Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எழுதிய ISLAND OF BLOOD என்ற நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு தற்போதுதான் கிட்டியது. அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சம்பவம் இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனத்தை புடம் போட்டு காட்டுகிறது. அனிதா பிரதாப் இப்படி எழுதுகிறார் :

யாழ்ப்பாணம் நோக்கிய எங்கள் (அனிதா மற்றும் அவருடன் பயணித்த ஷியாம் என்ற இந்திய பத்திரிகையாளர்) பயணத்தின், போது ஆனையிறவில் உள்ள ஒரு ஏழை மீனவரின் வீட்டில் நாங்கள் தங்க நேர்ந்தது. தங்கள் வறுமையிலும் எங்களை மிக அன்பாக கவனித்தார்கள். நான் அந்த மீனவருடன் பேச்சுக் கொடுத்தேன். இந்திய இராணுவம் தங்களை மிகவும் கொடுமைப் படுத்தியதாகக் கூறினார். விடுதலைப் புலிகளுக்கும் வயதான ஏழை மீனவருக்கும் வித்தியாசம் தெரியாமலா இந்திய இராணுவம் இருக்கிறது . அது மட்டுமல்ல இந்திய இராணுவத்தினர் எங்களிடமிருந்து திருடுகின்றனர் என்றும் கூறினார்.

எனக்கு வியப்பாக இருந்தது. இந்திய இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதையும் குடிமக்களை கொலை செய்வதையும் நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் அன்றாட வாழ்வுக்கே அல்லல் படும் ஒரு ஏழை மீனவக் குடும்பத்திடதிருந்து திருடுவதற்கு என்ன இருக்கிறது.

நாங்கள் ஆசையாய் வளர்த்த இரண்டு ஆடுகளை திருடிக் கொண்டு போய் கறியாக்கி தின்று விட்டார்கள் என்றார் அந்த மீனவர் .

எனக்கு கண்கள் பனித்தன

Edited by இளங்கோ

  • Replies 119
  • Views 16.9k
  • Created
  • Last Reply

பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி கொடூரமாக கொலை செய்த இந்திய இராணுவ வெறியர்களுக்கு ஆட்டைத் திருடுவதொன்றும் தேசவிரோதச் செயல் அல்லவே.

நீங்க சொல்றது உண்மைதான்

இதையெல்லாம் படிக்கும்போது இந்தியன்னு சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருக்கு.

அது IPKF தான் ஆனால் Indian Peace Keeping Force கிடையாது அது

Innocent People Killing Force

  • கருத்துக்கள உறவுகள்

Innocent People Killing Force

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

நாங்கள் ஆசையாய் வளர்த்த இரண்டு ஆடுகளை திருடிக் கொண்டு போய் கறியாக்கி தின்று விட்டார்கள் என்றார் அந்த மீனவர் .

எனக்கு கண்கள் பனித்தன

சரி, சரி விட்டுத் தள்ளுங்கோ. இந்திய இராணுவம் தமிழரின் சொத்துக்களை தின்று ஏப்பமிட்ட செய்தியை நாம் எல்லோரும் அறிவோம். இது தெரிந்தும் எங்களில் சிலபேர் இந்திய இராணுவம் திரும்பவும் தமிழீழத்துக்குள் வரவேண்டும் என்று சொல்லி ஒடித்திரியிரீனம். இந்த துரோகக்கூட்டங்களை நினைத்தாத்தான் ஊரிலுள்ள எனது வீட்டு கால்நடைகளும் களவு போயிடுமோ என்று நினைத்து கவலையா இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க சொல்றது உண்மைதான்

இதையெல்லாம் படிக்கும்போது இந்தியன்னு சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருக்கு.

ஜனனி!

இந்தியன் என்று சொல்லாதீர்கள். சொன்னால்தானே வெட்கப் படுவதற்கு. மாறாக தமிழச்சி என்று சொல்லுங்கள்.

