Jump to content

வாழ்க்கைமுறை வளர்ச்சிகளும் பிரசவமுறை மாற்றங்களும்


Recommended Posts

வாழ்க்கைமுறை வளர்ச்சிகளும் பிரசவமுறை மாற்றங்களும்

 

 

ஒரு பெண் திரு­ம­ண­மாகி கர்ப்­ப­முற்று ஒரு சிசுவைப் பெற்­றெ­டுக்கும் போதுதான் அப்பெண் பிறந்­ததன் பயனை பூர்த்தி செய்­கிறாள். தற்­போ­தைய நவீன உலகில் ஒரு பெண் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக் காலத்தை பூர்த்தி. செய்து இவ்­வு­லகை நீத்து இறக்கும் வரை அவளின் வாழ்வின் ஒவ்­வொரு படி­நி­லை­யிலும் நவீன தொழில்­நுட்பம் ஆதிக்கம் செலுத்­து­கின்­றது. அதா­வது ஒரு குழந்தை பிறக்கும் போதி­லி­ருந்து அது வளர்ந்து தனது கல்வி நட­வ­டிக்­கை­களை பூர்த்தி செய்து பின்னர் தனக்­கு­ரிய வாழ்க்கைத் துணை­யினை தேர்வு செய்யும் தரு­ணத்­திலும் பின்னர் தமது சந்­த­தியை பெற்றுக் கொள்ளும் போதும் இத்­தொ­ழில்­நுட்பம் பெரும் ஆதிக்கம் செலுத்­து­கின்­றது. 

இதே­போன்று இத்­தொ­ழில்­நுட்ப வளர்ச்­சி­யினால் தற்­காலப் பெண்­களின் கர்ப்ப­­காலப் பரா­ம­ரிப்­பிலும் அதன் பின் பிர­ச­வ­மு­றை­யிலும் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களை இங்கு ஆராய்வோம். ஒரு கர்ப்­பிணிப் பெண் தனது வயிற்­றி­லுள்ள கருவை பெற்­றெ­டுக்கும் முறை சாதா­ரண சுகப்­பி­ர­ச­வ­மா? அல்­லது சிசே­ரியன் பிர­ச­வமா? (சத்­தி­ர­சி­கிச்சை முறை) என்­பது கர்ப்­ப­முற்­றி­ருக்கும் ஒவ்­வொரு பெண்­ணிற்கும் கண­வ­னுக்கும் அவ­ரது குடும்­பத்­த­வ­ருக்கும் பெரிய ஒரு கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்கும். 

ஏனெனில் முன்­னைய காலங்­களில் பெண்கள் பிர­சவம் என்றால் சாதா­ரண சுகப்­பி­ர­சவம் என்­றுதான் கேள்­விப்­பட்­டி­ருப்­பார்கள். அதா­வது முன்­னயை காலங்­களில் பிர­சவம் என்­பது வைத்­தி­ய­சா­லை­களில் மட்­டு­மன்றி வீடு­க­ளிலும் பிர­சவம் பார்க்கும் பெண்ணால் பார்க்­கப்­பட்­டது. இதன்­போது கூடு­த­லாக எவ்­வித சிக்­கலும் இல்­லாது சுகப்­பி­ர­சவம் நடை­பெற்று தாயும் சேயும் நலத்­துடன் இருந்­தார்கள். அக்­கா­லத்தில் சிசே­ரியன் பிர­சவம் என்ற கதைக்கே இட­மில்­லாது இருந்­தது. ஆனால் இன்­றைய கால­கட்­டத்தில் பிர­ச­வங்கள் வீடு­களில் நடை­பெ­று­வ­தில்லை. பிர­ச­வ­வலி ஏற்­பட்­டதும் பெண்ணை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கி­றார்கள். பிர­சவம் வைத்­தி­யர்­களின் கண்­கா­ணிப்பில் நடை­பெ­று­கின்­றது. இதில் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வமும் சிசே­ரியன் பிர­ச­வமும் நடை­பெ­று­கின்­றன. 

இக்­கா­லத்தில் நடை­பெறும் பிர­ச­வங்­களைப் பார்க்­கும்­போது எம்­ம­னதில் எழும் முதல் கேள்வி முன்­னைய காலத்தில் பலர் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வங்­களை எவ்­வித சிக்­க­லு­மின்றி இல­குவில் மேற்­கொண்­டனர். அத்­துடன் இவற்­றில் ­பல வீடு­க­ளி­லேயே நடை­பெற்­றன. ஆனால் இன்று ஏன் அவ்­வாறு முடி­வ­தில்லை? 

