Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறும் படம்"Blue corner"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக.

http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072

நான் படிக்கும் சினிமா படிக்கும் பொது எடுத்த குறும்படம், ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த படம்! பார்த்து விமர்சனங்களை தருக.

http://one.revver.com/watch/158879/flv/affiliate/65072

நீங்கள் ராஜன் அருணாசலமா அல்லது அபிநயன் கோபாலா? நான் ஒன்லைனில் உங்கள் குறும்படத்தைப் பார்த்தேன். ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. நீஙகள் படிக்கும் போது படிப்பதற்காக பள்ளியில் புரொஜெக்ட் ஆக எடுத்த படம் என்று கூறியுள்ளீர்கள். எனவே முழுப் படத்திற்குமாக 65/100 புள்ளிகள் போடமுடியும். படத்தின் கரு நல்லதாக இல்லை. பாட்டுக்களும், மோட்டார் சைக்கிள் ஓட்டமும் படத்தில் கூடி விட்டது. ஒரு எதிரியை குத்துச் சண்டைப்போட்டியில் இவ்வாறு பழிவாங்க முடியும் என்பது நம்பக்கூடியதாய் இல்லை. படம் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது? காட்சியமைபுக்களும் பரவாயில்லை. சுமாராக உள்ளது. படத்தில் ஆரம்பத்தில் தக்கப்படும் காதலர்கள்(?) எதற்காகத் மோட்டார் சைக்கிள் கும்பலால் தாக்கப்பட்டார்கள் என்று விளங்கவில்லை. படம் இந்தியன் பட ஸ்டைலில் உருவாக்கப்பட்டது போல் உள்ளது. எனினும், உங்கள் முயற்சிக்கும், ஒளிப்பதிவுக்கும் பாராட்டுக்கள்!

படத்தின் கரு விளங்கவில்லை ஒளீப்பதிவு நல்லா இருகுது ஒளிப்பதிவில் அநுபவம் வாய்ந்த அஜீவன் அண்ணா போன்றவார்களாதான்ன் சிறந்த விமர்சங்களை தரமுடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமார்களே! இப்படம் இந்தியாவில் டெல்லிக்கு அருகில் நொய்டா நகரில் எடுக்கப்பட்டது! இதன் கதையை சொல்லி திரைக்கதையை இயக்குனர் சொன்னதும், எனக்கு கோபம் தான் வந்தது, இதன் கருவில் எனக்கு பிடிப்பில்லை. ஆனாலும் புதுக்கதைக்கு நேரம் போதாமைகாரணமாக இதன் காட்சி அமைப்பை செய்தேன்.

இது 2நாட்களில் எடுக்கப்பட்டது!! (18 மணித்தியாலம்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத் தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு நன்றாக உள்ளன. கதையின் கரு தெளிவில்லாமல் உள்ளது. உங்கள் Project படம் என்பதால் பிழை சொல்ல முடியாது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது போன்று ஈழத்துக் கதைகளையும் படமாக்க முயற்சி செய்யுங்கள். ஈழத்து மண் வாசனையுடன் அவை வெளிவரட்டும்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Edited by இளங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனங்களுக்கு நன்றி

நான் அருணசலம் ராஜன்.. DoP(lighting+camera+composition)

அபிக்கியன் கோபால், படத்தின் 2ஆம் ஒளிப்பதிவாளர் குத்துசண்டை காட்சியின் போது சேர்ந்து பணியாற்றினார்

ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. லைட்டிங்கும் நன்றாக வந்திருக்கிறது, மேலும் நல்ல படங்களை உங்களால் எடுக்கமுடியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் ஒலித்த பாடல், ஒளிப்பதிவு நடிப்பு அனைத்தும் அழகு.

கதையின் கரு அழகு.

அதனை வெளிப்படுத்திய விதத்தில் சற்று கவனம் செலுத்தியிருந்தால், பார்ப்போர் மனதையும் கதை தொட்டுச் சென்றிருக்கும்.

காட்சிகளை ஒன்றிணைத்து, கதையோடு ஒன்றி இணைத்து காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஆரம்பத்தில் மோட்டார் சைக்கிளில் அந்த இருவரையும் சுற்றி சுற்றி வரும் போது அந்தப் பெண்ணின் முகத்தில் பயத்தின் சாயலே வீசவில்லையே... சாதாரணமாய் இந்த மாதிரியான சமயங்களில் முகத்தில் சற்றே மாற்றங்களைக் காட்டியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.

18 மணித்தியாலத்துக்ளுள் எடுத்த படம் அழகு.

மேலும் இதுபோன்ற படைப்புக்கள் வெளிவர வேண்டும்.