இந்தியத் தேசியமே ஒரு போலித்தனமான தேசியம். பல தேசிய இனங்களின் சிறைக் கூடம். தமிழனுக்குச் சொந்தமான கச்ச தீவை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு கார்கிலுக்காகப் போராடியதுதான் இதன் இலட்சணம்.

80 விழுக்காடு மக்களை அன்றாடங் காய்ச்சிகளாகவும் சோற்றுக்கு வழியற்றவர்களாகவும் ஆக்கி வைத்துக் கொண்டு அமரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறது.

இதன் இராணுவம் ஈழத்தில் மட்டுமல்ல தங்கள் சொந்த மானில பெண்களையே வேட்டையாடிய இராணுவம்.

இது புரியமல் இந்த யாழ் களத்தில் குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டும் ஒரு சிலர் இந்தியன் என்று சொல்லடா இமையமாக நில்லடா என்றும் இந்தியன் என்பதில் பெருமையைடைகிறேன் என்றும் சிறு பிள்ளைத்தனமாக எழுதுகின்றனர்.

ஆனால் ஜனனி! நீங்கள் அவர்களைப்போல் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது

ஒரு மலையாளி தமிழ் நாட்டிற்குள் வந்தும் மலையளியாக இருக்கிறான், ஒரு குஜராத்தி தமிழ்நாட்டிற்குள் வந்தும் குஜராத்தியாக இருக்கிறான், ஒரு கன்னடன் தமிழ் நாட்டிற்குள் வந்தும் கன்னடனாக இருக்கிறான் அனால் இந்த தமிழ் நாட்டுக்காரன் மட்டும் தமிழ் நாட்டிற்குள்ளும் தமிழனாக இல்லாமல் வெட்கங் கெட்டு இந்தியனாக இருக்கிறான்.

இந்தியத் தேசியம், இலங்கைத் தேசியம், திராவிடத் தேசியம் அனைத்தும் தமிழர்களுக்குப் பிணி தமிழ்த் தேசியமே இனி.........

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

என்ற வீட்டில இருந்த ஆடுகள், கோழிகள், மணிக்கூடுகள், சப்பாத்துக்கள், நகைகள், புகைப்படக்கருவிகள், வானொலிகள் உட்பட 87ல் இந்திய இராணுவத்தினால் களவாடப் பட்டன.

என்ற வீட்டில இருந்த ஆடுகள், கோழிகள், மணிக்கூடுகள், சப்பாத்துக்கள், நகைகள், புகைப்படக்கருவிகள், வானொலிகள் உட்பட 87ல் இந்திய இராணுவத்தினால் களவாடப் பட்டன.

ஏனப்பு, 20 வருசத்து பழசயெல்லாம் கிண்டுனிங்கள் எண்டால் இதவிட கனக்க வரும். பளசுகளை மறந்து இனி நடக்க வேண்டியதப் பாப்பமே !

போன வருஷம் என் அண்ணன் வேலை விசயமா 2 மாதம் டில்லில தங்கியிருந்தார். அவருக்கு இந்தி தெரியாததால அவரை எல்லாரும் இளக்காரமா பார்த்தாங்களாம். நாமதான் இந்தியான்னு சொல்லிக்கிட்டிருக்கோம். அங்க தமிழ் நாட்டுக்காரனை மதிக்கிறதேயில்லைன்னு எங்கிட்ட சொல்லி வருத்தப் பட்டார்.

நான் U.K. வரும்போது எனக்கு மும்பைல transist அந்த Custom officer எங்கிட்ட நடந்து கிட்ட விதம் இப்போ நினைக்கும்போதும் எரிச்சலாக இருக்கு.

நான் ஆங்கிலத்தில் பேசும்போது அவர் இந்தில பதிலளித்தார். எரிச்சலா இருந்திச்சு. பதிலுக்கு நானும் தமிழ்ல பேசினா அவர் தாங்குவாரா.

