Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு ஆக்கிரமிப்பு ஸ்ரீலங்காப் படைகளுக்கு வெற்றியாக அமையுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகரையைக் கைப்பற்றிய ஸ்ரீலங்காப் படைகள் புகைப்படங்களுக்கு கொடுத்த "போசைப்" பார்த்து புலம் பெயர் தேசங்களிலுள்ள சில தமிழர்கள் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள் போல் தெரிகிறது.

மட்டக்களப்பின் குடும்பிமலை, கொக்கட்டிச்சோலை, தரவை, வவுணதீவு பிரதேசங்களையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று சிங்களப்; படைத்துறைத் தலமை விடுத்துவரும் பகிரங்க அறைகூவல் எம்மவர்களில் பலரை மேலும் கவலையில் ஆழத்தியுள்ளது.

தாடையில் கைவவைத்தபடி, கவலையில் உட்கார்ந்து இருந்து புலம்பும் பலரை நான் இங்கு பார்த்து வருகின்றேன்.

ஏல்லாமே முடிந்து விட்டது போன்று அவர்கள் அபிப்பிராயம் கொள்ளுவதையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள தேசமும் சரி, சர்வதேச சமூகமும் சரி ஒரு உண்மையை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவேண்டிய இடத்தையும், நேரத்தையும் - தமது எதிரி முடிவுசெய்வதை விடுதலைப் புலிகள் என்றைக்குமே அனுமதித்தது கிடையாது. அவ்வாறு அனுமதிப்பது தோல்விக்கான முதற்படி என்பது போரியல் தத்துவம்.

அதுவும் குறிப்பாக இலட்சக்கணக்கில் ஆளணி, ஆயுத வளம் கொண்ட ஸ்ரீலங்கா அரச படையை எதிர்கொள்ளும் ஒரு மக்கள் படையான விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா படைகள் விரும்பும் இடங்களிலெல்லாம் சண்டைபிடித்து, எம்போன்ற புலம்பெயர் தமிழர்களுக்கு தமது வீரத்தை காண்பிக்கவேண்டும் என்று நினைத்தால், தனிநாடு என்கின்ற இலக்கை அடைவதற்கு நீண்ட காலம் பிடித்துவிடும்.

ஏங்கு, எந்த நேரத்தில், எப்படி யுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் புலிகள் தெளிவாக இருந்தால்தான், இறுதி வெற்றியை அவர்கள் தமதாக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஈழ விடுதலை போராட்ட சரித்திரத்தில் இடம்பெற்ற சமர்களில், விடுதலைப் புலிகள் பெற்ற பாரிய வெற்றிகளின் பின்னணிகளை எடுத்து நோக்கினால், ஸ்ரீலங்காப் படைகள் விரித்த, அல்லது விரிக்க நினைத்த சமர்க்களங்களில் புலிகள் சண்டையிடாது பின்வாங்கி, தாம் திட்டமிட்ட சண்டைக்கங்களில் சண்டை நடாத்தி பெற்ற வெற்றிகளே அதிகம் என்பது தெரியவரும். அதற்கு மேலாக, தாம் விரித்த சண்டைக்களங்களுக்கு ஸ்ரீலங்காப் படைகளை இழுத்து சாதித்த சாதனைகள் இன்னும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மட்டக்களப்பில் ஸ்ரீலங்காப் படைகள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ள இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் (குறிப்பாக வாகரை ஆக்கிரமிப்பை), சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் இதே மட்டக்களப்பில் இடம்பெற்ற மற்றொரு ஒரு இராணுவ நடவடிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமான இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்த இராணுவ நடவடிக்கை 1990ம் ஆண்டின் நடுப்பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இந்தியப் படையினரை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளை அணைத்துப் பிடித்த பிரேமதாச, இந்தியப் படையினர் இலங்கையை விட்டு முற்றாகவே வெளியேறியதைத் தொடர்ந்து புலிகளை அடக்க நினைத்தார். இரகசியமாக தமிழ் ஆயுதக்குழுக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார். தமிழ் ஆயுதக் குழுக்களை ஸ்ரீலங்காப் படையினருடன் இணைத்து பயிற்சிகள் வழங்க ஆரம்பித்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் ஒரு முக்கிய இராணுவப் பிரிவான ராசிக் குழுவினரை ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒரு துணைப் படையாக இணைத்துக் கொண்டு தென்பகுதியில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் பயிற்சிகள் வழங்கினார். புளொட் அமைப்பையும், டெலோ அமைப்பையும், ஈ.பி.டி.பி. அமைப்பையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்த அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு, ஸ்ரீலங்காப் படையினருக்குச் சமனான ஊதியங்களை வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார். வரதராஜப் பெருமாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தி;ற்குத் தப்பி ஓடிவிட்டிருந்த நிலையில், தனது சில கைப்பொம்மைகளை வைத்துக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை நடாத்துவதற்குத் திட்டமிட்டார் பிரேமதாச.

இத்தனையும், பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருந்த அந்த தேன்நிலவு காலப்பகுதியிலேயே மேற்கொண்டிருந்தார்.

அத்தோடு, ஜே.வீ.பி. ஒழிப்பு நடவடிக்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு, வெற்றிப் பெருமிதத்துடன் இருந்த ஸ்ரீலங்காப் படைகளை வடக்கு கிழக்கிற்கு அனுப்பி, ஏற்கனவே அங்கிருந்த படை முகாம்களை பலப்படுத்த ஆரம்பித்தார். பொலிசாருக்கும் நவீன ஆயுதங்களைக் கையாளுவதற்கும், சண்டைகளில் நேரடியாகப் பங்குபற்றுவதற்குமான விஷேட பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தார். இப்படி, உலகிற்கு சமாதானம் பேசியவாறு புலிகளைக் குறிவைத்து யுத்த தயாரிப்புக்களை கச்சிதமாகச் செய்து முடித்தார். அதன் பின்புதான் புலிகள் மீது கைவைக்க ஆரம்பித்தார்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏ.சீ.எஸ் ஹமீது மூலமாகவும், ரஞ்சன் விஜேரட்ன மூலமாகவும் விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தம்மிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, தம்மால் பேணப்பட்டு வரும் தமிழ் ஆயுதக் குழுக்களும் போட்டி போடும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதாவது புலிகள் மீது ஒரு யுத்தத்தைத் திணிக்கும் தனது நிலைப்பாட்டை அவர் உறுதியாக வெளிப்படுத்தினார்.

