மட்டும் பசி தாங்க முடியாமல் “திலீபன் அண்ணைக்கு எங்களுக்குப் பசிக்கும் என்று தெரியும் தானே கோவிக்க மாட்டார். வாங்கோ அக்கா வெளியில போய் களவாக சாப்பிட்டு வருவோம்” என்று கூப்பிட்டால், எல்லாக் குழப்படிகளுக்கும் களவுகளுக்கும் எங்களோட சேர்ந்து வருபவர் இதற்கு மட்டும் வரமாட்டார். பொதுவாக திலீபன் அண்ணா நினைவு இறுதி நாளில் எங்கள் முகாமில் உணவு சமையல் பகுதியிலிருந்து எடுப்பதில்லை. எல்லோரும் விரதமாக இருந்து இரவு உணவை சைவ உணவாக சமைத்து உண்ணுவோம். பூம்பாவை அக்கா விதவிதமாக சுவையாக சமைப்பதிலும் படு விண்ணி. நாங்கள் கொஞ்ச பேர் 1995ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்க ஆரம்பித்த புதிதில் போராட்டத்தில் இணைந்த காரணத்தினால், எங்களின் பணித்தேவை காரணமாக (கணக்காய்வுப் பகுதியில் போராளிகளாக இருந்த அனைவரும் பல்கலைக் கழகத்திலோ அல்லது உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலோ கல்வி கற்றவர்களாக இருந்தார்கள்) க.பொ.த உயர்தரம் படித்து சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு எமது அமைப்பினால் பணிக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு பாடங்களில் ஏற்படும் தெளிவின்மைகளைத் தீர்ப்பதற்கு பூம்பாவை அக்கா பெரிதும் உதவி செய்வார். கணக்கியலில் அவர் ஒரு புலி. எந்தக் கடினமான கணக்கு என்றாலும் மிகவும் இலகுவான முறையில் எங்களின் மரமண்டைகளுக்குப் புரியவைத்து விடுவார். மற்ற நேரங்களில் மிகவும் இயல்பாக எங்களில் ஒருவராக அகவை வேறுபாடு பாராது பழகும் அவர் படிப்பு, வேலை என்று வந்து விட்டால் மிகவும் கண்டிப்பு நிறைந்த பெண்ணாக மாறி விடுவார். அவரிடம் பல மொக்கை கேள்விகள் கேட்டும் குரங்கு சேட்டைகள் புரிந்தும் மண்டையில் குட்டு வாங்கிய பெருமை என்னையே சாரும். கல்வி மற்றும் பணி தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக இருக்கும் அவர், மற்றைய நேரங்களில், நாங்கள் வேலிப் பொட்டுக்குள்ளால புகுந்து போய் கச்சான் விற்கும் ஆச்சியிடம் கச்சானும், குளிர்களி விற்கும் அண்ணையிடம் குளிர்களியும் ஒருவாறு தண்டல் தண்டி வாங்கி வந்து சாப்பிடும் போது “கழுகுக்கு மூக்கில வேர்த்தது போல” சரியான நேரத்துக்கு என்னை விட்டிட்டுச் சாப்பிடுறீங்களோடி …என்றபடி பங்கு கேட்க வந்துவிடுவார். ஒரு போராளி எந்நேரமும் களத்திற்கு செல்வதற்கு அணித்தமாக இருக்கும் வகையில், வெளிநிருவாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எம் தேசியத் தலைவனின் அவா. அவ்வாறே வெளிநிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் போராளிகள் தேவைப்படும் போது கடும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு. அந்த வகையில் பூம்பாவை அக்காவும் 1997 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது பிரிவிலிருந்து படையறிவியற் கல்லூரியில் அதிகாரிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார். அங்கு திறம்பட செயற்பட்டு ஒரு போர் அதிகாரிக்குரிய தகுதியோடு முகாம் திரும்பினார். வெளிப்பணிகளில் மட்டுமல்ல சண்டைக்களங்களிலும் பூம்பாவை அக்கா திறம்பட செயற்பட்டார். அவரின் பணித் தேவையின் முதன்மை கருதி இயக்கம் சண்டைக்கு விடாத போதும் வலுக்கட்டாயமாக பொறுப்பாளருடன் சண்டை பிடித்து இரண்டு தடவைகள் சண்டைக்களத்திற்குச் சென்றார். 