Edited by ஜனனி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியத்தேசியத்தின் மானில ஒற்றுமைப் பலம் மேம்பட வேண்டும் என்று விரும்பும் முதலாவது அயல் உறவு ஈழம்தான்.

எம்தேசத்தின் கலாச்சாரத்துக்கு உலகவல்லரசுத் தகமையில் ஒரு தோளன் உண்டென்பது பெருமை மட்டும் அல்ல பாதுகாப்பு கவசமும் கூடத்தான்,

எனவே நாம் ஒருபோதும் இந்தியப் பிரிவினை வாதத்துக்கு கொடிதூக்குபவர்களாக இருக்க மாட்டோம் என்பது ஏன் இன்னும் அவர்களால் உணரமுடியவில்லை. என்பதே எமக்கு புரியமாட்டேன் என்கிறது.

என்ன நிறம் என்றே தெரியாத றைசியாவின் பிளவின் கவலைகள் எத்தைனை கண்டங்கள் தாண்டி சோகம் கொண்டாடப் பட்டது. இதைவிட எத்தனை ஆயிரம் காரணங்கள் உண்டு நண்பனான நாம் இந்திய தேசியத்தின் ஒற்றுமையில் அக்கறைப்படுவதற்க்கு.

பணத்துக்கு கொள்கைத்தார வார்ப்புச் செய்துவிட்ட பல இந்திய ஊடகங்கள் விசுவாசம் கக்குவதற்க்காக புலிப்பகைக்கு மகுடம் வாசிப்பதே தொழிலாகக் கொண்டுள்ளன.

தினமலர், தினமணி போன்ற ஊடகங்களுக்கு பணத்துக்கு எச்சில் வடிக்கின்ற அசிங்கப் புத்தி எப்போது ஒழியப் போகிறதோ?

ஓய் மக்கள் என்ன ளொள்ளா சைக்கிள் காப்பில நம்மட பமிலியையும் இழுக்கிறீங்கள் போல இருக்கு யோவ் சாத்து ஆடீ டங் கு சா மக்கள் அண்டைக்கே சொன்னனான் களவு எடுக்கேக்கை மாட்டையும் சேத்து எடுங்கோ எண்டு கேட்டீங்களா

:angry: :angry:

:angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான நிர்வாகக் கட்டமைப்பே இந்தியா. அதற்கு முன் இந்தியா என்றொரு நாடு என்றைக்கும் இருந்ததில்லை.

தனித் தமிழீழத்திற்காக நாங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் பறி கொடுத்ததற்குப் பின்பும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று பிதற்றுகிறது இந்தியா.

பாகிஸ்தானோடு போரிட்டு வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா வங்காளிகளைக் காட்டிலும் பல மடங்கு மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்காக ஏன் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரவில்லை. இந்திய அரசின் நயவஞ்சகமும் இரட்டை வேஷமும் இதிலிருந்து தெரிகிறது.

Edited by இளங்கோ

ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான நிர்வாகக் கட்டமைப்பே இந்தியா. அதற்கு முன் இந்தியா என்றொரு நாடு என்றைக்கும் இருந்ததில்லை.

தனித் தமிழீழத்திற்காக நாங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் பறி கொடுத்ததற்குப் பின்பும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று பிதற்றுகிறது இந்தியா.

பாகிஸ்தானோடு போரிட்டு வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா வங்காளிகளைக் காட்டிலும் பல மடங்கு மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்காக ஏன் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரவில்லை. இந்திய அரசின் நயவஞ்சகமும் இரட்டை வேஷமும் இதிலிருந்து தெரிகிறது.

