Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் சிக்கியுள்ள இலங்கை..! கேள்விக் கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறல்

Featured Replies

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருக்கின்றது.

2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை 2ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது.

இதனடிப்படையில், இந்த கூட்ட தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் ஒன்றாக இருக்கின்றது. எனினும், புலம் பெயர் அமைப்புகளினது அழுத்தங்களினாலும், தமிழர்களின் கேள்விகளினால் இலங்கை தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளது.

குறிப்பாக போர் குற்றம், மனித உரிமை மீறல்கள், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் இலங்கை பிரதிநிதிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளன.

அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்......

01. தமிழர் பகுதியின் காணிகளின் நிலை தொடர்பில் ஐ.நாவில் கௌரிஸ்

 

 

02. கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்

 

 

03. மங்கள சமரவீரவை நேரடியாக எதிர்த்த ச.வி.கிருபாகரன்

 

 

 

04. ரவிராஜ் மற்றும் குமாரபுரம் படுகொலைகள்! ஐ.நாவில் தடுமாறிய இலங்கை முக்கியஸ்தர்கள்

 

 

 

05. இலங்கையின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை: மங்களவிடம் நேரடியாக குற்றச்சாட்டு

 

 

 

06. ஈழத் தமிழருக்கு ஏமாற்றம் உறுதியானது..!! ஐ.நாவில் உறுதிப்படுத்திய இலங்கை

 

 

07. 2009இல் வவுனியா கம்பி வேலி முகாமுக்குள் நடந்த பலாத்காரம் - ஐ.நாவில் திடுக்கிடும் ஆதாரத்துடன் அருட்தந்தை

 

 

08. ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பில் ஒற்றை வரியுடன் முடித்த அமெரிக்கா?

 

 

 

 

09. 'ஏன் பொய்களை கூறுகின்றீர்கள்?' : ஜெனீவாவில் நேரடியாக கேள்வி கேட்ட மணிவண்ணன்

 
 

 

 

தமிழர் பகுதியின் காணிகளின் நிலை தொடர்பில் ஐ.நாவில் கௌரிஸ்

கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்

மங்கள சமரவீரவை நேரடியாக எதிர்த்த ச.வி.கிருபாகரன்

ரவிராஜ் மற்றும் குமாரபுரம் படுகொலைகள்! ஐ.நாவில் தடுமாறிய இலங்கை முக்கியஸ்தர்கள்

இலங்கையின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை: மங்களவிடம் நேரடியாக குற்றச்சாட்டு

ஈழத் தமிழருக்கு ஏமாற்றம் உறுதியானது..!! ஐ.நாவில் உறுதிப்படுத்திய இலங்கை

2009இல் வவுனியா கம்பி வேலி முகாமுக்குள் நடந்த பலாத்காரம் - ஐ.நாவில் திடுக்கிடும் ஆதாரத்துடன் அருட்தந்தை

டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது! மங்களவிற்கு ஐ.நாவில் சவால்

'ஏன் பொய்களை கூறுகின்றீர்கள்?' : ஜெனீவாவில் நேரடியாக கேள்வி கேட்ட மணிவண்ணன்

ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பில் ஒற்றை வரியுடன் முடித்த அமெரிக்கா?

தமிழீழ மக்களுக்கு இலங்கை அரசு ஒன்றும் செய்யாது : ஜெனீவாவில் ச.வி.கிருபாகரன்

 

 

http://www.tamilwin.com/special/01/137513?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சொல்லுங்கோ...

ஒவ்வொரு வருசமும் வருகினம். வென்று கொண்டு எல்லோ போகினம்.

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தொடரும் நெருக்கடி ...!

இலங்கை குறித்து இன்னும் உறுதியான தீர்மானம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இதன்படி, இலங்கையில் நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு மற்றும் வாக்குறுதிகள் என்பவற்றை மெய்ப்பிப்பதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை குறித்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில், சர்வதேசத்தின் கண்காணிப்பு தொடர வேண்டும்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரில் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என ஜோன் பிஷர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/137693?ref=recommended3

  • தொடங்கியவர்

இலங்கையில் சமஸ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐ.நா பிரதிநிதி பரிந்துரை

இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பிரதிநிதி ரீடா ஐசாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும், சமஸ்டி முறையின் கீழ் இவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

இலங்கையை துண்டாடும் வகையில் தீர்வுத் திட்டமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர் பரிந்துரை செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரீடா ஐசாக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விஜயம் குறித்த அறிக்கையை ஐசாக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தனது நிலைப்பாட்டை வெளியிட உள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டியவை என 24 விடயங்களை ஐசாக் பரிந்துரை செய்துள்ளார்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தலா ஏழு பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் தேசவளமை சட்டம் அதே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஐசாக் கோரியுள்ளார் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilwin.com/politics/01/137755?ref=home

 
  • கருத்துக்கள உறவுகள்

அவன் தீர்வுக்கு இழுத்துக்கொண்டு பேய்காட்டுறான் ஆனால் இங்குள்ளவர்களே அவனுக்கு பதிலா வரிஞ்சு கட்டிக்கொண்டு சொறிலங்கா சிங்களவனுக்கு வெள்ளை அடிக்குதுகள் தமிழர் வாழ் வடகிழக்கு குறைந்தபட்ச தீர்வையே குடுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு திரியும் சிங்களவனை நம்ப சொல்ல யார்தான் இதுகளுக்கு சொல்லிகொடுக்கிறான்களோ தெரியலை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்த அத்தனை அமைப்புக்கள் தனியார்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பாத்தால் நூறுவருசம் தேவை போலைதான் கிடக்கு....:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.