Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை அருகே கரையைக் கடக்கிறது 'வார்தா' புயல்

Featured Replies

சென்னை அருகே கரையைக் கடக்கிறது 'வார்தா' புயல்

 

 
 
 
 
  • சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன்
    சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன்
  • செயற்கைக்கோள் புகைப்படம் | 12.12.2016 காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்டது.
    செயற்கைக்கோள் புகைப்படம் | 12.12.2016 காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்டது.
 

அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

* உதவி எண்கள் அறிவிப்பு:

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொலைபேசி எண்கள்:

044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570

வாட்ஸ் அப் எண்கள்:

94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207,

* ரயில்கள் ரத்து:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து

ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி என்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.

* வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

* வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா' என்று அர்த்தம்.

* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி:

கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.

அது, மேலும் வலுப்பெற்று புயலாகியது. இதற்கு ‘வார்தா’ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து வார்தா புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வார்தா புயலானது சென்னை அருகே கரையைக் கடக்கவிருக்கிறது.

10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வார்தா புயல் உருவானதிலிருந்து தமிழகத்திலுள்ள துறைமுகங்களுக்கு 11-வது முறையாக எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மிக அபாயகரமான எச்சரிக்கையாக, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக் கால் ஆகிய துறைமுகங்களில் 8-ம் எண், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், அந்த துறைமுகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-அருகே-கரையைக்-கடக்கிறது-வார்தா-புயல்/article9422687.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னையில் இருந்து 87 கி.மீ தூரத்தில் வர்தா புயல்

vardah_400_10580.jpg

சென்னைக்கு கிழக்கே 87 கி.மீட்டர் தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதிதீவிர புயலான வர்தா பழவேற்காடு அருகே கரையை கடக்கும் என கூறப்படுகிறது. காற்றின் வேகம் 120 கி.மீ வரை இருக்கும். மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. தற்போது வரை 67 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/74702-vardah-cyclone-updates-occurs-87-kms-from-chennai.art

  • தொடங்கியவர்

வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது அச்சத்தில் தமிழகம்:-

sea-waves2

வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது –

சென்னையில் 52 மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு –

சென்னையில் தற்போது 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது –

வர்தா புயல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிப்பு –

உதவி எண்கள்: 044 – 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 –

சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுகிறது –

சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலைகள் மரங்கள் விழுந்தன –

சாலையில் விழும் மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன –

சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் –

பழவேற்காடு- ஸ்ரீஹரிகோட்டா இடையே பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் வர்தா புயல் கரையை கடக்கும் –

சென்னைக்கு வரும் ரயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பிவிடப்பட்டன –

தாழ்வான பகுதிகளில் இருந்து 4622 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் –

சென்னை திருவொற்றியூரில் வீட்டு சுவர் இடிந்து 2 பேர் காயம் –

பேசின்பிரிட்ஜ், மணலி, தாம்பரம், மகாபலிபுரம், புதுவையில் பேரிடர் மீட்பு குழு முகாம் –

சென்னை கடற்கரை- வேளச்சேரி புறநகர் ரயில் போக்குவரத்தும் ரத்து –

சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் ரத்து –

சென்னையில் 25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

சென்னையில் 9 விமானங்கள் தாமதம்- 5 விமான சேவைகள் ரத்து –

திருவள்ளூர், பழவேற்காடு பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது –

சென்னை நேப்பியார் பாலம் அருகே மரம் விழுந்தது-

போக்குவரத்து மாற்றம் – சென்னையில் சாலைகள் வெறிச்சோடின -சென்னை பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லை –

சென்னையில் பலத்த காற்று வீசுகிறது -கடற்கரை சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதி -பலத்த காற்று வீசுவதால் விமானங்கள் ரத்து -விமானங்கள் அருகே உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன –

சென்னையை நெருங்குகிறது வர்தா புயல் -சென்னைக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் வர்தா புயல் –

சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகருகிறது வர்தா புயல் -சென்னையில் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் –

சென்னையில் பேய் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது –

சென்னை கோட்டூர்புரத்தில் மரம் முறிந்து விழுந்தது- 2 பேர் படுகாயம் –

வர்தா புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் –

வானிலை மையம் -கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் எழுவதால் மீனவர்கள் அச்சம் –

கடற்கரை அருகே வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றம் –

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம் –

24 மணிநேரத்தில் சென்னையில் 6 செ.மீ மழை -சென்னைக்கு கிழக்கே 142 கி.மீ. தொலைவில் வர்தா புயல் –

வர்தா புயலால் பழவேற்காட்டில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது –

பலத்த காற்றால் பழவேற்காட்டில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன -பழவேற்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் கம்பிகள் அறுப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன

sea-waves1

தீவிரமானது வர்தா புயல்… 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை பதட்டத்தில் உறவினர்கள்:-

வர்தா புயல் தீவிரமடைந்து இன்று பிற்பகல் கரையை கடக்க உள்ளது. புயல் தீவிரம் அடைந்துள்ளதால் நான்கு நாட்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதியில் உள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் இன்று பிற்பகல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு 102 கி.மீ துரத்தில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மேற்கு திசை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று பிற்பகலில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாகவே வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாகை 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை

நாகை மாவட்ட மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்னதாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே வர்தா புயல் தீவிரமடைந்து இன்று கரையை கடக்க உள்ளதால், கடலில் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடலுக்குள் சென்ற 200 மீனவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இருட்டிய பழவேற்காடு கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சூறைக்காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்று பலமாக வீசுவதால் பழவேற்காடு மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பாதுகாப்பான இடத்தில் மக்கள்