இளங்கோ, பொதுவாக எல்லா நாடுகளுமே மற்றய நாடுகள் இனத்தவர் விவகாரங்களில் தலையிடும் பொழுது தமது ஆள் அணி வளங்களைப் பயன் படுத்தும் பொழுது வெளிப் பார்வைக்கு எப்படித் தோன்றினாலும் அடிப்படையில் அது சுயநல நோக்கம் கொண்டது தான். இன்று பழய நிகழ்வுகளை மீட்டி இந்தியா மீது வெறுப்பை கக்கி பயன் இல்லை. அவர்களின் தலையீடு பற்றி தப்பான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தது எமது தவறு. பழய நிகழ்வுகளை மீட்டும் பொழுது அதில் இந்திய உற்வுகளும் இணைந்து கருத்துப் பரிமாறி எமக்குள் மரியாதையின் (mutual respect) அடிப்படையில் ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்பும் திசையில் அந்தக் கருத்தாடல் செல்ல வேண்டும். அது தான் இன்றய தேவை.

வங்களா தேசத்தில் ஈழத்தில் நடந்ததோடு ஒப்பிடும் பொழுது அதிக அவலங்கள் (கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை) நடந்தது. அனால் எமது போராட்டத்தோடு ஒப்பிடும் பொழுது மிகக் குறுகிய காலத்தில் நடந்தேறியது. ஈழப்போராட்டத்தில் மொத்த இழப்பு தற்பொழுது கிட்டத்தட்ட150 000 அதாவது 1.5 லட்சம் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. இதைப்பற்றி மேலதிக விபரம் இல்லை.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இந்தியாவல் உருவாக்கிய பங்ளதேசம் இந்தியாவுடன் எல்லையில் சண்டை பிடிக்கிறதே? ஏன்?

நாளை காஸ்மீர் கூட தனிநாடாக பிரிவதை விட பாகிஸ்தனிடம் கொடுப்பதே மேல் அதே போல் பங்ளதேசத்தையும் பாகிஸ்தானுடம் இனைத்து விட்டு ஒரு எதிரியோடு போரடலாம்.

ஆனால் இந்தியாவால தன்னை சுற்றி இருக்கும் ஒரு நாட்டையாவது நம்பிக்கைக்கு உரிய ஒரு நாடகா மாற்ற முடியுமா????

பங்களாதேஸ் இந்தியாவோடு ஏன் எல்லையில் சண்டை பிடிக்கிறதா? அப்போ புலிகள் ஏன் இந்திய படையோடு சண்டை செய்தனர்?

கஸ்மீர் தனியாக பிரியாது பாக்கிஸ்தானோடு இணைவது மேலா? அப்படி என்றால் இலங்கைத் தீவின் வடக்கையும் கிழக்கையும் தமிழ்நாட்டோடு இணைப்பதும் நல்லம் போல் உள்ளதே?

இந்தியா தன்னைச் சுத்தி நண்பர்களை வைத்திருந்தா என்ன வைத்திருக்காட்டி என்ன? எங்கடை தமிழீழத்தை சுத்தி எத்தனை நாடுகள் இருக்கு அதிலை எத்தனை எங்களுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்குது?

உப்பிடி இந்தியாவுக்கு அயலவர்கள் பற்றி அறிவுரை கூறிறது என்றதும் இந்தியாவில நாங்கள் காட்டும் கரிசனையும் எங்கடை சுயநலம் தான் என்றதை மறுக்க முடியுமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமில்லை பாகிஸ்தானுக்கும் சொந்தமில்லை. அது கஷ்மீர் வாழ் மக்களுக்குச் சொந்தம். நாங்கள் இந்தியாவோடு சேர்ந்து வாழ்வதா இல்லை பாகிஸ்தானோடு சேர்ந்து வாழ்வதா இல்லை பிரிந்து சென்று தனியரசு அமைப்பதா என்பதை அந்த மக்கள் தீர்மானிக்கட்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். அப்படி ஒரு தீர்மானத்தை எடுக்கும் உரிமையை (plebiscite). இந்திய வல்லாதிக்க அரசு அந்த மக்களுக்கு இன்று வரைக்கும் கொடுக்கவில்லை.