‘புலிகளுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கத் தயாராகுங்கள்’ என்கின்ற அறிவித்தல் ஸ்ரீலங்காப் படைத்தரப்பிற்கு வழங்கப்பட்டது. ஜே.வி.பியினரை ஒரு கை பார்த்துவிட்டு, அப்பொழுது வெற்றிப் பெருமிதத்தில் இருந்தனர் ஸ்ரீலங்காப் படையினர். இந்தியப் படையினருடன் சண்டையிட்டதால் புலிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாக ஸ்ரீலங்காப் படையினர் கணக்கிட்டார்கள். அதனால் புலிகளை இலகுவாக வெற்றி கொண்டு விடலாம் என்று நினைத்தார்கள்.

தமிழ் மக்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்பாணத்தை முதலில் கைப்பற்றுவதே உசிதமானது என்று ஸ்ரீலங்காப் படைத்தரப்பு திட்டம் தீட்டியது. யாழ் நகர் மீதான வெற்றி புலிகளுக்கு ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அந்த உளவியல் பாதிப்பைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கின் மற்றைய பிரதேசங்களில் புலிகளைத் துடைத்தெறிந்துவிடலாம் என்றும் திட்டமிட்டார்கள். வடக்கில், பலாலி, காங்கேசன்துறை, யாழ் கோட்டை, மண்டை தீவு, ஆணையிறவு, மாங்குளம், கொக்காவில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற இடங்களில் ஸ்ரீலங்காப் படையினர் அப்பொழுது பலமாக நிலைகொண்டிருந்தார்கள்.

இந்த முகாம்களில் படையினரை நிரப்பி, ஒரே நேரத்தில் அனைத்து முகாம்களில் இருந்தும் படையினரை நகர்த்தி புலிகளுக்கு திகைப்பை ஊட்டும் திட்டத்தைப் படைத் தரப்பு தயாரித்தது. லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவிடம் யாழ் நகரைக் கைப்பற்றுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஓப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலமாக வடமாராட்சியைக் கைப்பற்றி, சிங்கள மக்கள் மனங்களிலும், படை வீரர்கள் மனங்களிலும்; ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த டென்சில் கொப்பேகடுவை, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை கனகச்சிதமாகத் தயாரித்து முடித்தார். அரசாங்கத்தின் சமிஞ்ஞைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

புலிகளுக்கு அரச இயந்திரத்தின் இந்த நகர்வுகள் தெளிவாக விளங்கியது. இந்த யுத்தத்திற்கு விடுதலைப் புலிகளும் தயாராகவே இருந்தார்கள்.

யுத்தம் ஆரம்பமானால் யாழ் கோட்டையையும், கொக்காவிலையும், மாங்குளத்தையும், பின்னர் ஆனையிறவையையும் கைப்பற்றும் திட்டமும், தயாரிப்புக்களும் புலிகள் வசம் இருந்தன. இந்த முகாம்களில் இருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்றைய சண்டைகளை முன்னெடுக்கலாம் என்று அவர்கள் திட்டங்களை வைத்திருந்தார்கள்.

அதேவேளை புலிகளுக்கு ஒரு சிக்கலும் இருந்தது. ஸ்ரீலங்காப் படையினர் தீட்டியுள்ள திட்டத்தின்படி அவர்கள் வடபகுதியில் சண்டைகளை ஆரம்பித்துவிட்டால், புலிகளது படையணிகளின்; கவனம் சிதறி, அவர்கள் எதிர்பார்த்த குறியை அடைய முடியாமல் போய்விடும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அத்தோடு, ஸ்ரீலங்காப் படையின் ஒட்டுமொத்தப் படைப்பலமும் யாழ்பாணத்தை நோக்கிக் குவிவதையும் புலிகள்; அப்பொழுது விரும்பவில்லை. எனவே ஸ்ரீலங்காப் படையினரின் கவனத்தை ஒட்டு மொத்தமாக கிழக்கை நோக்கித் திருப்பி, பெரும்பாலான ஸ்ரீலங்காத் துருப்புக்கள் கிழக்கை விட்டு நகர முடியாதபடி அங்கேயே தங்கியிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தீட்டினார்கள். கச்சிதமாகக் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மட்டக்களப்பிற்குச் சென்று பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சிகளின் தாற்பரியம் விளங்கியிருக்கும். மட்டக்களப்பு நகரின் மத்தியில் ஆங்காங்கு பங்கர்கள், சென்றிகள் அமைக்கப்பட்டன. கல்லடியில், திருகோணமலை வீதியில் உள்ள செல்லையா வைத்தியரின் இல்லத்தில், பார் வீதியிலுள்ள எட்வர்ட் என்பவருடைய இல்லத்தில், வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மாயாவின் வீட்டில்.. என்று கேந்திர முக்கியத்துவமில்லாத பல இடங்களில் புலிகள் பலமான சென்றிகளை அமைத்திருந்தார்கள்.