உங்க முயற்றிக்கு பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

பிருந்தன் & கறுப்பி அவர்களின் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி. கறுப்பி கூறிய படி படத்தின் படத்தொகுப்பு (editing) நிறைவாக இல்லை தான்! நடித்தவர்கள் அனைவரும் சக மாணவர்கள். சிலர் நடிப்பு துறையை சார்ந்தவர்கள் இல்லை அதனால் தான் அவர்கள் கதாப்பாத்திரத்தை சரிவர செய்யவில்லை....

சரி சரி அடுத்தது ஒரு இந்திய அரசியல் வரலாறு (மகாத்மா காந்தி) பற்றிய படம்

காந்தி நல்லவரா? கெட்டவரா?

அது சரி அஜீவன் அண்ணா எங்கே? அவரது விமர்சனத்திற்கு காத்திருக்கின்றேன்

அன்பின் நந்து

உங்கள் படைப்பை பார்க்கக் கிடைத்தது.

முயற்சிக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்......

என் இந்த பார்வை கூட

உங்கள் முயற்சிகள் தொடருவதற்காகவே அன்றி

தடைக்கல்லாய் அமைவதற்காக அல்ல.

இது குறும்படம் என்பதை விட ஒரு பெரிய படத்தின் கருவை

குறுக்கி எடுத்திருக்கிறீர்கள் என்றே சொல்வேன்.

குறும்படத்தில் தொழில் நுட்ப விடயங்களை பிரமாண்டங்களை விட

கதையின் கருதான் மிக முக்கியமானது.

அதை இங்கே தவற விட்டு இருக்கிறீர்கள்.

தேவையானதை விட

தேவையற்ற பிரமாண்டங்களுக்கு முக்கியம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு திரைப்படத்தின் அறிமுகம் என்பது

முக்கிய கதாபாத்திரத்தை பார்வையாளர் மனதில்

பதிய வைப்பதிலிருந்துதான் தொடங்குகிறது.

அதை முதலில் படைப்பாளிகள் மறக்கக் கூடாது.

காதல் வசப்பட்ட ஒரு ஜோடியை

காணும் ஒரு ரவுடிக் கும்பல்

காதலனை தாக்கி

காதலியை தூக்கிச் சென்று கற்பழிப்பதால்

காதலி கொல்லப்படுகிறாள்.

பின்னர்

தாக்கப் பட்ட காதலன் காதலியின் சகோதரியுடன் சேர்ந்து

அவர்களை பழி வாங்குகிறார்கள் இதுதான் கதைக் கரு.

ஆனால் படத்தின் அறிமுகமாக ஆங்கில இசையோடு

மோட்டார் சைக்கிளில் பவனி வரும் இளைஞர்களோடு படம் தொடங்குகிறது.

கதை இவர்களை சுற்றியிருக்கும் என்று நினைத்தால்......இல்லை?

ஒரு காதலர் ஜோடியை இவர்கள் வளைய வருகிறார்கள்.

அங்கு கூட தனி தனியாக வந்தவர்களில்

ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இருக்கிறார்கள்.

இதை கண்டினிவேசன் மிசிங் என்பார்கள்.

இதிலிருந்துதான் தொய்வு தொடங்குகிறது.....?

தாக்குதல்.........

தூக்கிச் செல்லல்........

பாலியல் வல்லுறவு......

பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் இறந்து விட்ட காட்சி

யதார்த்தமாகவே இல்லை.

அதன் பின்னர் ஒரு தாதாவை காதலனும் காதலியின் சகோதரியும் சந்திப்பது

பணம் கொடுப்பது

ஒரு குத்துச் சண்டை போட்டியில் தாக்குவது

குத்துச் சண்டை வீரனுக்கு ஏதோ கலந்து பருகக் கொடுப்பது

இறுதியில் வெளியே வரும் பெண்ணை சுட முயல்பவனை

பின்னால் இருந்து சுட்டுக் கொன்று விட்டு

பழி தீர்த்து விட்டதாக சமாதியில் இருவரும் நின்று

அஞ்சலி செலுத்துவது..........

இவை ஏகப்பட்ட இந்திய சினமாக்களில் வந்த சமாச்சாரங்கள்தான்?

ஒளிப்பதிவு லைட்டிங் போன்றவற்றின் வெற்றிகள் கூட

திராணியற்ற கதைக் கருவாலும்

தேவையற்ற பாத்திர திணிப்புகளாலும் பலகீனமாக்கியிருக்கிறது.

இஸ்பெசல் இப்பெக்கட்கள் கூட ஓவராகி விட்டது.

அதை அளவோடு பாவித்திருக்கலாம்.

பின்னணி இசை கூட களைப்பை ஏற்படுத்துகிறது.

அவர்கள் பேசும் வார்த்தைகளை அவை மழுங்கடித்திருக்கிறது.

