Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அவசர கடிதம்: கையொப்பம் அவசியம்

Featured Replies

[Wednesday February 07 2007 01:13:56 PM GMT] [pathma]

அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது.

அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும்.

http://www.ipetitions.com/petition/srilankaunappeal/

நன்றி : தமிழ்வின்

ஏன் காசு கேட்கிறார்கள்..? காசு கொடுப்பது பிரச்சனை இல்லை? கிரடிற் காட் இல்ல்லாதவர்கள் என்ன செய்வது???? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் காசு கேட்கிறார்கள்..? காசு கொடுப்பது பிரச்சனை இல்லை? கிரடிற் காட் இல்ல்லாதவர்கள் என்ன செய்வது???? :rolleyes:

கட்டாயம் குடுக்கவேண்டுமென்பதில்லை. விரும்பியவர்கள் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டாயம் குடுக்கவேண்டுமென்பதில்லை. விரும்பியவர்கள் கொடுக்கலாம்.

நான் எப்போதோ கையொப்பமிட்டுவிட்டேன். மற்றவர்களும் செய்யவும்.

ராசாக்கள் நானும் கையெழுத்து போட்டுடேன். அதுவேற பிரச்சனை.நான் காசு கொடுக்காமல் கையெழுத்து போட்டுட்டேன். எனக்கு அந்த web site மீது பெரிசா நம்பிக்கை இல்லாமல்தான் கையெழுத்து போட்டனான். மோகன் அண்ணா அல்லது மட்டுநிறுத்தினர்கள் எவராவது இந்த பக்கங்களின் நம்பிக்கை தன்மை பற்றி ஆராய்ந்து அதனின் உண்மை தன்மை பற்றி எங்களை மாதிரி வாசகர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னும் வைக்க வில்லை எல்லாம் சந்தேகம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசாக்கள் நானும் கையெழுத்து போட்டுடேன். அதுவேற பிரச்சனை.நான் காசு கொடுக்காமல் கையெழுத்து போட்டுட்டேன். எனக்கு அந்த web site மீது பெரிசா நம்பிக்கை இல்லாமல்தான் கையெழுத்து போட்டனான். மோகன் அண்ணா அல்லது மட்டுநிறுத்தினர்கள் எவராவது இந்த பக்கங்களின் நம்பிக்கை தன்மை பற்றி ஆராய்ந்து அதனின் உண்மை தன்மை பற்றி எங்களை மாதிரி வாசகர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இதில் கையெழுத்து வைப்பதனால் ஒரு நட்டமும் வராது.

எனவே அனைவரும் தவறாது கையெழுத்து வையுங்கள். உப்பிடி எத்தினைக்கு வைச்சோம். இதுக்கும் வைப்போம்.

இதில் கையெழுத்து வைப்பதனால் ஒரு நட்டமும் வராது.

எனவே அனைவரும் தவறாது கையெழுத்து வையுங்கள். உப்பிடி எத்தினைக்கு வைச்சோம். இதுக்கும் வைப்போம்.

ஐயா பால பன்றி தர் நட்ட இலாப கணக்கில இது. செய்வன திருந்த செய். ஆழம் தெரியாமல் காலை விடாதே. இவை எவரென்டு எங்களுக்கு நம்பிக்கையான ஆக்கள் எவராவது தெளிவுபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா பால பன்றி தர் நட்ட இலாப கணக்கில இது. செய்வன திருந்த செய். ஆழம் தெரியாமல் காலை விடாதே. இவை எவரென்டு எங்களுக்கு நம்பிக்கையான ஆக்கள் எவராவது தெளிவுபடுத்த வேண்டும்.

எல்லாம் சிவமயம் என்று சொல்லுவார்கள்

ஆனால் இவருக்கு எல்லாம் பயமயம்!

எழுதியிருக்கிற விசயத்தை வாசிச்சுப்பார்த்து நீர் உடன்பட்டால் வையும் உமது ஒப்பம்.

உமக்கு எத்தினை வயசு? (உமக்கு 18 வயதை விட குறைவெண்டால் நீர் இங்கை நிக்கிறதே பிழை!)

