Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைப் பீடித்திருந்த தலைவலி தீர்ந்துவிட்டது

Featured Replies

இலங்கையைப் பீடித்திருந்த தலைவலி தீர்ந்துவிட்டது

02-ee82ad270468a91c8a06191306dd58f711a1e7ad.jpg

 

ஜெயாவின் மறைவு குறித்து ஹெலஉறுமய
(ஆர்.யசி)

எதி­ரி­யாக இருந்­தாலும் ஜெய­ல­லி­தாவின் ஆத்மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திக்­ கின்றோம். ஆனால் இலங்­கையைப் பீடித்­தி­ருந்த தலை­வ­லியும் தொல்­லையும் ஜெய­ல­லி­தாவின் மர­ணத்­தோடு விடு­பட்­டதை எண்ணி நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம் என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க தெரி­வித்தார்.  

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியை சந்­தித்த ஹிலாரி கிளிண்­டனை எண்­ணியும் சமந்தா பவர் மற்றும் நிஷா பிஸ்வால் ஆகி­யோரும் விடை­பெற்­றுள்­ள­மையை எண்­ணியும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­யினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

எதி­ரி­யாக இருந்­தாலும் அவர்­க­ளது மரணம் யாருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் அமை­யாது. அத்­துடன் யாராக இருந்­தாலும் அவர்­க­ளது ஆத்மா சாதிக்­காக பிரார்த்­திக்க வேண்டும். ஆகவே தமி­ழக முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா ஜெய­ராமின் ஆத்மா சாந்­தி­ய­டைய பிரார்த்­திக்­கின்றோம். எனினும் இன்­னொரு விதத்தில் அவ­ரது மரணம் எமக்கு மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. அதா­வது இது­வரை காலமும் இலங்­கைக்கு தலை­வ­லி­யாக இருந்த ஜெய­ல­லி­தாவின் தொல்­லைகள் இனி ஒரு­போதும் இருக்­காது என்று நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். அதேபோல் தற்­போ­தைய புதிய முதல்வர் பன்­னீர்­செல்வம் இலங்­கை­யுடன் நல்ல நட்­பு­றவை கையாண்டு செயற்­ப­டுவார் என்று நம்­பு­கின்றோம்.

 போர்க்­குற்ற விவ­காரம் தொடர்­பிலும் எமது இரா­ணுவம் குற்­ற­வா­ளிகள் எனவும் தொடர்ச்­சி­யாக எம்­மீது குற்றம் சுமத்­தி­யவர் ஜெய­ல­லிதா. அதேபோல் எமது விளை­யாட்டு வீரர்­களை தமிழ் நாட்டில் எந்த மைதா­னங்­க­ளிலும் விளை­யாட அனு­ம­திக்­காது அவ­ம­தித்­த­துடன் எமது பெளத்த பிக்­குகள் அங்கு செல்ல இய­லாத வகையில் அவ­மா­னப்­ப­டுத்­தி­னார்கள். கச்­ச­தீவு இலங்­கைக்கு சொந்­த­மான பின்­னரும் கச்­ச­தீவை அப­க­ரிக்க முயற்­சித்து வந்தார்.

இந்­திய மத்­திய அர­சுக்கு தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்தும் ஒரு கட்­டத்தில் எந்த வகை­யி­லேனும் கச்­ச­தீவை கைப்­பற்றும் முயற்­சி­களை எடுக்க வேண்டும் என்றும். கொடுத்தார். வடக்கு மீன­வர்கள் சுதந்­த­ர­மாக மீன்­பி­டியை மேற்­கொள்ள முடி­யாத வகையில் தமி­ழக மீன­வர்­களின் ஆக்­கி­ர­மிப்பு காணப்­பட்­டது. எமது கடல் வளங்கள் சூறை­யா­டப்­பட்­டன. அப்­போ­தெல்லாம் வாய் திறக்­காது தமது சுய­ந­லத்தை மாத்­திரம் கருத்­தில்­கொண்டு ஆட்சி நடத்­தினார்.

 வடக்கு கிழக்கில் தமிழ் மக்­களை தூண்டும் செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் தமி­ழக அரசின் செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. வடக்கு கிழக்கு மக்­களை தூண்­டி­யதும் இன­வாத கருத்­துக்­களை பரப்­பி­ய­மையும் அதேபோல் இலங்­கையின் அர­சியல் பிரச்­சி­னையை வைத்து அங்கு அர­சியல் வாய்ப்­பு­களை தேடி­ய­மையும் நன்கு தெரிந்த விட­யங்­க­ளே­யாகும். ஆகவே சகல விதத்­திலும் இலங்­கைக்கு தலை­வ­லி­யாக இருந்த தமி­ழக முதல்­வரின் மரணம் எமக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதேபோல் இன்­னு­மொரு பெண்ணின் தோல்­வியை எண்­ணியும் நாம் மகிழ்ச்சி அடை­கின்றோம். அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியை சந்­தித்த ஹிலரி கிளிண்­டனை எண்ணியும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவரும் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட ஒருவர். அவருடன் இணைந்து சமந்தா பவர் மற்றும் நிஷா பிஸ்வால் ஆகியோரும் விடைபெற்றுள்ளமை இலங்கைக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது.ஆகவே இலங்கை பாரிய அழுத்தங்களில் இருந்து விடுபட்டுள்ளமை மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகவே உள்ளது என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும், கடந்த 30 வருடங்களாக நீங்கள் பிச்சை எடுக்காத நாடு எது?

வாழ்க்கை ஒரு, வட்டம் எங்கள் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை கண்டு.... இலங்கையும்,  "ஹெல உறுமயவும்"  பயப்பட்டதை  நினைக்க, எமக்கு... பெருமையாக உள்ளது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.