Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு நேரடியாக விஜயம் செய்யவேண்டும் : தீர்வின்றேல் நீதிமன்றம் செல்வதாக எச்சரிக்கை

Featured Replies

ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு  நேரடியாக விஜயம் செய்யவேண்டும் : தீர்வின்றேல் நீதிமன்றம் செல்வதாக எச்சரிக்கை

 

Ddfdfdf.jpg(ஆர்.ராம்) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிpள் கூட்டாக வலியுறுத்தினார்கள்.

தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக எதிர்ப்பை வெளியிட்டதோடு பிச்சைக்காரன் புண்போல இப்பிரச்சினை நீடித்துச் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை அரசியல் பேதமின்றி அனைத்து முஸ்லிம் பிரநிதிகளும் விரைவில் நேரடியாக சந்திக்கவுள்ளதாக திட்டவட்டமாக அறிவித்தவர்கள் அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டால் நீதிமன்தினை நாடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் “வில்பத்து பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடு” என்ற தலைப்பில் கொழும்பு ரேணுகா ஹோட்டலில்   ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்.எச்.எம்.நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாட் நிஸாம்டீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  

http://www.virakesari.lk/article/15133

  • தொடங்கியவர்
'வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர்'
 
 

article_1483616677-Mujibu-rahaman600.jpg

ப. பிறின்சியா டிக்சி

வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார்.

வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், கொள்ளுப்பிட்டி, ரேணுகா ஹோட்டலில் இன்று நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

1990ஆம் ஆண்டு புலிகளால் அடித்து விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது பரம்பரைக் காணிகளில் குடியேறும் போது, பெரும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரசாரம் செய்கின்றனர். இந்த மக்கள், இந்த நாட்டில் பிறந்தவர்கள். இவர்கள் இலங்கையர்கள். இவர்கள் கள்ளதோணியில் வந்தவர்கள் அல்ல, ஆப்கானிஸ்தானில் இருந்தோ மாலைத்தீவில் இருந்தோ வந்தவர்கள் அல்ல.

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய யுத்தம் காரணமாக  கடும் இழப்புகளுக்கு முகங்கொடுத்து, சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாகியவர்கள். இவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. தமது சொந்த இடத்தைத் தான் கேட்கிறார்கள்.

இவர்களை யாரும் தெற்கிலிருந்து கொண்டு வந்து குடியேற்றவில்லை. வானத்திலிருந்து குதித்தவர்களும் அல்ல. பாரம்பரியமாக வாழ்ந்த இவர்களுக்கு, தமது சொந்த இடத்துக்குச் சென்று குடியேறும் ஆசை மட்டுமே உள்ளது.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை காரணமாகவே இவர்கள், இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஏனையவர்களை போல அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்திருந்தால், இந்த நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

தமது சொந்த இடத்துக்குச் சென்று வீட்டை அமைத்து வாழ்வதற்கு இவர்கள் இன்று இந்தளவு சிரமத்துக்கு உள்ளாக வேண்டியதில்லை.

விடுதலை புலிகளின் செயற்பட்ட காலத்தில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிர்ப்பாக இருந்தனர். அதற்காக  தமது வாழ்க்கையில் நிறைய விலை கொடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இன்று இந்த மக்கள் தெற்குக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. அவர்களது சொந்த இடத்திலேயே மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/189224/-வடக-க-ம-ஸ-ல-ம-கள-கள-ளத-த-ண-ய-ல-வந-தவர-கள-அல-லர-#sthash.whVx6Kup.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இனவாத சூழலியலாளர்களினது செயற்பாடுகளுக்கு கண்டனம்
 
 

article_1483616409-Muslim.jpg

ப. பிறின்சியா டிக்சி

வடமாகாணத்தில் தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிகள், தமது ஒட்டுமொத்தமான எதிர்ப்பை வெளியிட்டதோடு, கண்டனத்தையும் தெரிவித்தனர்.