1999ஆம் ஆண்டு நெடுங்கேணிப் பகுதியில் உள்ள போர் முன்னரங்கப் பகுதிக்கு சோதியா படையணியுடன் இணைந்து ஒரு படைப் பிரிவுக்கு (platoon) அணிக்குத் தலைவியாக சென்று ஆறு மாதங்கள் திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். பின்பு 2000 ஓயாத அலைகள்-4 இற்கும் ஒரு அணிக்கு தலைவியாகச் சென்று திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். அவர் திருமண அகவையை அடைந்ததும், 2001 ஆம் ஆண்டு தலைவரின் கட்டளைக்கு ஏற்ப ஒரு போராளியை இணையேற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பின்பும் குழந்தைகளை தளிரில் விட்டு விட்டு (திருமணமான பெண்போராளிகள் தடையின்றி பணிகளைச் செய்வதற்கு இலகுவாக அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு தலைவரால் உருவாக்கப்பட்ட காப்பகம் தான் தளிர்) நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராக கடைசி வரை திறம்படச் செயற்பட்டார். பின்பு 2009 இல் எமது போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணப் பொறுக்காமல் சிறிலங்கா அரசும் ஏனைய உலக வல்லாதிக்கங்களும் ஒன்று சேர்ந்து எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு திட்டம் போட்டு காய் நகர்த்தி எம்மையும் எமது மக்களையும் முள்ளிவாய்க்காலிலே ஒரு சிறிய வட்டத்திலே அடைத்தன. அப்போது பூம்பாவை அக்காவின் கணவர் 2009 பங்குனி மாதம் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பின்பு பூம்பாவை அக்கா இரண்டு சிறு குழந்தைகளோடும் வயோதிபத்தாயோடும் மிகவும் சிரமங்களுக்கு நடுவில் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்தார். இறுதியில் வைகாசி மாதத்தில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் இரண்டு பெண்குழந்தைகளும் தாயும் இன்றி தந்தையும் இன்றி வயதான அம்மம்மாவின் அரவணைப்பிலும் பூம்பாவை அக்காவின் சகோதரனின் அரவணைப்பிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி நாட்டுக்காக தங்களையே அர்பணித்த பல மாவீரர்களின் அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவைப் பற்றி கூற இன்னும் மலையளவு விடயங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவே உங்கள் கனவு ஈடேறும் என்றும், எல்லா மானமாவீரர்களின் கனவும் ஈடேறும் என்றும் நினைவிலிருத்திக் கொண்டு உங்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம். என்றும் உங்கள் மீளா நினைவுகளுடன்…. நிலாதமிழ்   https://eelamhouse.com/?p=1913
    • புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு மூத்த பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்….இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்….பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்”என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா அணியில் கணக்காய்வு பணி பேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம். புகழினிக்கு “பேணி”தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை….ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இழுப்பறைக்கு (இலாச்சி) மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இழுப்பறைகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இழுப்பறையில் (இலாச்சி) வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இழுப்பறையைக் (இலாச்சி)கழட்டிப் போட்டு கீழ் இழுப்பறையில் (இலாச்சி) உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்…நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரி முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானதுனது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா”என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே”உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில “அம்மாவாணை “என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே “அண்ணையாணை “என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம் ” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே”என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் “என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே…. உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டுஉயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை “அரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். – நிலாதமிழ்.   https://eelamhouse.com/?p=1910
