Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா - புகழஞ்சலி

Featured Replies

ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழஞ்சலி

 
jaya_modi_3099514f.jpg
 

ஏழைகள், பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில், "ஜெயலலிதாவின் மறைவு ஆழ்ந்த துயரத்தைத் தருகிறது. அவரது மறைவு, இந்திய அரசியலில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

குடிமக்களுக்கு நெருக்கமான ஜெயலலிதா, ஏழைகள் - பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டு எப்போதுமே தூண்டுகோலாகத் திகழ்பவர்.

இந்தத் துயர்மிகு தருணத்தில், தமிழக மக்களுக்காக பிரார்த்திக்கிறேன். இந்தப் பேரிழைப்பைத் தாங்கக் கூடிய வல்லமையை அவர்களுக்குத் தருமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.

பல தருணங்களில் ஜெயலலிதாவுடன் பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அவை நெகிழ்வான தருணங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article9412133.ece

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

karunanidhi
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கட்சிகளைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அதிமுக கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.

அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/latest-news/2016/dec/06/தமிழக-முதல்வர்-ஜெயலலிதா-மறைவுக்கு-திமுக-தலைவர்-கருணாநிதி-இரங்கல்-2611115.html

நேசமிகு தலைவர் ஜெயலலிதா: சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி

jaya_chandra_3099509f.jpg

 

நீண்ட கால நண்பர், அனைவரும் நேசிக்கக் கூடிய ஒரு தலைவர் என்று ஜெயலலிதாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது.

நீண்ட கால நண்பர், அனைவரும் நேசிக்கக் கூடிய ஒரு தலைவர். அவருடைய நலன்விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மீது மிகவும் அக்கறைக் கொண்ட அவருடைய நினைவுகள் எப்போதுமே நம்மிடையே இருக்கும்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/நேசமிகு-தலைவர்-ஜெயலலிதா-சந்திரபாபு-நாயுடு-புகழஞ்சலி/article9412079.ece?ref=relatedNews

தைரியமான தலைவர் அம்மா: மம்தா தமிழில் புகழஞ்சலி

jaya_mamta_3099508f.jpg

 
தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா என்று ஜெயலலிதாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு தமிழில் இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "வலுவான, தைரியமான, திறமையான, மக்களின் நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. எப்போதும் மக்கள் இதயத்தில்.

இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தைரியம் மற்றும் பெருந்தன்மையுடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களையும், அதிமுக தொண்டர்களையும் வேண்டுகிறேன்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான்
அம்மா. (1/3) — Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016

எப்போதும் மக்கள் இதயத்தில். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கு. (2/3)— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016

தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் வேண்டுகிறேன் (3/3) — Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016

http://tamil.thehindu.com/tamilnadu/தைரியமான-தலைவர்-அம்மா-மம்தா-தமிழில்-புகழஞ்சலி/article9412041.ece?ref=relatedNews

ஜெ. வலிமையான பெண்மணி: அமிதாப் பச்சன் புகழஞ்சலி

jaya_ami_3099500f.jpg

 

ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி என்று இந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், " ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெ-வலிமையான-பெண்மணி-அமிதாப்-பச்சன்-புகழஞ்சலி/article9412088.ece?ref=relatedNews

வீரப்புதல்வி ஜெயலலிதா: ரஜினி புகழஞ்சலி

jayarajini_3099503f.jpg

 

இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று ஜெயலலிதா மறைவுக்கு ரஜினி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், "தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது.

மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/வீரப்புதல்வி-ஜெயலலிதா-ரஜினி-புகழஞ்சலி/article9412113.ece?ref=relatedNews

ஜனநாயக நெறி கொண்டவர் ஜெயலலிதா: ஸ்டாலின் புகழஞ்சலி

jayastalin1_3099510f.jpg

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று ஜெயலலிதாவின் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்துக்கு பேரழிப்பாகும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரை இழந்து தவிக்கக்கூடிய அதிமுக-வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜனநாயக-நெறி-கொண்டவர்-ஜெயலலிதா-ஸ்டாலின்-புகழஞ்சலி/article9412100.ece?ref=relatedNews

என்னைப் பொருத்தவரை ஜெயலலிதா காலமாகவில்லை: நடிகர் வடிவேல்

Vadivelu
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.  ஜெயலலிதா மறைவு குறித்து நடிகர் வடிவேல் பேசும் போது கூறியதாவது: -

ஜெயலலிதாவின் மறைவு மிக துயரமாக இருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய தீவிர ரசிகர் என்று நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் என் காமிடியை நிறைய ரசிப்பார் என்றும் கேள்வி பட்டிருக்கேன்.