வில்பத்துக் காட்டை அழித்து, முஸ்லிம்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாக, இனவாதிகள் மேற்கொண்டு வரும் தீவிரமான, பொய்யான பிரசாரம் தொடர்பிலும், வில்பத்து சரணாலயத்தை விஸ்தரித்து வன ஜீவராசிகள் வலயமாகப் பிரகடனப்படுத்தப் போவதான ஜனாதிபதியின் அறிவிப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புகள் குறித்தும் விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு, கொள்ளுப்பிட்டி, ரேணுகா ஹோட்டலில் இன்று (05) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர்களான ஏ.எச்.எம் பௌசி, ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்.எச்.எம். நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷத், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் ஆஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/189223/இனவ-த-ச-ழல-யல-ளர-கள-னத-ச-யற-ப-ட-கள-க-க-கண-டனம-#sthash.wg811zQP.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா போகப் போறேன் எண்டு கரடி விட்டவர், இப்ப, இவையளை அங்க வரட்டுமாம். :unsure:

  • தொடங்கியவர்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வில்­பத்­துக்கு நேர­டி­யாக விஜயம் செய்­ய­வேண்டும்

P15-f0158960cbb219a631fb733e48ca054c21ed53bb.jpg

 

முஸ்லிம் பிர­தி­நி­திகள் கூட்­டாக வலி­யு­றுத்தல்; தீர்­வின்றேல் நீதி­மன்றம் செல்­வ­தா­கவும் எச்­ச­ரிக்கை
(ஆர்.ராம்)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் வில்­பத்து பகு­திக்கு நேர­டி­ யாக விஜயம் செய்து உண்மை நிலை­மை­களை அறிந்து

கொள்ள வேண்டும். அதனைவிடுத்து மாறு­பட்ட கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாக வைத்து தீர்­மா­னங்­களை ஒரு­போதும் எடுக்கக் கூடாது என அனைத்து அர­சியல் கட்­சி­க­ளையும் சேர்ந்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் கூட்­டாக வலி­யு­றுத்­தி­னார்கள்.

தமது பூர்­வீகப் பிர­தே­சங்­களில் குடி­யேற முயற்­சிக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன­வாதச் சூழ­லி­ய­லா­ளர்­களும் இன­வா­தி­களும் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கூட்­டாக எதிர்ப்பை வௌியிட்­ட­தோடு பிச்­சைக்­காரன் புண்­போல இப்­பி­ரச்­சினை நீடித்துச் செல்ல அனு­ம­திக்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினர். 

ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோரை அர­சியல் பேத­மின்றி அனைத்து முஸ்லிம் பிர­நி­தி­களும் விரைவில் நேர­டி­யாக சந்­திக்­க­வுள்­ள­தாக திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­த­ அவர்கள் அப்­பாவி மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­காது விட்டால் நீதி­மன்­றத்தினை நாட­வுள்­ள­தா­கவும் எச்­ச­ரிக்கை விடுத்­தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்­பாட்டில் அதன் தலைவர் என்.எம் அமீன் தலை­மையில் ''வில்­பத்து பிரச்­சினை தொடர்­பாக எமது நிலைப்­பாடு'' என்ற தலைப்பில் கொழும்பு ரேணுகா ஹோட்­டலில் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்று நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதி­யுர்தீன், பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி, இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லாஹ், ஏ.எச்.எம்.பௌசி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபூர்­ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்.எச்.எம்.நவவி, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான அர்ஷாட் நிஸாம்டீன், ஜனுபர், தேசிய ஐக்­கிய முன்­ன­னியின் தலைவர் அஷாத் சாலி, ஜம் இய்­யதுல் உலமா சபையின் பிரதிச் செய­லாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஷஹீட் ஆகியோர் உட்­பட சமூக நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன்­போது அப்­பி­ர­தி­நி­திகள் வௌியிட்­ட­க­ருத்­துக்கள் வரு­மாறு.

ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜி­பூர்­ரஹ்மான்

1990ஆம் ஆண்டு புலி­களால் விரட்­டப்­பட்ட வடக்கு முஸ்­லிம்கள் மீண்டும் தமது பரம்­ப­ரைக்­கா­ணி­களில் குடி­யேறும் போது இன­வா­தி­களும் இன­வாதச் சூழ­லி­ய­லா­ளர்­களும் அவர்­களை கொடு­மைப்­ப­டுத்­து­கின்­றனர்.

தமது சொந்தக் காணி­களில் வளர்ந்­தி­ருக்கும் பற்­றைக்­கா­டு­களை அழித்துக் குடி­யே­றும்­போது வில்­பத்தை அவர்கள் அழிக்­கின்­றார்கள் என்றும் இவர்கள் கூக்­குரல் இடு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால் அற்த அப்­பாவி முஸ்­லிம்கள் கள்­ளத்­தோ­ணி­க­ளாக வந்­த­வர்­களா? அல்­லது ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்தோ, பாகிஸ்­தா­னி­லி­ருந்தோ,கொண்­டு­வ­ரப்­பட்­ட­வர்­களா?, இல்­லை­யென்றால் வானத்தில் இருந்து குதித்­த­வர்­களா?