    • தமிழ்நாடு, தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் ஒரு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் போராடி வீரச்சாவடைந்த மாவீரன் லெப்ரினட் போசனின் கல்லறை இருப்பது என்ற செய்தி பலரை ஆச்சிரியப்படுத்தியுள்ளது. அந்த நினைவிடத்தைக் கண்டறிந்த இயக்குநர் மு.களஞ்சியம் வருகிற 27.11.2018 மாவீர நாளில் நிகழ்ச்சியை அவ்விடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்கிறார். லெப்டினன்ட் போசன் என்பவர் யார்? அவர் நினைவிடத்தை எப்படி கண்டறிந்தனர் என்று கேட்கும் போது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் தமிழ்த்தேசிய அரசியல் வழியாக உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் தமிழர் தமிழீழம் என்ற இலட்சியப் பதாகையை ஏந்தி மக்கள் களத்தில் பணியாற்றி வருகிற ஒரு தலைவர்.   தஞ்சாவூர் வடக்கு வாசல் என்ற இடத்தில் நீண்டகாலமாக இருக்கும் இடுகாட்டின் பெயர் “நாத்திகர் இடுகாடு” இந்த இடுகாட்டில் பட்டுக்கோட்டை அழகரி உள்ளிட்ட பலரின் கல்லறை உள்ளது. பல கல்லறைகளின் கல்வெட்டில் ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா அவர்கள் பல கல்வெட்டுகளை அவர் காலத்தில் திறந்துள்ளார் என்பது அக்கல்லறையை பார்க்கும் போது நமக்குத் தெரிகிறது. அந்த கல்லறையில்தான் மாவீரர் போசன் கல்லறையும் உள்ளது. ஆனால் பாரமரிப்பின்றி அடர்ந்த புதராக அக்கல்லறை காட்சியளிக்கிறது. வடக்குவாசலைச் சேர்ந்த ஒருவர் காலை நேரம் வழக்கம் போல் அந்த கல்லறையின் அருகில் மலம் கழிக்கச் சென்றுள்ளார். அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மலம் கழிக்கையில் காற்றின் அசையில் முட்புதர் செடிகளுக்கிடையே “ விடுதலைப் புலி என்ற வாசகம் பொறித்த கல்வெட்டை கவனித்துள்ளார். உடனே முட்செடிகளை அகற்றி படித்துள்ளார். அதில், ”தமிழீழ விடுதலைப் புலி போசன் நினைவு கல்வெட்டு. மறைவு-27-06-1989 திறப்பாளர் : தமிழினக் காவலர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.பி.எல் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்) நகர திராவிடர் கழகம்.தஞ்சாவூர்.” என்றிருந்துள்ளது. அதை அவர் கண்டதும். அந்த ஊரில் வசிக்கும் தமிழர் நலப்பேரியக்கத் தோழர் ஒருவரிடம் மேற்கண்ட விடயங்களை விவரித்துள்ளார். இச்செய்தி அவருக்கு புதிதாக இருந்துள்ளது. உடனே தமிழர் நலப் பேரியக்கத்தோழர் இயக்குநர் மு. களஞ்சியத்திற்கு இதுபோன்ற ஒரு கல்லறை இருக்கும் செய்தியை சொன்னதும், மு. களஞ்சியம் அவர்கள் விமானம் பிடித்து உடனடியாக தஞ்சைக்கு விரைந்துள்ளார். தமது இயக்கத்தோழர் தெரிவித்த அந்த நாத்திகச் இடுகாட்டிற்குச் சென்று அங்குள்ள மாவீரர் போசன் கல்லறையைக் கண்டறிந்து வியப்படைந்துள்ளார். அந்த நிமிடமே களத்தில் இறங்கி மலக் கழிப்பிடமாக; பராமரிப்பின்றி கிடந்த போசன் கல்லறையை தானே இறங்கி சுத்தப்படுத்தி இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வை போசன் துயிலுமில்லத்தில் தொடங்குவதாக அறிவித்தார். யார் இந்த லெப்டினன்ட் போசன்? இயக்கப் பெயர்: போசன் இயற்பெயர்: பஞ்சலிங்கம் சிவகுமாரன் சொந்த ஊர்: கோவிலடி, முகத்துவாரம், மட்டக்களப்பு. வீரப்பிறப்பு 26.11.1963 வீரச்சாவு: 27.06.1989 தமிழீழத்திலே பிறந்து, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இலட்சிய வழியிலே நின்று, சிங்கள இனவெறி இராணுவத்தை ஓட ஓட விரட்டியடித்தவர்களில் முதன்மையார், இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறும் காலகட்டத்தின் தமது அறச்சீற்றத்தை