Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!

Featured Replies

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!
 
 
தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழிலும் போராட்டம்!
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
இதனால் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.
சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய், பீட்டாவை தடை செய், எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே, தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்களும், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
 
இந் நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி யாழ் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.
 
''தமிழ் மரபினை காக்கப் போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கவனயீர்ப்பு'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை நான்கு மணிக்கு யாழ். நல்லூரில் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தன்னெழுச்சியாக கூடியிருக்கும் இவ் வேளையில், ஈழத் தமிழர்களின் சார்பில் பூரண ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நல்லூருக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

http://www.onlineuthayan.com/news/22809

  • தொடங்கியவர்

ஜல்லிகட்டுக்கு ஆதரவு யாழில் ஆர்ப்பாட்டம்
 
18-01-2017 11:27 AM
Comments - 0       Views - 15

article_1484719126-a.jpg

எம்.றொசாந்த்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடாத்தக் கோரியும் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு, சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலில், இன்று மாலை 4 மணிக்கு, கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/189910/ஜல-ல-கட-ட-க-க-ஆதரவ-ய-ழ-ல-ஆர-ப-ப-ட-டம-#sthash.JSmvcA3S.dpuf
  • தொடங்கியவர்

யாழில் தமிழகத்திற்காக களமிறங்கியது தமிழினம் ( காணொளி, படங்கள் இணைப்பு )

 

 

( ஆர்.வி.கே.)

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

vvv.jpg

தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“ தமிழக நண்பர்களு விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16107685_1826499217608937_327472280_o.jp

 

16107928_1826499237608935_1188376780_o.j

 

“ தமிழக நண்பர்களு விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

16108017_1826499294275596_67420579_o.jpg

16121382_1826499017608957_1408194904_o.j

16121392_1826499230942269_553540512_o.jp

16121559_1826498960942296_2019380462_o.j

16121665_1826499134275612_487228923_o.jp

16121817_1826499264275599_1749665421_o.j

16129439_1826498980942294_892192435_o.jp

16130068_1826499310942261_935376243_o.jp

16129779_1826499380942254_1530989646_o.j

16145291_1826499297608929_594463811_o.jp

16145706_1826499207608938_1108385889_o.j

16130026_1826499070942285_42173338_o.jpg

http://www.virakesari.lk/article/15536

  • தொடங்கியவர்

கிழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது.  இன்’றையதினம் வாழைச்சேனைநகரில் மாலை 4மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

east-jalli.jpg

 

0
 

http://globaltamilnews.net/archives/14325

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்

IMG_1059.jpg

தமிழகத்தில்  ஜல்லிக் கட்டுக்கு உள்ள தடையை நீக்க கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில்  இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞா்கள் ஒன்று சோ்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதன் போது வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், மோடி அரசே பேடி அரசே, அழிக்காதே அழிக்காதே தமிழர் பண்பாட்டை  அழிக்காதே, நீ ஒடுக்குவது விளையாட்டை மாத்திரமல்ல, ஜல்லிக் கட்டை நடத்தவிடு இல்லையே தமிழ்நாட்டை பிரித்துவிடு, இந்திய அரசே ஈழத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட போது எங்கே இருந்தாய், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம் இந்திய ராஜபக்சவே நாம் சிந்திய இரத்தம் போதாதா போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பாதாதைகளை தாங்கியவாறும் போரைாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

IMG_1053.jpg IMG_1066.jpgIMG_1060.jpgIMG_1062.jpg

0

http://globaltamilnews.net/archives/14381

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டம்.