எல்லாம் ஆரையன் கேட்டே செய்வீர்?

உம்மடை சொந்த மூளையை என்ன சலவைக்குப் போட்டு விட்டீரோ துவைகருவியினுள்?

உந்த ஒன்லைன் டொட்கொம்முகளின்ற கையெழுத்து வேட்டைகளால் ஏதாவது பிரயோசனம் இருப்பதாய் யாராவது நினைக்கின்றீர்களா?

சிங்களக் குண்டர்களும் இதே டொட்கொம்மூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கெதிராக கையெழுத்து வாங்குகின்றார்கள்.

கையெழுத்து போடுறீங்கள், பெட்டிசன் குறிப்பிட்ட நபருக்கு போய்ச் சேர்ந்தபின் கையெழுத்து வாங்குபவர்கள் அதன் முடிவுகளை பெட்டிசன் கிடைத்ததும் ஐ.நாவில் பதவியில் இருப்பவர்கள் எழுதும் பதில் கடிதங்களை பற்றி ஏன் வாய் திறப்பதில்லை? அப்படியானால் இதிலிருந்து இரண்டு விடயங்கள் தெளிவாகின்றது.

1. ஐ.நா வில் பதவியில் இருப்பவர்கள் இக்கடிதங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை அல்லது பதில் கடிதம், அதாவது என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதை அறிவிப்பதில்லை.

அல்லது

2. ஐ.நா வில் பதவியில் இருப்பவர்களிடமிருந்து பதில் கடிதம் வந்ததும் அதை ஏதோ தங்களுக்கு வந்த அந்தரங்கமான கடிதமாக அதை இப்பெட்டிசன்களை ஒன்லைனில் போடுவபர்கள் வைத்திருக்கின்றார்கள். அப்படியானால் இவர்களிற்கு கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் எங்கள் உதவி வேண்டும். கையெழுத்து கிடைத்ததும் முடிவுகளைப் பற்றி ஈ மெயிலில் அல்லது ஊடகங்களில் அறிவிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இவர்களிற்கு இல்லையா? அல்லது இவ்வாறு பெட்டிசனுகள் போட்டு சுய விளம்பரம் தேடுகின்றார்களா? இந்த ஒன்லைன் பெட்டிசனை எவரும் போடமுடியும். ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதத்தெரிந்தால் போதும். அப்படியானால் நானும் நாளைக்கு ஒரு ஒன்லைன் பெட்டிசனை போட்டால் நீங்கள் வந்து கையெழுதுப் போடுவீர்களா?

நான் ஏன் இதை எல்லாம் சொல்கின்றேனென்றால், நானும் இவ்வாறான பல பெட்டிசனுகளில் கையெழுத்து போட்டுள்ளேன். ஆனால் பெட்டிசன் சமர்ப்பிக்கப்பட்டு மாதங்கள் கடந்தபின்பும் சம்மத்தப் பட்டவர்களிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்கவில்லை.

நாமே பெட்டிசன் என்ற பெயரில் எம்மை ஏமாற்றுகின்றோமா?

ராசா ராசா மண்டைக்குள் ஒன்டும் இல்லா பன்றி தர் ராசா

நீங்களும் செய்ய மாட்டீங்கள் செய்யிறவனையும் விடமாட்டீங்கள்!

நல்ல பொலிசி!!

இதிலை கையெழுத்து வைக்க 2 நிமிடம் தான் எடுக்கும்.

அதிலை ஒன்றும் பிரயோசனம் வராவிட்டால் உங்களுக்கு ஏமாற்றம் வேறை வந்து விடுமோ?

கையெழுத்துக்கு என்ன நடந்ததெண்டு அறிவிக்கவில்லையாம்!

இவர் கையெழுத்துப் போட்டதுக்கு நாங்கள் காவடி எடுக்க வேண்டுமாம்!!

குரங்கை என்னவோ கேட்டால்

கொப்புக்கொப்பாய் தாவிப்பெய்யுமாம்

ஐயோ எனக்கு தலை சுத்துது.