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடல் கொந்தளிப்பு திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவொற்றியூர் பகுதியில் கடல் தடுப்பு கற்களைத் தாண்டி அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

http://globaltamilnews.net/archives/10044

 

  • தொடங்கியவர்

பேசும் படம்: சென்னையில் 'வார்தா' புயல் தாக்கம் | பகுதி 1

 

 
 
 
hi_3102808f.jpg
 
 
 

அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் திங்கள்கிழமை ஏற்பட்டுள்ள சேதங்களின் சில புகைப்படப் பதிவுகள்:

7_3102813a.jpg

6_3102814a.jpg

5_3102815a.jpg

4_3102816a.jpg

3_3102817a.jpg

2_3102818a.jpg

1_3102819a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சென்னையில்-வார்தா-புயல்-தாக்கம்-பகுதி-1/article9423462.ece?homepage=true

  • தொடங்கியவர்

பேசும் படம்: சென்னையில் 'வார்தா' புயல் தாக்கம் | பகுதி 2

 

 
 
 
rainnew_3102855f.jpg
 
 
 

அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் ஏற்பட்டுள்ள சேதங்களின் சில படங்கள்:

rain01_3102842a.jpg

சென்னை - போரூர் சிக்னலில் நீரில் நீந்தும் வாகனங்கள்.

rain001_3102854a.jpg

போரூர் சாலையில் காற்றடித்து விழுந்த விளம்பரப் பலகை.

rain02_3102843a.jpg

மியாட் மருத்துவமனை அருகே.

rain03_3102844a.jpg

போரூர் - கிண்டி சாலை

rain04_3102845a.jpg

கிண்டி கத்திப்பாரா பகுதியில் அடியோடு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி.

rain05_3102846a.jpg

சென்னை - சைதாப்பேட்டை அடையாறு பாலம்.

rain06_3102849a.jpg

நந்தனம் பகுதியில் விழுந்த மரங்கள்.

rain07_3102850a.jpg

தி.நகர் குடியிருப்புப் பகுதி.

rain08_3102851a.jpg

தி.நகர் குடியிருப்புப் பகுதி.

rain09_3102852a.jpg

அண்ணா சாலையின் ஸ்பென்சர் பிளாஸா சிக்னல்.

rain10_3102841a.jpg

சென்னை அண்ணாசாலை

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சென்னையில்-வார்தா-புயல்-தாக்கம்-பகுதி-2/article9423558.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது 'வார்தா' புயல்: 2 பேர் பலி; நிவாரணப் பணிகள் தீவிரம்

  • வார்தா புயல் காரணமாக சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது | படம்: எல்.சீனிவாசன்.
    வார்தா புயல் காரணமாக சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது | படம்: எல்.சீனிவாசன்.
  • சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் முறிந்து கிடக்கும் மரம் | படம்: எல்.சீனிவாசன்.
    சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் முறிந்து கிடக்கும் மரம் | படம்: எல்.சீனிவாசன்.
 

அதிதீவிர புயலான வார்தா சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. தற்போது, புயலின் மையப் பகுதி கடந்து வருகிறது. புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்போது அமைதி நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணிக்குப் பின் புயலின் மூன்றாவது பகுதி கரையைக் கடக்கும்.

இதற்கிடையில் வார்தா புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது 192 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு 3 மணி நிலவரம்:

வார்தா புயலில் மையப் பகுதி தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வார்தா புயலின் மேற்குப் பகுதி கரையை கடந்துவிட்டது. மையப் பகுதி தற்போது கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. 3 முதல் 4 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். மாலை 4 மணி முதல் 7 மணி வரை வார்தாவின் கிழக்குப் பகுதி கரையைக் கடக்கும். அப்போது பலத்து காற்று வீசும். இவ்வாறாக படிப்படியாக மூன்று நிலைகளில் வார்தா கரையை கடக்கும். இரவு 11.30 மணியளவில் வார்தா புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* புயல் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 266 முகாம்களில் 95 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மூன்று மாவட்டங்களில் 8008 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.

* சென்னையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* அடையாறு திருவிக பாலத்தில் மின் கம்பங்கள் சாய்ந்தன.

* வார்தா புயல் காரணமாக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

* சென்னை சாந்தோம், ராதாகிருஷ்ணன், கதீட்ரல் சாலைகளில் மரங்கள் விழுந்திருப்பதால் வேறு பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

* இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பி.தம்பி, "2.30 மணிக்கு மேல் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். புயல் முழுமையாக கடந்து செல்ல மாலை 6 மணியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

* சென்னையில் நகர் முழுவதும் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாக அதிமுக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* "சென்னை வாழ் பொதுமக்கள் இன்று (12.12.2016) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை மறு அறிவிப்பு வரும் வரை தங்களது வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய முன்னறிவிப்பு:

வார்தா புயல் பிற்பகல் 3.30 மணிக்கு மையப் பகுதி கரையைக் கடக்கும்

புயலின் மொத்த சுற்றளவு 90. கி.மீ அளவில் உள்ளது

புயலின் தாக்கம் 6 மணி வரை இருக்கும்

* வார்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 130 கி.மீ. முதல் 140 கி.மீ. வரை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* சென்னையில் பலத்த சூறைக் காற்று வீசிவருவதால் காற்றின் வேகம் குறைந்த பிறகே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* வார்தா புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணிக்கு கரையைக் கடக்கும் தற்போது புயலின் ஒரு பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பலத்த காற்று வீசி வருகிறது. மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது.

