Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்

Featured Replies

'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்

 

 

கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.8-sri-lankans-captured-by-somali-breakin

இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு  வழங்கினார்.

குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை கடத்தப்பட்ட எட்டு பேரும் எவ்வித ஆபத்தும் இன்றி இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.

 

மேலும் இத்தகவல் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சு ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8-Sri-Lankans-captured-by-Somali-pirates8-Sri-Lankans-captured-by-Somali-pirates

 

 

8-Sri-Lankans-captured-by-Somali-pirates

 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

சோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமிழரான கப்டன் நிக்ளஸ்: 'பெரியப்பாவை விடுதலை செய்யுங்கள்' : தவிக்கும் உறவுகள்

எமது வீட்டுக்கு தலைவனாக விளங்கும் பெரியப்பாவை  தயவுசெய்து உரியவர்கள் நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய உதவுமாறு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள திமிழரான கப்பலின் கப்டன் எஸ்.ஏ.ரி. நிக்ளஸின் பெறாமகள் தானியா ஜேசுதாசன் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ஐக்­கி­ய­ அ­ர­பு­ இ­ராச்­சி­யத்­துக்­கு­ச் சொந்­த­மா­ன '­ஆரிச் 13' எனும் ­கப்­ப­லா­ன­து ட்­ரி­ஜி­பூட்­ து­றை­மு­கத்­தி­லி­ருந்­து ­சோ­ம­லி­யா­வின்­ த­லை­ந­கர்­மொ­ஹா­தி­சு­ நோக்­கி ­எண்­ணெய்­ கொண்­டு ­செல்­லும் ­வ­ழி­யில்­ இ­ரு­ ஆ­யு­தம்­ த­ரித்­த ட்­ரோ­லர்­ ப­ட­கு­க­ளில்­ வந்­த ­க­டற்­கொள்­ளை­யர்­க­ளால் கடந்த 13 ஆம் திகதி­ க­டத்­தப்­பட்­டுள்ளது.

 

இந்நிலையில் சோமா­லி­ய­ க­டற்­கொள்­ளை­யர்­க­ளால் ­க­டத்­தப்­பட்­ட­ வர்த்­த­கக் ­கப்­ப­லை­யும்­ அ­தில்­ உள்­ள­ கப்­டன்­ உள்­ளிட்ட 8 இலங்­கை­யர்­க­ளை­யும்­ வி­டு­விக்­க­ கப்­பம்­ கோ­ரப்­ப­டு­வ­தா­க­ ஐ­ரோப்­பி­ய­ ஒன்­றி­ய ­க­டற்­கொள்­ளைக்­கு­ எ­தி­ரா­ன­ பி­ரி­வு­ தெ­ரி­வித்துள்ளது.

குறித்த கப்பலில் மத்துகமவைச் சேர்ந்த ருவான் சம்பத் ( தலைமை அதிகாரி ), ஹொரணையைச் சேர்ந்த ஜே.களுபோவில ( தலைமை பொறியியலாளர்), மட்டக்குளியைச் சேர்ந்த எஸ்.ஏ. நிக்ளஸ் ( கப்டன் ), காலியைச் சேரந்த திலீப் ரணவீர ( 3 ஆம் நிலை அதிகாரி), மாத்தறையைச் சேரந்த ஜனக சமீந்திர ( 3 ஆம் நிலை பொறியியலாளர் ), கந்தானையைச் சேர்ந்த சுனில் பெரேரா ( போசன்  ), காலியைச் சேர்ந்த இந்துனில் லஹிரு ( ஏபிள் சீமன் ) , நீர்கொழும்பைச் சேர்ந்த ஏ. சண்முகம் ( குக்) ஆகியோரே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டள்ள இலங்கையர்கள் ஆவர்.

 இந்நிலையில் வீரகேசரி இணையத்தளத்தின் செய்திக் குழுவினர் குறித்த கப்பல் கப்டனான மட்டக்குளியைச் சேர்ந்த எஸ்.ஏ. நிக்ளஸின் வீட்டிற்குச் செற்று விபரத்தை கேட்டறிந்தனர். இதன்போதே கப்பல் கப்டனின் பெறாமகளான தானியா ஜேசுதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.8-Sri-Lankans-captured-by-Somali-pirates

அவர் தனது பெரியப்பாவின் விடுதலை குறித்து மேலும் தெரிவிக்கையில்,

எனது பெரியப்ப எமது வீட்க்கு தலைவனாகவும் எமக்கு எல்லாவளிகளிலும் பக்கபலமாக இருந்து வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்வார். என்னுடன் அவர் தொடர்பு கொள்ளாத நாளே இருக்காது. 8-Sri-Lankans-captured-by-Somali-pirates

எப்படியாவது தொடர்புகொண்டு அவரது வேலை, எங்கு பயணிக்கவுள்ளார் போன்ற விபரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவ்வாறு பயணிக்கும் வேளைகளில் தனக்காகவும் தனது  கடமைக்காகவும் இறைவனிடம் வேண்டுமாறு தெரிவிப்பார்.