வெளிக் கொணர்ந்து இந்திய சிங்கள இராணுவத்தினரை நேர்நின்று மோதியவர். அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தஞ்சமைடைந்து போரில் காயமுற்றிருந்த அவர் தொடர் மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய உளவுத்துறையில் மோப்பம் போசனை இருக்குமிடமறிந்து தமிழக காவல் துறையின் துணையோடு அவரை கைது செய்ய ஏற்பாடுகள் நடந்தேறியுள்ளது. இதை அறிந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் எதிரிகளின் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தன் கழுத்திலேயே அணிந்திருந்த சாவுச் குப்பியை (சயனைட் குப்பி) கடித்து சாவைத் தழுவியுள்ளார். நாம் போற்றத்தக்க தமிழீழ மாவீரனுக்குத்தான் அக்காலகட்டத்தில் திராவிட கழகத்தினரால் அக்கல்லறை அங்கே எழுப்பப்பட்டுள்ளது. கிட்டத்த 29 ஆண்டுகளாக தஞ்சை மண்ணிலே மாவீரர் போசன் விதையாக உறங்குகிறார். இத்தனை ஆண்டு காலம் இப்படி ஒரு கல்லறை இருக்குமென்று யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு கல்லறை இருந்தும் அதை யாரும் தொடர்ந்து போற்றி பாதுகாக்க வில்லை எனும் போது வருத்தமளிக்கிறது. 1989 இல் விதையாக விழுந்த லெப்டினன்ட் போசன் அவர்கள் 2018 மாவீர நாளில் மீண்டும் நம் இலட்சியக் கனவை தட்டியெழுப்ப நான் தஞ்சையில்தான் இருக்கிறேன் என்று நம்மை அழைத்துள்ளார். இயக்குநர் மு. களஞ்சியம் வழியாக! வருகிற 27.11.2018 அன்று சிறப்பாக நடக்கவுள்ள இம்மாவீர நிகழ்வுக்கு வழக்கும் போல் தமிழக காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. காரணம் ”மாவீரர் கல்லறையா? தஞ்சையிலா?…” என்று காவல்துறை, உளவுத்துறை விழித்துக் கொண்டது. அவர்களின் முதல் நோக்கம், இந்த நிகழ்வை நடக்க விடக் கூடாது தடுத்து விட வேண்டும். இரண்டாவது நோக்கம், இந்த கல்லறையை அழித்து மறைத்து விட வேண்டும். ”அனுமதித்தால் அமைதியாக நடக்கும். அனுமதி மறுத்தால் கலவரத்தோடு நடக்கும்” என்று இயக்குநர் மு. களஞ்சியம் காவல்துறையிடம் பேசியுள்ளார். 27.11.2018 தஞ்சையில் இல் சீமான் (நாம் தமிழர் கட்சி) பழ.நெடுமாறன்( தமிழர் தேசிய இயக்கம்) உள்ளிட்டோர் நிகழ்ச்சி நடக்க இருப்பதால் 26.11.2018 அன்று பல்வேறு நிபந்தனைகளோட்டு அனுமதி தந்துள்ளது தமிழக காவல்துறை. கர்த்தர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது போல் 29 ஆண்டுகளுக்குப் பிறகு மாவீரர் போசன் மீண்டும் நம் கண்முன் தெரிகிறார்! வரலாறுகள் புதைக்கப்பட்டாலும்! மறைக்கமுடியாது என்பது போசன் கல்லறை நமக்கு உணர்த்திய படிப்பினையாகும்.     https://eelamhouse.com/?p=1867
    • பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம். நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் சூட்டாளன், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம். மேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 120mm மோட்டார் வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள்.   https://eelamhouse.com/?p=1771
    • எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாகவும் பண்பாளர்களாகவும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசிரியப் பணியைத் துறந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.பெற்றோரது சிறந்த ஊக்குவிப்பு,அர்ப்பணிப்பு போன்றன வீண் போகவில்லை.அவர்களது ஒரு புதல்வனும் இரு புதல்விகளும் வைத்தியர்களாகவும் மற்றைய புதல்வி வங்கித் துறையிலும் சீரான முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று சித்தியடைந்து பணிபுரிந்தார்கள்.அந்த வகையில் கடைக்குட்டியான ஞானகணேசனும் சிறு வயது முதல் கல்வியை யாழில் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ்.