மிகத் துணிச்சலானவர் அவர். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் படுவதை சொல்லக் கூடியவர். என்னைப் பொருத்தவரை அவர்கள் காலமாகவில்லை. அவரின் பெயரை சொல்லி நிறைய பேர் என்னென்னவோ செய்தார்கள். நான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று நிறைய ஆசைப்பட்டேன். என்னை யாருமே உள்ளே விடவில்லை.

ஆனால், அவர்களால்தான் எனக்கு தொழில் போனது, பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன். முதல்வரைச் சுற்றி உள்ளவர்கள்தான் என்னை நடிக்க விடவில்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். அவரின் பெயரை சொல்லி யார் யாரோ என்னென்னவோ செய்துவிட்டார்கள்.

அது குறித்து பேசும் நேரம் இதுவல்ல. முதல்வர் மிக மிக நல்லவர். சிறந்த நகைச்சுவை எண்ணம் கொண்டவர்கள். என் காமிடிக்கு அவர்கள் அடிமை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நல்ல மனது கொண்டவர். எல்லோரையும் நன்றாக பார்த்து இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் நன்றாக செய்திருக்கிறார்கள். அவர் சாகவில்லை.. சாகவில்லை.. சாகவில்லை... எம்.ஜி.ஆருக்கு அப்புறம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இயற்கையானவர். அந்த தாய் இறந்தது எனக்கு துயரமாக இருக்கிறது. அவர்களின் ஆன்மா இறைவனின் காலடியில் சேர வேண்டும்.

http://www.dinamani.com/latest-news/2016/dec/06/என்னைப்-பொருத்தவரை-ஜெயலலிதா-காலமாகவில்லை-நடிகர்-வடிவேல்-2611100.html

  • தொடங்கியவர்

பிரணாப் முகர்ஜி இரங்கல்

pranap

முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்  தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நன்கு குணமடைந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி 11.30 மணி அளவில் காலமானார்.

http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2016/dec/06/பிரணாப்-முகர்ஜி-இரங்கல்-2610940.html

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆர் வழியில் ஏழைகளின் ஏந்தலாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா!

Jayalalithaa_001_00256.png

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர், கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கியது முதல், கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சாமான்ய மற்றும் ஏழை-எளிய மக்களும், குறிப்பாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களும் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்து, அவருக்கு மகத்தான ஆதரவை அளித்தனர்.

ஏழை-எளிய மக்களும், ரசிகர்களும் அளித்த பேரன்பு, எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காதது. திரையுலகில் அளித்த பேராதரவைக் காட்டிலும், அரசியலில் தம்மை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்த சாமான்ய மக்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்? என்று பல நாட்கள் இரவு, பகலாக எம்.ஜி.ஆர் யோசித்ததன் விளைவாகவே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்துணவுத்திட்டம், வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை, ஏழை மக்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு தடையில்லா இலவச மின்சாரம் என்று, தம்மை முதல்வர் பதவியில் அமர்த்தி வைத்த, சாமான்ய மக்களின் நலனில் அன்றாடம் அக்கறை கொண்டு, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.Jayalalitha_Rare_8_1_00575.jpg

கடந்த 1977-ல் ஆட்சியைப் பிடித்தது முதல், 1987-ல் எம்.ஜி.ஆர் மறையும் வரை, தொடர்ந்து முதல்வராகப் பதவியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரை, தனது அரசியல் ஆசானாகக் கொண்டு, அரசியலில் அவரது வழியைப் பின்பற்றி ஏழை-எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் திகழ்வதற்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா.

தமது 68-வது வயதில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் ஜெயலலிதா. கடந்த 75 நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலைலயில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று மாரடைப்பு ஏற்பட்டு, தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆர் வழியில், செயல்பட்ட முதல்வர் ஜெயலலிதா, 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று தனது ஒவ்வொரு உரையின் போதும், ஜெயலலிதா தவறாமல் குறிப்பிடுவார். 

ஏழை மக்கள் எல்லாமும் பெற வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, அல்லும், பகலும் ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு ஏந்தலான முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது. 

ஏழை மக்களுக்கு என்றென்றும் அரணாக விளங்கிய ஜெயலலிதா-வின் ஆன்மா அவர் ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டன் மறைவின்போதும், தெரிவிப்பது போன்ற, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். 