* சென்னை சென்டரலுக்கு வரவேண்டிய ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* செயற்கைக்கோள் புகைப்படத்தின் தகவலின்படி வார்தா புயல் கரையைக் கடந்துவிட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

* "வார்தா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தற்போது அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வார்தா புயலானது இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் தெற்கு ஆந்திரா, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 1 மீ. உயரத்துக்கு எழக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பகல் 2 மணி முதல் 5 மணிக்கு இடையே வார்தா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குகிறது.

* சென்னை நேப்பியர் பாலம் - காமராஜர் சாலையில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

* திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வார்தா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வார்தா அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 87 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னை வர வேண்டிய 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 25 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* உதவி எண்கள் அறிவிப்பு:

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொலைபேசி எண்கள்:

044 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570

வாட்ஸ் அப் எண்கள்:

94454 77201, 94454 77203, 94454 77205, 94454 77206, 94454 77207

2_3102823a.jpg

* ரயில்கள் ரத்து:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

ரயில் எண்: 66026 - சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரல் - முழுமையாக ரத்து

ரயில் எண் 12711 - விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12712 - மதியம் 2.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 66030 - நெல்லூர் - சூலூர்பேட்டை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* காலை 9.30 மணி நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. அளவு மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* 'வார்தா' புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் - குமிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற வீதத்திலேயே ரயில் இயக்கப்படுகிறது.

* வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வார்தா புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 3500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

* வார்தா என்ற பெயரை பாகிஸ்தான் நாடு சூட்டியுள்ளது. வார்தா என்றால் 'சிவப்பு ரோஜா' என்று அர்த்தம்.

* சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில்: வார்தா புயல் சென்னைக்கு அருகே 150 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

* மணிக்கு 13 கி.மீ வேகத்தில்: வார்தா புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தற்போது முன்னேறி வருகிறது. அது இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1_3102824a.jpg

 

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-அருகே-கரையைக்-கடக்கத்-தொடங்கியது-வார்தா-புயல்-2-பேர்-பலி-நிவாரணப்-பணிகள்-தீவிரம்/article9422687.ece?homepage=true

  • தொடங்கியவர்

பேசும் படம்: 'வார்தா' புயல் தாண்டவமாடிய சென்னை | பகுதி 3

 

 
hiks_3102967f.jpg
 
 
 

அதி தீவிர 'வார்தா' புயலின் தாக்கத்தால் மிக பலத்த காற்று மற்றும் கன மழையின் எதிரொலியாக, சென்னையில் ஏற்பட்ட சேதங்களின் புகைப்படத் தொகுப்பு:

chennairain8_3102928a.jpg

chennairain3_3102945a.jpg

chennairain21_3102946a.jpg

chennairain2_3102947a.jpg

chennairain14_3102948a.jpg

chennairain11_3102950a.jpg

chennairain10_3102951a.jpg

chennairain33_3102953a.jpg

chennairain4_3102954a.jpg

chennairain5_3102955a.jpg

chennairain12_3102956a.jpg

chennairain7_3102957a.jpg

chennai23_3102952a.jpg

chennai22_3102959a.jpg

chennai20_3102960a.jpg

chennairain9_3102962a.jpg

chennairain8_3102928a.jpg

chennai19_3102963a.jpg

chennai18_3102964a.jpg

chennai16_3102965a.jpg

4_3102969a.jpg

6_3102970a.jpg

3_3102972a.jpg

2_3102978a.jpg

1_3102979a.jpg

- படங்கள்: எல்.சீனிவாசன்

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-வார்தா-புயல்-தாண்டவமாடிய-சென்னை-பகுதி-3/article9423618.ece?homepage=true

  • தொடங்கியவர்

இருளில் மூழ்கிய சென்னை நகரம்: மின் இணைப்பு துண்டிப்பு

 

 
வார்தா புயல் தாக்கிய சென்னை | படம்: ம.பிரபு
வார்தா புயல் தாக்கிய சென்னை | படம்: ம.பிரபு
 
 

வார்தா புயல் ஏற்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூரிய வெளிச்சமும் இல்லாததால் பகலிலேயே சென்னை நகரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

வார்தா புயல் 12-ம் தேதி பிற்பகல் சென்னையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. கூடவே சாரல் மழையும் பெய்தது. நள்ளிரவு முதல் கன மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், இருள் சூழ்ந்தது. பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.

காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதியில் இருந்த பல மின் இணைப்பு பெட்டிகள் நீரில் மூழ்கின. மின் அதிகாரிகள் அதை உடனடியாக கண்டறிந்து மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பல இடங்களில் மின் மாற்றிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனாலும் மின் விநியோகம் தடைபட்டது.

மேலும் மழை காரணமாக சூரிய வெளிச்சம் இல்லை. இதனால், சென்னையில் பெரும்பாலான பகுதிகள் பகலிலேயே இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் உடல் நலமில்லாதவர்கள், முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/tamilnadu/இருளில்-மூழ்கிய-சென்னை-நகரம்-மின்-இணைப்பு-துண்டிப்பு/article9423728.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னையில் கோர தாண்டவமாடும் 'வர்தா' : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்களின் கண்ணா சரிந்து விழுந்தன ( காணொளி இணைப்பு)

 

 

CzeJ9qeWIAAQqLO.jpgசென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில்  நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு  பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 வர்தா புயல் காரணமாக பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை புயல் காரணமாக மூவாயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையால் மின்சார சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

வர்தா புயல், சென்னைக்கு அருகே பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை  கடக்க ஆரம்பமாகியுள்ளதால் 120 முதல் 140 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.vdha.jpg

 வர்தா புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு இரவு 7 மணிவரை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

 

சூறாவளி காற்று வீசிவருவதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Ddsds-vartha.jpg

கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.

