Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா

Featured Replies

 
ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1728849_318_219.jpg
 

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே .

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள்.'' இவ்வாறு தீபா கூறினார்.
 

 

 

ஜெ., நினைவிடத்தில் தீபா தியானம்



மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன அஞ்சலி , சிறுது நேரம் தியானம் செய்தார்.

பின்னர் தீபா கூறியதாவது: ‛‛ஒரு தாய்க்கும் மகளுக்கு உள்ள உறவு போன்றது எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இருந்த உறவு . இதற்கு யார் எங்களை கேள்வி கேட்பது. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆர்.கே.நகரில் போட்டியிடக்கூடாது என எனக்கு தொல்லை கொடுக்கின்றனர்.'' என கூறினார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1728849

17103484_1147025832092426_55545089255181

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் திடீர் தியானம்

* தொடர்ந்து 40 நிமிடத்திற்கு மேலாக தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் தீபா.

* தியானம் கலைத்தார் தீபா

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நவீனன் said:

 

 

17103484_1147025832092426_55545089255181

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் திடீர் தியானம்

* தொடர்ந்து 40 நிமிடத்திற்கு மேலாக தியானத்தில் ஈடுபட்டு வருகிறார் தீபா.

* தியானம் கலைத்தார் தீபா

 

சீரடி சாய்பாபா, அரவிந்தர் ஆசிரமம்,கர்நாடக ராகவேந்திரா சமாதி,

thiyanam.jpg
சூரிய கதிர்களில் ஏதோ ஒருவிதமான கதிர்களை உள்வாங்கும் புதுச்சேரி ஆரொவில் தியானமண்டம்.

ramanasiram.jpg

அட நம்ம பக்கத்து ஊரு ... திருவண்ணாமலை ரமண மகரிசி ஆசிரமம் எல்லாத்திலையும் உட்கார்ந்து தியானம் பண்ணி போட்டேன் .. ஒரு மண்ணும் பிடிபடல ..! அம்மாவின்ற சமாதியில் ஆளாளுக்கு உட்கார்ந்து தியானம் செய்வதை பார்த்தால் .. அம்மாவின்ற சமாதியில் ஏதோ ஒரு சக்தி இருக்கு போல கிடக்கு ..! அடுத்த முறை சென்னை சென்றால் நிச்சயம் அங்கு அமர்ந்து தியானம் செய்வன்..!!

டிஸ்கி :

ஒரு வேளை அம்மாவின்ற ஆன்மா என்னை தொடர்பு கொண்டு ..தமிழ்நாடு முதலமைச்சராக வேண்டினால் அம்மாவின்ற ஆன்மா ஆசிர்வாதத்தோடு தேர்தலில் போட்டியிட்டு நான் முதலமைச்சர் ஆவன்.!!! இதை எந்த கொம்பாதி கொம்பனாலும் ஏன் ஆண்டவனாலும் தடுக்க முடியாது சொல்லி போட்டேன் !!  :cool:

 

  • தொடங்கியவர்

'கூலிப்படைகள் எனக்கு மூலம் மிரட்டல்' - தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், தீபா 30 நிமிடங்களுக்கு மேலாக தியானம் செய்தார். பின் அவர் செய்தியாளர்களிடம், 'நான் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கு கூலிப்படைகள் மூலம் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. குறிப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று என்னை மிரட்டுகின்றனர். நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததில் இருந்தே, எனக்கு மறைமுகமாக தொல்லைகள் கொடுத்து வருகின்றனர்' என்றார்.

Deepa

இந்நிலையில் அவர் தியானத்துக்காக மெரினா புறப்படுவதற்கு முன் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,' நாளை முதல் ஆர்.கே.நகர் மக்களை சந்திக்க உள்ளேன். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/83446-i-am-being-threatened-says-deepa.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனது ... கடவுள்கள் கூட .....வேறு இனங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும்!

அவனது பிரார்த்தனைகள் கூடக்.....கடவுள்களுக்கு 'மொழிபெயர்த்துத் தான்' சொல்லப்பட வேண்டும்!:unsure:

இதோ...தமிழரின் துயர் துடைக்க....இன்னுமொரு அவதாரம் உருவாகிக் கொண்டிருக்கின்றது!

 

எனக்கென்னவோ...அருச்சுனன்களைப்  பார்க்கிலும்....துரியோதனன்களைத் தான் அதிகம் பிடிக்கும்!

இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆரம்பத்தில்.....தியானம் என்பது...எல்லா உயிரினங்களுக்கும்..கை வரும்!\

4f4e49c30430bf3a8b03dde1a4d09346.jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

தமிழனது ... கடவுள்கள் கூட .....வேறு இனங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட வேண்டும்!