போட்டு வாறன்.

Edited by balapandithar

நீங்களும் செய்ய மாட்டீங்கள் செய்யிறவனையும் விடமாட்டீங்கள்!

நல்ல பொலிசி!!

இதிலை கையெழுத்து வைக்க 2 நிமிடம் தான் எடுக்கும்.

அதிலை ஒன்றும் பிரயோசனம் வராவிட்டால் உங்களுக்கு ஏமாற்றம் வேறை வந்து விடுமோ?

கையெழுத்துக்கு என்ன நடந்ததெண்டு அறிவிக்கவில்லையாம்!

இவர் கையெழுத்துப் போட்டதுக்கு நாங்கள் காவடி எடுக்க வேண்டுமாம்!!

ஐயோ எனக்கு தலை சுத்துது.

போட்டு வாறன்.

ராசா நாங்கள் துரோக கும்பல்களுக்கு காவடி எடுக்கவில்லை என்பது எமக்கு தெளிவாக தெரிய வேண்டும் அதுதான் எமது பிரச்சனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசா நாங்கள் துரோக கும்பல்களுக்கு காவடி எடுக்கவில்லை என்பது எமக்கு தெளிவாக தெரிய வேண்டும் அதுதான் எமது பிரச்சனை.

புதினம்.கொம் இலை போட்டிருக்கிறார்கள். (www.puthinam.com)

புதினம் நம்மவர் தளம் தானே?!

நீங்களும் செய்ய மாட்டீங்கள் செய்யிறவனையும் விடமாட்டீங்கள்! நல்ல பொலிசி!!

இதிலை கையெழுத்து வைக்க 2 நிமிடம் தான் எடுக்கும். அதிலை ஒன்றும் பிரயோசனம் வராவிட்டால் உங்களுக்கு ஏமாற்றம் வேறை வந்து விடுமோ? கையெழுத்துக்கு என்ன நடந்ததெண்டு அறிவிக்கவில்லையாம்! இவர் கையெழுத்துப் போட்டதுக்கு நாங்கள் காவடி எடுக்க வேண்டுமாம்!! குரங்கை என்னவோ கேட்டால் கொப்புக்கொப்பாய் தாவிப்பெய்யுமாம்

ஐயோ எனக்கு தலை சுத்துது. போட்டு வாறன்.

நன்றாகத்தான் இருக்கின்றது உங்கள் வாழ்க்கைப் பொலிசி! இப்படி கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்தைப் போட்டு வாழ்ந்தால் நாளைக்கு நடு ரோட்டில் தான் நீங்கள் நிற்கவேண்டி வரும்!

கையெழுத்து போடமுடியாது என நான் சொல்லவில்லை. எமக்கு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு! பெட்டிசனுகளைப் போடுபவர்கள் இனியாவது திருந்த வேண்டும். அவர்கள் தமது தார்மீகப் பொறுப்புக்களைத் தட்டிக்கழித்து விட முடியாது!

ஒருவனின் கையெழுத்து உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாக இருக்கின்றதோ?

உப்படி பதறியடித்து என்ன எழுதப்பட்டுள்ளது என்றும் அறியாமல் கையெழுத்துப் போடுவதில் பிரயோசனம் இல்லை என்பதே எனது தாழ்மையான கருத்து! உண்மையில் அக்கறையுள்ளவர்களானால் இக்கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்து ஊடகங்களிலும் முன்கூட்டியே அறிவித்து திட்டமிட்ட முறையில் இதைச் செயற்படுத்தலாமே? உதைப் பார்க்கும் போது டக்கு கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய காதல் கடிதம் போல் தான் உள்ளது.

செய்வன திருந்தச் செய்!

