Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச

Featured Replies

புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச
 
 
புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச
வட பகுதியில் புத்தர் சிலைகளை நிறுவுவதை தடுப்பதற்காக மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் வழங்கியது யார் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பௌத்த சிலைகளை அமைக்க வேண்டாம் என்று பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடமாகா ணத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த நீதியமைச்சர், தற்போது நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பையில் எறிவதாகவும் கூறினார்.
 
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இதன்படி இன்றைய தினம் நீதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெற்றது. 
 
வடக்கில் அத்துமீறிய புத்தர் சிலை வைப்புகளுக்கு எதிராக வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், நீதியமைச்சருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடை பெற்றது.
 
இதன்போது உரையாற்றிய நீதியமைச்சர், “வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க இடமளிக்கக்கூடாது என்ற பிரேரணை ஒன்றை வடமாகாண முதலமைச்சர் மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளார். அவ்வாறான அதிகாரம் அவருக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை கேட்க விரும்புகிறேன். ஆரசியலமைப்பு அல்லது வேறு எந்த சட்டத்தைப் பயன்படுத்தி முதலமைச்சர் இந்தப் பிரேரணையை கொண்டுவந்தார்? எனினும் அப்படியொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அதற்கான சட்டஅனுமதி கிடைப்பதில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் எம்மால் முடியாது. எனவே அந்தப் பிரேரணை குப்பைத் தொட்டியில் போடப்படுகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாணத்தை அவமானப்படுத்தியுள்ளார். அவர் உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தார் என்பதோடு எமது கௌரவத்திற்கும் உரித்தானவர்” – என்றார்.
 
இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நீதியமைச்சருக்கு விளக்கம் வழங்கினார்.
 
இதனையடுத்து தனது உரையை தொடர்ந்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச “மாகாண சபைகளுக்கு உரித்தான அதிகாரங்கள் தொடர்பாக அரசியலமைப்பின் 154ஆவது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்.
 
இதன்போது குறுக்கீடு செய்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக இருக்கின்றார். யாருக்கும் பொறுப்பொன்று இருக்கிறது. நூறு வீதம் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தாலும் அங்கு 15 தொடக்கம் 18 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதி என்பதோடு 97 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்த பகுதியுமாகும். ஆவர்களை அங்கியிருந்து வெளியேற்றிவிட்டு நூறுவீதம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் கெஹலிய ரம்புக்வெல எம்.பியின் இந்தக் கூற்றை நிராகரித்த ஸ்ரீதரன் எம்.பி பதிலளித்தார். முஸ்லிம் மக்களின் குடியேற்றங்களை தாம் எதிர்க்கவில்லை என்றும், வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளையே எதிர்ப்பதாகவும் கூறினார்.
 
இதனைத் தொடர்;ந்து சபையில் உரையை மீண்டும் தொடர்ந்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச “சிலருக்கு இனவாதமே ஒட்சிசனாகும். நாங்கள் வடமாகாண முதலமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை மதிக்கின்றோம். இந்தக் குழுவினர் அப்படியான சிந்தனையில் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் மற்றுமொரு பிரதிநிதிகளான வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான சபையிலுள்ள உறுப்பினர்கள் இந்தத் தேசியத் தலைவர்களுக்கு மேல்தான் தாங்கள் இருக்கின்றோம் என்பதை தமிழ் மக்களுக்கு முன்பாக நிரூபிக்க முனைகின்றனர்” – என்றார்.

http://www.onlineuthayan.com/news/21130

  • தொடங்கியவர்

வடக்கில் விகாரைகளை அமைக்க முடியாதென தீர்மானிப்பதற்கு வடமாகாண சபைக்கு அதிகாரம் இல்லை

555-f884461bd0e0b6b678497ff8081bff3c292b0678.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
ஒரு எழுத்தும் எழுதப்படாத புதிய அரசியலமைப்பை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் நீதி அமைச்சர்

ஒற்றையாட்சிக்கும் பௌத்த மத முன்னுரிமைக்கும்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆதரவு

பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு அவசியம்

விக்கினேஸ்வரன் பொறுப்புடன் செயற்பட வேண்டும்

நல்லிணக்கம் இன்றேல் நாடு அழிந்துவிடும்

வடக்கில் பெளத்த விகா­ரைகள் அமைக்க முடி­யாது என தீர்மானம் நிறை­வேற்­று­வ­தற்கு வட­மா­காண சபைக்கு அதிகாரம் இல்லை. இத்தகைய 

தீர்மானங்கள் குப்பை கூடைக்குள்­ளேயே செல்லும் என நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்தார். 

