Jump to content

ஹோட்டல் சாம்பார்


Recommended Posts

பதியப்பட்டது

ஹோட்டல் சாம்பார்

sambar_3108659f.jpg

நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி?

- எம். கலை, திருச்சி.

ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை.

துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். அதில் சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த பருப்பு கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரைத்துவைத்தப் பொடி, சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கிவையுங்கள். மணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் தயார். சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவை கூடும். கூடுதல் வாசனைக்கு முருங்கைக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

http://tamil.thehindu.com/society/women/கேளாய்-பெண்ணே-ஹோட்டல்-சாம்பார்-செய்வது-எப்படி/article9443371.ece?widget-art=four-all

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bildergebnis für பரங்கிக்காய்

பரங்கிக்காய் என்றால்.... என்னவாக இருக்கும் என்று இணையத்தில் தேடிய போது...
எங்கள்,  பூசணிக்காயின் படம் வந்தது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துவரம் பருப்பு கலந்த சாப்பாடு கறி எண்டால் சொல்லவேணுமே அந்தமாதிரி இருக்கும்.....:)


நன்றி ஆடவன்.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für பரங்கிக்காய்

பரங்கிக்காய் என்றால்.... என்னவாக இருக்கும் என்று இணையத்தில் தேடிய போது...
எங்கள்,  பூசணிக்காயின் படம் வந்தது.:grin:

 
 
 
 

முன்பும் சில இடங்களில் பதிவு செய்திருக்கிறேன்.

இலங்கையில் தமிழர்கள் போர்த்துக்கேயர் ஆளுமையில் வந்தது 16ம் நூறாண்டின் முற்பகுதியில்.

தென் இந்தியாவில் தமிழர்கள் ஆங்கிலேயர் ஆளுமையில் வந்தது 18ம் நூறாண்டின் பிற்பகுதியில். (அதுவரை அவர்கள் தெலுங்கு நாயக்கர் ஆட்சியின் கீழ். )

போர்த்துக்கேயர் கேரளா வந்தது 1492ல் மிளகு வாங்க. 3 கப்பல்கள் நிறைந்த சரக்குடன், சந்தோசமாக திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி.

கொலம்பஸ் அண்ட் கம்பனி, (இன்றய மெக்ஸிகோவில் ) தென் அமெரிக்காவில் இருந்து மிளகாயுடன் வந்திருந்தது. 

போர்த்துக்கேயர் தாம் செய்ய நினைத்த வியாபாரத்தினை, எதிர்மறையாக செய்ய வேண்டி வந்தது.

அதாவது ஆசியாவுக்கு மிளகாயை அறிமுகம் செய்து வியாபாரம் செய்வது.

அவ்வகையில், இலங்கை தீவில், மிளகாய் மட்டுமல்ல, 130 மரக்கறி வகைகளை பயிரிட்டனர். இந்த தோட்டங்களில் வேலை செய்யவென மலையாளிகள் பலரை இலங்கையில் குடி அமர்த்தினர்.

இந்த மரக்கறிகளில் ஒன்றே பூசணிக்காய். நம்மூரில் 15ம் நூறாண்டுக்கும், 18ம் நூறாண்டுக்கும் இடையேயான காலப் பகுதியில் பூசணி என்னும் தூய தமிழ் பெயரை பெற்றுக் கொண்டதாயினும், தென் இந்தியாவில் போர்த்துக்கேய பறங்கியரால் சந்தைப் படுத்தப் படத்தால், பறங்கிக் காய் என்னும் பெயர் பெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.