  • தொடங்கியவர்

யாராவது அமெரிக்காவில் வதியும் யாழ்க்கள அங்கத்தவர் ஒருவர் இந்தவிடயம் பற்றி தெரிந்து எழுதலாமே. காசு அவசியமில்லை என நான் நினைக்கின்றேன். எத்தனையோ கதவுகளைத் தட்டி விட்டோம் இந்தக் கதவையும் தட்டிப் பார்ப்போம். திறக்கும் என்ற நம்பிக்கையில். எம் மக்களுக்கு எம்மால் செய்ய முடிந்த அணில் உதவி. இவைகளால் ஒரளவு அழுத்தங்களையாவது எம்மால் சர்வதேச சமூகங்களுக்குக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். புலம் பெயர் வாழ் எம் மக்கள் ஏன் அஞ்சப்படுகின்றார்கள்? இந்த பெட்டிசனில் கொலைக் களத்தில் அதாவது கொழும்பிலிருந்து கூட பலர் கையெழுத்து இட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஈழத்திலிருந்து

ஜானா

நீங்க நல்லது செய்யவிளைகிரீங்க என்பதை விளங்கிக்கொள்ளும் அதே நேரம் எங்களையும் விளங்குங்க. இந்த கிறடிட் காட் நம்பரை கேட்டது தான் திக் திக் எண்டிச்சு. ஆள் அடையாள படுத்த தான் எண்டாலும் இப்ப இந்த பொல்லாத காலத்தில கார் லைசன்ஸ கேட்டாலும் 10 கேள்வி கேட்டிருப்போமுங்க. அது சரி எங்க எல்லோரையும் ஈசியா ஊரில கோழிபிடிக்கிறமாதிரி எல்லோ கூண்டோட கைலாசம் போக வேண்டிவந்துடும். உவங்களுக்கு எங்கள் எல்லோரையும் பிடிச்சு அட்ரசோட அமத்தினமாதிரியும் இருக்கும் அதே நேரம் அங்கால கைமாறி காசும் வேண்டலாமெல்லோ.

ஆமா நீங்க சொன்ன மாதிரி பயம்தாங்க.

இப்ப கம்பியூட்டரினுடாக பெரும் குள்ள நரிகள் எல்லாம் எப்ப வரும், எப்படி வரும் எண்டு தெரியாது. ஊகிக்க முடியாது. ஆனா ஒண்டு மட்டும் சத்தியமா உண்மை அதுகள் தங்கட திறமையால் எப்படியும் வந்துடுவீனமுங்கோ.அதுக்குத்த

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அவசர கடிதம்: கையொப்பம் அவசியம்

[Wednesday February 07 2007 01:13:56 PM GMT] [pathma]

அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது.

அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும்.

இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும். (click here!)

http://www.ipetitions.com/petition/srilank...peal/index.html

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அவசர கடிதம்: கையொப்பம் அவசியம்

[புதன்கிழமை, 7 பெப்ரவரி 2007, 17:48 ஈழம்] [காவலூர் கவிதன்]

அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது.

அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும்.

http://www.ipetitions.com/petition/srilank...peal/index.html

http://www.eelampage.com/?cn=30735

ஐயா அதிஜாக்கிரதை புண்ணியவான்களே,

கையெழுத்திட்டுத் துலையுங்களப்பா. அதில் பூதமுமில்லை புகையுமில்லை. மக்களின் அவலம் தான் உள்ளது. வேண்டுமென்றால் சொல்லுங்கள் மொழிபெயர்த்துத்தருகிறேன்.

இன்று தான் கடைசி நாள்.

தமிழீழத்தில் கார்செய்யப்புறப்பட்ட கார்க்கார தாத்தாவே, உந்தன் கிரடிட்காட் எங்கள் உயிரை விட மேலானதா? கேட்டுக் கேள்வியின்றி தங்கள் உயிரையே தரும் மக்களுக்காக உனது பெயரையும் இமெயில் விலாசத்தையும் தர இத்தனை கேள்வி கேட்கிறாயே. தவறியும் தமிழீழம் கிடைத்தால் வருவாயோ இங்கே கார் செய்ய?

ஐயா மோகன், நீங்கள் சொன்னால்தான் தாலி கட்டுவேன் என்று விடாப்பிடியாய் நிற்கும் ஜென்மங்களுக்கா ஒரு முறை தங்கள் திருவாய் மலர்ந்தருள மாட்டீரோ?