பலத்த காற்றால் ஆங்காங்கே வீதிகளில்; மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. VVv-0025.jpg

இதனிடையே சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

http://www.virakesari.lk/article/14343

  • தொடங்கியவர்

வர்தா' புயலின் மையப் பகுதி சென்னையை கடந்தது

 
 

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயலான 'வர்தா', இன்று (திங்கள்கிழமை) மாலையில் சென்னைக்கு மிக அருகே கரையை கடந்ததாகவும், அது மேலும் தற்போதுதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு விழுந்த மரம்

 வர்தா புயலின் சீற்றத்தால் வேரோடு விழுந்த மரம்

இன்று காலை முதலே, சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கடும் புயலின் எதிரொலியாக, பொது மக்கள் யாரும் மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த புயலின் மையப்பகுதி கரையை கடந்த போது, அதன் வேகம் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இன்று நள்ளிரவு வரை புயலின் தாக்கம் வலுவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ( இரவு 7 மணியளவில்) தமிழகத்தின் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் போன்ற இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

 

ரெயில் சேவைகள் ரத்து

 ரெயில் சேவைகள் ரத்து

இன்று காலை முதலே, சென்னை. காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி இணைப்புகள், மற்றும் கைபேசிகள் ஆகியவை செயலிழந்துள்ளன.

சென்னையில் பல முக்கிய சாலைகளிலும் வர்தா புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

முன்னதாக, 'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்றிரவு(திங்கள்கிழமை)9 மணி வரை சென்னையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/india-38287770

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சீமான் அவர்கள் சொன்னதுபடி  ஒரு தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பது குறைந்த பட்சம் 0.5 % ஆவது நிறைவேறி இருக்கிறது ..ஒபிஸ் அவர்கள் குறைந்த பட்சம் இன்று கூட்டத்தை கூட்டி விவாதித்தார். எண்ணூர் முகாமில் ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் வழங்கினார்..

டிஸ்கி :

ரத்தம் ஒன்றுதான்... அது கட்டாயம் துடிக்கத்தான் செய்யும்..ஆனால் கடந்த வருட வெள்ளத்தின் போது ? அம்மா அனுமதி இல்லாமல் பேட்டி கொடுத்தால் போட்டியை எடுத்துவிடுவார்கள் ..என்று ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம் .. இன்று மின் நிலை சீராகிவிடும் என்று பேட்டி கொடுக்கிறார்கள். அட இத பார்றா.. அடிமை பாய்ஸ்க்கு வீரம் வந்திருச்சு..! நல்லது எதுவெண்டுமெண்டாலும் நடக்கட்டும் ஆனால் ஸ்டிக்கர் மட்டும் வேணாம் பிளீஸ் ..:cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

வர்தாவின் தாக்கம் : 9 பேர் பலி, 40 பேர் காயம், 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் பலத்த காற்றில் விழுந்தன    

 

 

120 தொடக்கம் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய வர்தா புயல் காரணமாக சென்னையில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். Untitled-D0012554-vardha.jpg

சென்னையில் வார்தா புயல் பாதிப்பு குறித்து  வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வார்தா புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 296 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 97 மையங்களில் 8,008 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10,754 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படைகள் காஞ்சீபுரத்தில் 2, திருவள்ளூரில் 3, சென்னையில் ஒன்றுமாக பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூரில் தலா 2 மாநில பேரிடர் மீட்புப்படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இதுவரை புயல் மழைக்கு 9 பேர் இறந்துள்ளனர். சென்னை மூலக்கடையில் குளிர் தாங்காமல் ஒருவரும், ஏழுகிணறு வைத்தியநாதன் தெருவில் வீடு இடிந்து ஆண் ஒருவரும், சூளைமேட்டில் சுவர் இடிந்து ஒரு பெண்ணும், வடபழனியில் சுவர் இடிந்து ஒரு குழந்தையும், தண்ணீரில் மூழ்கி ஒருவரும் இறந்துள்ளனர்.

 

 

மீனம்பாக்கத்தில் விளம்பர போர்டு விழுந்து ஒருவரும், ராஜமங்கலம் கொளத்தூர் செல்வி நகரில் விளக்கு கம்பம் விழுந்து வைகுண்டநாதன் (வயது 42) என்பவரும், திருவள்ளூர் மாவட்டம் போரூரில் சுவர் இடிந்து எல்பர்ட் என்கிற ராஜசேகரன் (23), செங்கல்பட்டு மேல்மெய்யூரில் அஸ்வதி (8) என்ற சிறுமி சுவர் இடிந்தும் பலியாகி உள்ளனர்.

திருவள்ளூரில் 21 குடிசைகள், காஞ்சீபுரத்தில் ஒரு குடிசை, விழுப்புரத்தில் 2 குடிசைகள் உள்பட 47 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 

இதுவரை 3,384 மரங்கள் விழுந்தன. அதில் 297 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 3,400 மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 

30 மின்சார டிரான்ஸ்போர்மர்கள் சேதம் அடைந்தன. 297 வீதிகள் மூடப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகு 89 வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

52 போக்குவரத்து சமிக்ஞை கம்பங்களும், 78 பஸ் நிறுத்த கூரைகளும் காற்றில் விழுந்தன.

சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.

கடும் மழை  

புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயலின் சீற்றம் காரணமாக 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 தொடக்கம் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

2ஆவது புயல் வர்தா: 

தமிழகத்தில் காலதாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ஆம் திகதி நடா புயல் உருவாகியது. இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கியது. 

 

 

இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. 

இருப்பினும், நடா புயலானது காரைக்கால் அருகே டிசம்பர் 2ஆம் திகதி கரையைக் கடந்தது.

வர்தா புயல் 

தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 

இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, விசாகப்பட்டினத்தின் அருகே நிலை கொண்டிருந்தது. 

இதனையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது தீவிர புயலாக மாறியது.

வடமேற்கு திசையில் நகர்வு: 

இந்தப் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்த புயலானது, ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

திசை மாறி தாக்கிய புயல்: 

இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது, சென்னைக்கு அருகே திங்கள்கிழமை நண்பகல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் மழை: 

சென்னைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவில் வர்தா புயல் சென்றபோதே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.

2 பிரிவுகளாக கரையைக் கடந்தது: 

வர்தா புயலானது திங்கள்கிழமை 2 பிரிவுகளாக மாறி கரையைக் கடந்தது. புயலின் மத்தியப் பகுதியானது திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை கரையைக் கடந்தது.

இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சூறைக் காற்றுடன் மழை பெய்துள்ளது.

 

வீட்டுக்குள் அனைவரும் முடக்கம்: 

புயலின் கிழக்குப் பகுதியானது மாலை 4 மணி முதல் 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தாலும், மழையின் தாக்கத்தாலும் மக்கள் வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கினர்.

 

மேலும் வலுவிழக்கும்: 

புயல் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நகர்ந்து செல்ல போது மேலும் வலுவிழக்கும். காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா நோக்கிச் சென்ற காற்று...: இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:-

அதிதீவிர புயல் வர்தா, சென்னை துறைமுகப் பகுதியில் நுழைந்து கரையைக் கடந்து திங்கள்கிழமை இரவு கிழக்கு திசையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

வலுவிழக்கும்: 

புயல் கரையைக் கடந்த பிறகு, தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கும். இதன் காரணமாக மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறையத் தொடங்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 160 மி.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கு தொடர் எச்சரிக்கை: 

புயலானது கரையைக் கடந்தாலும், தென்தமிழக கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரையில் பலமான காற்று இன்று வீசக்கூடும்.

மேலும் தமிழகம், புதுவை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வேண்டப்பட்டுள்ளனர்.

 கடலோரப் பகுதிகளில் குடிசைப் பகுதியில் வசிப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

http://www.virakesari.lk/article/14344

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: வார்தா புயல் விளைவுகள்

 
Vardh_3103233f.jpg
 
 
 

கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வகையில், புரட்டிப்போட்ட அதிதீவிர 'வார்தா' புயலின் கோரத்தாண்டவத்தால் தலைநகர் சென்னை சின்னா பின்னமானது. கனமழை, மரங்கள் வேருடன் சாய்ந்தது, போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை விளக்கும் படங்களின் சிறப்புத் தொகுப்பு.

vardh__9__3103178a.jpg

vardh__8__3103179a.jpg

vardh__7__3103180a.jpgvardh__6__3103181a.jpg

vardh__5__3103182a.jpg

vardh__4__3103183a.jpg

vardh__3__3103184a.jpg

vardh__11__3103186a.jpg

vardh__10__3103187a.jpg

vardh__1__3103188a.jpg

1_3103200a.jpg
கடற்கரை சாலையில் நேற்று மாலை போதுமான வெளிச்சம் இல்லாதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

 

2_3103199a.jpg
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி அருகே சாலையோரம் மரங்கள் விழுந்து கிடப்பதால் கனமழையில் ஓரமாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.(படம்: சி.காட்சன்)

 

3_3103198a.jpg
காமராஜர் சாலையில் கடும் மழையில் விளக்குகளை எரியவிட்டபடி வரும் வாகனங்கள்.

 

4_3103196a.jpg
கடும் புயல் காரணமாக காசிமேடு பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள்.

 

5_3103195a.jpg
பலத்த புயல் வீசிய நிலையிலும் குடையை பிடித்தபடி ஐ.சி.எஃப். அருகே சைக்கிளில் பயணம் செய்யும் இளைஞர்.

 

6_3103194a.jpg
காமராஜர் சாலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடம் அருகே சாலையில் தேங்கிய மழை நீரில் செல்லும் வாகனங்கள்.

 

7_3103206a.jpg
பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊர் செல்ல முடியாமல் தவித்த பயணிகள்

8_3103205a.jpg
பலத்த மழை காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மழை நீர் ஒழுகியதால் காலியாக உள்ள பயணிகள் இருக்கைகள்.

9_3103204a.jpg
பெரம்பூர், வீனஸ் சாலையோர மரம் பெயர்ந்து ஒரு வீட்டின் மீது விழுந்திருக்கிறதுபடம்: (எஸ்.பார்த்திபன்)

 

11_3103202a.jpg
கோட்டூர்புரத்தில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரம் (படம். ஆர்.ரகு)

 

12_3103201a.jpg
டாக்டர் பெசன் ட் சாலையில் வாகனங்கள் மீது சரிந்து கிடக்கும் மரங்கள் (படம். கே.வி.ஸ்ரீநிவாசன்)

 

13_3103213a.jpg
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் மெதுவாகச் செல்லும் வாகனங்கள்.