பரியோவான் கல்லூரியில் (st.johns college) கல்வி பயின்று வந்தான். அவன் சிறு வயது முதல் படிப்புடன் விளையாட்டு,பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டிகள், பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். பூப்பந்து(badminton), கூடைப்பந்து (basket ball),கைப்பந்து (volley ball) போன்ற விளையாட்டுக்களில் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் தனது பாடசாலை சார்பாக விளையாடி சிறப்பாகச் செயற்பட்டு colors சிறப்பு விருது பெற்று அவனது பாடசாலைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தான்.மற்றும் பாடசாலை மாணவர் அணித் தலைவனாகவும் (prefect)சிறப்பாகச் செயற்பட்டான்.மேலும் சாரணர் இயக்கத்திலும்(scout) இணைந்து சிறந்த சாரணனாகவும் செயற்பட்டான்.அவன் படிப்பிலும் குறை வைக்கவில்லை.ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும் அதி திறமைச் சித்தி பெற்று சித்தியடைந்தான். மற்றும் க.பொ.த சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.சட்டத்துறை சார்ந்து உயர் படிப்பு படிப்பதே அவனது கல்வி இலட்சியமாக இருந்தது. தமிழீழத்திற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தின் உண்மைத் தன்மை,அவர்களது அர்ப்பணிப்பு,தியாகம்,ஒழுக்கமான வாழ்க்கை முறை என்பன ஞானகணேஷனுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அதனால் அதன்பால் ஈர்க்கப்பட்டு அவனும் 2005 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் எமது அமைப்பில் அரசியல்துறையினரிடம் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வன்னிப் பெருநிலப் பரப்புக்கு வந்து அடிப்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு கரிகாலன் எனும் நாமத்துடன் வரிப்புலியாகி அரசியல்துறைக்குச் செல்லப் பணிக்கப்பட்டான். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி,அறிவாற்றல் என்பன மிக முக்கியமானது.அந்த வகையில் எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் கல்வி,அறிவாற்றல் என்பனவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒப்புரவு கொண்டவர்.அவ்வாறே கரிகாலனும் 2005-2007 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி கற்பதற்கும் கணனிக் கற்கை நெறி கற்பதற்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களால் பணிக்கப்பட்டான்.அங்கே அவன் ஆயுத தளபாடங்கள் சம்பந்தமான பொறி முறை பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்மொழிக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்தல் சம்பந்தமான கற்கை நெறிகளைப் பயின்றான்.இயல்பாகவே மனம், புலன்களை கட்டுப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவன் கரிகாலன்.அவனுக்கு அந்த கற்கை நெறி இலகுவாகவே இருந்தது.மிகவும் விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் அவன் அந்தக் கற்கை நெறியை மேற்கொண்டான். அவனுக்கு கல்வி கற்பதிலும் பார்க்க சண்டைக் களங்களுக்கு செல்வதிலேயே மிகவும் ஆர்வம் இருந்தது.ஆனால் தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே மேற் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தனது கல்வி கற்கை நெறியை மேற்கொண்டான்.மேலும் அவன் கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.ஆனால் அவனது தேவை முக்கியமான வேறு பணிக்கு எமது அமைப்புக்குத் தேவைப்பட்டதால் அவனது பொறுப்பாளரினால் அவனை கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட முடியவில்லை.இது அவனுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவன் எமது போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலமென்றாலும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாகவும் விசுவாசமானவனாகவும் ஓர் சிறந்த போராளிக்குரிய ஓர்மம் உடையவனாகவும் அவனது பொறுப்பாளரினால் இனங் காணப்பட்டான். அவனது முகாமில் புதிதாக இணைந்த போராளிகளுக்கு எமது போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்து நல்வழிகாட்டுவதற்கு அவர்களது பொறுப்பாளர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்வார்.