Edited by saanakiyan

  • தொடங்கியவர்

முன்னர் வந்தது கோபி அனானுக்கு அனுப்புவதற்கான பெட்டிசனே.(பெட்டிசனுக்கு தமிழ் என்ன? <_< ) இது தற்போதைய ஐநா செயலர் நாயகம் பன் கி முன் அவர்களுக்கானது. முன்னேச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிரேடிட்காட் தேவையில்லை. விரும்பினால் மட்டும் உதவலாம். எனது மின்னஞ்சலுடன் பெயரையும் பதிந்து கிளிக் செய்தேன். நிதி, கிரேடிட்காட் கேட்டதும் பக்கத்தை மூடிவிட்டேன். ஆயினும் என் மின்னஞ்சலுக்கு எனது கையெழுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அஞ்சல் வந்திருந்தது. எம் களத்தில் யாரும் அமெரிக்காவில் வாழ்பவர்கள் இல்லையா? இதைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு? எது எப்படியோ ஒரு கையெழுத்து இடுவதனால் எதுவும் நடந்து விடாது. இப்படியே பயந்து பயந்து வாழ்ந்து எதைக் கண்டோம்? எதைக் காணப் போகின்றோம்.

ஈழத்திலிருந்து

ஜானா

(இந்த முறையீடு இரு அமெரிக்க பிரஜகளான Ellyn Shander, MD மற்றும் Lisa Hanson என்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)

செயலாளர் நாயகம் பன் கீ-மூன்,

ஐக்கிய நாடுகள் தலமையகம்

தங்கள் கனம் பொருந்திய,

இதன் மூலம் உங்களிடம் மிகவும் அதி அவசரமாக வேண்டிக்கொள்வது யாதெனில், சிறீ லங்காவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலமையை உனடியா கவனத்திற் கொள்ளும்படியும், மேலும் தொடரும் மனித அவலம் மற்றும் மனிதஉரிமை மீறல் என்பவற்றை தடுப்பதற்கு நேரடியாக தலையிடும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை இராணுவத்தினரும் தமிழீழ விடுதலை புலிகளும் தெளிவாக அறிவிக்கப்படாத யுத்தமொன்றில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர் என்பது நன்கு தெரிந்ததே. ஐ.நா.வால் ஏற்கனவே இவ்வருடத்தின் (2007) ஆரம்பத்தின் முதல் இரண்டு வாரத்தில் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளில் இலங்கையின் வடக்கு கிழக்கில் பாதகமான மோசமடைந்து வரும் நிலலை குறித்தும், தற்கொலைத்தாக்குதல்கள் விமானத்தாக்குதல்கள் உட்பட அண்மைய வன்முறைகளை கண்டித்தும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அழைப்பையும் விடுத்திருந்தது. அமைதிப் பேச்சுகளை மீள ஆராம்பிக்குமாறு சிறி லங்கா அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் ஐ.நா. மற்றும் சர்வதேச சமுகம் கடந்த ஆறு மாதங்களாக பலதடவைகள் கேட்டுள்ளன. இரு பகுதியினரும் ஒரு சந்ததி முழுமைக்கும் நீண்ட யுத்தத்திற்கு சமாதான வழிமுறைத் தீர்வு காண்பதில் அர்பணிப்புடன் செயற்படுவதாக கூறும் கூற்றுகள் போலியானவை என நிருபிக்கப்பட்டுள்ளன. மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் அறிக்கைகளுக்கும், சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்கும் மத்தியில் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது.