மட்டக்களப்பு நகரின் மத்தியிலுள்ள கத்தாமரத்தடி என்று கூறப்படுகின்ற காந்தி சதுக்கத்திலும் ஒரு காலவரன் அமைத்திருந்தார்கள். அதனைப் பார்த்த விஷயம் தெரிந்தவர்களுக்கோ ஆச்சரியம். புலிகளின் முகாம்களோ, அல்லது அலுவலகங்களோ கூட அருகில் இல்லாத நிலையில், எதற்காக அந்த இடத்தில் அப்படி ஒரு பாரிய காவலரணை புலிகள் அமைத்தார்கள்? அந்தக் காவலரணை எதற்குப் பயன்படுத்தப் போகின்றார்கள்? எப்படிப் பயன்படுத்தப் போகின்றார்கள்? என்றெல்லாம் மக்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் புலிகள் இவ்வாறெல்லாம் காரியமாற்றி, படையினரின் கவனத்தை மட்டக்களப்பை நோக்கி திருப்பிக் கொண்டிருந்தார்கள் என்கின்ற உண்மை, பின்நாட்களிலேயே மக்களுக்கு விளங்கியது. (சிலருக்கு இன்னமும் இது விளங்கவில்லை என்பது பரிதாபம்)

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி அதிகாலை, ஒரு சிறு முரண்பாடொன்றை அடிப்படையாக வைத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தை புலிகள் சுற்றி வளைத்து ஒட்டு மொத்த ஸ்ரீலங்காவின் கவனத்தையும் மட்டக்களப்பை நோக்கித் திருப்பியிருந்தார்கள். தொடர்ந்து ஏறாவூர், மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தை கைப்பற்றி அங்கிருந்த பொலிஸாரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்தார்கள். களுவாஞ்சிக்குடி, மற்றும் கும்புறுமூலை இராணுவ முகாம்களைச் சுற்றிவளைத்து தாக்குதல்களை ஆரம்பித்திருந்தார்கள்.

களுவாஞ்சிக்குடி இராணுவ முகாமில், ஸ்ரீலங்கா இராணுவத்தின் இலகு காலட் படைப்பிரிவின் ஆறாவது பட்டாலியன் 6th Battalion of Sri Lanka Light Infantry) புலிகளின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தார்கள். கும்புறுமூலை முகாமிலோ, ஸ்ரீலங்கா இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவின் முதலாவது பட்டாலியன் (1st Battalion of Gemunu Watch) அகப்பட்டிருந்தார்கள். இந்த இரண்டு முகாம்களையும் சுற்றிவளைத்த புலிகள் அவாகள் மீது தாக்குதல் நடாத்தியபடி இருந்தார்களே தவிர, அந்த முகாம்களைக் கைப்பற்றும் முயற்சியில் பெரிதாக இறங்கவில்லை. ஏனெனில் புலிகள் சுற்றிவளைத்திருந்த இந்த முகாம்கள் மீது புலிகள் வெறும் துப்பாக்கித் தாக்குதல்களையும், அருள் செல் என்று கூறப்படுகின்ற, சாதாரண இயந்திரத் துப்பாக்கியில் பொருத்தி ஏவுகின்ற கிறினேட் தாக்குதல்களை மட்டுமே நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

சுற்றிவளைப்புக்குள் உள்ளாகியிருந்த படையினர் மீது ஒரு மோட்டார் செல் தாக்குதலைக் கூட புலிகள் மேற்கொள்ளவில்லை என்பது அப்பொழுது எங்களுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. புலிகளின் கூற்றிவளைப்பிற்கு உள்ளாகி இருந்த படையினரை மீட்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் மட்டக்களப்பை நோக்கி வரவேண்டும் என்பதற்காகவே புலிகள் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது, பின்நாட்களிலேயே எங்களுக்குப் புரிந்தது.

புலிகளின் முற்றுகைக்குள் உள்ளாகி இருந்த நூற்றுக்கணக்கான சிங்களப் படையினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற அழுத்தம் தென்பகுதி சிங்களவர்களிடம் இருந்தும் உருவானது.

வேறு வழியில்லாமல், வடபகுதிக்கு என்று வைத்திருந்த திட்டத்தைக் கைவிட்டு கிழக்கை நோக்கித் திரும்பியோட வேண்டிய கட்டாயம், ஸ்ரீலங்காப் படையினருக்கு ஏற்பட்டது. வடக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த லெப். ஜேனரல் டென்சில் கொப்பேகடுவ, தனது படை பரிவாரங்களுடன் கிழக்கிற்கு விரைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கிழக்கு நடவடிக்கைகளுக்கு அப்பொழுது பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஆ.டீ.எஸ்.தழுவத்தை தலைமையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மூன்றாவது பிரிகேட் குழு (3rd Brigade Group) மீட்பு நடவடிக்கைகளுக்கு இறக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பரேசன் பலவேகய என்று பெயர் சூட்டப்பட்டது. பலவழிகளாலும் முன்னேறி, மட்டக்களப்பில் புலிகளின் முற்றுகைக்குள் உள்ளாகித் தவித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினரை மீட்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா இராணுவம் இறங்கியது.

புலிகள் பல எதிர்ப்புக்களைக் காண்பித்தார்கள். மட்டக்களப்பு நகரைக் கைப்பற்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு பத்து நாட்கள் பிடித்தன. ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தைத் தாம் கைப்பறிவிட்டதாக, மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள பேரூந்து தரிப்புக்களின் பெயர்களையெல்லாம் ஊடகங்களில் தெரிவித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தது இராணுவம். பெரிய ஆரவாரத்துடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைக் கைப்பற்றி நிலைகொண்ட படையினர், தமது அந்த வெற்றியை வழமை போலவே பெரிய ஆரவாரத்துடன் அரசியலாக்கியிருந்தார்கள். விளைவு: தொடர்ந்தும் மட்டக்களப்பில் அவர்கள் நிலைகொண்டேயாக வேண்டிய மற்றொரு நிர்ப்பந்தம் உருவானது.

தொடர்ந்து, அப்பிராந்தியங்களில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லிம் கலவரம், படையினர் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைவிட்டு வெளியேறவே முடியாத நிரந்தர நிர்ப்பந்தத்தை ஸ்ரீலங்காப் படைகளுக்கு உருவாக்கி விட்டிருந்தது. அப்பொழுது பிரேமதாச அரசாங்கத்தின் முக்கிய பங்காளியாக இருந்த அஸ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கை விட்டு படையினர் வெளியேறவே கூடாது என்கின்ற அரசியல் நிர்ப்பந்தத்தை ஸ்ரீலங்காப் படைகளுக்கு ஏற்படுத்தியிருந்தார்கள்.

ஆப்பொழுதுதான் ஸ்ரீலங்காப் படையினருக்கு தாம் மட்டக்களப்பில் ஒரு பாரிய பொறியில் மாட்டுப்பட்டிருந்தது விளங்கியது.

