Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று

கூப்ரூ மலையின் மகள்

மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த 
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த 
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த 
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து 
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே

யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது 
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்
¤

இரோம் சர்மிலாவுக்கு

தீபச்செல்வன்

நன்றி: குமுதம்

17309113_10154772856918801_8631978617444

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வார்த்தையோடு முடிந்த இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கை!
------------------------ --------- --------------------------
கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார். தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம். கொதித்து எழுந்த அந்தக் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால், இரோமின் நோக்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.

''நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்... உயிர் வாழ ஆசைப்படுகிறேன்... திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... அன்பு செய்ய விரும்புகிறேன்... எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் AFSPA சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார். விடிவு காலம் பிறக்கவில்லை. சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். 
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ... வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட ஷர்மிளாவை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. அந்த விரக்தி அவரது ரசிகர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிகிறது. 'அந்த 90 பேருக்கு நன்றி' என்கிறது அந்த வேதனைப் பேஸ்புக் பதிவு, ' இன்னொரு முறை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன் என்கிற அந்த முகத்தில் எத்தனை வேதனை.

அமான்மணி... மனைவியை கொலை செய்த வழக்கில், சிறை சென்றவர். சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். முப்தார் அன்சாரி... இவர் யார் தெரியுமா... மாஃபியா கும்பல் தலைவர்... சிறையில் இருக்கும் இவருக்கும் மக்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர். இப்படி... குற்றப்பின்னணியுள்ள 143 பேர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்.

பதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை' 'thanks for 90 votes' என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்,

- எம்.குமரேசன்1f4dd.png?

Image may contain: 1 person, sitting and indoor
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரின் மனிதெளரிமைப்போராளி இரோம் சர்மிளாவின் தேர்தல் தோல்வியும் யாழ்குடாநாட்டுமக்களில் கள்ள மெளனத்தனமும்

கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் உண்ணாநிலை நோன்பினை மணிப்பூரில் கடைப்பிடித்த இரோம் சர்மிளா எனும் மனித உரிமைப்போராளி நேற்றையதினம் நடைபெற்ற மாநிலத்தின் அரசமைப்பதற்கான தேர்தலில் வெறும் தொண்ணூறு வாக்குகள்பெற்று படுதோல்வியைச்சந்தித்திருக்கிறார் இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் மணிப்பூரின் குடிமக்கள் அனைவரும் அவரைத் தமது மிகவும் விருப்பத்துக்கான அரசியல்தலைவராகவே வரிந்துகட்டியிருந்தனர்

அதாவது நோட்டா எனும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனும் அதிகப்பிரசங்கித்தனமான ஓட்ட்ளித்த வாக்காளர்களுக்குக்கூட கொஞ்சமேனும் யோசித்து இரோம் சர்மிளாவுக்கு வாக்களிக்கவில்லை அதாவது நோட்டாவுக்கு ஓட்டளித்தவர்களது சிந்தனை அறிவை நாம் சந்தேகப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது இரோம் சர்மிளா அவர்களைகூட நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் கவனிக்காதுவிட்டமை அவர்களது சமூகம்மீதான அறிவின் அடர்த்தியில் சந்தேகத்தை உண்டாக்குகிறது ஆகையால்தான் இரோம் சர்மிளா பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் அதிகம்.

அதாவது இரண்டாயிரமாம் வருடத்தில் மணிப்பூரில் பேரூந்துக்காக தெருவில் காத்திருந்த பத்துப் பொதுமக்களைக் கண்டமேனிக்குச் சுட்டுக்கொன்றதனுடானான சூழலில் இப்படியான உரிமைமீறலுக்கு இந்திய ஆயுதப்படையினருக்காக ஆயிரத்துத்தொளாயிரத்துஐம்பத்தெட்டில் கொண்டுவரப்பட்ட ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்கச்சொல்லியே கடந்த பதினாறு வருடங்களாக உண்ணாநொன்பைத் தொடர்ந்து அதற்கான தேவையோ அல்லது அப்படித் தொடர்ந்து உண்ணாநோன்பிருப்பதால் ஆட்சியதிகாரம் பதினாறு வருடங்களில் செய்யததை இனிமேல் செய்யாது எனத்தோன்றியதால் அண்மையில் உண்ணாநொன்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னரான அரசியல் முன்னெடுப்பிலேயே இப்படிப் பரிதாபமான தொல்வி நிலை.

ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் இன்னல்களுக்குள் முடக்கபட்டு மிகப்பெரிய இனவழிப்பு நடைபெற அனைத்துத் தரப்பும் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் யாழ் குடா நாடு தன்னைக் கூடாநாடாக மாற்றியமைத்திருந்தது அதாவது அங்கிருக்கும் தைழர்கள் எல்லோரும் வாய்மூடி மெளனிகளாக மட்டும் இருக்கவில்லை அப்படி மெளனமாக இருந்திருந்தாலே எமை அழிக்க நினைப்பவன் கொஞ்சமேனும் யோசித்திருப்பான் எங்கு பார்த்தாலும் இராணுவப்புலனாய்வுத்துறை இராணுவ முகாம்கள் அனைத்தும் சித்திரவதைக்கூடமாக மாற்றப்பட்டது இதில் ஊரெழு எனும் கிராத்தில் இருந்த இராணுவ முகாமை தமிழர்கள் இறைச்சிக்கடை என்றுதான் அழைப்பர் ஆகையால் தெருவில் இறங்கி வன்னி நிலப்பரப்பில் நடைபெறும் மிகப்பெரிய இனவழிப்புக்கு எதிர்ப்புக்காட்டமுடியாது எனினும் அம்மக்கள் வீட்டைவிட்டு வெளியெ வராமல் இருந்திருப்பார்களேயானாலும் அது மக்கள் தங்கள் எதிப்பினை எதோ ஒரு வழியில் வெளிக்காட்டுகிறார்கள் என சிங்களம் புரிந்திருக்கும்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா தற்போது தென்னகத்தில் இளைய தளபது எனப்பெயர் எடுத்திருக்கும் நடிகர் விஜை திருமணம் செய்தது யாழ்குடாநாட்டிலிருந்து இடப்பெயர்ந்து இப்போது லண்டனில் வாழும் குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணை, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அதாவது வீடு தோட்டம் துரவு இவைகள் அனைத்தும் யாழில் இருக்கவே செய்கிறது அதைப்பார்த்துப் பக்குவப்படுத்தவும் வந்தைடத்தில் இரண்டுபாடல்களைப்பாடி பரவசமாகவும் இசையமைப்பாளர் விஜைஆண்டனியுடன் இராணுவத்தால் களமிறக்கப்பட்டார்கள் யாழ்குடாநாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அனைத்திலும் அங்கிருக்கும் இராணுவத்தினர்க்கு புத்துணர்ச்சிக்கான இசைநிகழ்சியை நடாத்தி எஞ்சியநேரத்தில் யாழில் நிலைகொண்டுள்ள ஐம்பத்தி இரண்டாம் படையணி அம்பத்தி ஓராம் படையணி ஐம்பதாம் படையணி உங்களுக்குப் பெருமையுடன் வழங்கும் தென்னகத்து சினிமா இசையமைப்பளர் விஜை ஆண்டனி தென்னகத்தின் இளையதளபதி விஜையது அம்மாவுடன் இணைந்துநடாத்தும் மாபெரும் இசைத்திருவிழா என பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்சி எனும் முக்கல் முனகல் மற்றும் நாக்கமூக்கப் பாடல் அடங்கிய களியாட்டத்துக்கு யாழ் குடாநாட்டின் குஞ்சு குருமான் இளையோர் வயோதிபர் படிச்சவன் படிக்காதவன் எனும் வயதுவேறுபாடு இல்லாது கலந்து களியாட்ட சோதியில் இணைந்தார்கள்.

நாம் இப்போது கூறுகிறோமே இந்த யாழ்ப்பாணத்து மெத்தப்படிச்ச சனம் அனைவரும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது புலிகள் இல்லாமற் போகவேண்டும் கொழும்புப்பாதை சீக்கிரம் திறக்கபடல்வேண்டும் பொருள்கள்தட்டுப்பாடுஇல்லாது கிடைக்கவேண்டும் என நல்லூர்க்கந்தனுக்கு நெய் விளக்கும் சூடமும் கொளுத்தி வேண்டுதல் வைத்தவர்கள்

இரோம் சர்மிளாவின் கதையும் இதுவே இவர் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்திவைத்துவிட்டு பேசாம ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகலாம்

எந்த இனத்துக்காக அவ்வினத்தின் இளையோர் இரவுபகல் பாராது போராடி தமது உயிர்களை ஆகுதியாக்கினார்களோ அதே இனம் அந்தமண்ணின் பிறிதொரு நிலப்பரப்பில் சொல்லெணாத்துன்பங்களையும் மரணத்தையும் எதிர்கொண்டபோது வாயைப்பொத்தி வாளாதிருந்ததற்கு இணையானதே இரோம் சர்மிளாவை இன்று மணிப்பூர் மக்கள் நிராகரித்தது.

ஒரு இனம் தனது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதத் தவிர்த்து தனது போராடவேண்டிய போராட்டகளத்தில் இருக்கவேண்டிய தேவையை வேறொருவர் செய்யட்டும் என புலிகளது தலையிலும், இரோம் சர்மிளாவினது தலையிலும் சுமத்திவிட்டதன் விளைவை மணிப்பூர் மக்களும் ஈழத்தின் மக்களும் இப்போது அனுபவிக்கிறார்கள், இப்போது போராட்டக்களம் வெறுமையாக்கப்பட்டதும் புலிகளையும் இரோம் சர்மாவையும் நிராகரிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.