நீங்கள் அனைவரும் அறிந்தது போல சிறி லங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் நிலமைகள் பயங்கரமானது, மற்றும் இந்தப் பிரதேசத்தில் உள்ள சிறி லங்காவின் தமிழ் சனத்தொகையினர் சொல்லொணா துயரங்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆகஸ்ட் 2006 முதல் யாழ்ப்பாணத்திற்கான தரைவழி தொடர்பு பிரதான வீதி (A9) மூடப்பட்டதன் மூலம் துண்டிக்கப்பட்டதால் இக் குடா நாட்டில் உள்ள 500,000 பொது மக்களுக்கு அடிப்படையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன மறுக்கப்பட்டுள்ளன. அண்மைய வாரங்களில் வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதல்களால் 20,000 மக்கள் தப்பியோடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கே சிக்கி மீதமுள்ள 15,000 பொதுமக்கள் பட்டினியால் சாவின் விளிம்பிலுள்ளனர். பொதுவான கணக்கெடுப்புகளின் படி ஆகஸ்ட் 2006இல் இருந்து இடம்பெற்ற பொதுமக்கள் இறப்புகள் 3000. இரு தசாப்தகால போர் எற்படுத்திய உயிரிழப்புகள் 70,000 ஐ அண்டியுள்ளது.

8 ஜனவரி 2007 அன்று ஐ.நாவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் வாகரையின் கிழக்குப் பகுதியின் மனிதாபிமான நிலமை குறித்து "மரணத்தின் விழிம்பு மற்றும் உடனடி நடவடிக்கை தேவை" என குறிப்பிடப்பட்டிருந்தது. நவம்பர் 2006 இல் ஊடகங்களுக்காக வெளியிடப்பட்ட குறிப்பொன்றில், சிறி லங்காவுக்கான சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் என்பவற்றுக்கான ஐ.நா.வின் விசேட தூதுவர் Allan Rock அவர்களினால், வடக்கு மற்றும் கிழக்கில் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலமைகள் குறித்து அவதானிக்கப்பட்டது. அவர் வாகரை மற்றும் யாழ்பாணம் என்பவற்றிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அங்கே திரு Rock அவர்கள் இடம்பெயர்ந்த சிறுவர்கள் முதன்மையாக பயபீதியிலும், தனிமைபடுத்தப்பட்ட நிலையிலும் மற்றும் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையிலும் இருப்பதையும் அவதானித்துள்ளார்.

மேலும் அதே குறித்த பகுதியில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையிலும் "சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க ஒப்பிட்டளவில் மந்தமான நடவடிக்கைகளே மோதல்களால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் பல வருடங்களாக இடம்பெற்றுவருகின்றத." என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பூராகவும் உள்ள, மோதலில் பாதிக்கப்பட்ட சமுகங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகள் அனைவரும் இந்த இருபிரிவினருக்கும் கிடையிலான மனிதாபிமான உதவிகளில் பாகுபாடு காட்டப்படுவது குறித்து அதிக வினசம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா வின் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சிறி லங்கா அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவற்றிற்கு அழுத்தம் கொடுத்து, விரைந்து மனிதாபிமான நிலமைகளை சுமுகமாக்குவதற்கும், அதற்காக முதலில் முதன்மையான யாழ்ப்பாணத்திற்கான கடல் மற்றும் தரைப் வழி பாதைகளை திறந்து தொண்டர் நிறுவனங்கள் ஆபத்தில் உள்ள மக்களை அணுக அனுமதிக்க வேண்டும்.

மென்மையான அணுகுமுறைகள் தொடர்ந்து பிரயோகித்தும், அரசு(national authorities) தமது மக்களை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தவறுவது மிகத் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக் சபை நேரடியாகத் தலையிடவேண்டிய தேவையையே பாதுகாப்பிற்கான பொறுப்பு சுட்டிக்காட்டுகிறது.

இடம்பெறும் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கும், இடம்பெறும் உரிமை மீறல்களை விசாரணை செய்யவும் மற்றும் உள்நாட்டிலேயே மக்களுக்கு உச்ச பாதுகாப்பை வழங்கங்கூடிய சூழலினை உருவாக்குவதற்கும் உதவியாக, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு செயற்பாடு (separate from and in addition to the proposed Commission of Inquiry and the IIGEP) ஒன்று அங்கே அவசரமாக தேவைப்படுகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) அதன் உலகளாவிய வேண்டுகோள் 2007 (Global Appeal 2007) இன் சிறி லங்காவிற்கான பகுதியில் குறிப்பிடப்பட்டதன்படி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதில் தொடரும் வன்முறைகளால் பாதுகாப்பு பாரிய அளவில் ஆபத்திற்குள்ளாக்கப்பட்ட மற்றும் உணவு, வேலைவாய்ப்பு, சுகாதார வசதிகள் மற்றும் கல்வி என்பன மறுக்கப்பட்ட 500,000 மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அவசர நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து நேரம் தாழ்த்தாது உங்கள் கடமையை செய்யுங்கள்.