யாழ்பாணத்தைக் கைப்பற்றும் ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமையின் திட்டத்தை கைவிட்டேயாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருபுறம் சிங்களப் படைகள் மட்டக்களப்பில் பொறியில் அகப்பட்டு மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விடுதலைப் புலிகளோ தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி வடபகுதியில் சாவகாசமாக நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள். யாழ் கோட்டை, மாங்குளம், கொக்காவில் என்று ஸ்ரீலங்காப் படைகளின் முக்கிய முகாம்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

மட்டக்களப்பை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் படையினரின் முடக்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக அமைந்தது.

இந்த சம்பவம் நடந்தது சுமார் 15 வருடங்களுக்கு முன்னர்.

தற்பொழுது ஸ்ரீலங்காப் படைகளின் மட்டக்களப்பு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும், அது தொடர்பாக வெளிவருகின்ற செய்திகளும், தென்னிலங்கையில் நடக்கின்ற கொண்டாட்டங்களும் - சிங்களப் படைகள் மட்டக்களப்பில் ஒரு அழகான பொறியில் தாமாகவே மாட்டிக்கொண்டிருக்கின்றன என்கின்ற உண்மையை அப்பழுக்கில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

வாகரையின் வீழ்ச்சி மிகப்பெறிய அளவில் பின்னடைவை ஏற்ப்படுத்தி இருக்கிறது போராட்ட குழுக்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாகரையின் வீழ்ச்சி மிகப்பெறிய அளவில் பின்னடைவை ஏற்ப்படுத்தி இருக்கிறது போராட்ட குழுக்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.

வந்திட்டார் அடுத்த இராணுவ ஆய்வாளர்! எங்களுக்கு எது பின்னடைவு, எது முன்னடைவு என்டு தெரியும்..நீங்க உங்க வேலையை பார்த்திட்டு போங்க!

எங்களின் விடுதலைப்போராட்டத்தில் அவ்வப்போது பின்னடைவுகள் வந்தது உண்மைதான் சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப்புலிகள் யாழ்,கிளிநொச்சி,மாங்குளம் என்று பல இடங்களை விட்டது உண்மைதான் அதுக்கு அப்புறம் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு பின்பு தான் அவற்ரில் சில பகுதியை மீண்டும் கைப்பற்ற முடிந்தது அத்துடன் ஆணையிறவு கூட்டுப்படைத்தளத்தையும் கைப்பற்ற முடிந்தது இன்னும் யாழ் கைப்பற்ற முடியவில்லை

மட்டகளப்பில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டால் அங்கு இருக்கும் துணைய் இராணுவக்குலுக்களுக்கு நல்ல சுகந்திரமாக தங்க பிள்ளைபிடி வேலையை செய்து விடுவார்கள் கிழக்கில் புலிகள் இல்லை என்றால் கிழக்கை புலிகள் மீண்டும் கைப்பற்ருவது கூட கஸ்ரம்

weldone Kathiravan. Good jop

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டும்போது இதை மறந்துவிட்டார் :huh:

மட்டக்களப்பு ஆக்கிரமிப்பு ஸ்ரீலங்காப் படைகளுக்கு வெற்றியாக அமையுமா?

எழுதியவர் சுவிஸ்ஸிலிருந்து ஆய்வாளர் நிலவன்

Saturday, 10 February 2007

http://tamilnews24.com//index.php?option=c...56&Itemid=2

யாழ்ப்பாணத்தில் 40000 படைகளை முடக்கி வைத்திருக்கு அது சிறீலங்கா படைகளின் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு. அதிலையும் கூர்முனை என்று சொல்லிற... எண்டெல்லாம் ஏதே பொளிஞ்சு தள்ளினாங்கள் முந்தி. 5 லட்சம் மக்கள் உள்ள பரப்பளவில் சின்ன இடத்தை 1 பொதுமகளுனுக்கு 10 படையினர் வீதம் வைத்திருந்து தான் தக்க வேண்டிய அளவிற்கு யாழ்பாணத்திலை அரச படையின் பெரும்பகுதியான வளங்களை முடக்கியாச்சு எண்டெல்லாம் ஆய்வு செய்தாங்களே.

அப்பிடி அங்கு வளங்கள் எல்லாம் முடங்கியிருக்கு ஆனால் தரை வழி வழங்கல் வேறு இல்லை. கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எல்லாம் பாரிய பாதுகாப்பு இன்றி இருக்கு. கண் மூடி முழிக்க முதல் எல்லாம் முடியப்போகுது எண்ட மாதிரியும் கிடக்கு. இப்ப கதை இப்படி மற்றப் பக்கத்தாலை திடீர் என்று ஓடுது. இரண்டுக்கும் உள்ள இடவெளியை என்னத்தாலை நிரப்புறது?

இரண்டுக்கும் உள்ள இடவெளியை என்னத்தாலை நிரப்புறது?

வேற என்னத்தாலை ஆய்வாலதான்.

இரண்டு ஆய்வுகளுக்கு இடையில இடைவெளி எண்டா, குறுக்காலையும் நெடுக்காலையும் ஒரு ஆய்வு செஞ்சிட்டா போச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சிங்கள இராணுவமும் அரசும் செய்கின்ற ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்களில் நாங்கள் கொஞ்சம் கலங்கிப் போய்த் தான் இருந்தோம். என் அம்மாவின் சகோதரர்கள் அனைவரும் திருகோணமலையில் இராணுவம் அவர்களை வெளியேறச் சொன்னதாகச் சொன்னார்கள்.

அதைப்பிடிச்சிட்டம், இதைப் பிடிச்சிட்டம் என்று சொல்றாங்களே என்றிருந்தாலும் எங்கட அண்ணை எதைச் செய்தாலும் சரியாச் செய்வார் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை தான் எங்களைத் தெம்போடு இருக்கச் செய்கின்றது. எங்களிடம் இருப்பது மனித வளம்/ நம்பிக்கை இரண்டும்தானே? ஆயுத பலத்தால் இராணுவம் தானே முன்னணீயில் இருக்கின்றது.!. தர்மமே வெல்லும்! என்ற நம்பிக்கையுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழ் ஈழ மக்கள் மனோ வலிமையுடன் தான் இருக்கிறார்கள் என்பதுக்கு நீங்கள் சான்று.இங்கை யாழ் தளத்தில் தான் கொஞ்சப் பேர் மன வலிமை குன்றி பினாத்துகிறார்கள்.