தேவையற்ற திணிப்புகளை

தயவு பாராமல் தூக்கி விட்டு

மீண்டும் முறையாக தொகுத்தால்

கடுகு போல் இது காரமாக இருக்கும்.

படத் தொகுப்பை எப்படி மாற்றலாம் என்று என்னிடம் கேட்டால்

இப்படிச் சொல்வேன்:-

பார்க்கில் இருக்கும்

காதலர்களை முதலில் காட்ட வேண்டும்.

அடுத்து திடீரென அங்கு வந்து சுற்றும்

மோட்டர் சைக்கிள் இளைஞர் கும்பல்.

காதலனை தாக்கிவிட்டு

காதலியை தூக்கிச் சென்று கெடுக்கிறார்கள்.

(கெடுக்கும் போது

காதலி எதிர்பாராமல் இறந்து விடுகிறாள் இல்லையா?

இதைக் கூட இறந்தாக காட்ட வேண்டாம் என்பேன்.)

அவளை கெடுத்து விட்டு ஒவ்வொருவராக வருகிறார்கள்.

காதலன் அடிபட்டு விழுந்து கிடக்கிறான்.

இப்போது அந்தக் குழு

இவை சர்வ சாதாரணம் இவர்களுக்கு என்பது போல

மோட்டார் சைக்கிளில் போவதை காட்டலாம்.

(ஆரம்ப மோட்டர் சைக்கிள் காட்சியை இங்கே மாற்றச் சொல்கிறேன்.

இது பார்வையாளர்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும்.......அத்தோடு தூக்கிச் சென்ற காதலிக்கு என்ன நடந்தது என்ற ஒரு தேடுதலை பார்வையாளர் மனதில் உருவாக்கும்.)

இப்போது காதலன் மற்றும் சகோதரி வருகிறார்கள்.

காதலி இறந்து கிடப்பதை பார்க்கிறார்கள்.

பின்னர்

அவர்கள் ஒரு தாதாவை தேடிச் செல்கிறார்கள்.

பணப் பெட்டியை கொடுக்கிறார்கள்.

வெளியே மோட்டர் சைக்கிள் குழு காத்து நிற்கிறது.

அவர்களுக்குள் இருப்பவர்களில் பலர் விலகிப் போக

ஒருவன் மட்டும் காத்து நின்று சகோதரியை சுட முயல்கிறான்.

ஆனால் அவனுக்கு சூடு விழுகிறது.

பின்னால் காதலன் அவனை சுட்டு விட்டு துப்பாக்கியோடு நிற்கிறான்.

சகோதரி கையில் அணிந்திருக்கும் வளையத்தை

கழட்டி சமாதி மேல் வைக்கிறாள்.

இதுவே அவளது பழியின் அடையாளமாகிறதாகிது.......

இப்படி தொகுப்பை மாற்றி பாருங்கள்.

குத்துச் சண்டை தேவையேயற்றது.

அடுத்து திணிப்பான இசையை குறைக்க வேண்டும்.

எதிர்காலத்தில் திறன் கொண்ட ஒரு படைப்பாளியாக வளர வாழ்த்துகள்.

கருத்துகளை தவறாக எடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி நந்து!

இங்கே சில எழுத்து திருத்தங்களோடு

சில கருத்துகளை சேர்க்க பார்த்தால்

அதற்கான வசதி தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஏன் என்று புரியவில்லை.

யாழ் கள நிர்வாகிகள்

அதை சரி செய்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நந்துவுக்கு என் வாழ்த்துக்கள்.முயற்சி திருவினையாக்கும்.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் உங்க கருத்துக்கள், மாற்றிய கதை வடிவம் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நந்து.இன்னும் படைப்புகளைத் தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், தாமதத்திற்கு மன்னிக்கவும், அஜீவன் அண்ணவின் கருத்துக்கள் ஆழமாகவும் எனது பார்வையை கூர்மையாக்குவதாகவும் இருந்தது, மிக்க நன்றி. உங்களைப்போன்றவர்களின் வழிகாட்டல் தான் என் போன்ற கத்துக்குட்டிகளை சீர்படுத்தும். இப்படத்தின் இயக்குனர் இப்பொழுது கல்கட்டாவில் உள்ளான், அவனுக்கு மின் அஞ்சல் முலம் உங்களது கருத்துக்களை அனுப்பி வைத்துள்ளேன். மீழொலுங்கு படுத்தப்பட்ட பிரதி கிடைத்ததும் இங்கு இணைத்து விடுகின்றேன்.

கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி நந்தா.

உங்களைப் போன்ற படைப்பாளிகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிகள்

தாமதமாக இருந்தாலும் எமக்கான முக்கிய தேவையாக இருக்கிறது.

உங்கள் வளர்ச்சிகான வாழ்த்துகள் என்றென்றும்...........

நந்துவுக்கு என் வாழ்த்துக்கள...icon_b.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.