26 வரு­டக்­க­ளாக மூன்று பரம்­ப­ரை­யாக தென்­னி­லங்­கையில் வாழும் இவர்கள் உடுத்த உடை­யோடு நிர்க்­க­தி­யாக வந்­த­வர்­களே மீளக்­கு­டி­யேற எதிர்­பாத்­தி­ருக்கும் அம்­மக்­க­ளாவர். அவர்கள் வாழ்ந்த காணிகள் பல்­வேறு வழி­களில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு விட்­டன. அங்கு வாழ்ந்தோர் அவர்­களின் காணி­களில் ஒரு பகு­தியை ஆக்­கி­ர­மித்­துள்­ளனர். இன்னும் சில காணிகள் புலி­க­ளினால் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் எஞ்­சி­யி­ருக்கும் காணி­களில் அந்த மக்கள் குடி­யே­றும்­போது தான் இன­வா­தி­களின் கொடுமை தாங்க முடி­ய­வில்லை.

1990ஆம் ஆண்டு புலி­களின் போராட்­டத்­திற்கு முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கா­த­தா­லேயே அவர்கள் வௌியேற்­றப்­பட்­டனர். புலி­க­ளுடன் ஒத்துப் போயி­ருந்தால் அவர்­க­ளுக்கு இந்த அவலம் ஏற்­பட்­டி­ருக்­காது. அர­சாங்­கமும், சகோ­தர சிங்­கள மக்­களும், மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு தடை போடும் இன­வா­தி­களும் இந்த உண்­மையை தௌிவாக விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

யதார்த்­தத்தை விளங்­காது இன­வா­திகள் அமைச்சர் ரிஷாட்டும் முஸ்­லிம்­களும் காடு­களை அழிப்­ப­தாக கூப்­பாடு போடு­கின்­றனர். முஸ்­லிம்கள் வில்­பத்துக் காட்டை ஆக்­கி­ர­மிப்­ப­தாக ஒரு பிர­மையை ஏற்­ப­டுத்தி சிங்­கள சமூ­கத்தின் மத்­தியில் ஒரு பிழை­யான கருத்தை இன­வாதச் சூழ­லி­யா­லா­ளர்­களும், ஊடவியலாளர்­களும் விதைத்து வரு­கின்­றனர்.

வவு­னியா மாவட்­டத்­தி­லுள்ள வன பரி­பா­லனத் திணைக்­க­ளத்­திற்கு உரித்­தான கலா­போ­கஸ்­வெவ பிர­தே­சத்தில் அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து மக்­களைக் கொண்­டு­வந்து வீட­மைத்துக் கொடுத்து, தொழில் வழங்கி, அங்கு குடி­ய­மர்த்தி நாமல் கம என்ற கிரா­ம­மாக அதனை ஆக்­கி­யி­ருப்­பதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்­கின்­றனர்.

வில்­பத்துக் காட­ழிப்புத் தொடர்பில் முஸ்­லிம்­க­ளையும் அமைச்சர் ரிஷாட்­டையும் குற்­றஞ்­சாட்டி வரும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­விற்கு இந்த விட­யங்கள் கண்­ணுக்குத் தெரி­வ­தில்­லையா? அல்­லது இவர்கள் போன்ற அர­சி­யல்­வா­தி­களின் பின்­பு­லத்தில் இன­வாதச் சூழ­லி­ய­லா­ளர்கள் தொழிற்­ப­டு­கின்­ற­னரா? என்ற சந்­தேகம் எமக்கு எழுந்­துள்­ளது என்றார்.

அசாத் சாலி

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி,

முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றப் பிரச்­சி­னையை அர­சாங்கம் ஒரு சமூ­கத்தின் பிரச்­சி­னை­யா­கவோ, அல்­லது ஒரு சாராரின் பிரச்­சி­னை­யா­கவோ கரு­தாமல் தேசியப் பிரச்­சி­னை­யாக பார்க்க வேண்டும். இந்த விட­யங்­களில் அர­சுக்கே நிறையப் பொறுப்­புகள் உண்டு. முஸ்­லிம்­க­ளா­கிய நாம் ஈழம் கேட்­க­வில்லை எங்­களை, எங்­க­ளது சொந்த இடங்­களில் நிம்­ம­தி­யாக வாழ­வி­டுங்கள் என்றே கூறுகின்றோம்.