2121-1024x578.jpg
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
34343-1024x578.jpggfgfgf-1024x578.jpggjgjg-1024x578.jpg
0

http://globaltamilnews.net/archives/14395

  • தொடங்கியவர்

இந்தியா எப்போதுமே தமிழகத்தின் குரலுக்கு செவிசாய்த்ததில்லை! – தீபச்செல்வன்

IMG_1066.jpg
இந்திய அரசு தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதினால் தமிழக மக்களை தன்னுடைய பிரஜைகளாக கருதினால், தமிழமே வெகுண்டெழுந்து ஜல்லிக் கட்டு தடையை நீக்க கோருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு தடை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில், கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பின்போதே அவ் அமையத்தின் செயலாளர் தீபச்செல்வன் இவ்வாறு குறிப்பிட்டார்
 
இந்தியா எப்போதுமே தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதியிருக்கவில்லை. தமிழகத்தின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. ஈழத்தில் நாம் அழிக்கப்பட்டபோது, இனக்கொலைப் போரை தடுத்து நிறுத்துமாறு தமிழகமே கோரிய குரலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டு உரிமை, இப்போது தமிழகம் தன்னுடைய பண்பாட்டுக்காக போராடும் குரலுக்கும் செவிசாய்க்காமல் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் பிரிந்துபோகும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தமிழகத்தில் உள்ள உறவுகள் நாங்கள் கொல்லப்படுகின்றபோதும், எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும்  குரல் கொடுப்பவர்கள், அவர்களுக்காக இந்தக் கவனயீர்ப்பின் மூலம் எங்கள் ஆதரவை, அன்பை, தொப்புள் கொடி உறவை வெளிப்படுத்துகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/14393

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

10653519_428832920647320_355727708922053
யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே  முரசுமோட்டை பகுதியில்  எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்

16174547_10207825755944487_2180921635909

http://globaltamilnews.net/archives/14418

  • தொடங்கியவர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாவகச்சேரியிலும் நாளை மறுதினம்  போராட.டம் நடைபெறவுள்ளதாக எற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்  
தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை  9:30 மணியளவில்  மாபெரும் போராட்டதில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர் .
 
நேற்றையதினம் யாழ் நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்

இலங்கை: மட்டக்களப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

  •  

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

   

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

http://www.bbc.com/tamil/38679120

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பல ..! தமிழினின்ட முறை இயற்கை விவசாயம்.... :rolleyes:

டிஸ்கி :

அங்கயும் பீட்டாகாரான் புகுந்திடபோறான் ...! உசார்..!   :unsure:

  • தொடங்கியவர்

ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்கு, கிழக்கு, கொழும்பில் ஆர்ப்­பாட்டம்

p7-c28dc853bea3e4da377dcc1824c4994fcc04eaa8.jpg

 

தடையை நீக்­கு­மாறும் வலி­யு­றுத்தல்- 

(கரைச்சி, கல்­குடா நிரு­பர்கள்)

இந்­தி­யாவில் ஜல்­லிக்­கட்டு மீதான தடையை நீக்­கக் கோரி தமிழ்­நாடு எங்கும் பாரி­ய­ள­வி­லான போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டு­வரும் நிலையில் தமி­ழக மக்  க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பகு­தி­களில் நேற்று ஆர்ப்­பாட்­டங் கள் இடம்­பெற்­றுள்­ளன.   

கொழும்பு ஐந்­து­லாம்­புச்­சந்­தியில் நேற்று முற்­பகல் 11.30 மணி­முதல் 12.30 மணி­வரை பெரு­ம­ள­வான  இளை­ஞர்கள் ஒன்­று­கூடி ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இவர்கள் ஜல்­லிக்­கட்டு மீதான தடைக்கு எதி­ரான வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோக அட்­டை­க­ளையும் தாங்­கி­யி­ருந்­தனர்.  

இதேபோல் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்தும் அதன்­மீ­தான தடை­யினை நீக்­கக்­கோ­ரியும் கிளி­நொச்சி நகரில் நேற்று கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தப்­பட்­டது. கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக மாலை 4.00 மணி­ய­ளவில் இந்தப் போராட்டம் நடை­பெற்­றது. இந்தப் போராட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள் வேண்டும் வேண்டும் ஜல்­லிக்­கட்டு வேண்டும், மோடி அரசே பேடி அரசே, அழிக்­காதே அழிக்­காதே தமிழர் பண்­பாட்டை அழிக்­காதே, நீ ஒடுக்­கு­வது விளை­யாட்டை மாத்­தி­ர­மல்ல, ஜல்லிக் கட்டை நடத்­த­விடு இல்­லையே தமிழ்­நாட்டை பிரித்­து­விடு, இந்­திய அரசே ஈழத்தில் மனி­தர்கள் கொல்­லப்­பட்ட போது எங்கே இருந்தாய், தமி­ழ­கத்­திற்­காக ஈழம் ஈழத்­திற்­காக தமி­ழகம், இந்­திய ராஜ­பக்­சவே நாம் சிந்­திய இரத்தம் போதாதா போன்ற கோசங்­களை எழுப்­பி­ய­வாறும் பாதா­தை­களை தாங்­கி­ய­வாறும் போராட்­டத்தில் ஈடுப்­பட்­டனா்.