இன்று பிர­சவம் என்றால் அவை வைத்­தி­ய­சா­லை­யி­லேயே நடை­பெ­று­கின்­றன. அத்­துடன் அவற்றில் பெரும்­பா­லா­னவை சிசே­ரியன் பிர­ச­வங்­க­ளி­லேயே முடி­வ­டை­கின்­றன. இந்த மாற்­றத்­திற்­கான கார­ணங்­களை ஆராய்­வோ­மானால் இன்று இளம்­பெண்­க­ளது வாழ்க்கை முறை முன்­னைய காலங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது முற்­றிலும் மாறு­பட்­டது. அதா­வது அன்­றைய காலத்தில் பெண்கள் தமது சகல வேலை­க­ளையும் தாமா­கவே செய்­தனர். அவர்­க­ளது உடல் உழைப்பு அதி­க­மி­ருந்­தது. இதனால் அன்­றைய பெண்கள் சுறு­சு­றுப்­பா­கவும் ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளா­கவும் இருந்­தனர். சமைத்தல், துணி துவைத்தல், கூட்­டுதல், நடத்தல் என பல­வே­லை­க­ளையும் தாங்­களே செய்யும் போது அவர்கள் உடல் ஆரோக்­கியம் திட­காத்­தி­ர­மாக இருந்­தது. இந்­நிலை இப்­போ­தைய  பெண்­க­ளிடம் இல்லை. இன்­றைய காலத்தில் பெண்­க­ளது சகல வேலை­க­ளிலும் இயந்­தி­ரங்­களும் நவீன கரு­வி­களும் பெரும் பங்கு வகிக்­கின்­றன. இதனால் பெண்­க­ளுக்குத் தேவை­யான அன்­றாட உடற்­ப­யிற்­சிகள் கிடைப்­ப­தில்லை. இதனால் அவர்கள் உடல் திட­காத்­தி­ர­நிலை குறைந்து சோம்பல் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர். இதனால் பிர­சவ நேரத்தில் அவர்­க­ளது பிர­சவ முறை மாற்­ற­ம­டைய இவை பெரும்­பங்கு வகிக்­கின்­றன. 

தற்­போ­தைய உணவு முறை­களும் முன்­னைய உணவு முறை­க­ளிலும் முற்­றிலும் வேறு­பட்­டவை. முன்­னைய பெண்­க­ளது உண­வுப்­ப­ழக்­கங்கள் ஆரோக்­கி­ய­மா­ன­வை­யாகக் காணப்­பட்­டன. உணவுப் பதார்த்­தங்­களும் இயற்­கை­யா­ன­வை­யாகப் பெரும்­பாலும் காணப்­பட்­டன. தற்­போ­தைய உணவு பழக்­கங்கள் பெண்கள் உடலில் அதி­க­ளவு சீனிச்­சத்து, மாச்­சத்து, கொழுப்­புச்­சத்தை அதி­க­ரிப்­ப­ன­வாக காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் உடற்­ப­யிற்­சி­களும் குறை­வாக உள்ள நிலையில் கூடு­த­லாக பெண்கள் கண­னிகள் முன்னும் தொலைக்­காட்சி முன்னும் கைத்­தொ­லை­பே­சி­க­ளு­டனும் தமது நேரத்தை செல­வ­ழிப்­ப­துடன் இவ்­வா­றான உண­வுப்­ப­ழக்­கங்­க­ளையும் கடைப்­பி­டிக்­கும்­போது அவர்­க­ளது உடல்­நிறை அதி­க­ரிப்­ப­துடன் ஆரோக்­கியம், சுறு­சு­றுப்புத் தன்மை குறை­வ­டை­கின்­றது. இந்­நி­லையில் இன்­றைய பெண்கள் பலர் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வத்தை மேற்­கொள்ள முடி­யாது திண­று­கின்­றார்கள்.   இவ்­வாறு சுகப்­பி­ர­சவம் இய­லாது போகின்­ற­போது பிர­சவ அறையில் பெண்கள் தொடர்ந்து தம்மால் சாதா­ரண பிர­ச­வத்தை முயற்­சிக்க முடி­யா­துள்­ளது. சிசே­ரியன் செய்து விடுங்கள் என மன்­றாடும் சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன. 