இது கஷ்மீருக்கு மட்டுமல்ல தமிழ்நாடு உட்பட இந்திய வல்லாதிக்கத்தால் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அஸ்ஸாம் நாகலாந்து உட்பட அனைத்து மானிலங்களுக்கும் பொருந்தும்.

இந்தியா தனது இராணுவம் மூலம் செய்தா கொடுமையை என் கண் முன்னாளை கண்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்களாதேஸ் இந்தியாவோடு ஏன் எல்லையில் சண்டை பிடிக்கிறதா? அப்போ புலிகள் ஏன் இந்திய படையோடு சண்டை செய்தனர்?

கஸ்மீர் தனியாக பிரியாது பாக்கிஸ்தானோடு இணைவது மேலா? அப்படி என்றால் இலங்கைத் தீவின் வடக்கையும் கிழக்கையும் தமிழ்நாட்டோடு இணைப்பதும் நல்லம் போல் உள்ளதே?

இந்தியா தன்னைச் சுத்தி நண்பர்களை வைத்திருந்தா என்ன வைத்திருக்காட்டி என்ன? எங்கடை தமிழீழத்தை சுத்தி எத்தனை நாடுகள் இருக்கு அதிலை எத்தனை எங்களுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்குது?

உப்பிடி இந்தியாவுக்கு அயலவர்கள் பற்றி அறிவுரை கூறிறது என்றதும் இந்தியாவில நாங்கள் காட்டும் கரிசனையும் எங்கடை சுயநலம் தான் என்றதை மறுக்க முடியுமோ?

குறுக்ஸ் ஏன் நீங்கள் உலகச்செய்திகள் வாசிப்பது இல்லையா?

அல்லது ஈழத்தைழர் ஊடகங்கள் மட்டும் தான் வாசிப்பிர்களா?

ஏன் இந்தியாவும் பங்களிகளும் எல்லையில் அப்போ அப்போ முட்டு படுவது தெரியாதா?

காஷ்மீர் என்ற புதிய முஸ்லும் நாடு இந்தியாக்கு பக்கதில் உருவாகுவதை விட பாகிஸ்தானுடம் காஷ்மீர் இனைவதே இந்தியாகு தலையிடி குறைவு

புலிகள் இந்தியாவுக்கு உள்ளே போய் சண்டை பிடித்தார்கள்?

நீங்கள் தானே வேறு ஒரு பகுதியில் சொன்னீர்கள் புலிகளுக்கும் அரசுக்கும் இருக்கும் வேரு பாடு என்று விளக்கம் கொடுத்திர்கள்?

பிறகு எப்படி ஒரு போராட்ட குழு பக்கத்தில் ஒரு நாடு கூட ஆதரவாக இல்லை என்று கேக்கலாம்?

சரி நான் சொன்னேன் காஷ்மீர் புதிய நாடாக உருவாகினாலும் இந்தியாவுக்கு தலையிடி கொடுக்க ஒரு புதிய பிறப்பு .

ஆனா தமிழீழம் என்பது அதன் வெளிவிவகார கொள்கைகள் இந்தியாவுக்கோ இல்லை வேறு யாருக்கும் ஆபத்தான நாடாக இருக்காது.

இதை தெரிந்து கொள்ள இவளவு காலமும் காத்து இருக்க்க தேவை இல்லை

இந்தியா தனது இராணுவம் மூலம் செய்தா கொடுமையை என் கண் முன்னாளை கண்டது

இது எல்லாம் தெரிந்து கொண்டு தானா அப்ப அப்போ நக்கல் பன்னி கொண்டும் அறியாமை மாதிரி குனிச்சு நிப்பது???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி ஜனனி மற்றும் கந்தப்பு

சிங்கள இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு இந்திய இராணுவம் தமிழீழ மண்ணில் நடத்திய மனித வேட்டைகளை அறியும் போது இரத்தம் கொதிக்கிறது.

