Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்

Featured Replies

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்

 

 

எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம்

 

 
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (17) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

இதன்போது தெரிவு செய்யப்பட்ட நூறு வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டு எம்.ஜி.ஆரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

http://tamil.adaderana.lk/news.php?nid=2348&mode=head

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மீகம் தொடங்கி சினிமா வரை புகுந்து விளையாடுறாங்கள் எங்கன்ட பாரதமாதாக்கள்

  • தொடங்கியவர்
எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு
எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் எம். ஜி ஆர் நற்பணி மன்றத்தின்  ஏற்பாட்டில் எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வுகள்  இன்று  செவ்வாய்க்கி ழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆர் சிலையருகே நடைபெற்றது.
 
ஈழத்து எம். ஜி. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,சிறப்புவிருந்தினராக  இந்திய துணைத்தூரதக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை  உறுப்பினர் கே.என். சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் 
 
எம். ஜி. ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு  உடுபுடவைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16144060_837341726404911_1416659403_n.jpg16118711_837341729738244_1470608959_n.jpg16144464_837341723071578_1991727768_n.jpg16144084_837341739738243_1178354630_n.jpg16118689_837341733071577_738259588_n.jpg

http://onlineuthayan.com/news/22770

ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம்- சிவாஜிலிங்கம்
 
 
ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே எம்.ஜி.ஆருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரம்- சிவாஜிலிங்கம்
அமரர்  எம்.ஜி.ஆர் விரும்பியது போல் ஈழத்தில் எங்களை நாங்களே ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே ஒரே வழி. எம்.ஜி. ஆரி னுடைய புகழ் என்றும்  நிலைத்திருக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்  தெரிவித்தார்.
 
இன்றைய தினம்  எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார் 
இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
 
அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் கண்டி மாநகரில் பிறந்து பின்னர் பெற்றோருடன் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து சினிமாவில் நடித்து மக்களின் செல்வாக்கை பெற்றிருந்தார். 
 
இவர் இறுதிக் காலம் வரை கொடைவள்ளலாக தனது சொத்துகளை வாரிவழங்கினார். பின்னாளில் தனியொரு கட்சியை ஆரம்பித்தார். பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவியேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 
 
1983ஆம் ஆண்டு மிகப்பெரிய இனப் படுகொலை இடம்பெற்ற வேளையில் தமிழகத்திற்கு ஈழமக்கள் தஞ்சம்புகுந்த வேளையில் அவர்களை ஆதரித்து  உதவி செய்திருந்தார். 
 
அதேபோல் ஈழவிடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாக தனது சொத்துக்களை அள்ளிக்கொடுத்து பேராதரவு வழங்கினார். அவர் பாரிசவாத நோயினால் ஆட்கொண்ட போதும் தேசியத் தலைவர் பிரபாகரனிற்கு கோடிக்கணக்கான சொத்துக்களை கொடுத்தி ருந்தார். வெலிக்கடைச் சிறையில் வெட்டி கொல்லப்பட்ட தங்கத்துரை, குட்டிமணி  ஆகியோரின் குடும்பத்திற்கும்  வீடுகளை தமிழக  அரசின் சார்பில் வழங்கி வைத்தார்.
 
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகள் சென்றாலும் இன்றும் அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு  இருக்கிறார். அமரர் எம்.ஜி. ஆர் கூறியதை போல் ஈழத்தில் எங்களை நாங்களே  ஆழக்கூடிய ஆட்சியை வென்றெடுப்பதே ஒரே வழி. எம்.ஜி.ஆரினுடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/22780

யாழில் கொண்டாடப்பட்டதுஎம்.ஜி.ஆரின் 100 ஆவது பிறந்த தினம்

 

 

( ஆர்.வி.கே )

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (எம்.ஜி.ஆர்) 100 ஆவது பிறந்த தினம் இன்று யாழில் கொண்டாடப்பட்டது.

unnamed-_2_.jpg

எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக 100 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன.

unnamed-_1_.jpg

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குஎம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி அவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தார்.

unnamed-_3_.jpg

இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

unnamed-_4_.jpg

எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தனது சொந்த நிதியில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வறியமக்கள்மாற்றுத்திறநாளிகள்பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு உடுபுடவைகள்சிறு தொகைப் பணம் போன்றவற்றை வழங்கி வைத்தார்.

unnamed-_5_.jpg

இன் நிகழ்வில் வர்த்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

unnamed-_6_.jpg

யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வருடம் தோறும் எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உடுபுடவைகள் வழங்கி வருவதோடு கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இவரது சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

unnamed-_7_.jpg

unnamed-_12_.jpg

unnamed-_10_.jpg

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.