நீதிக் கதைகளில் கட்டாயம் தர்மம் தான் வெல்லும். ஏன் என்றால் அதுக்குத்தான் (தர்மத்தைப் போதிக்கத்தான்) எழுதப்பட்டது. கூடவே எடுப்பான பழமொழிகளும் தமிழரிட்டை தாராளமாக இருக்குமாக்கு எடுத்துவிட.

அதுவெல்லாம் வேலை செய்தா பிறகேன் ஆயுதப்போராட்டம் என்ற அளவிற்கு நிலமை அவலமானது? தர்மமே வெல்லும் கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லி கொண்டிருந்து யாராவது எதையாவது நிஜ வாழ்வில் சாதித்திருக்கிறார்களா?

நம்பிக்கையும் மனித வளமும் தான் எமது பலமாக போராட்டம் ஆரம்பித்த 1970களிலும் இருந்தது. அன்றும் எதிரியின் பலம் ஆயுத தளபாடமும் தொழிநுட்பம் பொருளாதாரம் தான். இன்றும் அதே அவலம் தான். நாங்கள் ஆயுத தளபாடத்தில் ஒரு அடி முன்னுக்கு போனா அவன் 5 அடி பாயிறான். அவன் 5 அடி பாஞ்சாலும் தன்னை இன்னும் 10 அடி பாஞ்சு பலப்படுத்துவதற்கான நியாங்களை முன் வைக்கிறான். ஆனா நாங்களோ ஒரு பிஸ்ரலோட வெளிக்கிட்டு இப்ப 152 மிமீ அடிக்கிறம் ஒலிகன் அடிக்கிறம் என்று திண்டது செமிச்சு ஏப்பம் விடுகிற நியாயப்பாடுகளை வைத்து திருப்த்திப்படுகிறம்.

தன்நம்பிக்கையான மனித வளங்களை இழந்தால் ஈடு செய்ய முடியுமா? இருக்குத்தானே என்று இழக்க முடியுமா? வேறு வழியில்லை என்றால் இழக்க கூடிய அளவிலாவது சோவியத்யுhனியன் போல் எம்மிடம் இருக்குதா? ஏன் எதிரிக்கு எப்பவும் ஆயுதமும் தொழிநுட்பமும் பலமாக இருக்க விடுகிறோம்? அந்தப் பலத்தை வைத்து எமது ஒரே பலமான தன்நம்பிக்கையான மனிதவளங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க அனுமதிக்கிறோம்? எமது மனிதவளப் பற்றாக் குறையை தொழில்நுட்பத்தால் ஆயுத பலத்தான் அதாவது பொருளாதார பலத்தால் ஈடு செய்ய வேண்டும். எமது மனிதவள பலம் நிலையானது அல்ல. அதை பாதுகாக்க அதை வைத்து குறிக்கோளை அடைய எதிரியின் பலமான இன்று இருக்கும் ஆயுதமும் தொழில்நுட்பமும் எமது பலமாக வேண்டும். அப்படியான ஒரு நிலையில் தான் தமிழீழ தனியரசு தன்னை நிலை நாட்டி பாதுகாக்க முடியும். இதற்கு புலம்பெயர்ந்தவர்களால் தான் பங்களிக்க முடியும்.

எம்மை நாமே 5, 10, 15, 20, 30 வருடங்களிற்கு முன்னர் எப்படி இருந்தோம் - இன்று எப்படி இருக்கிறோம் என்று ஒப்பியல் ஆய்வு செய்து ஒரு மண்ணும் கிடைக்கப் போவது இல்லை. எதிரி இன்று எந்த நிலையில் இருக்கிறான் இனி எங்கு இருக்கப் போறான் அவனக்கும் எமக்கும் உள்ள நியாயமான இடவெளி என்ன? அதை எப்படி குறைப்பது என்பன தாம் புலம்பெயர்ந்த மக்களை தமது கடமையை உணர வைக்கும்.

எமது அப்பட்டமான பலவீனங்களை நாமே மூடி மறைத்து புhசி மெளுகு போராட்டத்திற்கு பலமாக ஆய்வு செய்யிறம் என்று எழுதிப்பயன் இல்லை. அது

-1- மக்களிடம் தவறான எதிர்பார்ப்புகளை வழர்க்கிறது. பிற கள நிலமைகள் வேறு ஒன்றை சுட்டி நிற்கும் பொழுது அதை வியாக்கியானப்படுத்தி குத்துக்கறன ஆய்வு செய்ய வேணும்.

-2- தவறான எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்கள் நிச்சயம் உண்மை நிலையை உணரமாட்டார்கள் தேவைகளை அறிந்து அதை புhர்த்திய செய்யக் கூடிய அளவிற்கு பங்களிக்க மாட்டார்கள்.

இது மிச்சக்காசு சில்லறைக் காசில் கிடைக்கிற பங்களிப்பில் நடத்தும் கரந்தடி ஆயுதப்போராட்டம் என்ற நிலையைத் தாண்டி கிட்டத்தட்ட ஒரு அரசாக மரபு வழிப் படைக்கட்டுமானங்களுடன் இயங்குகிறது. அதற்கான தேவைகளும் அதற்கேற்பப் போல் ஏறிவிட்டது. ஆனால் அதைவிட பலமடங்கு எற்றத்தில் எள்றும் போல் எதிரி நிக்கிறான். சரியான நேரத்தில் சரியான முறையில் ஒருமித்து தேவையான அளவில் பங்களித்தால் தான் தேவையை புhர்த்தி செய்யலாம் குறிக்கோளை அடையலாம்.

பண நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு சத்திர சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்கும் என்ற நிலையில் அவருக்கு 2 வேளை உணவுக்கு சில்லறைக்காசைப் பெருந்தன்மையாகக் கொடுத்துப் பயன் இல்லை. பிறகு ஏதே முடிஞ்சதை குடுத்தன் ஆனா அள் தப்பவில்லை என்று ஏங்கிப்பயன் இல்லை. தேவைக்கு ஏற்ற அளவில் செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் தான் பங்களிப்பிற்கு அர்த்தம் இருக்கும்.