கஷ்மீரில் இந்திய இராணுவம் செய்யும் கொடுமைகள் இந்தக் குறும்படத்தில் பதிவாகி உள்ளது

http://eastwords.blogspot.com/2006/03/confusing-kashmir.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அதிபரின் மனைவிக்கு நடந்த உண்மைச் சம்வத்தை நானும் சொல்கிறேன்....

அது ஒரு அதிகாலைநேரம் மானவர்கள் அனைவரும் பாடசாலைக்கும் கனவன் மாரை வேலைக்கும் அனுப்பி விட்டு சட்டி பானை எல்லாம் கழுவி வைத்து விட்டு பெண்கள் குளிக்கும் நேரம்.

எனது அதிபரின் மனைவியும் வீட்டு கிணற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது ஊர்நாய்கள் எல்லாம் ஒரே குரைத்த படி ஆம் பெண்களுக்கு புரிந்து விட்டுஅது நாய் குரைகிறது என்றால் இது ஊரில் அறிமுகள் இல்லாத இனம் ஒன்று வருகிறது அதுவும் பல மையில் கடந்து வந்த ஒரு இனம் அவசரம் அவசரமாக குளித்த குறையில் உடுப்பை எடுத்து மாற்றுவதுக்கு எனது அதிபரின் மனைவி ரெடியான போது யாருக்காக வீட்டு நாய் குரைத்ததோ அந்த காமவெறிபிடித்த ஓநாய்கள் வீட்டுக் முற்றத்தில் வந்து விட்டது அதிபரின் வீட்டில் 3 ஒநாய்கள் அதிபரின் மனைவியை பாத்த பின் ஒநாய்களுக்கு வாய்யிலும் வேறு ஒரு இடத்திலும் வீணி வடிய தொடங்கி விட்டது( ஊரில் திருமனம் ஆன பெண்கள் குளிக்கும் போது உள் பாவடையை மேலே குறுக்காக கட்டி குளிப்பார்கள் சிலர் கனவனின் சாரத்தை கட்டி குளிப்பார்கள்) இதை கொஞ்சமும் எதிர்பாராத அந்த அப்பாவி அதிபரின் மனைவி திகைத்து நின்றார் அப்போது வந்த ஓநாய் ஒன்று வீட்டு கதவுகளை திறக்க சொல்லி அடம் பிடித்தது அதுவும் அந்த ஓநாய் கதவை திறந்து விட்டு அதிபரின் மனைவியை வெளியே வாரலாம் என்று சொல்லி ஒநாய்க்கே உரிய நரி புத்தியுடன் சொன்ன பின் இந்த அப்பாவி அதிபரின் மனைவி நம்பி வீட்டு கதவை திறக்க சென்றதும் தான் காத்து இருந்த ஓநாய்கள் பின்னால் சென்று ஒன்றின் பின் ஒன்றாக 3 ஒநாய்கள் குதறி எடுத்து விட்டதுகள் .

பெற்ற தகபன் கூட பிறந்த அண்ணா தம்பி ஏன் தாய் தங்கை என்று எந்த ஒரு உறவின் முனாலும் தவறி கூட காட்டாத அந்த பெண்மையின் உடல் இன்று எங்கையோ இருந்து வந்த ஓநாய்களிடம் சிக்கி சிதறுண்டு போனது,

நாய்களின் குரைப்பு சத்தம் ஓய்ந்தது ஆனாலும் ஊரில் அன்று பல வீடுகள் மயான அமைதி காத்து பிள்ளைகள் பாடசாலை விட்டு வீடு வந்தார்கள் அம்மா சமைக்கவில்லை என்று பசியுடன் இருந்தார்கள்