அந்தளவுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கி அவர்களது மனவுறுதியை நிலை நாட்டும் அளவுக்கு பேச்சுத் திறமையும் சக போராளிகளை அனுசரித்துப் போகும் பாங்கும் அவனுக்கு இருந்தது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா கரிகாலனின் பொறுப்பாளரிடம் அவரின் கீழ் உள்ள போராளிகளில் ஒருவரை தனது தனிப்பட்ட காரியதரிசியாகத்(personal secretary) தரச் சொல்லிக் கேட்ட போது அவர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்யும் அளவுக்கு அவனுக்குத் திறமையும் ஆளுமையும் தனது பணியில் முழுமையான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டவனாக விளங்கினான்.(இது கரிகாலன் தொடர்பாக அவனது பொறுப்பாளருடன் நான் உரையாடிய போது கூறப்பட்டது). 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போகுவதாக இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து எம்மண்ணில் எமக்கு எதிரான தாக்குதலை வான்,கடல்,தரை என மும்முனைகளிலும் தீவிரப்படுத்தியது.இதனால் வெளி நிர்வாகப் பணியிலிருந்த பெருமளவான போராளிகள் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.அந்த வகையில் கரிகாலனும் சண்டைக் களங்களுக்கு அனுப்பப்பட்டான்.ஏற்கனவே சண்டைக் களங்களுக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு இந்தச் செய்தி கரும்பாக இனித்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வீரச்சாவடையும் வரை சண்டைக் களங்களிலேயே சூறாவளியாக எதிரிகளைக் கலங்கடித்தான். 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் மணலாற்றில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காலில் விழுப்புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான்.பின்பு சிகிச்சையிலிருந்து மீண்டெழுந்து 2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரை படையறிவியற் கல்லாரியில் பயின்று பின்பு ராதா படையணியுடன் இணைந்து சிறப்புப் பயிற்சி பெற்று சண்டைக் களங்களுக்குச் சென்றான். 2008ஆம் ஆண்டு ஆனி மாதம் கரிகாலன் படையறிவியற் கல்லூரியில் தனது சிறப்புப் பயிற்சியை முடித்துக் கொண்டு இரணைமடுப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணியாற்றிக் கொண்டிருந்த போது அவன் மிகவும் திறமையாகச் செயற்பட்ட சம்பவம் ஒன்று அவனது பொறுப்பாளரினால் எனக்கு நினைவு கூரப்பட்டது. இரணைமடுப் பகுதியில் எமது விமான ஓடு பாதைப் பகுதியில் இவன் உட்பட ஆறு பேர் கொண்ட அணி ஒன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அங்கே வந்த இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியொன்று இவனது அணியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.அதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் அவனது அணித் தலைவர் விழுப்புண்ணடைந்ததும் அணித் தலைவரின் தொலைத் தொடர்பு சாதனத்தை உபயோகித்து அவன் அணியைத் தலைமையேற்று திறம்பட வழிநடத்தி மிகவும் ஓர்மத்துடன் போரிட்டு இராணுவத்தினருக்கு கண்ணாமூச்சியாட்டம் காட்டி அவர்களுக்கு பேரிழப்பை உண்டாக்கி தனது அணியைப் பாதுகாப்பாகப் பின் நகர்த்தினான்.அன்று அவன் உட்பட ஆறு போராளிகளும் கரிகாலனின் தலைமையேற்று போரிடும் திறனாலும் சமயோசிதப் புத்தியினாலுமே காப்பாற்றப்பட்டனர். பின்பு விசுவமடு ரெட்பானா பகுதி,புதுக்குடியிருப்புப் பகுதி,இரணைப்பாலை,மாத்தளன் போன்ற எல்லா போர் முன்னரங்கப் பகுதிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டான்.