இறுதியாக எனது பெரியப்பா இன்னும் சிலருடன் கப்பலில் இருந்து எடுத்த படத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதனுடன் எனக்கு சிறிய குறுந்தகவலையும் கடந்த 8 ஆம்திகதி இரவு அனுப்பியிருந்தார். அதில் நான் மொஹாடிசுவுக்கு கப்பலில் பயணிக்கவுள்ளேன். நான் வேலைப்பளுவுடன் இருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.8-Sri-Lankans-captured-by-Somali-pirates

எனவே எனது பெரியப்பா உட்பட எட்டு பேரையும் பாதுகாப்பாக மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/17884

  • தொடங்கியவர்

கடத்தப்பட்ட இலங்கையர்களை நாம் கண்காணித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் : மங்கள சமரவீர

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எத்தியோபியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான தூதுவர் சுமித் திஸாநாயக்க மூலம் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு அவர்களின் நிலைமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

17349431_10206911316096133_468691541_o.j

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். இன்றும் இங்குள்ள கடத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளளோம்.

somalia.jpg

சோமாலிய அரசாங்கத்துடன் நாம் எத்தியோப்பியாவுக்கான எமது தூதுவர் மூலமாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அங்கு என்ன நிலைமை நிலவுகின்றது என்பதை இங்கிருக்கும் அவர்களது உறவினர்களுக்கு நாம் தெரியப்படுத்தி வருகின்றோம்.

இதேவேளை, சர்வதேச கப்பல் நிறுவனத்துடனும் கடத்தப்பட்ட கப்பலுக்கு சொந்தமான டுபாயிலுள்ள அலோலா கப்பல் நிறுவனத்துடனும் கொழும்பிலுள்ள ஏ.பி.சி. பீலிக்ஸ் கப்பல் முகவர் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

7ddb239c10d48da152bc219e86853316e07486ef

கடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்றுவரைக்கும் எவ்வித பிரச்சினைகளோ, தீங்குகளோ இல்லாது நலமாகவுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிப்பதற்கு சோமாலிய அரசாங்கம் உதவியளிப்பதாக  கடத்தப்பட்ட ஆரிஸ்-13 என்ற கப்பலுக்கு சோமலிய அரசாங்கமும் பூன்ட்லாந்து மாநில அரசாங்கமும் பாதுகாப்பளித்து கண்காணித்து வருகின்றன.

குறித்த கப்பல் பூன்ட்லாந்து நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள கபோ துறைமுகத்தில் தரிந்து நிற்பதாகவும் அக்கப்பல் அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் எத்தியோபியாவிற்கான எமது தூதுவர் தெரிவித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/17882

  • தொடங்கியவர்

கடத்தப்பட்ட கப்பலின் கப்டன் அத தெரணவிடம் பேசினார்

 
 

கடத்தப்பட்ட கப்பலின் கப்டன் அத தெரணவிடம் பேசினார்

 

 


சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலின் கப்டன் எஸ்.ஏ. நிகலஸ் சற்றுமுன்னர் தொலைபேசியினூடாக அத தெரணவுடன் பேசினார்.

தற்போது அதிகளவான கடற்கொள்ளையர்கள் தமது கப்பலினுள் இருப்பதாக அவர் தொலைபேசியினூடாக எம்மிடம் கூறினார்.

அத்துடன் சோமாலிய கடற் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கூறும்படி இலங்கை அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்காக அந்த நாட்டு கடற் பாதுகாப்பு படையினரால் விஷேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையர்களுக்கும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கப்பலின் கப்டன் அத தெரணவிடம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்சமயம் சோமாலிய பாதுகாப்பு தரப்பினரின் கப்பல்கள் கடத்தப்பட்ட கப்பலை சூழ்ந்துள்ளதால், கப்பலில் உள்ளவர்களுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பபட்டுள்ளதாக கூறினார்.

பாதுகாப்பு தரப்பினரை அங்கிருந்து விலகுமாறு கடற்கொள்ளையர்கள் கூறியிருபப்பதாகவும், இல்லையேல் தமக்கு உயிராபத்து ஏற்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

இதன்காரமாக ஊடகங்களின் வாயிலாக சோமாலிய பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு கப்பலின் கப்டன் அத தெரணவிடம் கூறினார்.

இதேவேளை அத தெரணவிடம் பேசிய கப்பலின் பிரதானி, கப்பலில் பாரியளவான எண்ணெய் இருப்பதாகவும், இதனால் சோமாலிய பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறும் கூறினார்.

தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதால் தமக்கு உயிராபத்து ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=89242&mode=lead

  • கருத்துக்கள உறவுகள்

இவயள் 70 பேரும் காசை வாங்கிக் கொண்டு எங்க, எப்படி ஓடப் போகினம்.?

கொலிவூட் படமும் எடுத்தாச்சு... சோமாலியள் லம்பா அமத்த நிக்கினம். 