ஒரு எழுத்து கூட எழு­தப்­ப­டாத, புதிய அர­சி­ய­ல­மைப்பை விமர்­சிக்க வேண்டாம். ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வை பெற்று கொள்­வ­தற்கும் பெளத்த

மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கும்

 தமிழ் மக்­களின் தலைவர் இரா.சம்­பந்தன் எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை என நீதி அமைச்சர் சுட்டிக் காட்­டினார். 

குறு­கிய அர­சியல் நோக்கம் உடைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு 

இன­வா­தமே ஒட்­சிசன் அழிக்­கின்­றது. ஞான­சா­ர­தேரர் உள்­ளிட்டோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடியும். எனினும் பேச்­சு­வார்த்தை மூலமே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை எட்ட விரும்­பு­கிறோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அத்­துடன் வட­மா­காண முத­ல­மைச்சர் முன்னால் நீதி­ய­ரசர் என்ற வகையில் பொறுப்­புடன் செயற்­பட வேண்­டு­மென கோரிக்கை விடுத்த நீதி அமைச்சர், ஆளு­நரின் அதி­காரம் குறைக்­கப்­ப­டுதல் உள்­ளிட்ட விட­யங்கள் யோசனை மட்­டத்­தி­லேயே உள்­ளன எனவும் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை புத்­த­சா­சன செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே நீதி அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். நாம் மீளவும் பின்­நோக்கி செல்­வ­தற்கு தயா­ரில்லை. அடிப்­ப­டை­வா­தி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எம்மால் இட­ம­ளிக்க முடி­யாது. நாட்டு மக்கள் மத்­தியில் இன நல்­லி­ணக்கம் உள்­ளது. ஆனாலும், அர­சி­யல்­வா­தி­களின் குறு­கிய அர­சியல் நோக்­கத்­திற்­காக இன­வா­தத்தை தூண்டி வரு­கின்­றனர். இன­வா­தத்தை முழு­மை­யாக நாம் இல்­லாமல் செய்ய வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யா­விடின் இலங்­கையின் அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. 

இன­வா­தமே சில குறு­கிய நோக்கம் கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் ஒட்­சி­ச­னாக உள்­ளது. ஒட்­சிசன் இல்­லாது போனால் வாழ்­வில்­லாமல் போகும். அது போலவே இன­வா­தத்தை தூண்டும் அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பாடு உள்­ளது. இன­வா­தத்தை நாம் முழு­மை­யாக நிறுத்த வேண்டும். 

இதே­வேளை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் வடக்கில் விகா­ரைகள் அமைக்க முடி­யாது என மாகாண சபையில் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்ளார். சி.வி.விக்­னேஸ்­வரன் ஒரு நீதி­ய­ரசர். இவ்­வா­றான தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்­று­வ­தற்கு என்ன அதி­காரம் உள்­ளது? சட்ட பிர­காரம் மாகாண சபை­க­ளுக்கு இவ்­வா­றான அதி­காரம் கிடை­யாது. எந்த சட்­டத்தின் கீழ் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. சட்­டத்தின் அடிப்­ப­டையில் இது குப்பை கூடைக்கே செல்லும்? 

இதன்­போது குறுக்­கிட்ட சிறி­தரன் எம்.பி.கேள்வி எழுப்­பு­கையில் 

வடக்கு மாகா­ண­சபை தீர்­மா­னத்தில் விகாரை எதுவும் அகற்­றப்­பட வேண்டும் என குறிப்­பி­ட­வில்லை. மாறாக 100 வீதம் தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில் புதிய விகா­ரைகள் அமைக்க கூடாது என்றே தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. தவ­றான கருத்தை முன்­வைக்க வேண்டாம் என்றார். 

இதற்கு பதி­ல­ளித்த கெஹ­லிய எம்.பி. வடக்கு 100 வீதம் தமிழர் வாழும் இடம் என கூற முடி­யாது. வடக்கில் 90,000 முஸ்­லிம்கள் வாழ்ந்­தனர். சிங்­க­ள­வர்கள் 15,000 பேர் வாழ்ந்­தனர். அவர்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்ய இடம் வழங்­கு­வ­தில்லை. இப்­படி இருக்­கும்­போது எப்­படி வடக்கில் 100 வீதம் தமி­ழர்கள் என கூற முடியும் என்றார். 

இ.தற்கு பதி­ல­ளித்த சிறி­தரன் எம்.பி. 

முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­வதில் எமக்கு பிரச்­சினை இல்லை. எனினும் கோல்பேஸ் சிங்­க­ள­வர்கள் வாழும் பகு­தி­க­ளுக்கு சென்று பல­வந்­த­மாக கோயில் நிர்­மா­ணிக்க முடி­யுமா-? என்றார்.

இதன்­போது தனது உரையை தொடர்ந்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ, 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்டு வரு­கின்­றது. இது பாராட்­டத்­தக்­கது. ஆனாலும், மாகாண சபை­க­ளுக்கு தீர்­மானம் நிறை­வேற்றும் அதி­காரம் கிடை­யாது.