(மொழிபெயர்ப்பில் தவறுகள் இருப்பின் அறியத்தரவும்)

Edited by saanakiyan

ஆங்கிலத்தில்

Secretary-General Ban Ki-moon

United Nations Headquarters

UN Headquarters

First Avenue at 46th Street

New York, NY 10017

Your Excellency,

It is with the utmost urgency that we plead with you to immediately attend to the deteriorating humanitarian situation in Sri Lanka and to directly intervene to ease humanitarian suffering and human rights violations.

It is well known that Sri Lankan Armed Forces and the LTTE are currently engaged in what is clearly an undeclared war. In the first two weeks of 2007 the UN has already issued multiple statements noting the grave and deteriorating conditions in the north and east of Sri Lanka, condemning the recent violence, including suicide bombings and air strikes, and the calling for protection of civilians. Over the past six months, the UN and the international community have repeatedly urged the Sri Lankan Government and the LTTE to resume peace talks. While both parties claim to be committed to a peaceful resolution of what is ultimately a generations-long conflict, such claims have proven to be hallow promises. Despite repeated position statements and urgings for resumption of the peace process, conditions deteriorate every day.

As you are well aware, the situation in the north and east of Sri Lanka is disastrous, and the Sri Lankan Tamils who populate this region are suffering untold horrors. Since land-based entry to Jaffna was cut off in August 2006 with the closure of the main highway, 500,000 civilians in the peninsula have not had access to basic food, fuel, medicines and other essential commodities. In recent weeks, a reported 20,000 people have fled Vaharai due to a surge in violence; 15,000 people remain trapped in this region and are on the verge of death due to starvation. Conservative estimates put the death of civilians since August 2006 at 3,000. Two decades of conflict has resulted in the death of close to 70,000.

A statement issued by the UN on January 8, 2007 notes that the humanitarian situation in the eastern region of Vaharai is “grave and demands an urgent response.” In a press release from November 2006, Allan Rock, the Special Advisor to the United Nations Special Representative for Children and Armed Conflict on Sri Lanka, “observed the deteriorating humanitarian situations in certain areas of the North and East. During his visits to Vaharai and Jaffna, Mr. Rock saw first hand the fear, isolation and critical unmet needs of IDP children there.”

Furthermore, in the same region, Amnesty International reports, “The well-funded and relatively swift response to the tsunami stands in stark contrast to the inadequate support that conflict IDPs have received for many years. Across the north and east, conflict-affected communities, representatives of civil society and national and international NGOs, and government officials all expressed concern that there is a serious disparity in humanitarian assistance between the two groups.”

The UN agencies must work together to press the Sri Lankan government and the LTTE to quickly ease the humanitarian situation, first and foremost by opening both sea and land routes to Jaffna so that relief agencies can access to at-risk populations.

Responsibility to Protect indicates that the Security Council has a responsibility to intervene as non-coercive means have proven inadequate and national authorities are manifestly failing to protect their citizens.

There is an urgent need for a United Nations human rights monitoring and protection mission (separate from and in addition to the proposed Commission of Inquiry and the IIGEP) to help deter abuses, investigate rights violations that do occur, and create an environment at the local level that would allow for greater civilian protection.

The UNHCR must follow through on executing the appeal stated in its Global Appeal 2007 section on Sri Lanka, in which it called for an ongoing emergency response, citing over 500,000 displaced persons whose safety is highly jeopardized in the face of ongoing violence and who have hindered access to food, employment, health facilities and education.

Please do not delay in fulfilling your obligations.