அவனது பிரார்த்தனைகள் கூடக்.....கடவுள்களுக்கு 'மொழிபெயர்த்துத் தான்' சொல்லப்பட வேண்டும்!:unsure:

இதோ...தமிழரின் துயர் துடைக்க....இன்னுமொரு அவதாரம் உருவாகிக் கொண்டிருக்கின்றது!

 

எனக்கென்னவோ...அருச்சுனன்களைப்  பார்க்கிலும்....துரியோதனன்களைத் தான் அதிகம் பிடிக்கும்!

இருபத்தியோராம் நூற்றாண்டில் ஆரம்பத்தில்.....தியானம் என்பது...எல்லா உயிரினங்களுக்கும்..கை வரும்!\

4f4e49c30430bf3a8b03dde1a4d09346.jpg

கிரிஷ்ணனின் உண்மையான மனைவி ருக்குமணி 
யார்தான் கும்பிடுறான் ?

சின்னவீடு ராதாவைத்தானே 
ராதாகிருஷ்ணன் என்று கொண்டாடுகிறார்கள் 

யார் ?
என்ன ?
எங்கே ?

ஏன் என்ற கேள்வி கேட்க்கும் ஆறாம் அறிவில் எதோ ஒரு கோளாறு நமக்கு நிற்சயம் உண்டு.
அந்த கேள்விகள் மட்டும் இருந்திருந்தால் .... எமது மூதையோர் விதைத்து சென்ற 
எத்தனையோ பயிர்களை இப்படி அழிய விட்டு இருக்கமாடடோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கிரிஷ்ணனின் உண்மையான மனைவி ருக்குமணி 
யார்தான் கும்பிடுறான் ?

சின்னவீடு ராதாவைத்தானே 
ராதாகிருஷ்ணன் என்று கொண்டாடுகிறார்கள் 

யார் ?
என்ன ?
எங்கே ?

ஏன் என்ற கேள்வி கேட்க்கும் ஆறாம் அறிவில் எதோ ஒரு கோளாறு நமக்கு நிற்சயம் உண்டு.
அந்த கேள்விகள் மட்டும் இருந்திருந்தால் .... எமது மூதையோர் விதைத்து சென்ற 
எத்தனையோ பயிர்களை இப்படி அழிய விட்டு இருக்கமாடடோம். 

நான் நினைக்கிறேன்....!

முதலாவது...ராதா! ( அதாவது..உங்கள் முதலாவது காதலியைப் போல..!)

 

பி.கு: எனக்குமொண்டு இருந்தது!:mellow: 

முதலாது மனைவி....ருக்குமணி

இரண்டாவது மனைவி- சத்திய பாமா!

 

இதிகாசங்களின் படி.....ராதாவைத் திருமணம் செய்து...அவளது காதலைக் கிருஷ்ணர் களங்கப் படுத்த விரும்பவில்லை!

 

காதலி....காதலியாகவே இருக்கும் வரை தான்....ஓடிப்பிடித்து விளையாடும் காதல் இருக்கும்!

அவள் மனைவியாகும் போது...கடமைகள் அவளது காதலைக் காவு கொண்டு விடும்!

 

  • தொடங்கியவர்

தி.மு.கவுக்கு சொத்து சேர்த்த சசிகலா! - தீபாவின் ‘ஆர்.கே.நகர் வியூகம்’ 

தீபா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்திற்குத் தயாராகி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். 'தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து உரை தயாரித்து வருகிறார் தீபா. 'சசிகலா குடும்பத்தை அழிக்க தன்னால் மட்டுமே முடியும்' என்பதை பிரசாரத்தின் மையக் கருத்தாக வைத்திருக்கிறார்' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக, சசிகலா தலைமையில் ஆட்சிமன்றக் குழுவை அமைத்திருக்கிறார் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். தி.மு.க சார்பில் போட்டியிட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். தே.மு.தி.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் மதிவாணன். அரசியல் கட்சிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஜெயலலிதா சமாதியில் தியானம், ஆதரவாளர்களுடன் ஆலோசனை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு அளிக்கப்பட இருக்கும் வாக்குறுதிகள் என பரபரப்பாக இயங்கி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பெரிதும் நம்பியிருக்கிறார் தீபா. 'தேர்தல் வெற்றி ஒன்றுதான் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்' என்பதால், பேரவைக்குள் எழுந்த சர்ச்சைகளைத் தீர்ப்பதில் கவனத்தோடு இருக்கிறார். அரசியல் களத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றியும் அவருக்குப் பாடம் எடுத்து வருகின்றனர் அரசியல் ஆலோசகர்கள் சிலர்" என விவரித்த தீபா பேரவை நிர்வாகி ஒருவர்,

