Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு

Featured Replies

ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு

 

 

ரவிராஜ் கொலை: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெறுமாறு உத்தரவு
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் மூவரது வசிப்பிடங்களைக் கண்டறிவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது.

குறித்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறு கோரி, சசிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மீளாய்வு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எச்.ரி.ஜே. மடவல மற்றும் எல்.சீ.டீ. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரரான சசிகலா சார்பாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

ரவிராஜ் கொலை வழக்கில் விடுதலை பெற்றுள்ள கடற்படை உறுப்பினர்கள் மூவரினதும் வதிவிடங்களைக் கண்டறிய முடியாதுள்ளதால், அவர்களிடம் நீதிமன்ற அறிவித்தலைக் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணியின் காரணங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனு தொடர்பான விசாரணையை ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்தது.

 

http://newsfirst.lk/tamil/2017/03/ரவிராஜ்-படுகொலை-குற்றப்/

  • தொடங்கியவர்

ரவிராஜ் கொலை விவ­காரம்:

Sp06-52c8641bff934a4221d07f39124dce42012076d7.jpg

 

விடு­விக்­கப்­பட்ட கடற்­ப­டை­யினர் எங்கு உள்­ளார்கள் என தெரி­யாது : கடற்­படை தள­பதி நீதி­மன்­றுக்கு அறி­விப்பு  
(எம்.எப்.எம்.பஸீர்)

படு­கொலை செய்­யப்­பட்ட யாழ். மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் விவ­கா­ரத்தில் குற்­ற­மற்­ற­வர்கள் என கருதி  விடு­தலை செய்­யப்­பட்ட கடற்­படை வீரர்கள் மூவரும் எங்கு எப்­படி உள்­ளார்கள் என தமக்கு தெரி­யாது என கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்ர விஜே­கு­ண­ரத்ன நேற்று மேன்முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். 

படுகொலை செய்­யப்ப்ட்ட முன்னாள் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொலை வழக்கில் பிர­தி­வா­திகள் அனை­வரும் குற்­ற­மற்­ற­வர்கள் எனக் கருதி சிறப்­புகள் ஜூரிகள் சபை விடு­வித்­த­மைக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான ரவி ராஜின் மனைவி தாக்கல் செய்த மீளாய்வு மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே கடற்­படை தள­பதி சிறப்பு அறிக்கை ஊடாக இதனை மன்­றுக்கு அறி­வித்தார்.

இந்த மேன் முறை­யீட்டில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக பெய­ரி­டப்­பட்­டுள்ள, ரவிராஜ் கொலை தொடர்பில் கைதாகி குற்­ற­மற்­ற­வர்கள் எனக் மேல் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட பிர­தி­வா­திகள், மன்றில் ஆஜ­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அறி­வித்தல் விடுத்தும் அதனை கைய­ளிக்க அம்­மூ­வரும் எங்­குள்­ளார்கள் என்­பது தெரி­யாது என குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அரி­வித்­தி­ருந்த நிலையில் கடற்­படை தள­பதி ஊடாக அறி­வித்தல் கைய­ளிக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே அவர்கள் எங்கு உள்­ளார்கள் என்­பது தனக்கு தெரி­யாது என கடற்­படை தள­பதி நேற்று அறிக்கை ஊடாக நீதி­மன்­றுக்கு அரி­வித்­துள்ளார்.

அதன்­படி யாழ். மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவி ராஜ் மற்றும் அவ­ரது மெய் பாது­கா­வலர் பொலிஸ் காண்ஸ்­டபிள் லக்ஷ்மன் லொக்­கு­வெல்ல ஆகி­யோரின் படு­கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதி­மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து மீள் விசா­ரணை ஒன்­றுக்கு உத்­த­ர­விட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் ஆராய அது குறித்த மனு­வா­னது மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான எஹ்.சீ.ஜே.மட­வல, எல்.டி.ஓ. தெஹி­தெ­னிய ஆகியோர் முன்­னி­லையில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது மனு­தாரர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் மன்றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, கடந்த தவணை அறி­வித்தல் பிர­காரம் பொறுப்புக் கூறத்­தக்­கக தரப்­பாக பெய­ரி­டப்­பட்­டி­ருந்த மேல் நீதி­மன்­றினால் விடு­விக்­கப்­பட்ட ரவிராஜ் கொலை சந்­தேக நபர்­க­ளான மூன்று கடற்­படை வீரர்­களும் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

இந் நிலையில் மூன்று கடற்­படை வீரர்கள் தொடர்­பி­லான கடற்­படை தள­ப­தியின் அறிக்­கை­யா­னது மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் போதே அவர்கள் உள்­ளார்கள் என்­பது தனக்கு தெரி­யாது என கடற்­படை தள­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த மனு­தாரர் தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், மேல் நீதி­மன்­றினால் ரவி ராஜ் கொலை விவ­கா­ரத்தில் விடு­விக்­கப்­பட்ட மூன்று கடற்­படை வீரர்­களில் ஒரு­வ­ரான பிரசாத் ஹெட்டி ஆரச்சி என்­ப­வ­ருக்கு எதி­ராக 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்­பிலும் பிடி­யாணை உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இதனையடுத்து இவ்வழக்கில் பொறுப்புக் கூறத் தக்க தரப்பான குறித்த மூன்று கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க குற்றப் புலனயவுப் பிரிவின் உதவியுடன் நடவடிக்கை எடுக்க உத்தர்விட்ட நீதிபதிகள் இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-29#page-1

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை குண்டுவெடிப்பு.... உதவியவராம் என்று ஒருவருக்கு 20 வருடம் குடுக்க முடியும்.

இங்கே குற்றம் சாட்டப்பட்டவர்களது முகவரியே தெரியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே பிடியாணை இருந்தது சும் இற்கு தெரியவில்லை இதில வேற பீலா விடுறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.