ஏழைகள் வாழ்வில், ஜெயலலிதா தொடங்கி வைத்த எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள், என்றென்றும் நீடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

-சி.வெங்கட சேது

http://www.vikatan.com/news/coverstory/74257-jaya-follows-the-footpath-of-mgrs-path-till-death.art?artfrm=editor_choice

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

30_02392.jpg

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 22 ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கா சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி 

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், "ஜெயலலிதாவின் மறைவு மிகுந்த வருத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது" 

மம்தா பானர்ஜி 

திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், "வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. எப்போதும் மக்கள் இதயத்திலேயே இருக்கிறார். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், 
"தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருந்தாலும் ஜனநாயக நெறியிலேயே அதனை எதிர்கொண்டு வந்தோம் என்ற நிலையில், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தமிழகத்திற்கு பேரிழப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் 

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், "அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், வருத்தமும் அடைந்தேன். அவரது மறைவுச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

இந்திய அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை அன்னை இந்திராகாந்திக்கு அடுத்து தமது வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலம் நிரூபித்த தலைவர் ஜெயலலிதா. எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்து வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்தவர் ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த தமிழக அரசியலில் பெண்களால் சாதனைகளை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் ஜெயலலிதா. ஜெயலலிதா அறிவுக்கூர்மையும், எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒருமுறை கூறியவுடன் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் திறனும் பெற்றவர். ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், "முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். தற்போது ஜெயலலிதாவின் மறைவு  சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயலலிதாவை இழந்து வாடும் அதிமுக வினருக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

கனிமொழி

“திறமையும் தனித்துவமும் கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்” என்று மாநிலங்களவையின் திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன்

“ஜெயலலிதாவின் மரணம் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/jayalalithaa/74260-leaders-mourn-for-the-demise-of-selvi-jayalalithaa.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Cy82yjfUAAAlUnB.jpg

  • தொடங்கியவர்

சகாப்தமாக வாழ்ந்தவர் சரித்திரமாகியுள்ளார்: இந்திய தேசிய லீக் இரங்கல்

சகாப்தமாக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  சரித்திரமாகியுள்ளார் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

34 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தனக்கென தனித்துவத்தை வகுத்துக் கொண்டு, ஆளுமைமிக்க தலைவராக, 5 முறை தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி சகாப்தமாக வாழ்ந்த முதல்வர் ஜெயலலிதா, சரித்திரமாகியுள்ளார். 

அவரது மறைவால் வாடும் அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இந்திய தேசிய லீக் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/latest-news/2016/dec/06/சகாப்தமாக-வாழ்ந்தவர்-சரித்திரமாகியுள்ளார்-இந்திய-தேசிய-லீக்-இரங்கல்-2611084.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Cy9DZwhUcAAwdWN.jpg

பச்சைப் பட்டு சூழ..
பெரு மாலை அடி சூழ..

ராஜாஜி அரங்கில் கொலுவேறி உறங்கும் ஜெ!

எந்த அரங்கில்..
அன்று பின் நின்றாரோ, இன்று முன் நிற்பு

Cy9DbfIWQAAmjKd.jpg

http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7

  • தொடங்கியவர்

 

Edited by போல்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அஞ்சலி

படம். | பிஜாய் கோஷ்.
படம். | பிஜாய் கோஷ்.
 

தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெயலலிதா மறைவை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் இரங்கல் மற்றும் அஞ்சலி தெரிவித்துள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா அமெரிக்கா சார்பாக இரங்கல் தெரிவிக்கும் போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும் அமெரிக்காவின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயர கணத்தில் தமிழக மக்களுடன் உள்ளது'' என்றார்.

பிரான்ஸ் நாட்டு தூதர் அலெக்ஸாண்டர் ஸீக்ளெர், ''முதல்வர் ஜெயலலிதா லட்சோப லட்சம் மக்கள் போற்றும் ஒரு புகழ்பெற்ற தலைவர், எங்களது எண்ணங்களும், இரங்கல்களும் அவரது நெருங்கியோருக்கும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக, இந்திய மக்கள் பக்கம் உள்ளது'' என்றார்.

இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி நாதிர் படேல் தனது இரங்கல் செய்தியில், ''ஜெயலலிதா குடும்பத்தினருக்கு எனது உண்மையான வருத்தங்களையும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழக மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நட்டின் முன்னேற்றத்திற்கான அவரது உழைப்பு மற்றும் மக்களுக்காக அவரது பங்களிப்புகள் ஒரு போதும் மறக்கப்பட முடியாதது'' என்றார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ''மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-மறைவு-அமெரிக்கா-உள்ளிட்ட-உலக-நாடுகள்-அஞ்சலி/article9413688.ece?homepage=true

  • தொடங்கியவர்

வேலு நாச்சியாரைப் போன்ற போர்க்குணம் மிக்கவர் ஜெயலலிதா: வைகோ புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: வைகோ | கோப்புப் படம்.