யுத்தத்துக்கு எதிராக தமது குரல்களை உயர்த்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கடைசியாக தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது. ஐ நாவின் செயலாளருக்கு அனுப்ப உத்தேசித்துள்ள இந்த முறையீடு மிக லாவகமாக சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். போர் முழக்கத்துக்கு கொடி பிடிக்கும் யாழ் கள கனவான்கள் இந்த முறையீட்டை கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நாம் சமாதானத்தை தேடிப்போய் அரசியல் செய்யாவிட்டால் யுத்தமென்பது எமது வீடுதேடி வந்து அரசியல் செய்யும்.

தமிழர் தெரிவு எது?

Edited by SAMATHAANAM

நாம் சமாதானத்தை தேடிப்போய் அரசியல் செய்யாவிட்டால் யுத்தமென்பது எமது வீடுதேடி வந்து அரசியல் செய்யும்.

தமிழர் தெரிவு எது?

சமாதானத்தைத் தேடிப் போகத்தான் வேண்டும். ஆனால் யுகே யில் இருப்பதாக மட்டுமே போட்டிருக்கிறீர்கள். சரியான முகவரியைத் தந்தால் தேடி வருவேன்.

<_<

உங்கள் கேள்வியில் பதிலை பலவந்தமாக திணித்துள்ளீர்கள். அதாவது அரசியல் தீர்வுதான் சரியானது என்பது.

இது சிங்கள அரசியல்வாதிகள் சொல்வதுபோல், 'சமாதானத்திற்காக யுத்தம் செய்கிறோம், அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும்' என்பதுபோல் உள்ளது.

காலாவதியான உங்கள் கேள்விக்கு எனது பதில் : தமிழனாகிய நான், அரசியல் தீர்வு சரிவராது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு எப்போதோ இராணுவத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

(பி.கு. - எனக்கும் இன்னும் யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் உட்பட உறவினர்கள் உண்டு.)

  • தொடங்கியவர்

கள அன்பர்களே இது விவாதத்திற்குரிய களமல்ல. பற்றி எரியும் வீட்டிலிருந்து எம் உறவுகளைக் காப்பதற்காகவே இந்த வேண்டுகோள். உங்களால் முடிந்தால் விரும்பினால் சென்று கையெழுத்து இடுங்கள். விருப்பமில்லையெனில் விட்டுவிடுங்கள். தேவையற்ற விமர்சனங்கள் வேண்டத்தகாத சொற்பிரயோகங்களை தயவுடன் இக் களப் பகுதியில் தவிர்த்துக் கொள்ளுங்கள். இது எரியும் வீட்டினுள் இருந்து கொண்டு உதவிக்காக விடிவிற்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இதயத்தின் குரலாக தயவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி

ஈழத்திலிருந்து

ஜானா <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலாவதியான உங்கள் கேள்விக்கு எனது பதில் : தமிழனாகிய நான், அரசியல் தீர்வு சரிவராது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு எப்போதோ இராணுவத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

(பி.கு. - எனக்கும் இன்னும் யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் உட்பட உறவினர்கள் உண்டு.)

விடுதலைப்புலிகள் சமாதானத்தையே விரும்புகிறார்கள். அதைத்தான் கடைசியாக ஜெனீவா 2 இல் தமிழ்ச்செல்வன் சொன்னார். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதியுங்கள், முழுவதுமாக அமுல்படுத்தா விட்டாலும் பொதுமக்கள் கஷ்டங்களை குறைக்கும் சரத்துக்களையாவது மதியுங்கள் அதிலும் குறிப்பாக A-9 வீதியினை திறந்து மக்கள் வழமையான வாழ்வு வாழ சிறிதேனும் உதவுங்கள், நாங்கள் பேசவருகிறோம் என்றார் (இது மகாபாரதத்தில் ஐந்து நகரங்களை, பின்னர் ஐந்து கிராமங்களை பின்னர் ஐந்து வீடுகளை கேட்டமைக்கு ஒப்பானது).

இதைத்தான் ஐநா விற்கான கடிதத்திலும் எழுதியிருக்கிறார்கள்! பயப்பிடாமல் ஒப்பமிடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.