Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை

Featured Replies

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை

-நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சிரேஷ்ட நடிகை மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், அப்பாஸ் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இவர்களில் சரத்குமாரும், எஸ்.எஸ். சந்திரனுடன் நடிப்புத் தொழிலுடன் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்களாகும்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு பூராகவும் நட்சத்திர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நட்சத்திரங்கள் வீதிக்கு இறங்கி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை கண்டித்து பேரணிகளை நடத்தும் போது 1983 இன் நிலைமைக்கு விரைவில் தமிழகம் வந்துவிடுமெனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை சந்தித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news%5C2007%5C2...s_page21120.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

Pro-LTTE Lankan party ropes in TN film industry

The pro-LTTE Tamil National Alliance (TNA) has roped in the Chennai film industry to increase awareness of the Sri Lankan Tamil problem among the people of Tamil Nadu, and to collect money for the rehabilitation of Tamil refugees in Sri Lanka.

Three TNA MPs, MK Sivajilingam, S Ariyanethiran and S Pathmanathan, met leading figures of the Tamil Nadu film industry at the Nadigar Sangam (Actors' Guild) in Chennai on February 6.

Among the stars present were Sarath Kumar, President of the Nadigar Sangam; veteran actors Manorama and SS Chandran; and the latest heart throb, Abbas. Sarath Kumar and SS Chandran combine political activism with acting.

"The meeting decided to organise Star Nites all over Tamil Nadu to collect money for the 210, 000 Tamil refugees displaced by the war in the past one year," Sivajilingam told Hindustan Times on Friday.

"Soon, it might be like Tamil Nadu of 1983, when Tamil film stars got on to the streets and led processions condemning the atrocities committed by the Sri Lankan state against the Tamils," he said.

LTTE hosts top film directors

Even prior to this, the LTTE had created links with the Tamil Nadu film industry.

Prabhakaran, who would refuse to meet special envoys from the West and Japan, readily gave an audience to two leading Tamil film directors, Mahendran and Bharathiraja, in his hideout in the Wanni some time ago.

Prabhakaran is a film buff, but he prefers Western action films to romantic and soppy Tamil films and Clint Eastwood is his favourite.

However, he knows the importance of popular Tamil films as an instrument of propaganda.

Bharathiraja told Prabhakaran that he was like Netaji Subhas Chandra Bose, which would have immensely pleased the Tiger chieftain because Subhas Bose is his role model.

Director Mahendran followed up his visit by sending his son John Mahendran to direct a full-length colour feature film.

The film Aaniver (Tamil for 'main root' but used as an equivalent of 'sheet anchor') was shot entirely in the LTTE-controlled Wanni with the blessings and backing of the LTTE in 2006.

The stars, Nanda and Madhumita, were from Tamil Nadu, as were the technicians.

The film, about the experiences of a young Tamil Nadu lady journalist in the war-torn Sri Lankan North East, had brought out the tragedy of the rape and murder of the Jaffna school girl, Krishanthi Kumaraswamy, in 1996, and the exodus of people from Jaffna to the Wanni in 1995.

Aaniver was shown publicly in Canada and Europe to expatriate Sri Lanka Tamil audiences, but not in Tamil Nadu or Sri Lanka.

http://www.hindustantimes.com/news/7598_19...00500020002.htm

என்னவோ நடக்குது.........! நடக்கட்டுமே......... ஆனால் அது எதுவுமே புரியல்ல.

துவேசம் மிக்க சில இந்திய பத்திரிகைகள் எதற்கெடுத்தாலும் புலிச்சாயம் பூசி அதை கெடுப்பதற்கு ஆயுத்தமாகி விடுவார்கள். இது வழமையான அவர்களது பாணி.

என்னவோ நடக்குது.........! நடக்கட்டுமே......... ஆனால் அது எதுவுமே புரியல்ல.

Edited by நேசன்

வாங்க வாத்தியார் வாங்க வந்து உவங்களுக்கு அருமையான வேலையொன்றைச் செய்யச்சொல்லிவிட்டுப் போங்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக நடிகர்கள் அக்கறை கூட்டணியினரை வரவேற்று பேச்சு நடத்தினர்

தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக சினிமாத் திரையுலகக் கலைஞர்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றனர். நீண்ட மௌனத்துக்குப் பின்னர் தமிழகத் திரையுலகம் ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதை இது காட்டுவதாக ஈழத்தமிழ் அனுதாபிகள் கூறுகின்றனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். கே. சிவாஜி லிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோரை தமிழகத் திரையுலகம் வரவேற்றுக் கலந்துரையாடியது.