 

சிவகங்கை அரசி வேலு நாச்சியாரைப் போன்ற போர்க்குணம் மிக்கவர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து வைகோ இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தாங்க முடியாத துக்கத்தின் பிடியில் தமிழகத்தையும் உலகு வாழ் தமிழர்களையும் தவிக்க விட்டுவிட்டு இரக்கம் அற்ற காலன் ஜெயலலிதாவின் உயிரைப் பறித்து விட்டான்.

எம்.ஜி.ஆர். நிறுவிய அதிமுகவை, அவரது மறைவுக்குப் பின்னர் புரட்சித் தலைவி ஜெயலலிதா எஃகுக் கோட்டையெனக் கட்டிக் காத்தார்.127 திரைப்படங்களில் தாரகையாக மின்னிய ஜெயலலிதா, ஓய்வு அறியாத படிப்பாளி; தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். சிவகங்கை அரசி வேலு நாச்சியாரைப் போன்ற போர்க்குணம் மிக்கவர். எந்த அச்சுறுத்தலுக்கும், எக்காலத்திலும் அஞ்சாதவர்.

மைசூரு படப்பிடிப்பின்போது கன்னட வெறியர்கள் சூழ்ந்துகொண்டு 'தமிழ் ஒழிக' என முழக்கம் இடம் சொல்லி அச்சுறுத்தியபோது, 'நான் ஒரு தமிழச்சி; என் உயிரே போவதானாலும் சரி; தமிழ் வாழ்க என்றுதான் கூறுவேன்' என கர்ஜித்தவர்.

1997 ஆம் ஆண்டு, நாவலர் நெடுஞ்செழியனோடு மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தந்தபோது, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்' என்று வர்ணித்தார்.

ஆறு முறை முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திமுக ஆட்சியில் இருந்தபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து நீக்கப்பட்டபோது, தன்னந்தனியாகச் சட்டமன்றத்திற்குள் சென்று, ஆளுங்கட்சியினர் தொடுத்த, அத்தனைக் கேள்விக் கணைகளையும் முறித்துப் பதில் உரைத்து, அரசியல் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

'சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று தமிழக சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஈழத்தமிழர்களின் மேக்னா கார்ட்டாவாக அதனைப் பதிவு செய்ததால் தமிழர் வரலாறு அவருக்குப் பொன் மகுடம் சூட்டியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைக் காக்க, 1994 இல் இந்திய அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்குக் காரணம் ஆனார்.

தென் மாவட்டங்களின் உயிர் ஆதாரமான முல்லைப்பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில், துல்லியமாகத் திட்டமிட்டு சட்ட வல்லுநர்களைக் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, தமிழக உரிமையைப் பாதுகாத்துத் தந்த சாதனை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் ஜெயலலிதா எடுத்துக் கொண்ட இடைவிடாத முயற்சிகளால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசு இதழில் இடம் பெற்றது.

கோடானுகோடி ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்து, இலவச அரிசி முதல் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். டெல்டா மாவட்டங்களை நாசமாக்க முயன்ற மீத்தேன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து விரட்டியடித்தார்.

தற்போது, தமிழ்நாட்டின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் நீதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது மட்டும் அல்ல, செப்டெம்பர் 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையிலும், தமிழகத்தின் உயர் அதிகாரிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார்;

ட்ரகாஸ்டமி என்ற குழல் தொண்டையில் பதிக்கப்பட்டு இருந்தபோதும், அவர் சன்னமான குரலில் பேசினார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அப்போலோ மருத்துவமனையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலை நான் சந்தித்துப் பேசியபோது, 'செப்டிசீமியா' எனும் மிகக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு, உடல் நலம் தேறி வருகின்றார் என்பதை அறிந்து நெஞ்சார மகிழ்ந்தேன்.

2006 ஆம் ஆண்டு கலிங்கப்பட்டி கிராமத்தில் என் வீட்டுக்கு வந்து என் தாயார் மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வெளியேவந்தபோது, 'மறைந்து விட்ட என்னைப் பெற்ற தாயாரைப் பார்த்ததுபோல் உணர்ந்தேன்' என்று செய்தியாளர்களிடம் கூறியதை எப்படி மறப்பேன்?

நெருப்பு வெயிலில் மாமல்லபுரத்தை நோக்கி நான் நடந்து கொண்டு இருந்தபோது, காரை நிறுத்தி இறங்குவதற்கான படிக்கட்டுகூட இல்லாத நிலையில், ஜெயலலிதா கீழே இறங்கியதும், 'இந்த வெயிலில் இப்படித் துன்பப்படுகின்றீர்களே, உணவு அருந்தினீர்களா?' என்று சகோதர வாஞ்சையோடு கேட்டு என்னை நெகிழச் செய்ததும்;

2006 விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்ட மேடையில் என்னை 'அன்பு அண்ணன் வைகோ' என்று விளித்ததும்; 2011 அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று நான் முடிவு எடுத்தபோது, 'முதிர்ந்த அரசியல்வாதியான உங்கள் மீது என்றைக்கும் மரியாதையும், அன்பும் வைத்திருக்கின்ற உங்கள் சகோதரி' என்று 2011 மார்ச் 20 ஆம் தேதி தம் கைப்பட எனக்குக் கடிதம் எழுதியதும் என் நெஞ்சை விட்டு என்றைக்கும் அகலாது.