இக் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்து விட்டனர். எந்த மாலுமிக்கும், எவருக்கும் பாதிப்பு இல்லை என bbc தெரிவித்துள்ளது.

தன் பெரியப்பாவின் விடுதலையால் மகிழ்வுறும் ஏ.ரி. நிக்ளஸின் பெறாமகள் தானியா ஜேசுதாசன் அவர்களின் சந்தோசத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்

செய்தி ஆங்கிலத்தில்:

--------------------------------------------------------------------------------------------

Somali pirates who hijacked an oil tanker have released it without condition, according to officials.

The announcement came hours after the pirates and naval forces exchanged gunfire over a boat believed to be carrying supplies to the hijackers.

The tanker, which was en route from Djibouti to the Somali capital, Mogadishu, was seized on Monday with eight Sri Lankan crew members on board.

It is the first hijack off Somalia's coast since 2012.

Abdirahman Mohamud Hassan, the director general of the Puntland maritime police force, said: "There has been discussion going on after the gunfight this afternoon... We took our forces back and thus the pirates went away."

A pirate confirmed the release was made without a ransom payment, according to Reuters.

However, John Steed, a former British army officer who has spent years negotiating the release of piracy hostages in Somalia, told the AFP news agency they had been made an offer they could not refuse.

Mr Hassan earlier said that "pirates" on board the tanker had opened fire on Thursday after authorities tried to intercept a boat believed to be carrying essential supplies, such as food.

Four people were wounded in the exchange of fire on Thursday, the BBC has learned.

The Puntland authorities deployed local forces in the area in an attempt to assist rescue efforts for the hostages on board the vessel, the district commissioner said.

The vessel was carrying oil and was owned by the United Arab Emirates (UAE), despite conflicting reports over the flag it was sailing under, he added.

On Wednesday, the European Union anti-piracy naval force, which is helping to tackle piracy in the region, said the hijackers had been demanding a ransom.

Authorities were then still trying to determine whether the gunmen, who have not given any details about the size of the ransom, were organised pirates or fisherman whose equipment was destroyed by illegal fishing vessels, as they claimed to be to a local official.

The EU force earlier made contact with the ship's master, who said his vessel and crew were being held captive anchored off the coast of north-east Somalia. The ship's tracking system has reportedly been switched off.

Piracy off the coast of Somalia, usually for ransom, has reduced significantly in recent years, in part because of extensive international military patrols as well as support for local fishing communities.

At the height of the crisis in 2011, there were 237 attacks and the annual cost of piracy was estimated to be up to $8bn (£7bn).

However, some smaller fishing vessels have recently been seized in the area.

 
Media captionColin Freeman went to report on the pirates and ended up as their hostage

In 2015, Somali officials warned that piracy could return unless the international community helped create jobs and security ashore, as well as combating illegal fishing at sea.

Some Somali fishermen turned to piracy after their livelihoods were destroyed by illegal fishing from foreign trawlers, which benefited from the lack of a functioning coastguard in the country following years of conflict.

http://www.bbc.com/news/world-africa-39295936

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இவயள் 70 பேரும் காசை வாங்கிக் கொண்டு எங்க, எப்படி ஓடப் போகினம்.?

கொலிவூட் படமும் எடுத்தாச்சு... சோமாலியள் லம்பா அமத்த நிக்கினம். 

இந்தக் குற்றவாளிகள் அனைவரும் கொலைகாரர்கள் என்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சாட்சி சொன்னபோதும். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற தீர்ப்பைப் பெற்று சுதந்திரமாக வாழவைத்திருக்கும் ஒரு நாட்டின் பிரசையான உங்களுக்கு இந்தச் சந்தேகம் வருவது நியாயமல்ல.  :shocked:

  • தொடங்கியவர்
8 இலங்கையர்களும் விடுதலை
 
17-03-2017 06:04 AM
Comments - 0       Views - 33

article_1489660533-ssss.jpgசோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஏரிஸ் 13 என்ற பெயரைக்கொண்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சோமாலிய கடற்படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்த போதிலும் கப்பம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/193299/-இலங-க-யர-கள-ம-வ-ட-தல-#sthash.1YHrrx9A.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான்... விசயம்.. முன்பு கப்பம் கேட்ட போது சோமாலியாவை துண்டுகளாக்கி... ஆயுத்தக்குழுக்கள் ஆண்ட காலம்.

கப்பத்தை வாங்கி.... கப்பலில் இருந்த இருவரை பணயமாக்கி தம்முடன் இழுத்துப் போய்... தமது பகுதிக்குள் சென்று தப்புவர்.

இப்போது சோமாலியாவின் ஏதோ ஒரு பகுதி குழுவை அரசாக அங்கீகரித்து, பணம்... படை கட்டுமானம்... பயிற்சி.. ஆயுதம் கொடுத்துள்ளது சரவதேசம்.

சர்வதேச படைகளை எதிர்பார்தால், சோமாலிய கடற்படை வர.... தமது game is up என்று புரிந்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.