 

14_3103212a.jpg
காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சேப்பாக்கத்தில் கீழே விழுந்து கிடக்கும் இருசக்கர வாகனம்.

15_3103211a.jpg
அயனாவரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாகனம் மீது மரம் விழுந்தது. இதில் வந்த வாகன ஓட்டி நூலிழையில் தப்பினார்.

 

16_3103210a.jpg
சேதமடைந்துள்ள கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம்.

 

17_3103209a.jpg
போரூரில் சாலையில் தேங்கிய மழை நீரில் நீந்தியபடி வரும் வாகனங்கள்.(படம்: சி.காட்சன்)

 

18_3103208a.jpg
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில் சாலையில் வரிசையாக விழுந்து கிடக்கும் மரங்கள்.

 

19_3103221a.jpg
சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகில் சாலையில் ஏரி போல் தேங்கிய மழை நீர்.

20_3103220a.jpg
மெரினா கடற்கரைச் சாலை உழைப்பாளர் சிலை அருகே விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

21_3103219a.jpg
துறைமுகம் அருகே வழியை மறித்து விழுந்து கிடக்கும் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர்.

22_3103218a.jpg
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே சாலையை முற்றிலும் மறித்து விழுந்து கிடக்கும் மரங்கள்.

23_3103217a.jpg
நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் மரங்கள் விழுந்ததால் காட்டுக்குள் சிக்கிக் கொண்டது போல காட்சித் தரும் வாகனம்.

24_3103216a.jpg
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருள் சூழ்ந்து வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரையோர நடைபாதை.

25_3103215a.jpg
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புகுந்த மழைநீர்.

 

 

26_3103230a.jpg
சென்னை பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் பலத்த சூறைக் காற்றால் தள்ளாடும் தென்னை மரங்கள்(படம்: ஜி.கிருஷ்ணசுவாமி)

27_3103229a.jpg
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் மரம் விழுந்ததால், சேதமடைந்த கார் (படம்: தினேஷ் கிருஷ்ணன்)

 

28_3103228a.jpg
கோட்டூர்புரம் பகுதியில் மரம் விழுந்ததால் சேதமடைந்த கார் (படம். ஆர்.ரகு)

 

29_3103227a.jpg
சென்னை காமராஜர் சாலையில் புயல் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் கட்டிடத்தின் மீது விழுந்த விளம்பரப் பலகை (படம். கே.வி.ஸ்ரீநிவாசன்)

30_3103226a.jpg
சத்யம் திரையரங்கின் முன்னே வைக்கப்பட்டிருந்த சினிமா விளம்பரப் பதாகைகள் கிழிந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

31_3103225a.jpg
வாலாஜா சாலையில் உள்ள உணவகத்தின் பெயர்ப் பலகை பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.

32_3103224a.jpg
கதீட்ரல் சாலையில் மரத்துடன் சேர்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் (படம். ஆர்.ரகு)

 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படங்கள்-வார்தா-புயல்-விளைவுகள்/article9424475.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

வர்தாவுடன் சேர்ந்து மரங்களை வேட்டையாடிய மனிதர்கள்! #SaveTrees

 

Vardah

"வர்தா புயல்" சென்னையை சூறையாடி கடந்துள்ளது. அந்த புயல் தரைப்பகுதிக்கு வந்தாலும் இன்னும் பல நாட்களுக்கு அழிவில்லை. அரபிக்கடலில் ஒரு ஆட்டம் போட்டுவிட்டுதான் கலைய உள்ளது. புயலின் குணம் இயற்கையானது. நமது அறிவியல் கணிப்பின் படி அதன் நன்மை தீமைகள் பற்றி முன்கூட்டி அறிந்துமே இவ்வளவு சேதம். ஆனால் சென்னையில் வாழும் மனிதர்கள் நேற்று அந்த புயலை பயன்படுத்தி தங்கள் கொடூரத்தை காட்டினர். ஆம், புயலின் சூறாவளியால் பிடுங்கி எறியப்பட்ட மரங்களுக்கு ஈடான எண்ணிக்கையில் மரங்களை வெட்டி எறிந்தனர். 

`தங்களின் வணிக நிறுவனத்திற்கு இடையூறாக இருக்கிறது, கார் நிறுத்த தொந்தரவாக இருக்கிறது, மரம் இருப்பதனால் பறவைகள் கூடுகட்டுகின்றன, அவற்றின் சத்தம் தொல்லையாக இருக்கிறது.'இவ்வளவு செலவு செய்து கட்டிய அப்பார்ட்மென்ட்டை மறைக்கிற மாதிரி இவ்வளவு பெரிய மரம் நல்லாவா இருக்கு' என்கிற சுயநல அங்கலாய்ப்பு என பல்வேறு காரணங்களால் மழையோடு மழையாய், புயலோடு புயலாய் ஆயிரக்கணக்கான மரங்கள் 'வேண்டுமென்றே' " வீழ்த்தப்பட்டுள்ளன. 

சென்னை நகருக்குள் மரம் வெட்ட வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு அனுமதி வாங்கவேண்டும் என்கிற விதிமுறைகள் இருப்பதானாலும், இவர்களின் 'அல்ப' காரணங்களுக்கு அந்த அனுமதி கிடைக்காது என்பதாலும் இந்த பாதையை தேர்வு செய்துள்ளனர். 