மகனை இழந்த தாயைப் போல, தாயை இழந்த சேயைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கண்ணீர் விட்டுக் கதறும் அவலம் இதயத்தை வாட்டுகின்றது.

கோடானுகோடித் தமிழர்கள் குறிப்பாகத் தாய்மார்கள், தங்கள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல வேதனையில் வாடித் தவிக்கின்றார்கள்.

பல்வேறு சோதனைகள் அறைகூவல்கள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள வேளையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், முன்னணியினரும் லட்சோபலட்சம் அடலேறுகளும், தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, புரட்சித் தலைவர் நிறுவி, புரட்சித்தலைவியால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவை எவராலும் நெருங்க முடியாத இரும்பு அரணாகக் காப்பார்கள்.

தங்கள் உயிர்த் தலைவியை இழந்து அழுது கண்ணீர் பெருக்கும் அதிமுக தோழர்களின் கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரை உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும் மதிமுக சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வீரத் தமிழ் மங்கைக்கு என் வீர வணக்கம்!

அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற வகையில், மதிமுக கொடிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/வேலு-நாச்சியாரைப்-போன்ற-போர்க்குணம்-மிக்கவர்-ஜெயலலிதா-வைகோ-புகழஞ்சலி/article9413251.ece?ref=relatedNews

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா: வீரமணி புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: வீரமணி | கோப்புப் படம்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து இன்று வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 74 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைகள், தலைசிறந்த வெளிநாட்டு டாக்டர்களின் மருத்துவ உதவிகள் எல்லாம் பெற்று, உடல்நலம் தேறி வந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்ற தகவல் அறிந்து பெரும் துயரத்திற்கு ஆளானோம்.

திடீரென்று கடந்த 4.12.2016 ஞாயிறு மாலை அவரது உடல்நலனில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து உடனடியாக நவீன மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டும், அவை பயனற்றுப் போனநிலையில் காலமானார் என்பது கோடானுகோடி மக்களின் உள்ளங்களைப் பிளக்கக்கூடிய கொடிய செய்தியாகும்.

எது நடக்கக்கூடாது என்று நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்தோமோ, அது இறுதியில் நடந்தே விட்டது!சோகமும், துயரமும், துன்பமும் பெருவெள்ளக்காடாய் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெரும்அளவில் விசுவாசத்தினை பெறற்கரிய செல்வமாக தனது தொண்டர்களிடம் பெற்ற ஒரு அரசியல் கட்சித் தலைவரைக் காண்பது அரிதினும் அரிது!

திராவிட இயக்க ஆட்சியின் தொடர்ச்சியாக அவர் திகழ்ந்த காரணத்தால், தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டினை இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத்திருத்தம்) ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சரித்திர சாதனையை நிகழ்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தினை அளித்து திராவிடர் கழகம் மகிழ்ந்தது.

ஏழை எளிய மக்களின் வாழ்வில் அவரது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். எவ்வளவு கவலைப்பட்டாரோ, உதவினாரோ அதே உணர்வுடன், கனிவுடன் நடந்துகொண்டதால் அபரிமிதமான அன்பை மக்களிடம் பெற்றார். அவரது துணிவு- இந்தியாவில் எந்தப் பெண்மணியிடமும் காணமுடியாத ஒன்று. நெருப்பில் பூத்த வெற்றி மலராகவும், எதிர்ப்புகளைத் தாண்டும்- தாங்கும் வீராங்கனையாகவும் அச்சம் என்பது மடமை; எதிர்ப்பு என்பது நான் சந்திக்கும் களம் என்று வாழ்ந்து காட்டிய அவருக்கு ஈடுஇணையும் அவரே!

