Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா?

Featured Replies

குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா?
 
குறிபார்த்து சுடுவதில் வல்லவரான சீனப்பிரஜை கொழும்பில் கைது. முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்க திட்டமா?
குறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீன பிரஜைஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தே கத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசி னோ  நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார்.
 
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் இலங்கை வந்ததாக குறிப்பிட்ட சீனர் தெரி வித்திருந்தார். எனினும், அவர்  சீன சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
 
கைது செய்யப்பட்ட போது, இவரது சுற்றுலா நுழைவிசைவு காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.
 
இவர், சூட்டுப் பயிற்சி பெற்றவர் என்றும், முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட சீனர், ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே தங்கியிருந்து ள்ளார்.
 
நி மா சி ரென்னின் மனைவி, சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீனர், தென்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுடன் கிரமமான தொடர்பில் இருந்துள்ளார்.
 
இவர் சிறிலங்காவில் தங்கியிருந்ததற்கான நோக்கத்தை கண்டறிவதற்கு விசாரணையாளர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன், இவருடன் தொடர்பில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
 
நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று எதிரணி அரசியல்வாதிகள் சிலர் கூறி வரும் நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் சீன சூட்டாளர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழு ப்பப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்ட சீனர், நுழைவிசைவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நாளை நாடுகடத்தப்படவுள்ளார். இவர் தற்போது, மீரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
இவர் சதித் திட்டங்கள் எதனுடனும் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து, நாடு கடத்தப்பட்ட பின்னரும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/21511

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சந்தேகத்துக்குரிய சீனா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவை கொல்ல சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கொழும்பு: இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்ய பதுங்கியிருந்த சீன நாட்டவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் சூதாட்ட விடுதி ஒன்றில் வேலை பார்ப்பது போல் பதுங்கியிருந்த சந்தேகத்துக்குரிய சீன நாட்டவர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபர் அதிபர் சிறிசேன உள்ளிட்ட விவிஐபிக்கள் பகுதிகளில் அதிகமாக நடமாடியது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவர் சிறிசேனவுக்கு எதிரான ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலருடனும் தொடர்பில் இருந்தார் என்பதை அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிழல் உலக குழுவைச் சேர்ந்த அந்த சீன நாட்டவர் குறிபார்த்து சுடுவதில் மிகவும் கை தேர்ந்தவராம்.

இதனால் ராஜபக்சே ஏற்பாட்டில் சிறிசேனவை கொலை செய்ய சீனாவில் இருந்து அந்த நபர் அழைத்துவரப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக 'எந்த நேரத்திலும்' ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவரகள் சூசகமாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் சீன நாட்டவர் ஒருவர் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/suspected-chinese-hitman-arrested-colombo-270006.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புலி 
சிங்களபுலி 
வெள்ளை புலி 
வரிசையில் சீனா புலியா ? 

  • தொடங்கியவர்

சீனாவின் மாபியா கும்­பல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் கொழும்பில் கைது

 

இன்று நாடு கடத்­தப்­படும் சாத்­தியம்
(எம்.எப்.எம்.பஸீர்)

குறி­பார்த்து சுடும், மாப்­பி­யாக்­க­ளுடன் தொடர்­பு­டைய சீன பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்­யப்­பட்டு மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­ டுள்ளார். விசா விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள அவ­ரிடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தாக அறிய முடி­கின்­றது. 

கொழும்பில் உள்ள பிர­பல கெசினோ நிலையம் ஒன்றில் வைத்தே உளவுத் துறையின் தக­வல்­க­ளுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்­த­வார இறு­தியில் கைது செய்­யப்­பட்­டுள்ள அவ­ரிடம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணையின் போது தான் முத­லீட்டுச் சபையில் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வனம் ஒன்றில் தொழில் செய்­வ­தாக சந்­தேக நபர் தெரி­வித்­துள்ளார். எனினும் இது தொடர்பில் பொலிஸார் விசா­ரணை செய்­த­போது மேற்­படி சந்­தேக நபர் சுற்­றுலா விசா­வி­லேயே இலங்கை வந்­துள்­ளதும் அவ­ரது விசா காலா­வ­தி­யா­கி­யுள்­ள­மையும் உறு­தி­யா­கி­யுள்­ளது.

 இந் நிலையில் அவர் சீன நாட்டு சூதாட்­டக்­கா­ரர்­களால் நடத்­தப்­படும் கசினோ நிலையம் ஒன்றில் இருந்த போது உளவுத் துறை ஒன்றின் தக­வல்­க­ளுக்கு அமை­வாக குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவர் துப்­பாக்கி சூட்டுப் பயிற்சி பெற்­றவர் எனவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. குறித்த சீன நாட்டு பிரஜை ஜனா­தி­பதி இல்லம், அலரி மாளிகை மற்றும் மிக முக்­கி­யஸ்­தர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்­ளிட்ட அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்புத் தொகு­தி­க­ளுக்கு அருகில் உள்ள அடுக்­கு­மாடிக் குடி­யி­ருப்பு ஒன்­றி­லேயே தங்­கி­யி­ருந்­துள்ளார் என மேல­திக விசா­ர­ணை­களில் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இவரின் மனைவி சீனாவின் உளவு நிறு­வனம் ஒன்றில் பணி­யாற்­று­வதும், அந்த விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலை­யி­லேயே குறித்த சந்­தே­க­நபர் கொழும்பில் தங்­கி­யி­ருந்­த­மைக்­கான உண்மைக் கார­ணத்தைக் கண்­ட­றிய மேல­திக விசா­ர­ணை­களை பொலிஸார் ஆரம்­பித்­துள்­ளனர். அதற்­காக அவர் இலங்­கையில் தங்­கி­யி­ருந்த காலப்­ப­கு­தியில் பயன்­ப­டுத்­திய தொலை­பேசி உள்­ளிட்­டவை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­லன.

எனினும் நேற்று வரை அச்­சந்­தேக நபரின் நோக்கம் தெளி­வாக கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

இந் நிலையில் 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 28 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த மேற்படி சந்தேக நபர் இன்று நாட்டில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-19#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.