தேவையை அறிய வைக்கும் படி உணர வைக்கும் படித் தான் ஊடகங்கள் இன்று தமது வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டும். அதைவிட்டுட்டு உந்த புளிச்சல் ஏவறை ஆய்வுகள் என்ற வியாக்கியானங்கள் ஒரு மண்ணுக்கும் உதவப்போறதில்லை.

மக்கள் எல்லாரும் குறுக்கால போனதின்ட புத்தியோட தான் இருப்பினம் எண்டு நினைக்கப்படாது கண்டியளோ.

எங்கட ஊடகங்கள் அரசாங்கச் செய்திகளுக்கு போட்டியாக செயற்படாதிருந்தால், எப்பவோ எமது போராட்டத்துக்கு மேல புல்லு முளைச்சிருக்கும்.

மக்கள் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு, இவையும் அவசியம் எண்டு தோணவில்லையா குறுக்கால போனவருக்கு?

மக்கள் எல்லாரும் குறுக்கால போனதின்ட புத்தியோட தான் இருப்பினம் எண்டு நினைக்கப்படாது கண்டியளோ.

எங்கட ஊடகங்கள் அரசாங்கச் செய்திகளுக்கு போட்டியாக செயற்படாதிருந்தால், எப்பவோ எமது போராட்டத்துக்கு மேல புல்லு முளைச்சிருக்கும்.

மக்கள் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு, இவையும் அவசியம் எண்டு தோணவில்லையா குறுக்கால போனவருக்கு?

அதுதான் மக்களுக்கு அது தெரிய வேண்டியது இல்லை எண்டுறார் இல்லையா...??? அதாவது வெல்லப்பட முடியாத யுத்தில் தான் நாங்கள் போய் கொண்டு இருக்கிறோம் புலிகளால் எதையும் வெல்ல முடியாது எண்று இங்கை சிலர் ஊளை இட்ட போது அவர்களின் கருத்துக்கு அணி சேர்பதாக விதையை ஊண்றுவதில் இருக்கும் அவசரமும் ஆர்வமும் உங்களுக்கு விளங்காமல் தான் இந்த கேள்வியை கேக்கிறீர்களா...??

இந்த கரும்புலிகளின் கணவு நிறைவேற வேணும் இவர்கள் எதற்காக தங்கள் உயிரை கொடுத்தார்கலோ அந்த கணவு நிறைவேறவேண்டும்

இதை ஒரு நிமிடம் பாருங்கள்

மக்கள் எல்லாரும் குறுக்கால போனதின்ட புத்தியோட தான் இருப்பினம் எண்டு நினைக்கப்படாது கண்டியளோ.

எங்கட ஊடகங்கள் அரசாங்கச் செய்திகளுக்கு போட்டியாக செயற்படாதிருந்தால், எப்பவோ எமது போராட்டத்துக்கு மேல புல்லு முளைச்சிருக்கும்.

மக்கள் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு, இவையும் அவசியம் எண்டு தோணவில்லையா குறுக்கால போனவருக்கு?

யோ விடுப்புலிங்கம், எனக்கு எம்பசி மாத்தைய காசு தந்து எப்படி விதைக்கச் சொல்லுறாரோ அப்படி நான் விசுவாசமாக விசம் விதைக்கிறன். மக்கள் எப்படி நினைச்ச என்ன போராட்டம் என்னவான என்ன? விளக்கமில்லாதவரா இருக்கிறிரே.

மக்கள் நம்பிக்கை கொள்ள எமது போராட்ட நியாயப்பாடுகள் தான் அடிப்படை. என்ன தீர்வும் சரி என்று இருக்கிற சனத்திற்கு, பலமாக இருக்கிறம் ஆனபடியால் ஈழத்தை எடுப்பம் என்று பூச்சாண்டி காட்டி வெற்றி கொள்ள முடியாது. மக்கள் தான் போராட்டத்தின் பலம் என்றால் அவர்களிற்கு அது பற்றி பூரண தெளிவை ஏற்படுத்த வேண்டும். தெளிவு பெற்ற மக்கள் மட்டும் தான் பலமாக இருக்க முடியும். அதுவே இன்றய தேவை.

உப்பிடி பாத்தால் 15 வருசத்துக்கு முன்னம் ஊரை கடைசியா பாத்த சனம் புலம்பெயர்ந்து இருந்தால் போராட்டத்தின் வளர்ச்சி கடைசியாக பார்த்த காலம் 1992 அந்த காலத்திலை போராட்டத்தின் வளர்ச்சியை மனதிலை வச்சுக்கொண்டு, இண்டைக்கும் இராணுவம் தன் படிநிலை வளர்ச்சியை படம்போட்டு காட்டுறதை பார்த்தால். எங்களின் போராட்டம் மடுவும் மலையுமாகத்தான் தோண்றும். சிங்களவனுக்கு எங்களால் ஈடு குடுக்க முடியாது எண்டதை இந்த சனம் சொல்லுறதிலை எந்த பிழையும் இல்லை... அவர்களாக ஏதாவது புலநாய்வு செய்தால் அண்றி போராட்டத்தின் உண்மை நிலை போராட்ட வளர்ச்சி என்பது எல்லாம் அவர்களின் கற்பனைக்கு எட்டாதது... எந்த நாய் எப்படி போனால் எங்களுக்கு என்ன நான் தப்பினதே பெரிய பாடு எண்ட நிலைக்குள்ள அந்த மக்களை கொண்டு செல்லும். அப்படி அந்த மக்களை வைத்திருக்க விரும்பும் ஒருவரின் பதில் இப்படித்தான் இருக்கும்...

மேலதிகமாக மக்கள் நம்பிக்கை கொள்ள வைக்காமல் அவர்களை போராட்ட பாதைக்குள் உட்படுத்த முடியாது எண்டு நாங்கள் யாராவது சொன்னால், மனநோயாளி இல்லை பன்னாடை எண்டுவாங்கள்...!

