Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஆண்டில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை

Featured Replies

இந்த ஆண்டில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை

sambanthar.jpg
தேசிய இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிலையானதும், நிரந்தரமானதுமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் பிளவடைய விரும்பக் கூடாது எனவும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து தரப்பினரும் இணைந்து வாழவும் அனைவருக்கும் சமஉரிமைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து சுபீட்சமானதும், அமைதியானதுமான நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொன்னான சந்தர்ப்பத்தை கை நழுவ விடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/12261

2017இல் தமிழர்களுக்குத் தீர்வு!

பிறந்துள்ள 2017ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கிய ஆண்டாக அமையுமென தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டானது, முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்திருப்பதாவது,

இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2017ஆம் ஆண்டானது இந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய ஆண்டாக அமையுமென நம்புகின்றேன். முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பினூடாக, எமது தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும் நீண்டகாலம்  நிலைத்திருக்கக் கூடியதுமான தீர்வொன்றை 2017 ஆம் ஆண்டிலே அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

எமது மக்களிடையே பல விடயங்களில் பன்முகத்தன்மைக் காணப்படுகின்ற போதிலும்கூட, எதிர்கால சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியமிக்க தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவ்வாறான பன்முகத்தன்மைகளை தடையாக அமைத்துக்கொள்ள வேண்டாமென இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அமைதியும் செழிப்பும் பொருந்திய தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் ஒன்றிணைந்து கைகோர்க்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

கிடைத்துள்ள இப்பொன்னான வாய்ப்பை கைநழுவவிடாது பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் இவ்வாண்டிலே திடசங்கற்பம் பூணுதல் வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் பிறந்துள்ள புத்தாண்டானது மகிழ்ச்சியானதாகவும் சௌபாக்கியமானதாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=53390

Image may contain: 2 people, text நன்றி பெருமாள் 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஒரு மக்கள் தலைவராக சனநாயகப்படி இருக்க தகுதியற்றவர். உலகில் எந்த நாட்டிலும் இவரைப் போல ஒரு தோற்றுப் போன மனிதர் மக்களால் தலைவராக அங்கீகரிக்கப்பட்டதில்லை. ஆனால்.. தமிழரின் இயலாமை.. இவர்களை எல்லாம் தலைவர்களாக்கி வைத்திருப்பது தான்.

2016 இல் தீர்வு போய் எனி 2017..................................... இப்படி கடந்த 50 ஆண்டுகளில்.. இந்த அரசியல்வாதி.. சொல்லிச் செய்தது எதை. எப்படி இவரெல்லாம்.. வெட்கம்.. மானம்.. ரோசம் இல்லாமல்.. இன்னும் அரசியல்.. தலைமைத்துவத்தில் இருக்க முடியுது.

சம்பந்தன் படுதோல்வி அடைந்த ஒரு மோசமான தலைமைத்துவத்தில் வலிந்து குந்தி இருக்கும் ஒரு நபர். இவரிடம் எந்த சனநாயகப் பண்புகளும் இல்லை. மாறாக.. பெருங்கொடுங்கோலர்களின் சிந்தனையை.. தன்னகத்தே கொண்டு... அதற்கு மிதவாத முலாம் பூசிக் கொண்டு தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு பதவிகளை அலங்கரித்து உல்லாசத்தை கைவசப்படுத்தும்.. கைங்கரியத்தை மட்டுமே அரசியலாக்கி வைத்திருக்கிறார்.

இலங்கைத் தீவில் தமிழரின் இன்றைய அடிமை நிலைக்கு.. இவர்களைப் போன்ற தோற்றுப்போன சுயநலத தலைவர்கள் தான் முக்கிய காரணம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல நீங்களும் அறிக்கைகள் விடுவீர்கள் அதனை

வழமைபோல் தமிழ் மக்களும் நம்புவார்கள் அதுவும்

வழமைபோல் காற்றோடு போய்விடும் இதுதான் ஈழ  தமிழர்களின் தலை எழுத்து 

  • கருத்துக்கள உறவுகள்

2016´ல் தீர்வு என்று விட்டு, தான் அப்படி சொல்லவில்லை.... 
என்று ... இடையில் குத்துக்கரணம் அடித்தவர், தான் இந்த சம்பந்தன்.
பின்பு, அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்...
இப்போ... 2017´ல் தீர்வு என்கிறார். 
இந்த ஆள்... வாயை முடிக்க கொண்டு இருந்தாலே.... போதும்.

  • தொடங்கியவர்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு-சம்பந்தன்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு-சம்பந்தன்
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அவர் அனைவ ரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
அத்துடன், எதிர்காலச் சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியம் மிக்க தேசம் ஒன்றை இதன் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/news/22106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.