Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE.
-V.I.S.JAYAPALAN

ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள்.

பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்பிரபுத்துவ வேந்தர்களின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்ட குறுநில மன்னர்களின் விழுமியங்களும் மா வீரமும் பற்றியதாகும். இராசதந்திரமற்ற அரசியலோடும் இராணுவ தந்தரமற்று நேரடி இரானுவ உத்திகலோடும் மா வீரத்தோடு சாகும்வரை அழிந்துகொண்டிருந்த ஆதிக்குடி குறுநில மன்னர்கள் பற்றிய பாடல்களாகும்.

சங்ககாலக் குறுநில மன்னர்களின் மத்தியில் மூவேந்தர்களைப் பிரித்தாளும் ராஜதந்திரமோ முதலெதிரிக்கு எதிராக அயலில் உள்ள சகோதர குறுநிலங்களை ஐக்கியப் படுத்துகிற அரசியலோ குறும்பு போர் எனப்படும் பொருத்தமான கெரிலா இரானுவ உத்திகளோ பெஇதும் மேம்படவில்லை. இதனால் பேரரசுகள் குறு நிலங்களை இலகுவாக முற்றுகையிடுவதும் குறுநில மன்னர்களை நேரடி இரானுவ ரீதியான தற்காப்பு போருக்கு இழுத்து வெற்றி கொள்வதும் சாத்தியமாக இருந்தது..பாரி மன்னன் மலையை விட்டு இறங்கி சம வெளியில் மட்டிக் கொள்ளா விட்டாலும் நேரடி இராணுவ ரீதியான வெற்றி வாய்ப்புக் குறைந்த தற்காப்புப் போரை ஏற்றுகொண்டான். எதிர்காலத்தில் காடுகளை நீங்கி கடற்கரைச் சம வெளியில் முற்றுகைக்குள் சிக்கி நேரடி இஆணுவ மோதலில் சிக்கி வீரத்தோடு போராடி மாவீரராய் வீழ்ந்த ஈழத்து முள்ளி வாய்க்கால் யுத்தத்தை இராணுவ ரீதியாக ஆரய்கிறவர்கள் சங்க காலக் குறுநில மன்னர்களின் வீர யுத்தங்களை நினைவு கூரக்கூடும்.
*

போராடி வீழ்ந்த சங்க கால மாவீரர்களையும் வீரத்தாய்களையும் போற்றும் பாடல்களையும் கதைகளையும் கேட்டே நாம் வளர்ந்தோம். பின்னர் பிரபலமான கட்டபொம்மன் சங்கிலியன் பண்டார வன்னியன் கதைகள் கூட சங்க கால குறுநில மன்னர்களின் கதைகளின் செல்வாக்குடனேயே சொல்லப்பட்டன.

ஆச்சரியப் படத்தக்க வகையில் எனது ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு பாட நூலில் ”கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” பாடலும் கதையும் வீரத்தாய் என்கிற தலைப்பில் இடம் பெற்றிருந்தது. சின்ன வயசிலேயே எங்கள் பள்ளிக்கூடத்தில் பாரி மன்னன் கதையை நாடகமாகப் பார்த்திருக்கிறேன்.

எனினும் தனிப்பட்ட முறையில் பகைபட்ட சகோதர குறுநிலங்களிடை யாதும் ஊரே யாவரும் கேளிர் என திரிந்த பாணர்கள்தான் என்னை ஆகர்சித்தார்கள். ஈழப் போரில் ஒரு பாணனைப்போல பாடினிபோலத்தான் நான் வாழ்ந்தேன்.

சங்க புறப்பாடல்களின் வீர கதைகளின் பின்னனியில் ஈழத் தமிழர்களது முன்னனிப் போராட்ட அமைப்புகளையும் தலைவர்களையும் ஆராய்வது பயனுள்ளது. 1987ல் ”இந்தியா என்ன அமரிக்கா வந்தாலும் நாங்கள் அடிப்போம்” என்கிற நிலைபாடெடுத்த முன்னணித் தலைவர் ஒருவரை பாரி மன்னனின் மறு பிறப்போ என நான் கருதியதும் உண்டு.

