Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைச்சேனையில் இந்துப் பூசகர் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் ஒட்டுப்படையான கருணா கும்பலினால் சுட்டுக்கொலை

Featured Replies

வாழைச்சேனை சந்திவெளி பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்கள் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். செல்லைய்யா குருக்கள் என்று அழைக்கப்படும் பரமேஸ்வரசர்மா அவர்களின் வீட்டிற்கு கடந்த இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்கள், அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சந்திவெளி அரசினர் பாடசாலைக்கு அருகில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், குருக்கள் ஜயா அவர்கள் வாகரையில் இருந்து வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உதவி வந்தவர் என்றும், பல காலங்களாக கருணா ஒட்டுக்குழுவினதும், சிங்களப் புலனாய்வுத்துறையினதும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர், சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாகரைக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றபோது, அவரை வரவேற்க எனும் போர்வையில் வாழைச்சேனையிலிருந்து ஆயுத முனையில் அழைத்து வரப்பட்ட மக்களுள் அடங்கியிருந்தார். சிங்களப் படையினரால் ஆயுத முனையில் சிறீலங்காவின் ஜனாதிபதியை ஆசீர்வதிக்கவும் பணிக்கப்பட்டிருந்தார்.

நடந்த இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த பரமேஸ்வரசர்மா அவர்கள், இச்சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க முனைந்த வேளையிலேயே, சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் உத்தரவுக்கமைய ஒட்டுக்குழு கருணா கும்பலினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் நெருப்புக்கு நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தார்கள்.

கடந்த யுத்தநிறுத்த காலத்தில் பல கல்விமான்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல தமிழ் மக்கள்இ சிறிலங்காப் புலனாய்வாளர்களின் ஏவலில் ஒட்டுக்குழு கருணா கும்பலினால் படுகொலை செய்யப்படுவதும், கடத்தப்பட்டுக் காணாமல் போவதும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த வண்ணம் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Web : neruppu.org

Thursday, 08 Feb 2007

http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

ஐயா, உன்னைப் போல எத்தனை பேரை இந்த எச்சிலிலைக்கூட்டம் நாளுக்கு நாள் போட்டித்தள்ளுது! ஆனால் நீ மட்டும் செய்தியாகி விட்டாய்!!! உனக்காக ஒரு நிமிடம் ...... <_<

ம்ம்ம்ம்.... உந்த எச்சிலிலைக்கும்பலுக்கு எப்ப சங்கூதுகிறது ... நாம் எப்ப எம் வீதிகளில் நிம்மதியாக திரிகிறது .....ம்ம்ம்ம்ம்..... எல்லாத்துக்கும் ".... கண்ணைத் திறக்க வேண்டும்"!!! ம்ம்ம்ம்ம்ம்ம்..... <_<

இந்தியாவில் இருக்கின்ற இந்துக்களை காப்போம் என்று அழுகின்ற இந்துத்துவ அமைப்புக்கள் எல்லாம் எங்க போய்விட்டினம்.

ஐயா, உன்னைப் போல எத்தனை பேரை இந்த எச்சிலிலைக்கூட்டம் நாளுக்கு நாள் போட்டித்தள்ளுது! ஆனால் நீ மட்டும் செய்தியாகி விட்டாய்!!! உனக்காக ஒரு நிமிடம் ...... <_<

ம்ம்ம்ம்.... உந்த எச்சிலிலைக்கும்பலுக்கு எப்ப சங்கூதுகிறது ... நாம் எப்ப எம் வீதிகளில் நிம்மதியாக திரிகிறது .....ம்ம்ம்ம்ம்..... எல்லாத்துக்கும் ".... கண்ணைத் திறக்க வேண்டும்"!!! ம்ம்ம்ம்ம்ம்ம்..... <_<

இது சம்பந்தமாக இப்ப்ப்டி கதையூம் வந்திருக்கு

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry257039

  • தொடங்கியவர்

priest_rajapakse_vaharai_01_60084_435.jpg

Priest killed in Santhiveli

[TamilNet, Thursday, 08 February 2007, 08:08 GMT]

A Hindu priest who had been forcefully taken to Vaharai from Santhiveli by the Sri Lanka Army (SLA) to garland the Sri Lankan President Mahinda Rajapakse during his visit to Vaharai last Saturday, was shot and killed by armed men who are allegedly attached to SLA military intelligence, Wednesday around 8:15 p.m. near his house a few meters away from the SLA camp at Santhiveli, 36 km south of Vaharai.