அவரது கட்சித்தொண்டர்களும், தோழர்களும் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - ஆகியவற்றைக் கடைப்பிடித்து அவர் காட்டிய வரலாற்றுப் பாதையையே தொடரவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

மறைந்த ஜெயலலிதா பெற்றுத் தந்த ஆட்சியினை, அவர் வகுத்த பாதையில் மிகுந்த ஒற்றுமையுடன் நடத்தி செல்வார்கள் என்று நம்புகிறோம்; நடத்திச் செல்ல வேண்டும் என்றும் விழைகின்றோம். இவ்வாட்சி திராவிடர் ஆட்சியாகவே தொடரவேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

சோதனையான காலகட்டங்களில் எல்லாம் கண்களை இமை காப்பதுபோல் காத்து, கடைசி வரை எதையும் பாக்கி வைக்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, ஜெயலலிதாவைக் காப்பாற்ற முயன்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு உளப்பூர்வமான ஆறுதலை நன்றியுடன் கூறுவது நமது கடமையாகும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜெயலலிதாவின் பிரிவால் வாடும், வருந்தும் - அவர் ஆட்சியில், அவரது தலைமையில் பணியாற்றிய சக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்!

சமூக நீதி காத்த வீராங்கனைக்கு நமது வீரவணக்கம்'' என்று வீரமணி கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சமூக-நீதி-காத்த-வீராங்கனை-ஜெயலலிதா-வீரமணி-புகழஞ்சலி/article9413136.ece?ref=relatedNews

வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒரு பெண் சிங்கம் ஜெ.: பாரதிராஜா புகழஞ்சலி

jayabharathi_3099778f.jpg

 

வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒரு பெண் சிங்கம் ஜெயலலிதா என்று இயக்குநர் பாரதிராஜா புகழஞ்சலி

ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது "கோடிக்கணக்கான தமிழக மக்களின் இதயத்தில் அழுத்தமாக பதிந்த ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. உலக வரலாற்றில் ஆளுமை சக்தி படைத்த எவ்வளவோ பெண்மணிகள் கதைகள் படித்திருப்போம், வரலாறு படித்திருப்போம். இவர் வரலாற்றில் பதிக்கக்கூடிய ஆளுமை நிறைந்த ஒரு பெண் என சொல்லலாம்.

மிகச் சிறந்த செயலாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. தனித்துவமாக போராடி நின்று ஜெயித்து மகிழ்ந்திருக்கிறார். வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய ஒரு பெண் சிங்கம் என்று சொல்லலாம்.

மிகச்சிறந்த தலைவியை, கலை அரசியை, ஒரு மேதையை தமிழகம் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வதற்கு இடமில்லை" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

http://tamil.thehindu.com/tamilnadu/வரலாற்றில்-பதிவு-செய்ய-வேண்டிய-ஒரு-பெண்-சிங்கம்-ஜெ-பாரதிராஜா-புகழஞ்சலி/article9413028.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

ஈழத் தமிழர் சார்பில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஜெயலலிதாவிற்கு நேரில் சென்று அஞ்சலி

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவிற்கு இன்று ஈழத் தமிழர் சார்பில் சிவசேனை அமைப்பின் தலைவரும், தமிழ்ப் பற்றாளருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினார்.

சென்னை இராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளதாவது,

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அம்மையாரின் உடல் இருந்த இடம் அடைந்தேன். அவர்களின் கால்கள் இருந்த பக்கத்தில் நின்று வணங்கி அஞ்சலித்தேன். பால்நினைந்தூட்டும் திருவாசக வரிகள் சொன்னேன்.

துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் ஜெயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன், அமைச்சர் பாண்டியராஜன், மேனாள் அமைச்சர் பொன்னையன், வைகறைச் செல்வன் என எனக்கு அறிமுகமான நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றேன்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த துயரத்தைத் தெரிவித்தேன். துயரமான இப்பொழுதில் ஈழத் தமிழர் யாவரும் தமிழக மக்களோடு இருக்கிறார்கள் எனத் தெரிவித்தேன்.

வெளியேறும் வழியில் அமைச்சர் வெங்கையா நாயுடு, அமைச்சர் இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் இல கணேசன், பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளர் முரளீதரராவ், திண்டிவனம் இராமமூர்த்தி, குமரி அனந்தன், அம்மையாரின் ஆலோசகரும் தமிழகத்தின் மேனாள் காவல்துறைத் தலைவருமான இராமானுஜம் என எனக்கு நன்கு அறிமுகமான அன்பர்கள் யாவரிடமும் ஒவ்வொருவராகச் சென்று ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துரைத்தேன்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஊடகத்தார் அரங்கில் நான்கு மணித்துளிகள் கருத்துரைத்தேன். ஒவ்வொரு ஈழத் தமிழர் நெஞ்சமும் கனத்திருப்பது, கண்கள் குளங்களாகி இருப்பது, ஜெயலலிதா அம்மையார் சட்டசபையில் அண்மைக் காலங்களில், ஐநா மனித உரிமை, பொது வாக்கெடுப்பு, தமிழீழம் அமைதல் தொடர்பான தீர்மானங்களை இயற்றிமைக்கு நன்றியும் கடப்பாடும் உடையராய் இருப்பது என விளக்கினேன்.

அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் நலம் பேணிய வரலாறு சொன்னேன். தொடர்ந்தும் அதிமுக ஈழத் தமிழர் நலம் பேணும் எனவும் கூறினேன்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/127301?ref=home

ஜெயலலிதாவுக்கு அனுதாபம் தெரிவித்த செந்தமிழன் சீமான்

கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நம் தாய்த் தமிழ் உறவுகள் சிங்களப் பேரினவாத கரங்களுக்குச் சிக்குண்டு இனப் படுகொலைக்கு தீவிரமாக எதிர்த்து 2011ஆம் ஆண்டுத் தமிழகச் சட்டமன்றத்தில் அக்கோர நிகழ்வை ‘இனப்படுகொலை’ என்று அறிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் அறிக்கையில் கூறுகையில், தனி தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உலகத்தமிழர்களின் உள்ளத்தில் பேரன்பிற்கும், மதிப்பிற்குரிய இடத்தைப் பிடித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

தனித் தமிழீழத்தை அடைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். அதனால், வெளியுறவுக் கொள்கையை மாற்றப் பாடுபடுவோம்’ எனக் கூறி, ஈழ விடுதலை குறித்த அவரது தெளிவானப் பார்வையை உணர்த்தியுள்ளார்.

அத்தோடு, கடந்த 2014ஆம் ஆண்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கிற போது அவரிடம் அளித்த மனுவில், இலங்கை அரசு இனப்படுகொலை செய்த நாடு எனக் குறிப்பிட்டும்,

இலங்கை இராணுவத்திற்குத் தமிழகத்திற்குப் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் என பொட்டில் அடித்தாற் போல அறிவித்துள்தோடு சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை உலகறியச் செய்தார்.

அத்துடன் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கித் தவிக்கும் ஏழு அப்பாவித் தமிழர்களை மீட்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, நீதிமன்றங்களிலும் இறுதி வரை போராடிக் கொண்டிருந்த அவரது பணிகள் போற்றுதலுக்குரியது என சீமான் குறிப்பிடப்பட்டுள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/127306?ref=home

  • தொடங்கியவர்

 

எதிர்நீச்சலும் போராட்டமுமே ஜெ.வின் வாழ்க்கை: ராமதாஸ் புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: ராமதாஸ் | கோப்புப் படம்.

 
எதிர்நீச்சலும், போராட்டமுமே ஜெயலலிதாவின் வாழ்க்கையாக இருந்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பயணம் அனைத்து வழிகளிலும் குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை. எதிர்நீச்சலும், போராட்டமுமே அவரது வாழ்க்கையாக இருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், அவர் தலைமையேற்று இருந்த இயக்கத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வழி நடத்திச் சென்றார் என்பதை மறுக்க முடியாது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது பதவிக்காலத்தில் பலமுறை முத்திரை பதித்திருக்கிறார். 1992-ஆம் ஆண்டில் பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்குடன் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை அறிமுகம் செய்தது, ஏழைக் குடும்பங்களை சீரழித்த பரிசுச் சீட்டுக்களை ஒழித்தது, புதிய வீராணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு முடிவு கட்டியது ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட சில குறிப்பிடத்தக்க திட்டங்கள் ஆகும்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அதிமுகவினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/எதிர்நீச்சலும்-போராட்டமுமே-ஜெவின்-வாழ்க்கை-ராமதாஸ்-புகழஞ்சலி/article9412970.ece?ref=relatedNews

ஒரு பெண் முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபம் அல்ல: தமிழிசை புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.
 
ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து தமிழிசை இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மீண்டும் மீண்டு வருவார் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மாண்டுபோனார் என்ற செய்தி பேரிடியை நன்மை தாக்கி இருக்கிறது. ஒரு துணிச்சல் மிக்க தலைவரை ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் இன்று கொண்டு சென்றிருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைவருக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்க மனது மறுக்கிறது.

அம்மா அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது, ஜெ என்ற பெருமை ஆண்டிருந்தது, தற்போது வெறுமை தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது. அவரின் இழப்பை தனிப்பட்ட இழப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல.

உடல்நலம் சரியில்லாதபோதும் கடுமையாக உழைத்து, கடுமையாக சுற்றுப்பயணம் செய்து தன் கட்சியை வெற்றி பெற செய்த மரியாதைக்குரிய ஜெயலலிதா முழுவதுமாக முடியும் வரை முதல்வராக இருப்பார் என்று நினைத்தபோது முதல்வராக இருக்கும்போதே அவருக்கு முடிவு வந்திருப்பதை நம்ப முடியவில்லை.