Edited by Thala

யாழ்ப்பாணத்து தமிழன் விதைத்தது வினை,(இது இப்ப அல்ல இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்பு) இதற்கு கிடைத்த சாபக்கேடு தான் கிழக்கில் இப்போ நடந்தது.இதைத் தான் கருனா பாவித்த ஆயுதம்.அதை ராஜபக்சா அரசு அறுவடை செய்தது.விதைத்தது ரணில்.புரியவில்லையா?முழு இலங்கையும் ஓடி ஓடி திரவியம் தேடிய யாழ்பாணத்தமிழன் அந்த அந்த ஊரவனை மதிக்கத் தவறியமை.இதைத் தான் கருணா வைத்திருந்த ஆயுதம் இது தான் வடக்குத்தமிழ் கிழக்குத்தமிழ் என்ற பிரிவினை வாதத்தை உருவாக்கியது.இதை மிகவும் கவனமாகக் கையாண்டது சிறிலங்காவின் புலனாய்வுத்துறை கருணாவுக்கு கிழக்கில் எல்லா பகுதியும் அத்துபடி அவரின் ஆதரவாளர்களுடன் குறை நிரப்பு செய்தலுக்காக சர்வதேசத்தின் கண்டனத்தையும் பொருட்படுத்தாது இளைஞர்களையும் கடத்த ஒத்தாசை வழங்கி முழுஅளவிலான படையெடுப்புக்களை கருணாகுழுவின் முன்னெடுப்புக்களுடன் முன்னேறியதெனலாம்.இதனால் தான் விடுதலைப்புலிகள் பல தந்திரோபாய நகர்வுகளை பின்னோக்கி நகர்த்தியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை நம்பிக்கை கொள்ள வைத்தால் மட்டும் போதுமா? அவர்களை செயற்பட வைப்பது யார்? போராட்டத்திற்கு புலத்தில் உள்ள மக்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றி யாராவது தெளிய வைக்கிறார்களா?

மக்களை நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டுமென்பது உண்மை தான். ஆனால், வெறும் நம்பிக்கை மட்டும் எதையுமே கொண்டுவரப்போவதில்லை. எல்லாம் பெடியள் அடிப்பாங்களாம் என்று சொல்லி ஏப்பம் விட்டு “சீரியலை” விட்ட இடத்தில் இருந்து சன் ரீவியில் தொடர்கிறார்கள்.

தனிய எழுத்தாளர்களை மட்டுமே குறை சொல்லிக்கொண்டிராமல் புலத்திலுள்ள சிந்திக்கத்தெரிந்த ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக, எம்மைப்போன்ற இளைஞர்கள் செய்யவேண்டிய ஆயிரம் வேலைகளுள்ளது.

1) எம்மினத்தவர்க்கு: எம்மில் பலருக்கு நாம் ஏன் போராடுகிரோம் என்று புரியவில்லை. புலத்தில் வாழும் அவர்களின் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்? நாங்கள் ஏன் சிங்களவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கேட்கிறார்கள். இவர்களை தெளிவித்து போரட்டம் பற்றி விழிப்புணர்வூட்ட என்ன கருவிகளுள்ளன?

2) வேறு இனத்தவர்களுக்கு: நாம் வாழும் நாடுகளிலுள்ள மக்களுக்கு, உதாரணமாக எம்முடன் வேலை செய்யும் ஒரு வெள்ளைக்கு, எமது போராட்டத்தைப் பற்றி சொல்வதற்கு எம்மிடம் என்ன இருக்கிறது? (எமது வாயைத் தவிர?) வாயால் சும்மா விடுவதில் சில சிக்கல்கள் வரும். எமது நாவே எதையாவது (ஆங்கிலம் வேறு மட்டு மட்டு) உளறிவைக்க, அவனுக்கு போரடிக்க அவன் கதையை மாற்றி விடுவான்.

a. இப்படியான சந்தர்ப்பத்தில் அவனிடம் ஒரு DVD யை நீட்டி, “ஓய்வு இருக்கும் போது இதைக்கட்டாயம் பாருங்கள், இதில் எமது போராட்டத்தைப்பற்றிய விவரணம் மிகவும் எளிமையாக குறைந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று சொல்வதற்கு ஒரு DVD உள்ளதா? அப்படியானால் அதை எங்கு பெறலாம்? அது எந்தெந்த மொழிகளில் கிடைக்கும்?

b. எமது போராட்டத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு (just to get an introduction, “EELAM WAR FOR DUMMIES”) ஏதாவது சிறந்த இணையத்தளம் உள்ளதா? (இந்த இணையத்தளம் போரடிக்காததாகவும் (preferably as a flash presentation or video)) குறைந்த நேரத்தில் நிறைந்த கருத்துக்களை சொல்லக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இது பல மொழிகளில் கிடைக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

c. இலங்கை ராணுவம் பொது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் பற்றிய முழுவதுமான செய்திகளின் சேகரிப்புக்கள் இணையத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளதா? (there are some in Tamilcanadian.com, but it is not complete.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து தமிழன் விதைத்தது வினை,(இது இப்ப அல்ல இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்பு) இதற்கு கிடைத்த சாபக்கேடு தான் கிழக்கில் இப்போ நடந்தது.இதைத் தான் கருனா பாவித்த ஆயுதம்.அதை ராஜபக்சா அரசு அறுவடை செய்தது.விதைத்தது ரணில்.புரியவில்லையா?முழு இலங்கையும் ஓடி ஓடி திரவியம் தேடிய யாழ்பாணத்தமிழன் அந்த அந்த ஊரவனை மதிக்கத் தவறியமை.இதைத் தான் கருணா வைத்திருந்த ஆயுதம் இது தான் வடக்குத்தமிழ் கிழக்குத்தமிழ் என்ற பிரிவினை வாதத்தை உருவாக்கியது.இதை மிகவும் கவனமாகக் கையாண்டது சிறிலங்காவின் புலனாய்வுத்துறை கருணாவுக்கு கிழக்கில் எல்லா பகுதியும் அத்துபடி அவரின் ஆதரவாளர்களுடன் குறை நிரப்பு செய்தலுக்காக சர்வதேசத்தின் கண்டனத்தையும் பொருட்படுத்தாது இளைஞர்களையும் கடத்த ஒத்தாசை வழங்கி முழுஅளவிலான படையெடுப்புக்களை கருணாகுழுவின் முன்னெடுப்புக்களுடன் முன்னேறியதெனலாம்.இதனால் தான் விடுதலைப்புலிகள் பல தந்திரோபாய நகர்வுகளை பின்னோக்கி நகர்த்தியிருந்தார்கள்.

