Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம்

Featured Replies

சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம்

 

 

சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும்  என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.arab-man-adams-peak-galagoda-aththe-gnan

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  இதனைத் தெரிவத்தார்.

சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் 

சிவனொளிபாத மலையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இந்த ஹோட்டலுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அரபிகள் வந்து தங்கி சிவனொளிபாத மலை சமரகலை போன்ற இடங்களை தரிசிப்பதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனால் இப்பிரதேசத்தில் அரபு கலாசாரமும் அரபு குடியேற்றமும் உருவாகும். எனவே, ஹோட்டல் நிர்மாணிப்பதை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும்.

பின்னணியில் உள்ளவர்கள் யார்? 

இந்த ஹோட்டல் நிர்மாணத் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எந்த நோக்கத்துக்காக சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அமைக்கப்பட வேண்டும்? அபுதாபி நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் யார்? இதற்கு அனுமதி வழங்கியது யார்? என்பது பற்றி அரசாங்கம் விசாரணையொன்று நடத்த வேண்டும். 

இந்நாட்டின் பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த கால அரசாங்கத்தில் நடந்தவைகள் இந்த அரசாங்கத்திலும் அரங்கேறுகின்றன. முஸ்லிம் அமைச்சர்கள் தவளைகளைப் போன்று அரசாங்கங்களுக்குத் தாவி தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். 

சிறுபான்மையினரின் வாக்குகளைக் காரணம் காட்டி காரியங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றன.eee14670645_1111207632310976_13331823894

அரபு நாட்டவரின் காணி கொள்வனவுகள்

நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு கூறினோம். அரபு நாட்டவர்கள் இலங்கையில் காணிகளைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று. அபுதாபியிலிருந்தும் கட்டாரியிலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் அரபிகள் வந்து விமானம் மூலம் மத்திய மலைப்பகுதிகளுக்குச் சென்று இறங்குகிறார்கள். 

சப்ரகமுவ மாகாணத்தில் நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய காணிகள் அவர்களால் இலங்கையரின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

100, 200, 300 ஏக்கர் என்று நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன

100, 200, 300 ஏக்கர் என்று நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. காணிகள் வாங்கப்பட்ட பின்பு தனியாரின் சொத்து என பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளது. மத்திய பிராந்தியத்தில் காணிகள் கொள்வனவு செய்யப்படும்போது நிபந்தனைகளுடனே விற்பனை செய்யப்பட வேண்டும்.

மஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த முஸ்லிம் அமைச்சர் தற்போது ஜனாதிபதி மடியில்  

மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள். eeee14642397_1111207695644303_7982560355

காணிகள் கொள்வனவு மற்றும் காணிகள் அபகரிப்பு விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் பின்னணியில் இருக்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகள் காணி கொள்வனவு செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பைசர் முஸ்தபாவுக்கு மன்னிப்பு வழங்கப்படக்கூடாது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டும்.

எந்த அரசாங்கம் வந்தாலும் முஸ்லிம் அமைச்சர்கள் அந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொள்வார்கள். ஜே.வி.பி. ஆட்சியமைத்தாலும் இதனையே செய்வார்கள்.

முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகள்

கூரகல புனித பூமி, முகுது மகாவிகாரை பூமி, சோமாவதி பூமி, தலதாமாளிகை பூமி, தெவனகல பூமி என்று பௌத்தர்களின் பூமிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ளார்கள். முகுது விகாரை புனித பூமி பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி முஸ்லிம்களால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கில் பௌத்தர்களில் பூர்வீக வரலாற்றில் பிரதேசங்கள் பெக்கோ இயந்திரம் மூலம் அழிப்பு

கிழக்கில் பௌத்தர்களில் பூர்வீக வரலாற்றில் பிரதேசங்கள் பெக்கோ இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. காத்தான்குடியில் மலிக் அப்துல்லா பல்கலைக்கழகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கு வழிகாட்டுவதற்காக இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டாலும் அங்கு மதவாதிகளே உருவாக்கப்படுகிறார்கள்.