இவ்­வாறு சுகப்­பி­ர­ச­வத்­திற்கு கஷ்­டப்­பட்டு தாமா­கவே கேட்டு சிசே­ரியன் பிர­சவம் மேற்­கொண்டால் கூட, கூட இருப்­ப­வர்­களும் உற­வி­னர்­களும் வைத்­தி­ய­சா­லை­களில் இப்­போ­தெல்லாம் எடுத்­த­வுடன் சிசே­ரியன் செய்து விடு­கின்­றனர் என பேசிக்­கொள்­வதே வழ­மை­யாகி விட்­டது. 

மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழிநுட்ப வளர்ச்சி சிசேரியன் பிரசவம் அதிகரிக்கக் காரணமாகிவிட்டதா?

மருத்­து­வத்­துறை தற்­போது மிகவும் முன்­னேறி விட்­டது. நவீன தொழில்­நுட்ப வளர்ச்சி மூலம் ஸ்கேன் பரி­சோ­த­னைகள், சிசுவின் இரு­தயத் துடிப்பை கண்­ட­றியும் கரு­வி­களின் வருகை, சிசுவின் அங்க வளர்ச்­சி­களை துல்­லி­ய­மாக அறிந்து கொள்ளும் ஸ்கேன் பரி­சோ­தனை (4D, 5D Scan) போன்­ற­வற்றின் மூலம் தற்­கா­லத்தில் சிசு­வ­ளர்ச்சி, சிசு ஆரோக்­கியம் குறித்து துல்­லி­ய­மாக முன்­கூட்­டியே அறி­யக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இதனால் சிசு­விற்கு ஏதும் ஆபத்­துகள் ஏற்­ப­டுமா? என முன்­கூட்­டியே அறிந்து கொள்­ளலாம். இதனால் சிசுக்கள் ஆரோக்­கியம் குறைந்து துடிப்­புகள் நின்று போவ­தற்கு முன்­னரே குழந்­தை­களை காப்­பாற்ற சிசே­ரியன் பிர­சவம் மூலம் வெளியே கொண்­டு­வ­ரு­கிறோம். 

இவ்­வா­றான வச­திகள் முன்­னைய காலங்­களில் இல்­லா­மையால் அன்று சிசுக்­களின் ஆரோக்­கியம் சரி­யாக அறி­யப்­ப­டாமல் சிசே­ரி­யனும் செய்­யப்­ப­டாமல் குழந்­தைகள் சில பல ஆரோக்­கியக் குறை­க­ளுடன் பிறந்து கஷ்­டப்­பட்­டமை மருத்­துவ வர­லாற்றில் உள்­ளது. 

சிசே­ரியன் முறையில் ஏற்­பட்ட மாற்றம்

இன்­றைய கால­கட்­டத்தில் சிசே­ரியன் பிர­ச­வ­மா­னது முற்­றிலும் இல­கு­வா­னதும் ஆபத்­துகள் இல்­லா­தது­மான ஒரு சத்­தி­ர­சி­கிச்­சை­யாக உள்­ளது. இதற்­கான  மயக்­கமும் பெண்ணை முழு­தாக மயக்­காமல் உடலின் கீழ்ப்­ப­கு­தியை மட்டும் விறைக்­கப்­பண்ணி சிசே­ரியன் செய்­யப்­ப­டு­வதால் ஆபத்­துகள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. 

கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு முன் பார்த்தால் சிசேரியன் என்றால் அது ஒரு பெரிய சத்திரசிகிச்சையாகவும் முழுதாக பெண்ணை மயக்கி செய்ய வேண்டியதாகவும் ஆபத்துகள் நிறைந்த ஒரு பிரசவ முறையாகவும் இருந்தது. இதனால் பலரும் சிசேரியன் என்ற வார்த்தையை கேட்டு பயந்தனர்.  இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் இது ஒரு சுலபமான மாற்று வழியாகவும் பிரசவ முறையாகவும் காணப்படுகின்றது. 

எனவே பெண்கள் தமது உடற் பயிற்சி, உணவுப் பழக்கங்களில் கவன ஞ்செலுத்தி பிரசவ நேர சிக்கல்களை தவிர்ப்பதுடன் தமது வைத்திய நிபு ணரின் ஆலோசனையுடன் பிரசவ முறைகளை தேர்வு செய்வது சிறந்தது. எந்த முறை பிரசவமானாலும் அதன் பின்னர் தாயும் குழந்தையும் எவ்வித ஆரோக்கிய சிக்கல்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையும் ஆகும்.  

http://www.virakesari.lk/article/14311

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.