கனவன் வேலை விட்டு வந்தார் மனைவி சமைக்கவில்லை

எனது அதிபரும் வேலை விட்டு வந்தார் சிதறுண்ட மனைவியின் உடலுடன் உணர்வுகளும் சிதறுண்டதை அறிந்த எனது அப்பாவி அதிபர் தனது படிப்புக்குரிய அறிவுடன் சென்றார் இரானுவ முகம் அதிகாரியிடம் {முதல் எந்த முகாம் இராணுவம் அன்று அந்த ஊரை சுற்றிவளைத்தார்கள் என்று புலன்நாய்வு செய்யவேனும்) அந்த நல்ல அதிகாரி(?) நடந்த வற்றை கேட்டு விட்டு உங்கள் மனைவியால் ஆளை அடயாளம் காட்ட முடியும் என்றால் அந்த 3 ஓநாய்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றார் எனது அப்பாவி அதிபர் மனைவியை கூட்டி சென்று அனிவகுத்து இருக்கும் பல 100க்கனகான இரானுவத்தில் 3 வரை காட்ட சொன்னார் ஆனால் அந்த அப்பாவி மனைவியால் காட்ட முடியவில்லை <_< இதே போல அன்று பல வீட்டில் நடந்தவை வெளிவரமளே போய் விட்டது ஏன் இன்று வரை யாராலுமே தண்டிக்கவே கண்டிக்கவோ முடியவில்லை.

இதுக்கு பின்னும் அந்த அதிபர் அந்த ஊரில் வாழ விரும்பாம இடம் மாறி சென்று விட்டார்.

இது இந்தியா எமக்கு தந்த நினைவு பரிசுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு கயவர்கள் இவர்கள்.

1962 இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் மூண்டபோது ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்ட தந்தை செல்வா அவர்கள் வீதி வீதியாக நிதி சேகரித்து அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்ளால் நேரு அவர்களிடம் சேர்ப்பித்தார். அதே போன்று 1971 இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்ற போது ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். அந்த பெருந்தன்மைகளுக்கு இந்தியா எங்களுக்கு செய்த பரிகாரங்கள் விலை மதிக்க முடியாதவை.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இறந்து போன உயிர்கள் எவ்வளவு மதிக்கப்பட வேண்டியதோ, அவ்வாறே இருக்கின்ற தமிழீழ மக்களைக் காப்பாற்ற எமக்கு உலக ஆதரவு தேவை. இந்தியா கொடூரம் செய்தது என்பதற்கு அப்பால், சிங்கள அரசின் கொடூரத்தை தவிர்க்க அதன் ஆதரவு தேவை என்பதே இன்றைய நிலமை.

சமீப காலமாக, தமிழகத்து மக்கள் எமக்காக ஆதரவுக் குரல் கொடுக்கின்ற நிலமை இருக்கின்ற போது, இந்தியாவைப் பற்றி திட்டிக் கொண்டிருப்பதில் பிரியோசமில்லை. அது எம் வளர்ச்சிக்கு உதவாது.

நம்மவர்களுக்குத் தான் இப்படிப் புத்தி. எப்பவும் மற்றவர்களைத் திட்டிக் கொண்டிருப்பது. ஜேர்மனியர் லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்றது என்பதற்காக, ஜேர்மனியை யூதர்கள் திட்டிக் கொண்டிருப்பதில்லை. அந்த வெறியை மனதில் வைத்து, இன்று அமெரிக்காவில் கூட பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளார்கள். ஆனால் திட்டிப் பிழைப்பு செய்யும் நம்மவர்களுக்கு திட்டுவது என்பது ஒரு வித டைவேசன். திசை திருப்புதல் வேலை. எதை எடுத்தாலும் திட்டிக் கொண்டு, அமர்ந்து விடுவதைச் செய்கின்றோம்.