The priest, Chelliah Parameshwara Kurukkal, a father of three, was taken to Vaharai by the military under the pretext of performing a pooja ceremony and made to garland the visiting SL president, according to his relatives.

Santhiveli residents alleged that the priest, who was unhappy over the forced pooja in Vaharai, has been victimized by the military intelligence.

Priests of all faiths have been forced to be present at the opening ceremonies of various paramilitary offices in Batticaloa and Amparai during the recent months.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21186

கெப்பிட்டிக்கொலாவை செய்தவர்களிற்கு இது ஒரு பொருட்டல்ல.

புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பல விடையங்கள் சூட்சமமாக நடந்தேறுகிறது.

திருகோணமலையைப் பொறுத்தவரை அங்கிருந்து தமிழரை அடியோடு அப்புறப்படுத்துவதில் உறுதியாக செயற்படுகிறது சிங்கள இனவாதம் சர்வதேசத்தின் பின்புலத்துடன். இதை அமுல்படுத்துவதில் எந்த ஒளிவு மறைவையும் காட்ட முனையவில்லை.

புலிகளின் பெயரால் பல விடையங்கள் அங்கு நடந்தேறும். இராணுவரீதியில் ஆக்கிரமித்ததன் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று புலிகளை அங்கு அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தி அங்கு அவர்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளிற்கான தளத்தை முற்றாகத் தகர்ப்பது தான். புலிகளில் அடிமட்ட சமூகத்தில் வெறுப்பை உருவாக்குவதற்கா நிகழ்வுகளை அரங்கேற்றுவது அதில் ஒரு அங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சினிமாவில் வில்லன்கள் பின்பற்றும் உத்திகள் எல்லாம் எமது தாயகத்தில்

பரீச்சித்து பார்க்கப்படுகிறது :angry:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படையினரால் ஆயுத முனையில் சிறீலங்காவின் ஜனாதிபதியை ஆசீர்வதிக்கவும் பணிக்கப்பட்டிருந்த இந்த பூசாரியை ஒட்டுக்குழுக்கள் கொலை செய்துள்ளார்கள். ஆனால் அரசாங்க ஊடகங்களிலும், சிங்கள எட்டப்ப ஊடகங்களிலும் எதுக்கெடுத்தாலும் புலிகள் மீது பழி போடும் வழக்கம் உள்ளதினால் இதனையும் புலிகள் தான் செய்துள்ளார்கள் என்று பிரசுரித்துள்ளார்கள். நேற்றைய டெயிலி நியூசில் முதல் பக்க செய்தியாகப் போட்டுள்ளார்கள்.

அண்மையில் இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்த முயன்ற 5 அவுஸ்திரெலியர்களுக்கு இந்தோனிய அரசினால் சிலருக்கு தூக்கு தண்டனையும், சிலருக்கு ஆயூள் தண்டனையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சிங்கப்பூரில் பிறந்த ஈழவம்சாவளி தமிழனும், வெள்ளைக்காரர்களும், சீனர்களும் அடங்குவார்கள். உடனே டெயிலி நீயூஸ் பத்திரிகை, போதைவஸ்து கடத்திய புலிகளுக்கு இந்தோனேசிய அரசினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று பிரசுரித்துள்ளது. அவுஸ்திரெலியார்கள் இச்செய்தியினை வாசித்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். பல நாள் பொய் சொல்பவன் ஒரு நாள் மாட்டுப்படுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.