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மரங்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. மும்பை, டெல்லியில் போன்ற நகரங்களின் வெப்பகால பருவம் கடுமையானது,இருந்தாலும் அங்கு  சென்னையை விட மரங்கள் அதிகம். ஆனால் அதே கோடையில் சென்னையில் குறைவான எண்ணிக்கை கொண்ட மரங்களை கொண்டுதான் நாம் சமாளித்து வந்தோம். 

ஒவ்வொரு மழைக்காலத்திலும் சென்னையில் மரங்கள் ஆங்காங்கே  விழத்தான் செய்யும். ஆனால் இம்முறை இயற்கையினால் விழுந்தது ஒரு பக்கம் என்றால், அதே இயற்கையோடு சேர்ந்து மனிதனும் தனக்கே  குழிபறித்துக்கொண்டான். உண்மையில் இந்த ஆண்டு வெளியான மத்திய சுற்றுச்சுழல் துறை அறிக்கையில் சென்னையின் 144 கிமீ  உள்ள அடர் காடுகளின் சதவிகிதம் 9.04% என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்பை விட கொஞ்சம் கூடுதலான அளவுதான். இருப்பினும் இதே நிலையை நீட்டித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவை சிறப்பான அளவுக்கு உயர்த்த முடியும் என இயற்கை ஆர்வலர்களும், சென்னையை விரும்பும் மக்களும் எண்ணியிருந்தனர். 

ஒவ்வொரு நகரத்திலும் உள்ள காடுகளின் பரப்பளவு கிலோ மீட்டரில்..

டெல்லி - 180 சதுர கிமீ

பெங்களூரு - 97  சதுர கிமீ

ஹைதராபாத் - 88.4  சதுர கிமீ

மும்பை - 86.57  சதுர கிமீ

ஜெய்பூர் - 74.47  சதுர கிமீ

சண்டிகர் - 34.4  சதுர கிமீ

சென்னை - 24  சதுர கிமீ 

மேற்படி கணக்கில் சென்னையில் உள்ள பூங்காக்களும் அடங்கும். சென்னையில் 456 பூங்காக்கள் உள்ளதாக மாநகராட்சி குறிப்புகள் சொல்கின்றன. இதில் மரங்கள் உள்ள பூங்காக்கள் 60 சதவிகிதம்தான் இருக்கும்.  நகர விரிவாக்கம்,சாலை விரிவாக்கம் ஆகிய பெயரால் அரசும், சொந்த காரணங்களால் தனியாரும் சென்னையின் மர வளத்தை கைவத்து வந்தனர்.இதற்கு பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மற்றூம் இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றங்களில் பொது நலவழக்கு தொடுத்ததாலேயே இந்த அளவு மரங்களை இதுநாள் வரை காக்க முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் மரங்களின் கணக்கெடுப்பு இன்னும் முடியாத சூழலில் இயற்கையும் - மனிதர்களும் இந்த சூறையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

வர்தா

சென்னையில் மட்டும் தோராயமாக  3 லட்சம் மரங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் லட்சக்கணக்கில் மரங்களை நட்டு வளர்ப்பதிலேயே சென்னை மீதான நம் அக்கறை இருக்கிறது. காரணம் இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் துவக்க நிலையில் உள்ளது சென்னை. நம்மை போட்டியாளராக பார்க்கும் பெங்களூரு காற்று மாசில்லாமல் '41' என்கிற மதிப்பெண்களில் உள்ளது. சென்னையில் மரங்கள் அதிகம் வளர்ப்பது நமக்கு மட்டுமல்ல நம் சந்ததிக்கும் நன்று என 'புயலோடு போட்டியிட்டவர்கள்' எப்போதுதான் உணர்வார்களோ!  

http://www.vikatan.com/news/coverstory/74809-trees-removed-by-few-people-in-the-name-of-vardah.art

  • தொடங்கியவர்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வர்தாவை சமாளித்தது இப்படித்தான்!

 

வர்தா

டந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வியை தழுவியது. இதற்கு மழையின்போது செயல்படாத அரசின் செயலற்றத் தன்மையே காரணமாக இருந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்... புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடு சுதந்திரமாகவும், துரிதமாகவும் இருப்பதற்கு... ‘வர்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வர்தா புயலை ஒட்டி தமிழக அரசு எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி, மீட்புப் பணிகள் வரை அனைத்தும் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. இதற்காக, தமிழக அரசு சுறுசுறுவென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அரசை இயக்கும் ஓ.பி.எஸ்., ‘வர்தா’ முன்னெச்சரிக்கைகளை எப்படி எடுத்தார் என்பதை விவரிக்கும் தொகுப்பு இங்கே...