இதே­வேளை கிழக்கில் ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து வாழைச்­சே­னையில் நேற்று மாலை இளை­ஞர்­க­ளினால் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது.   வாழைச்­சேனை கோற­ளைப்­பற்று பிர­தேச இளை­ஞர்­களால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கண்டப் பேர­ணி­யா­னது கிண்­ணை­யடி சந்­தியில் இருந்து ஆரம்­ப­மாகி வாழைச்­சேனை மட்­டக்­க­ளப்பு பிர­தான வீதி வழி­யாக வந்து வாழைச்­சேனை பொலிஸ் நிலைய சந்தி வரை சென்று அங்கு ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­றது. 

இக்­கண்டப் பேர­ணியில் பெரு­ம­ள­வான இளை­ஞர்கள் கலந்து கொண்டு தமி­ழரின் பண்­பாட்டு மர­பினை அழிக்­காதே, தமி­ழரை அடக்­காதே என இந்­திய அர­சுக்கு எதி­ராக பல கோசங்­களை எழுப்­பினர். அத்­தோடு மரபு வழி தமிழ் தேசி­யத்தின் பண்­பாட்டு மர­பினை அழித்து தமி­ழின அடை­யா­ளங்­களை அழிக்க வெறி கொண்டு கொக்­க­ரிக்கும் இந்­திய அரசே உலகத் தமி­ழர்கள் உன் கொட்­டத்தை அடக்க திரண்­டெ­ழுவர் குறித்துக் கொள் என்ற வசனம் பொறிக்­கப்­பட்ட பதா­தை­யுடன் கலந்து கொண்­டனர். 

மேலும் சோழனின் கொடி பறக்கும் சோழியின் குடும்பி அறும், அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழம் அடங்­காது, ஜல்­லிக்­கட்டு எம் உரிமை அள்­ளிக்­கட்டு அரசை, போராட்டம் எம் இனக்­குணம் சீண்­டாதே சித­றுவாய், எமது மொழி எமது பண்­பாடு எமது தனித்­துவம் நாங்கள் தமி­ழர்கள் என பல வாச­கங்கள் அடங்­கிய பதா­தை­களும் கையில் ஏந்தியவாறு கோசங்களுடன் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதேபோல் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயத்திற்கு முன்பாகவும் பெருமளவானோர் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-20#page-1

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.!

Published by Gnanaprabu on 2017-01-20 15:29:22

 

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நாளை கொழும்பு காலி முகத்திடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. 

இந்நிலையில், தமிழ் மரபினை காக்க உலகளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கி போராடும் தமிழக உறவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து, நடத்தவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

16115029_1822028238009917_46122941762972

http://www.virakesari.lk/article/15621

  • தொடங்கியவர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனையிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனையிலும் போராட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழ் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வாழைச்சேனை பகுதியில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
குறித்த போராட்டம் அப்பகுதி இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எழுக தமிழ் பேரணிக்காக மட்டக்களப்பிற்கு சென்ற தமிழ் மக்கள் பேரவையின் அதரவாளர்களும் பங்குபற்றியிருந்தனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையில்,
 
ஈழத்தமிழர்கள் இங்கு இன்னல்களை அனுபவிக்கும் போதேல்லாம் தமிழ்நாட்டில் நமது சகோதரர்கள் போராட்டங்களை முன்னெடுத்து
தமது ஆதரவை தெரிவித்தனர். இதற்கு நன்றிக்கடனாக அவர்களுக்கு ஆதரவாக நாம் இங்கு போராட்டங்களை நடாத்துகின்றோம் எனவும் தெரிவித்தனர்.
 