மூவேந்தர்கள் திரைகடலோடிச் சேர்த்த திரவியம் முத்து மிழகு ஏற்றுமதி போன்ற பல்துறை வாணிபம் ஆற்றுக் கழிமுக விவசாயமென என குவிந்த உபரிச் செல்வத்தில் செழித்தனர். பேரரசுகளின் கடற்கரைப் பட்டினங்களையும் மிழகு மலைகளையும் இணைக்கும் வழித் தடங்களில் குறு நிலங்கள் நிமிர்ந்திருந்தன. பேரரசர்களை உள்நோக்கி தள்ளியதில் வர்த்தகத்தைப்போலவே தொடர் சுனாமிகளுக்கும்கூட பங்கிருக்கலாம். குறுநிலங்கள் ஒன்றில் திறை தந்து தமது பிரதானிகளாகப் பணிய வேண்டும் அல்லது அழிய வேண்டும் என்கிற நிலைபாடு ஓங்கிய காலம் அது. பெண்கொலை செய்த நன்னன் (மாசாணி அம்மன் கதை) போன்ற கதைகளை வாசிக்கும்போது வாணிபக் குழுக்களுக்கு குறுநில மன்னர்களோடு முரண்பாடும் பேரரசர்களோடு நட்ப்பும் இருந்தமையும் புலப்படுகிறது. வரலாறு முழுக்க அந்தந்தக் காலக்கட்டத்துக் கிழக்கிந்தியக் கம்பனிகள் இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. மூ வேந்தர்கள் அயல் சகோதர குறுநிலங்கள் என நாலு பக்கத்தோடும் ஓயாமல் மோதி இறுதியில் புகழுடன் வீழுவதே சங்க கால புற வாழ்வின் தர்மமாக இருந்தது போலும். இந்த தர்மத்தை நாங்களும் வரித்திருந்தோம். இன்னும் விடுபட்ட பாடில்லை.

தன்னைச் சார்ந்த குடிகளையும் மண்னையும் பேணுவது பாரியின் வாழ்க்கை நெறியாக இருந்தது. மறு புறத்தில் முதல் எதிரி மட்டுமன்றி ஏனையோரொடும்கூட எந்தவிதச் சமரசத்துக்குத் தயாரில்லாத ஒரே சமயத்தில் பலரோடு முரண்பட்டு மோதுகிற ராஜதந்திரமற்ற மாவீரம் அவனது புற வாழ்வின் தர்மமாக இருந்தது.

இத்தகைய சங்ககால குறுநில மன்னர்களின் குறிப்பாக பாரி மன்னனின் மாவீர பண்புகளையும் பொருத்தமற்ற நேரடி மரபுவழி இராணுவ முறைமையையில் தற்காப்பு யுத்தத்தை எதிர்கொண்டமையுமே மாவீரத்துடன் போராடிய முள்ளிவாய்க்கால் போர்க் கலம் பாறம்பு மலைப் படுகளமானதற்க்கு முக்கிய காரணமாயிற்று. 
 *

எப்பவும் பாரி மன்னனின் கதையைக் கேட்க்கும்போது மாவீரர்களான எங்கள் தலைவர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் என்றாலே அது முள்ளிவாய்க்காலில் எப்படி முடிவுக்கு வந்தது என்பதுதான் எப்போதும் நினைவில் வருகின்றது.

பாடகர் சாந்தனைப் பற்றிய பிபிசி விவரணத்திலுள்ள குறிப்பு இப்படி உள்ளது. 

After the defeat of the Tamil rebels, no one dared to hum a tune of one of his songs, even privately. He was the voice of the rebellion. Tapes of his songs were buried under the blood soaked red sand of the backyards or discreetly burnt in small bonfires. He had lost all the glory, mansion with ten rooms, all his instruments, his dignity was lost the day they lined up all the men at the refugee camp, naked in front of their elders and younger relatives.

 

http://www.bbc.co.uk/programmes/p03tnxmx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்

 

279. செல்கென விடுமே!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்

திணை: வாகை துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.