‘வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் வர்தா புயல் சென்னை அருகே கரையைக் கடக்கக் கூடும்’ என கடந்த 10-ம் தேதி இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு சுதாரித்துக்கொண்டது. புயலின் தாக்கம் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

185473_15518.jpg

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கும்படி தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன. 11-ம் தேதி மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். புயலின்போது உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களும் அறிவிக்கப்பட்டன. புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உடனடி நிவரணம் கிடைக்க ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்தது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 16 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் காஞ்சிபுரத்துக்கு 6 அதிகாரிகள், திருவள்ளூருக்கு 6 அதிகாரிகள், விழுப்புரத்துக்கு 1 அதிகாரி உட்பட 29 பேர் நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 

185462_15191.jpg

11-ம் தேதி மாலை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. இதில் வர்தா புயலை எதிர்கொள்ள இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஓ.பி.எஸ் ஆய்வு செய்தார். ராணுவம் மற்றும் மத்தியப் படைகள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 6 குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், சிவாலிக், காட்மட் என்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் கடலில் மீட்புப் பணிக்காக நிறுத்திவைக்கப்பட்டன. 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் கொண்ட மீட்புக் குழுவினர் தயாராக நிற்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர வட்டங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அல்லது வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதற்கான உத்தரவை தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அரசுச் செயலாளர் அமுதா வெளியிட்டிருந்தார். சென்னையில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பேரிடர் காலத்தில்கூட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க முன்வராத நிலையில், அரசின் உத்தரவால் தனியார் நிறுவன ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

ops2_15475.jpg

இதனிடையே தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசித்துவந்தவர்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 12-ம் தேதி பிற்பகல் புயல், கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நேற்று (13-12-16) காலை மீண்டும் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர். 12-ம் தேதி இரவு எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக நிவாரண முகாம்களுக்குச் சென்ற முதல்வர், மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்தார். மேலும், அங்கு செயல்பட்டு வந்த மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தனது ஆறுதல்களைக் கூறினார்.

முதல்வரின் செயல்பாடு தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...

http://www.vikatan.com/news/tamilnadu/74813-how-cm-o-panneerselvam-tackled-the-cyclone-situation.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

டி.சி.எஸ் நிறுவன பேருந்து ...மற்றும்  ரோட்டில் இருந்த மகிழுந்தை யே தூக்கி போடும் வாயு பகவான் சில தறுதலைகளை மட்டும் விட்டு வைத்துள்ளது ..!

டிஸ்கி

Chennaiites take selfie with Vardah

செல்பி !! ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவைபடுது..!! திருந்தாத ஜென்மங்கள்

நன்றி தட்ஸ்தமிழ்

'வார்தா' தாண்டவம்: களைப்பில்லாமல் உழைக்கும் காவல்துறை

அண்ணா சாலை பல்நோக்கு மருத்துவமனையின் எதிரே விழுந்து கிடந்த மரம். | சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் போலீசார்

அண்ணா சாலை பல்நோக்கு மருத்துவமனையின் எதிரே விழுந்து கிடந்த மரம். | சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் போலீசார்

 

சென்னை மற்றும் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டிருக்கிறது ’வார்தா ’ புயல். சென்னையின் ஒட்டுமொத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சூறாவளிக்காற்றும், மழையும் நின்றுவிட்ட நிலையில் அதன் விளைவாக விழுந்த பெரு மரங்கள் சாலைகளில் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் விரைந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் ரோந்து வாகனங்கள் தங்கள் வேலையைத் தொடங்கியிருந்தன. காலை அலுவலகம் வரும்போது கண்ணில் தென்பட்ட காட்சிகள் இவை.

வழியில், சிந்தாதிரிப்பேட்டையில் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஏராளமான காவல்துறையினரைக் காண முடிந்தது.

அருகில் சென்று விசாரித்தபோதுதான் தெரிந்தது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பூபாலன் அவரென்று. அவரோடு காவல்நிலையத்தின் மற்ற காவலர்களும், சில இளைஞர்களும் வீழ்ந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். ''பணியாளர்கள் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டேன். ''அதனால் என்னங்க, நம்ம வீட்டுல யாரு செய்யறோம்? நம்மதானே, அதுபோலத்தான் இங்கயும்!'' என்று கூறியவாறு தன் பணியைத் தொடர்ந்தார்.

4_3103172a.jpg

பல்நோக்கு மருத்துவமனையின் எதிர்ப்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அருகே இருந்த கட்டிடத்திலும் மரங்கள் பெயர்ந்து கிடந்தன. அவற்றையும் சில காவலர்கள் எடுத்துக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

வாலஜா சாலை, கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள சாலை மரங்களை திருவல்லிக்கேணி D1 காவல்நிலைய உதவி ஆணையர் உட்பட நிறைய அதிகாரிகள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று சக நண்பர் கூறினார்.

இதுபோல வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள், டி.டி.கே. சாலை, வெஸ்ட் காட் சாலை உள்ளிட்ட சென்னை நகரத்தின் ஏராளமான இடங்களில் விழுந்துகிடக்கும் மரங்களையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருவதாக அந்த வழியாக வந்த அலுவலக நண்பர் கூறியதைக் கேட்க முடிந்தது.

dda76740-f83c-42d0_3103169a.jpg

தன்னலம் கருதாது மழை, வெயில், புயல் என எல்லா இயற்கை சீற்றங்களிலும், செயற்கை மாற்றங்களிலும் களைத்துப் போகாது உழைக்கும் காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!

http://tamil.thehindu.com/opinion/blogs/வார்தா-தாண்டவம்-களைப்பில்லாமல்-உழைக்கும்-காவல்துறை/article9424428.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமானநிலைய மேற்கூரை காற்று அடிக்காமலே கீழே விழும்.. :unsure: இப்ப என்ன நிலைமை? :D:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

சென்னை விமானநிலைய மேற்கூரை காற்று அடிக்காமலே கீழே விழும்.. :unsure: இப்ப என்ன நிலைமை? :D:

முன் ஏற்பாடாக ஏற்கனவே கழட்டி வைத்திட்டார்களாம்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

 

வேரோடு சாய்ந்த மரங்களுக்கு உயிர் கொடுக்கும் தன்னார்வலர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.