இதேவேளை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  வடக்கில்  யாழ்ப்பாணம் நல்லூர்,கிளிநொச்சி, மன்னாரிலும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது. 
16128911_762425030578210_502279620_n.jpg
16128795_762425153911531_1945088109_n.jpg

http://www.onlineuthayan.com/news/22924

  • தொடங்கியவர்

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக இலங்கையின் பல பாகங்களிலும் போராட்டம்

jalli-1.jpg
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக இலங்கையின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அநேகமான போராட்டங்கள் இன்றைய தினமும் நாளைய தினமும் நடத்தப்பட உள்ளது.

கொழும்பு காலி முகத் திடலில் நாளைய தினம் இவ்வாறான ஓர் போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிளிலும் மலையகத்தின் பல பகுதிகளிலும் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்பட உள்ளன.
தமிழ் இளைஞர் அமைப்புக்கள் பலவும் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/14546

  • கருத்துக்கள உறவுகள்
On 1/19/2017 at 10:37 PM, நவீனன் said:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவிட்டு வீடு திரும்பியவர் விபத்தில் உயிரிழப்பு

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய மாணவன் ஒருவன் கிளிநொச்சியில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.  புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போதே  முரசுமோட்டை பகுதியில்  எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துஉள்ளார்

16174547_10207825755944487_2180921635909

http://globaltamilnews.net/archives/14418

ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்!

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு காலி முகத்திடலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

dad2.jpg

தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டு வருகின்றனர்.

adsf2.jpg

asdf.jpg

s.jpg

saf1.jpg

sfd.jpg

http://www.virakesari.lk/article/15640

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டை அனுமதிக்கவேண்டும் என இந்திய பிரதமருக்கு யாழில் இருந்து மகஜர்.

16105676_1827817814143744_32305016136395
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க கோரி இந்திய பிரதமருக்கு , இந்திய துணை தூதுவர் ஊடாக மகஜர் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிங்கம் , அனந்தி சசிதரன் ஆகியோர் இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதரத்தில் துணை தூதுவர் ஏ.நடராஜனை சந்தித்து மகஜரை கையளித்து உள்ளனர்

15873489_1827817860810406_39651732563957

மகஜரை பெற்றுக்கொண்ட துணை தூதுவர் மகஜரை பிரதமருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , ஜல்லிக்கட்டு விடயத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறேன் இலங்கை தமிழர்களின் உணர்வினை மதிக்கிறேன் என தெரிவித்தார்.

16143287_1827817824143743_85655555234494

 

http://globaltamilnews.net/archives/14563

  • தொடங்கியவர்

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
 
21-01-2017 12:37 PM
Comments - 0       Views - 20

article_1484983238-2222222222222.jpg

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிளவானவர்கள் இணைந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பு வௌ்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

 

- See more at: http://www.tamilmirror.lk/190056/சல-ல-க-கட-ட-க-க-ஆதரவ-த-ர-வ-த-த-க-ழ-ம-ப-ல-ஆர-ப-ப-ட-டம-#sthash.PPUP6LFL.dpuf
  • தொடங்கியவர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
2017-01-21 13:35:10

2192216195127_10206965251764244_55660082

பட உதவி : சரத்குமார்


 

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பிலும் இன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

21922Colombo-Galleface-Jallikattu-1.jpg

பட உதவி: கமல் லோகநாதன்



கொழும்பு காலி முகத்திடலில் முற்பகல் 11 மணிமுதல் 12.30 மணிவரை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள்  இந்த கவனயீர்ப்பு  போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

21922_jallikattu-6.jpg

 

21922Colombo-Galleface-Jallikattu-4.jpg

பட உதவி : சரத்குமார்

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21922#sthash.i0XsVtEi.dpuf
  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினரின் வருகையால் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

 

கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்  வருகைத்தந்தமையால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேண்டாம் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் குறித்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

எவ்வாறாயினும் அரசியலுக்காக தான் வரவில்லையென்றும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துதான் இங்கு வருகைத்தந்ததாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தமையால் ஆர்ப்பாட்டம் வழமைக்கு திரும்பியது.