பொதுபலசேனாவின் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இப்போது இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அவர்களை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். 

கூரகலயை முஸ்லிம்கள் உரிமைகொண்டாடுகிறார்கள்

கூரகலயில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூரகலயை முஸ்லிம்கள் உரிமைகொண்டாடுகிறார்கள். 

மத்திய கிழக்கிலிருந்து இளவரசிகளும் இளவரசர்களும் இங்கு வந்து செல்கிறார்கள். அல்லாஹ் உலகை ஆண்டதாக கூறும் இவர்கள் இலங்கையையும் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.

http://www.virakesari.lk/article/13022

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மடியில குந்தி இருப்பவர் என்று சொல்வது எங்கண்ட, 'படிச்ச' றிசாட் நான :grin:

நானா தான் சவூதி ஆக்கள் எல்லோரையும் கொண்டுவந்து இறக்கிறார். இவரோட போட்டில பைசல் நானா, ஆமீரகத்து ஆட்களை இறக்கிறார்.

Edited by Nathamuni

சிங்களவனுக்கே இந்த நிலைமை என்றால் தமிழனின் நிலையை நினைத்தாலே தலை சுத்துது......!!!!!!

  • தொடங்கியவர்

சிவனொளிபாதமலையில் ஹோட்டல் நிர்மாணிக்கப்படுகின்றதா? அரசாங்கம் விளக்கம்

Published by MD.Lucias on 2016-11-02 18:00:23

 

D0055fff.jpg(ரொபட் அன்டனி) 

சிவனொளிபாதமலை  புனிததல வளாகத்தில் எவ்விதமான கட்டடங்களும்  நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு  எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை என்பதனை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்தார். 

பகுதிக்கு செல்லும் வழியில்   அப்பால்   88 ஏக்கர்களில் அமைந்துள்ள ஒரு தனியார்  நிலத்தில்  ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை   தற்போது  விடுமுறை விடுதியாக  மாற்றப்பட்டுவருகின்றது.  இதனை வைத்து  பௌத்தர்கள் மற்றும்  முஸ்லிம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு  பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   ஊடகத்துறை பிரதியமைச்சர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

சிவனொளிபாதமலை  புனிததல வளாகத்தில் எவ்விதமான கட்டடங்களும்  நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு  எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை. பௌத்தர்கள் மற்றும்  முஸ்லிம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு  பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது. 

கேள்வி:- அப்படியானால் இந்த சர்ச்சைக்கு என்ன காரணம்?

பதில்:- .சிவனொளிபாத மலை புனிததலம் 99 ஏக்கர்களைக் கொண்ட  பிரதேசமாகும்.   அந்த  பகுதிக்கு செல்லும் வழியில்  அப்பால்   88 ஏக்கர்களில்  ஒரு தனியார்  நிலம் இருக்கிறது.  அதில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை   தற்போது  விடுமுறை விடுதியாக  மாற்றுவதற்கு  அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டட வேலைகள் நடைபெறுகின்றன.  அதிலும்  சுற்றாடல் சம்பந்தமான ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம். 

மாறாக சிவனொளிபாத  புனிததல வளாகத்தில் எவ்விதமான  கட்டடமோ ஹோட்டலோ அமைக்கப்படவில்லை.  எனினும் ஒருசில தரப்பினர் நாட்டில் மத விரிசலை ஏற்படுத்துவதற்கு  சிலர் முயற்சித்து வருகின்றனர். கடந்த அமைச்சரவையில் பிரபல அமைச்சர் ஒருவர் இங்கு   ஒரு ஹோட்டலை நிறுவ முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 

http://www.virakesari.lk/article/13059

  • கருத்துக்கள உறவுகள்

நா அப்டியே ஷாக்காயிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 01/11/2016 at 5:38 PM, நவீனன் said:

சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம்

சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும்  என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது நியாயமான கோரிக்கை தானே

நல்லூரில்  கட்ட நாம் எதிர்ப்பு தெரிவித்தோம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.