இவ்வரவேற்பு விழாவும் சந்திப்பும் அண்மையில் நடிகர் சங்கப்பணிமனையில் இடம்பெற்றது.

இவ்விழா தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வரவேற்பு நிகழ்வில் நடிகர் சங்கத் தலைவர் நடிகர் சரத்குமார், பழம்பெரும் நடிகை மனோரமா, இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், நடிகர் விஜயகுமார், நடிகரும் அ. தி. மு. கவைச் சேர்ந்த அரசியல்வாதியுமான எஸ். எஸ். சந்திரன் மற்றும் இளம் நடிகர் அப்பாஸ் உட்பட இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஈழத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை தமிழ்த் திரைத்துறையினருக்கு எடுத் துச் சொல்லும் ஒரு வாய்ப்பாக இவ்விழா பயன்பட்டது.

மனோரமா சொன்னது

நீண்டநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் களோடு உரையாடிய திரையுலகத்தினர் அனைவரும் தங்களின் ஆதரவினை ஈழ மக்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

குறிப்பாக நடிகை மனோரமா, ""இவ்வளவு இன்னல்களையும், துயரங்களையும் அங்கு எமது தமிழ் மக்கள் அனுபவிப்பது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரிய வரவில்லை. நிச்சயமாக தமிழ் மக்களின் போராட்டம் வெற்றிபெற வேண்டும்'' என்று கவிஞர் காசி ஆனந்தனிடம் கூறினார்.

- சூரியன்

குறிப்பாக நடிகை மனோரமாஇ ""இவ்வளவு இன்னல்களையும்இ துயரங்களையும் அங்கு எமது தமிழ் மக்கள் அனுபவிப்பது பற்றி எங்களுக்கு எதுவுமே தெரிய வரவில்லை

மனோரமா கூறியதை பாருங்கள்

தனக்குஇதுநாள்வரைதெரியாது என்கிறார் இதைதான் நான் சொல்லவருவது நம்மவர்களின் பரப்புரை போதாது மூலைமுடுக்கெல்லாம் நம்மவர்கள் பரப்பரை செய்யவேண்டும் அதுசிறியவிடயமாக இருப்பினும்

ஏதோ நல்லது நடந்தால் சரி

இப்படியான முனேடுப்புக்களை குழ்ப்புவதுக்கு சதி ஒன்று நடக்கிறதாக தெரிகிறது.

அதுவும் இந்தியாவில் இருந்து ஆயுத கடத்தல் என்று தொடங்கிய செய்தி இன்று யாரோ பெரிய புள்ளி ஒன்றை போட்டு தள்ள புலிகள் திட்டம் என்ற மாதிரி செய்தி வர தொடங்கி விட்டது.....

Edited by வினித்

உவர் ரஜனியின் தமையனார் ஒரு தமிழினத்திற்கு எதிரான ஒரு ஆளாம். தெரியுமுங்களோ. நீங்க நம்புவீங்களோ இல்லையோ. படையப்பா பார்த்ததிற்கு அப்புறமா டிவியிலும் சரி தியேட்டரிலும் சரி ஒரு புது படம் பார்த்ததில்லை. ஆனா 1975 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் நம்மட வாத்தியார் எம்.ஜி.ஆர் ஓட படம் பார்க்கத்தொடங்கி இன்று 2007 , 32 வருடங்கள் வேலையால் விசர் பிடிச்சு வந்தா இப்பவும் போட்டுப்பார்ப்பேன். ஏன் அந்த படம் நான் 1977 ல் முழு டய்லொக்கே ஒரு வரி விடாம 25 தடைவைக்கு மேல் அப்பவே பார்த்து கொப்பியிள எழுதிற .விசுவாசி.ஏன் எண்டா அந்தாள் எப்பவும் ஒண்டு எழைகளோடு தான் வாழ்ந்து அனியாயம் செய்பவனை தட்டி அடிக்கிறமாதிரி நியத்திலேயும் செய்து காட்டி விட்டு எமது தமிழர்க்கும் இருந்த காசுகளை அள்ளி எறிந்தாரு. இப்ப எல்லாம் தலை இப்ப எங்கட சனம் அள்ளி எறியுது. அவர்கள் 40 கோடி- 50 கோடி எண்டு வேண்டி தங்களுக்கு கொடி வாண்டி அரசியல் கட்சி ஆரம்பிச்ச்சுப்போட்டு அல்வா குடுப்பீனம். நாங்களும் இழிச்சவாயநாத்து அவர் படம் வர ஓடிப்போய் பார்ப்பொமுங்க. பாப்பம் இப்ப என்ன செய்யப்போகிரார்கள் எமது தமிழீழ ம்க்களுக்கு. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.