முன்னாள் நீதி­ய­ரசர் என்ற வகையில் சி.வி. விக்­னேஸ்­வரன் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். அத்­துடன் தற்­போது சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் வணங்­காத தெய்வம் இல்லை. கோயி­லுக்கு சென்று விஷ்ணு, முருகன், சிவன், புத்தர் என அனை­வ­ரையும் வணங்­கு­கின்­றார்கள். நயி­னா­தீவு விகா­ரை­களில் அதி­க­ளவு இருப்­பது தமி­ழர்­க­ளாகும். எனினும் கோயில் விகா­ரை­க­ளுக்கு அனைத்து தெய்­வங்­க­ளையும் வணங்கி விட்டு வெளியே வந்து இந்து, பௌத்தம் என சண்­டை­யிட்டு கொள்­கின்­றனர். இதனை பார்த்தால் தெய்வம் கூட வியந்து போவார். இவர்கள் எம்மை வணங்­கு­வ­தனை நினைத்து தெய்­வமே இழி­வாக சிரிக்கும் நிலைமை ஏற்­படும்.

இதன்­போது கேள்வி எழுப்­பிய வியா­ழேந்­திரன் எம்.பி. 

மட்­டக்­க­ளப்பில் பொது­ப­ல­சேனா செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் நீதி­மன்ற அறி­விப்பை கிழித்­தெ­ரிந்­த­போதும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றார். 

இதன்­போது அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­றும்­போது 

உண்­மையில் அந்த சம்­பவம் மிகவும் தவ­றா­னது. இதற்கு எதி­ராக சட்­டத்தை நிலை­நாட்ட முடி­யாமல் இல்லை. எனினும் நாம் சிறிய, சிறிய பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்து செயற்­ப­டு­வ­தனை விட பேச்­சு­வார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இதற்­காக ஜனா­தி­பதி தலை­மையில் சர்­வ­மத கலந்­து­ரை­யா­டலை நடத்தி தீர்க்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். பேச்­சு­வார்த்தை மூலம் அவ­நம்­பிக்­கையை இல்­லாமல் செய்ய வேண்டும். எமக்கும் வேதனை உள்­ளது. இதனை தீர்க்­கவே நாம் முனை­கிறோம் . 

புதிய அர­சி­ய­ல­மைப்பு

புதிய அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டாது என கூறு­கின்­றனர். ஒரு எழுத்­தேனும் எழு­தப்­ப­டாத அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தேவை­யற்ற பொய் பிர­சாரம் செய்ய வேண்டாம்.

இதன்­போது கேள்வி எழுப்­பிய கெஹ­லிய எம்.பி. 

உப­குழு யோசனை பிர­காரம் ஆளு­நரின் அதி­காரம் குறைக்க போவ­தாக கூறு­கின்­றனர் என்றார். 

இதன்­போது உரையை தொடர்ந்த அமைச்சர்;

புதிய அர­சி­ய­ல­மைப்பு இன்னும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. உப குழுவின் யோசனை மட்­டுமே கிடைக்க பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்த உயரிய பாராளுமன்றமே நிறைவேற்றும். நாமே தயாரிக்க போகிறோம். அவ்வாறான யோசனையை நாம் நிறைவேற்ற மாட்டோம். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கூட உடன்பட்டுள்ளார். அத்துடன் கர்தினால்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆகவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை. அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்படும் இரா.சம்பந்தன் கூட சமஷ்டி அல்லாமல் ஒற்றையாட்சி மூலமே தீர்வுகாண வேண்டும் என கூறியுள்ளார். எனவே ஒற்றையாட்சியே தீர்வு என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:
புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச
 
புத்த சிலைகளை அமைக்க வேண்டாம் என்று பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடமாகா ணத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த நீதியமைச்சர், தற்போது நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பையில் எறிவதாகவும் கூறினார்.

வடமாகாணத்தில் அமைக்கப்படும் புத்த சிலைகளை  குப்பையில் எறிவோம் என தமிழன் சொல்லமாட்டான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.12.2016 at 5:23 PM, நவீனன் said:
புத்தர் சிலையை அமைக்கவேண்டாமென்ற வடக்கின் பிரேரணை குப்பைத் தொட்டியில் எறியப்படும் -நீதியமைச்சர் விஜேதாச
 

தமிழனை மாதிரி ஒரு நல்ல இனத்தின் அருமை தெரியாமல் பேசுகின்றீர்கள்.
ஐரோப்பிய அமெரிக்க மத்தியகிழக்கில் உள்ள ஒருசில நாடுகளில் வாழ்ந்து பாருங்கள் தமிழனின் அருமை தெரியும்.
ஏன் அண்டை நாடான பாகிஸ்தான் வட இந்தியாவில் வாழ்ந்து பாருங்கள் தமிழனின் அருமை தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.