சசிகலா"ஆர்.கே.நகரில் ஐம்பது சதவீத அளவுக்குப் பெண்கள் வாக்குகள் உள்ளன. மீனவர்கள், தலித் மக்கள் என தொகுதி முழுக்கவே எளிய மக்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் ஜெயலலிதா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதில் தீபா உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து நேற்று நீண்டநேரம் விவாதித்தார். அப்போது பேசிய தீபா, 'முப்பது ஆண்டுகளாக ஜெயலலிதா கட்டிக் காத்த திராவிட இயக்கத்தை உறுதியாக நான் மீட்பேன். அவ்வளவு எளிதில் அ.தி.மு.கவை அழிய விடமாட்டேன். கட்சியைத் தொடங்கிய காலம் முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என ஒற்றைத் தலைமையுடன்தான் அ.தி.மு.க இயங்கி வருகிறது.

சசிகலா, தினகரன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் என ஒரு தலைமையும் பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை என வேறு ஒரு கூட்டுத் தலைமையும் செயல்படுகிறது. இந்தக் கூட்டுத் தலைமைகளால் கட்சிக்கு எந்தவித நன்மையும் நடக்கப் போவதில்லை. அம்மா வழியில் ஒற்றைத் தலைமைதான் கட்சியை வழிநடத்தும். பதவிக்காக எந்தக் காலத்திலும் சமசரம் செய்து கொள்ளாதவர் ஜெயலலிதா. அதேவழியைத்தான் நானும் பின்பற்றுகிறேன். தற்போதுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜ.கவுக்கு வால் பிடிப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிறது' எனக் கொந்தளித்தவர், 

ஓ.பன்னீர்செல்வம்'பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான ஆதாரத்தையும் முன்வைப்பேன்' எனப் பேசியவர், 'கருணாநிதி குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சசிகலா சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதுகுறித்த ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் வைப்பேன். 'அ.தி.மு.கவை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் தி.மு.கவினர் நடத்தும் பொய்ப் பிரசாரத்தை நம்ப வேண்டாம் என்பதை பிரசாரத்தில் முன்வைப்போம். சசிகலா குடும்பத்தை ஒழிக்க பன்னீர்செல்வத்தாலும் முடியாது. ஸ்டாலினாலும் முடியாது. என்னால் அவர்களை ஒழிக்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். மீனவ மக்களை இறுதிவரையில் பாதுகாத்தவர் ஜெயலலிதா. அவரது வரிசையில் அவரது ரத்த சம்பந்த உறவான என்னை ஆர்.கே.நகர் மக்கள் ஆதரிப்பார்கள்' எனப் பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போது, தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பிரசார அறிக்கை தயாரித்து வருகிறார். 'உழைக்கும் கை' சின்னத்தைக் கேட்டுப் பெறும் முடிவில் இருக்கிறார். இன்னும் ஓரிரு தினங்களில் பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் தீபா" என்றார் விரிவாக. 

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பெண்கள் வாக்குகளைக் குறிவைத்தே தி.மு.கவும் களமிறங்கியுள்ளது. மகளிர் தினத்தில் கனிமொழி நடத்திய கருத்தரங்கில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க நடத்தும் போராட்டத்தில் மகளிரணியைச் சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்தார். அதற்கேற்ப இன்று தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ரேசன் கடைகளை குறிவைத்து மாநிலம் முழுவதும் தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் அதகளம் செய்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க தாய்மார்களின் ஆதரவைப் பெறுவதற்குத்தான். 'ஆர்.கே.நகர் பெண்களின் வாக்குகளைக் கணிசமான அளவுக்கு நமது பக்கம் திசை திருப்பினாலே எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம்' என உறுதியாக நம்புகிறார் ஸ்டாலின். இதை அறிந்துதான், ஜெயலலிதா சாதனைகளை முன்வைத்து பிரசாரத்தை வடிவமைத்திருக்கிறார் தீபா. ஆளும்கட்சியான அ.தி.மு.கவும் எதிர்க்கட்சியான தி.மு.கவும் வலுவான வேட்பாளர் யார் என்பதைக் கணிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஜெயலலிதா வழியில் முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்க இருக்கிறார் தீபா. 'ஜெயலலிதாவின் அசாத்திய நம்பிக்கை தீபாவுக்குப் பொருந்துமா?' என்பதற்கெல்லாம் வாக்கு எண்ணிக்கை நாளில் விடை தெரிந்துவிடும். 

http://www.vikatan.com/news/tamilnadu/83481-deepas-strategy-for-rk-nagar.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.