ஒட்­டாரா குண­வர்த்­தன போன்­ற­வர்கள் எவ­ரு­டைய பின்­பு­லத்தில் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பது அவர்­க­ளது நட­வ­டிக்­கை­களில் தௌிவாக விளங்­கு­கின்­றது. வில்­பத்துப் பிரச்­சி­னையில் மூக்கை நுழைத்­துள்ள டலஸ், உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் அதி­கா­ரத்­துக்கு வரத் துடிக்­கின்­றார்கள் என்­பது அவர்­க­ளது இன­வாதக் கருத்­து­க­ளி­லி­ருந்து புலப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஓரி­டத்­தி­லி­ருந்து அமர்ந்து பேசி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைக்­க­ளுக்கு முடிவு கட்ட வேண்டும். தற்­போது பொது பல சேனாவும் மகிந்த அரசின் முக்­கி­யஸ்­தர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அட்­டூ­ழி­யங்கள் தொடர்பில் மாறி மாறி வௌியிடும் கருத்­துக்கள் எங்கள் சமூ­கத்தை அவர்கள் எப்­படி பந்­தா­டி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை உணர்ந்து கொள்­வ­தற்குப் போது­மா­னது என்றார்.


ஹிஸ்புல்லாஹ் இங்கு கருத்து கூறிய இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்­புல்லாஹ், மீள்­கு­டி­யேற்ற அமைச்­சைப்­பொ­றுத்­த­வ­ரையில் அனைத்து இன மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­தையே இலக்­காக கொண்­டி­ருக்­கின்­றது. எனினும் மக்கள் மீள்­கு­டி­யேறும் போது காணிகள் தேவை­யாக இருப்பின் அவை தொடர்­பாக மாவட்ட செய­லாளர், மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் ஊடாக விண்­ணப்­பிக்­கு­மாறும் அது தொடர்­பாக பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­மாயின் அவர்கள் ஊடா­கவே தீர்வை பெறு­மாறும் கோரப்­பட்­டுள்­ளது.  

அதே­நேரம் மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக இருக்கும் நான் கிழக்கு மாகாண மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றேன். அமைச்சர் சுவா­மி­நா­தனே வடக்கு மாகாண மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனினும் இந்த பகு­திக்குயில் மக்கள் அவர்களது சொந்த இடத்­தி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என்­பதை நாம் பல தட­வைகள் தெரி­வித்­துள்ளோம் என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,

வட­மா­காண முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக தென்­னி­லங்­கையில் வாழ்ந்த காலத்­திலே அவர்கள் வாழ்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி­களை, வன வள அதி­கா­ரிகள் 2012ஆம் ஆண்டு ஒக்­டோபர் 10 ஆம் திகதி ஜி பி எஸ் முறையின் கீழ் கொழும்பில் இருந்து கொண்டு வர்த்­த­மானிப் பிர­க­டனம் செய்­தனர். இதன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் அநீதி இழைக்­கப்­பட்­டது. இந்தப் பிர­க­டனம் மேற்­கொண்ட விடயம் 2015 ஆம் ஆண்டு தான் வெளியே தெரிய வந்­தது.

முசலிப் பிர­தேச சபைக்­குட்­பட்ட, மரு­த­மடு கிராம சேவகர் பிரி­வி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 2800 ஹெக்­டேயர் காணி­களை வன பரி­பா­லனத் திணைக்­களம் விளாத்­திக்­திக்­குளம் என்ற பெயரில் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அந்தப் பிரதேசமக்களின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த அரசாங்கத்தில் நாம் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவினாலேயே அவர்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்பட்டது.

2800 ஹெக்டேயர் காணிகளை இழந்த அந்த மக்களுக்கு ஆக 208 ஹெக்டேயரே வழங்கப்படிருக்கின்றது. புலிகளினால் அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு கடந்த அரசின் இந்த நடவடிக்கைகள் மேலும் அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

நொந்து போன இந்த மக்கள் மீளக் குடியேறும்போது இனவாதிகள் இவ்வாறு மீண்டும் கொடுமைப்படுத்துகின்றனர்.2012 ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகின்றோம் என்றார்.

அதேநேரம் பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் துறைப் பேராசிரியர் நவ்பல் வில்பத்து தரைத்தோற்றம் தொடர்பாகவும் முசலி முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06

  • கருத்துக்கள உறவுகள்

மீள் குடியேற்றம் என்னும் சிறு பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துடன், புகுந்து குடடையினை குழப்பி, இப்போது சர்வ கட்சி முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மேலும் குழப்பும், தன்னை படித்தவராக நினைக்கும் றிசாத் தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

இங்கே முஸ்லீம் காங்கிரஸ் இல்லை போல தெரிகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.