என்ன நீலபறாவையே!!

கருணா என்ற சொறிநாய் சிங்களவனுக்கு முதுகு சொறிவதற்க்கு இவை வக்காளத்து காரணங்களா?

உண்மையில் வெறும் கருணா என்ற பெயர்தான், அரசவாதம் தன் இலக்கு அறுவடைக்கு பயன்படுத்துவது. உயிர்பயக்காச்சல் 105" F இல்காய்வதால் கருணாவுக்கு வெளிச்சத்துக்கு வரமுடியவில்லையாம். இல்லை களத்துக்குதான் வந்தாலும் கிழித்துவிடுவான் என்று எதிர்பார்ப்பது, போரியல் அறிவின் ஞானசூனியப் புத்திக்குதான் முடியும்.

நீங்கள் நினைபது போல் தென் தமிழீழத்தை இராணுவ ஆக்கிரமிப்பு விளுங்கிக் கொண்டிருப்பதற்ககு,

கருணா என்ற பதரின் உபயோகத்தால் என்பது நகைப்புக்கிடமானது.

இவன் போன்றவர்கள் எல்லாம் மாற்றான் பலத்தின் குண்டிக்குப் பின்னால் இருந்து, விசில் செய்வதே அல்லாது வேறெதுக்கும் தகுதி உடையவராகவாட்டார்.

இவன் யோக்கியமே சந்தி சிரிக்கும் போது, இவன் அவிக்கும் பிரதேசவாதம் என்ற பருப்பு வேகுமா என்ன.

பாலபண்டிதர், உங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் உடன் படுகிறேன்.

அடிக்கடி மக்களை நம்பிக்கையுhட்ட எழுதுவதாக வியாக்கியானம் கொடுக்கிறார்கள்.

-1- ஏன் மக்களை நம்பிக்கை யுhட்ட வேண்டியிருக்கு?

-2- எதன் அடிப்படையில் நம்பிக்கை கொடுக்க முயற்சிக்கிறார்கள்?

-3- எதன் அடிப்படையில் முன்னர் மக்களிற்கு நம்பிக்கை கொடுக்க முயன்றார்கள்?

-4- இடையில் நடக்கும் விடையங்களிற்கு ஏன் சஞ்சலப்படுகிறார்கள்?

-5- முன்னர் கொடுத்த நம்பிக்கை ஏன் தோற்று மீண்டும் நம்பிக்கை கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியது?

-6- எதன் அடிப்படையில் மக்களிற்கு நம்பிக்கை யுhட்டினால் போராட்டத்தின் பலமாக இறுதி குறிக்கோளை அடையும் வரை குழப்பம் இன்றிபங்களிப்பார்கள்?

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்திற்கு அதன் அரசியல் தீர்வில் விளக்கம் இல்லாது இருக்கும் பொழுது பலத்தின் அடிப்படையில் நம்பிக்கையுhட்டினால் யாராவது பங்களிக்க யோசிப்பார்களா? யாராவது உயிரிழப்புகள் நெருக்கடிகள் வரும் பொழுது ஏற்றுக் கொள்வார்களா? விசனம் தான் கொள்வார்கள்.

பலத்தின் அடிப்படையில் நம்பிக்கை ஊட்டுபவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக ஆதிக்கவாதிகளாகத் தான் இருக்க முடியும். அவர்களிற்கு தான் வேறு நியாயப்பாடுகள் இல்லை தமது நகர்வுகள் நடவடிக்கைகள் பால் மக்களை நம்பிக்கை கொள்ள வைக்க பங்குபற்ற வைக்க.

கருணா கிழக்கில் சிறீலங்காவிற்கு பலமாக இருப்பது இராணுவரீதியில் அல்ல. சிறீலங்காவின் இராணுவத்தால் கருணாவின் துரோகம் இல்லாவிட்டாலும் கிழக்கை ஆக்கிரமிக்க வேண்டும் என்று விரும்பினால் இன்று போல் ஆக்கிரமிக்க முடியும். ஆனால் ஆக்கிரமிப்பின் இறுதி நோக்கம் குறிக்கோளிற்குத்தான் கருணாவின் துரோகம் பலமாக இருக்கப் போகிறது. அதாவது எமது தாயகக் கோட்பாட்டை கூறுபோட்டு சிதைக்க சிறீலங்காவும் சர்வதேசமும் வைத்துள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலிற்கு தான் கருணாவின் பிரதேசவாதம் பலமாகப் போகிறது.

அவர்களின் அந்த அரசியல் நிகழ்ச்சி நிரலிற்கு எம்மிடம் ஒரு பலவீனம் இருந்த படியால் தான் அவர்கள்து இராணுவ நடவடிக்கை ஆக்கிரமிப்புகள் அர்த்தமுள்ளதாகிறது எமக்கும் நெருக்கடி மிக்கதாகிறது. அந்தவகையில் கிழக்கை இன்று ஆக்கிரமித்து ஒன்றை சாதிக்கலாம் என்ற நம்பிக்கையையும் அதற்குரிய நிகழ்ச்சி நிரலை பலப்படுத்தியது கருணாவின் துரோகத்தின் பின் உருவாகிய பிரதேசவாதம் என்ற அரசியல்க் களம்.

அதே நேரம் எமது ஆய்வாளர்கள் சிலர் அங்கலாய்ப்பது போல் கருணாவை துரத்தி அடித்த புலிகளின் இராணுவ நடவடிக்கை மாதிரி சிறீலங்கா படைகளையும் கிழக்கிலிருந்து இலகுவில் துரத்தி அடிக்கலாம் என்பது தவறு.

Edited by kurukaalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.