இவ்வாறு இறுதி யுத்தத்தில் இவன் செல்லாத சண்டைக் களங்கள் இல்லை.எல்லாச் சண்டைக் களங்களிலும் திறமையாகச் செயற்பட்டு எதிரிகளைக் கலங்கடித்தான். எல்லாப் போராளிகளையும் போன்றே கரிகாலனும் வெளிப் பார்வைக்கு கடினமானவனாகத் தெரிந்தாலும் அவனது மனம் பூவிலும் மென்மையானது.இதற்கு உதாரணமாக அவனுடன் நின்ற ஒரு போராளி கூறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் இரத்த தானம் செய்தால் இரத்த தானம் செய்த நபருக்கு போதிய ஊட்டச்சத்து தேவை என்ற படியால் பால்மா பக்கற் கொடுப்பார்கள் எனும் நடைமுறை நிலவியது.அவன் தனது முகாமுக்கு அருகில் இருந்த குடும்பம் ஒன்றில் இருந்த சிறு குழந்தையொன்று பால்மா இன்றி அழுவது கண்டு மனம் வருந்தி தான் இரத்த தானம் செய்து அதனால் கிடைத்த பால்மா பக்கற்றை அச் சிறு குழந்தைக்குக் கொடுத்தான்.சிறு குழந்தைகளைக் கண்டால் தானும் ஒரு சிறு குழந்தையாகவே மாறி விடுவான். இரண்டு தடவைகள் அவனது பெற்றோர் வந்து சந்தித்த போது எனது வீட்டில் தான் விடுமுறையில் வந்து தங்கியிருந்தான்.நானும் ஒரு போராளியாக இருந்தும் என்னை விட மிகவும் வயதில் இளையவனான அவனின் உறுதியையும் நெஞ்சுரத்தையும் கண்டு நான் மிகவும் வியந்திருக்கின்றேன்.இயக்கத்தில் இணைந்து சிறிது காலமேயென்றாலும் எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை “அக்கு வேறு ஆணிவேறாக “அவன் அலசி ஆராய்ந்து புரிந்து வைத்திருந்தான்.எமது தேசியத் தலைவரில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான்.விடுமுறையில் வீட்டில் வந்து தங்கியிருந்த போதும் நேரத்தை வீணடிக்காமல் அங்கிருந்தும் எமது போராட்டம் சம்பந்தமான நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பான். அவன் ஒரு போராளியாகிய தனது கடமையில் மட்டுமன்றி ஒரு உறவினனாக உடன் பிறவாச் சகோதரனாக தனது குடும்பக் கடமையிலிருந்தும் சிறிதும் வழுவவில்லை. இறுதி யுத்தத்தில் எனது கணவர் வீரச்சாவடைந்திருந்த வேளை அதனைக் கேள்விப்பட்டு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு வந்து நான் இரு சிறு குழந்தைகளுடன் பரிதவித்து நின்ற வேளை ஒரு உடன் பிறவாத சகோதரனாக வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டுத்தான் சென்றான்.இறுதி யுத்த நேரத்தில் பெரும்பாலான போராளிகளை அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விரும்பினால் பெற்றோர்,உறவினருடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது.நானும் கரிகாலனிடம் “அம்மா,அப்பா கவலைப்படுவினம் எங்களுடன் வாங்கோ”எனக் கேட்ட போது அவன் “என்ர முடிவில மாற்றம் இல்லை அக்கா நான் இறுதி வரை நின்று போராடப் போகிறேன்” என்றும் “நீங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் எப்படியாவது ஆமிக் கட்டுப்பாட்டுக்கை போயிடுங்கோ அக்கா” என்றான்.இறுதி வரை அவன் தன் கொள்கையிலேயும் முடிவினிலேயும் உறுதியாக இருந்தான். இறுதியில் 14.05.2009 சுனாமிக் குடியிருப்புப் பகுதி முள்ளிவாய்க்காலில் போர் முன்னரங்கப் பகுதியில் குறி பார்த்துச் சுடும் அணியில் (சினைப்பர் அணி) களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் தன் கொள்கையில் இருந்து வழுவாது இறுதி வரை களமாடி தன்னுயிரீந்து ஈழ மண்ணை முத்தமிட்டான் எங்கள் கரிகாலன். அவனது பொறுப்பாளருடன் நான் அவன் தொடர்பாக உரையாடிய போது அவர் அவன் நினைவாக கவலையுடன் கூறியது “இயக்கம் அவன் திறமைகளை முழுமையாகப் பெற முதல் அவன் வீரச்சாவடைந்து விட்டான்” என்பது தான். “ஓ… வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்…நீ மடியவில்லையடா…. உன் கதை முடியவில்லையடா….காலமெல்லாம் புலிக் குகையில் நீ தங்கினாய் கண் மூடி இன்று படமாய் தொங்கினாய்….” – நிலாதமிழ். https://eelamhouse.com/?p=1683  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.