என்றைக்குமே தழும்புகள் அழியாது. ஆனால் காயங்களின் தழும்புகளை கிளறுவதை விட்டுவிட்டு, புதிய காயங்கள் வராமல் தடுக்க்பட்டதே சரியான வழி. ஜேஆர் சூழ்ச்சிக்கு பலியான தவறினை இனிவரும் காலங்களில் நடக்காமல் பார்க்க வேண்டும்

இறந்து போன உயிர்கள் எவ்வளவு மதிக்கப்பட வேண்டியதோ, அவ்வாறே இருக்கின்ற தமிழீழ மக்களைக் காப்பாற்ற எமக்கு உலக ஆதரவு தேவை. இந்தியா கொடூரம் செய்தது என்பதற்கு அப்பால், சிங்கள அரசின் கொடூரத்தை தவிர்க்க அதன் ஆதரவு தேவை என்பதே இன்றைய நிலமை.

சமீப காலமாக, தமிழகத்து மக்கள் எமக்காக ஆதரவுக் குரல் கொடுக்கின்ற நிலமை இருக்கின்ற போது, இந்தியாவைப் பற்றி திட்டிக் கொண்டிருப்பதில் பிரியோசமில்லை. அது எம் வளர்ச்சிக்கு உதவாது.

நம்மவர்களுக்குத் தான் இப்படிப் புத்தி. எப்பவும் மற்றவர்களைத் திட்டிக் கொண்டிருப்பது. ஜேர்மனியர் லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்றது என்பதற்காக, ஜேர்மனியை யூதர்கள் திட்டிக் கொண்டிருப்பதில்லை. அந்த வெறியை மனதில் வைத்து, இன்று அமெரிக்காவில் கூட பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளார்கள். ஆனால் திட்டிப் பிழைப்பு செய்யும் நம்மவர்களுக்கு திட்டுவது என்பது ஒரு வித டைவேசன். திசை திருப்புதல் வேலை. எதை எடுத்தாலும் திட்டிக் கொண்டு, அமர்ந்து விடுவதைச் செய்கின்றோம்.

என்றைக்குமே தழும்புகள் அழியாது. ஆனால் காயங்களின் தழும்புகளை கிளறுவதை விட்டுவிட்டு, புதிய காயங்கள் வராமல் தடுக்க்பட்டதே சரியான வழி. ஜேஆர் சூழ்ச்சிக்கு பலியான தவறினை இனிவரும் காலங்களில் நடக்காமல் பார்க்க வேண்டும்

நீங்கள் சொல்லுவது பிழை துயவன் மறக்க முடியாத கொடுரங்கள் இக்கொடுமைகளை எம் அடுத்த சந்ததியும் அறிய வேண்டும் அரசியல் கரணத்துக்காக மறக்க சொல்ல முடியாதவை இவை. இந்தியப் பிரதமர் இந்திய அட்டூழியப்படையால் பாதிக்கப்பட்டவரின் நினைவுதுபியில் மலரஞ்சலி செலுத்தினாலும் மன்னிக்கபட முடியாதவை அவற்றை மறந்து கைகோர்ப்போம் என்பது முட்டாள்தனம்

தழும்புகள் அழியாது ஆனால் மனதில் தைத்த வலி என்றும் ஆறாது அதை புரியுங்கள்.ஜே அரின் சூழ்ச்சி என சொல்லி சின்னப்பிள்ளைதனமான விளக்கத்தை கொடுக்காதீர்கள் துயவன் இந்தியா என்ன குழந்தையா எவ்வளவு பெரியதேசம் அப்படி அறிவிலிகளா அவர்கள் இல்லை இது வேண்டுமென த்ன் சுயநலத்துக்காக அதாவது தன் பாதுகாப்புக்காக செய்த கொடுமைகள்

ஒருவர் சொன்னார் ஆக்கிரமிப்பு படைகள் இவற்றை செய்யும் இது சாதாரனம் என ஆனால் பாதிக்கப்படாதவருக்கு சாதாரணம் பாதிக்கப்பட்டவருக்கு அது வலி,இன்னும் இந்திய தமிழர்கள் IPKF எண்டால் ஏதோ மகாத்மாக்கள் என நினைகிரார்கல் அதை விளங்கப்படுத்த வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.