உடல் நிலை தேற வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தோம், இன்று இழப்பை தாங்கும் உறுதியை இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப்போம். அவர்களின் தொண்டர்கள் தனது தாயை இழந்து தவிக்கிறார்கள், அவர்களுடனும் தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

மரியாதைக்குரிய ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு துணிச்சலை துணிச்சலாக கொண்டு செல்லும் துணிச்சல் மரணத்திற்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன், அழுதும் கொண்டிருக்கிறேன். தமிழக பாஜகவின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஒரு-பெண்-முன்னுக்கு-வருவதும்-முதல்வர்-ஆவதும்-சுலபம்-அல்ல-தமிழிசை-புகழஞ்சலி/article9413164.ece?ref=relatedNews

இலங்கை பாராளுமன்றில் தமிழ் உறுபினர்கள் அஞ்சலி

 

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் தன்னுடைய அனுதாபத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துக்கொண்டார்.

இதேவேளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவினால் வடமாகாண சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/parliment/01/127250?ref=home

  • தொடங்கியவர்

கலையுலகில் 'அம்மு'.. அரசியல் உலகில் 'அம்மா' - வைரமுத்து புகழஞ்சலி

jayavairam_3099601f.jpg
 

ஜெயலலிதா செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள செய்தியில், "ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.

போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா.

கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனில்’ அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.

மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?" என்று தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.

http://tamil.thehindu.com/tamilnadu/கலையுலகில்-அம்மு-அரசியல்-உலகில்-அம்மா-வைரமுத்து-புகழஞ்சலி/article9412257.ece?ref=relatedNews

 

jaya-ltte

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரிலாழ்ந்த தமிழ்மக்களுடன் எமது இயக்கமும் இணைந்து கொள்கின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் அரசியலில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் விமர்சனங்களைக் கடந்தும் முக்கிய பெண் ஆளுமையாகத் திகழ்ந்தார்.

ஒப்பீட்டளவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத அரசியல் தளத்தில், தனக்கு ஏற்பட்ட தடைகளையும் சோதனைகளையும் தாண்டி அசைக்க முடியாத தனித்த ஆளுமையாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்ட அவரின் மனவலிமையும் போராட்ட குணமும் அவரை தவிர்க்கவியலா முன்மாதிரியாகவே வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.

செல்வி ஜெயலலிதா அவர்கள் எமது இயக்கம் தொடர்பிலும் விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் பாதகமான நிலைப்பாட்டோடு இருந்துவந்தார் என்ற போதும்கூட, பின்வந்த காலப்பகுதியில் – குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பிற்பட்ட காலப்பகுதியில் தனது நிலைப்பாட்டை சரியான வழியில் மாற்றியதோடு அம்மாற்றத்தின்வழி உறுதியாகவும் நின்றார்.

குறிப்பிட்ட சில விடயங்களில் அவரின் நிலைப்பாடும் செயற்பாடும் எமது மக்களின் விடுதலை வேள்விக்கு உறுதுணையாய் என்றும் நிற்கும்.

தேவைப்படும் போதெல்லாம் ஈழத் தமிழருக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு மட்டும் நின்றுவிடாது மிகத் துணிவாக தமிழீழத் தாயகத்துக்கான பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தில் நடந்தது இனவழிப்பே என்றும் கூறி ஈழத்தமிழருக்குத் தமிழீழமே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றிய பெருமைக்குரியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

எமது மக்களின் அரசியல் வேட்கையை மலினப்படுத்தி நீர்த்துப்போகச் செய்ய பன்னாட்டுத் தளத்தில் வலை பின்னப்பட்ட மிக முக்கியமான ஒரு காலக்கட்டத்தில் வெளிவந்த இவரின் அந்தச் சட்டமன்றத் தீர்மானமானது எமது மக்களின் விடுதலைப் பயணத்தில் ஒரு மைற்கல் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதெல்லாம் சமயோசிதமாகவும் துணிச்சலோடும் செயற்பட்டவர்களுள் செல்வி ஜெயலலிதா அவர்களும் ஒருவர்.

இந்த நேரத்தில் அவரின் பிரிவால் வாடும் தமிழக மக்களுக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மற்றும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://kathiravan.com/138590

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு.... யாழ் களமும், தன்னுடைய முகப்பில்..  அஞ்சலி செலுத்தியதை, யாழ்கள உறுப்பினன் என்ற வகையில், பெருமிதம் அடைகின்றேன்.
காலம் சென்ற, ஜெயலலிதா அம்மையார் சம்பாதித்த சொத்துகள்  இவை தான்.
தலைப்பிற்கும், இணைப்புகளுக்கும்... நன்றி போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.