 

 

 

http://www.virakesari.lk/article/15649

  • தொடங்கியவர்
திருமலையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு
 
21-01-2017 04:48 PM
Comments - 0       Views - 35

article_1484997618-20170121_160319.jpg

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், திருகோணமலை மெய்கெய்சர் விளையாட்டரங்கு முன்பாக இன்று மாலை 04 மணியளவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இளைஞர்கள்  இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொசங்களை எழுப்பியதடன், தமது ஆதரவையும் தெரிவித்தனர். கலந்துகொண்ட அனைவரும் பல்வேறு பதாதைகள் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை இளைஞர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

(படங்கள்: பொன்ஆனந்தம், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார்)

article_1484997630-20170121_160356.jpgarticle_1484997641-20170121_160409.jpgarticle_1484997654-20170121_161034.jpgarticle_1484997664-20170121_161948.jpgarticle_1484997674-20170121_162117.jpg

article_1484998274-20170121_161655.jpgarticle_1484998283-20170121_161747.jpg

- See more at: http://www.tamilmirror.lk/190068/த-ர-மல-ய-ல-ம-சல-ல-க-கட-ட-க-க-ஆதரவ-#sthash.PrbLiRHf.dpuf
  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பு வெள்ளவத்தையில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது

srilanak-1024x576.jpg

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக  கொழும்பில்  இன்று  சனிக்கிழமை ஆதரவு போராட்டம் இடம்பெற்றுள்ளது..

இன்று  மாலை 4 மணிக்கு  கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

2017-01-21-PHOTO-00000001-1-1024x576.jpg2017-01-21-PHOTO-00000002-1024x576.jpg2017-01-21-PHOTO-00000006-1024x576.jpg2017-01-21-PHOTO-00000007-1024x576.jpg2017-01-21-PHOTO-00000010-1024x576.jpg2017-01-21-PHOTO-00000011-1024x576.jpg2017-01-21-PHOTO-00000012-1024x576.jpg2017-01-21-PHOTO-00000013-1024x576.jpg2017-01-21-PHOTO-00000016-1024x576.jpg2017-01-21-PHOTO-00000017-1024x576.jpg2017-01-21-PHOTO-00000018-1024x576.jpg2017-01-21-PHOTO-00000019-1024x576.jpg2017-01-21-PHOTO-00000009-1024x576.jpg2017-01-21-PHOTO-00000015-1024x576.jpg2017-01-21-PHOTO-00000008-1024x576.jpg2017-01-21-PHOTO-00000014-1024x576.jpg

0

http://globaltamilnews.net/archives/14599

  • தொடங்கியவர்
மன்னாரிலும் ஆதரவு...
 
 

article_1484999980-DSC_0020.JPG

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் இன்று (21) மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மீன் விற்பனையாளர் சங்கம் மற்றும் முகநூல் நட்புக்கள் ஆகியோர் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.றொசேரியன் லெம்பேட்)

article_1484999992-DSC_0033.JPGarticle_1485000001-DSC_0036.JPG

- See more at: http://www.tamilmirror.lk/190070/மன-ன-ர-ல-ம-ஆதரவ-#sthash.0tGyOgVO.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு ஆதரவாக வல்வெட்டிதுறையில் கவனயீர்ப்பு போராட்டம்

Published by Gnanaprabu on 2017-01-22 10:36:03

 

ஜல்லிக்கட்டு விதித்த தடையினை நீக்குமாறு தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களுக்கு ஆதரவாக நேற்றைய தினம் வல்வெட்டிதுறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

16176546_10206564333301780_304663023_n.j

16215986_10206564333101775_1276856502_n.

16216156_10206564333381782_1648256913_n.

16216368_10206564333061774_594608829_n.j

16237650_10206564333421783_787164790_n.j

http://www.virakesari.lk/article/15663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.