Jump to content

கனத்த என் இதயம்,


Recommended Posts

பதியப்பட்டது

இரும்பாய் கனத்த என் இதயம் 
துடுப்பிழந்த படகைப்போல் அலைகளால் 
இழுத்து செல்லப்பட்டு அன்னிய 
தேசத்தில் அனாதையாய் எங்கெங்கோ 
புலப்படும் ஒளி இழந்த மின் விளக்குகள் 
போல் தெரிகிறேன் கொஞ்சம் கொஞ்சமாய் !

என்னுள் அன்று இழந்தவையோ 
இருக்கின்றன இன்னும் 
அணையாமல் நினைவெனும் 
நினைவிடத்தில் !

என் நிதர்சனத்தின் நீண்ட
பயணத்தில் நீங்காது
நீள்கின்றன நீறு பூத்த 
ஆறாத ரணங்களாய்
எட்டாண்டின் நினைவுகள் !

காலச்சுழற்சியில் கற்பனைகளும் 
கலைந்துப்போக வன்னி மண் நினைவுகள் 
மட்டும் என் உணர்வை விலை பேசியதாய் 
ஏன் தானோ நிலையாய் நிற்கின்றன?

உணர்வுகள் உருக்குலைந்தன
உறவுகளும் உடைந்துபோகின
நிதானமான என்னை நிர்கதியாக்கின 
அன்றைய நாள்...
என்னை நித்தமும் நிர்குலைய 
செய்கின்றன இறுதி வரை 
இணைந்திருந்த எம் மண் 
வாசனையின் நியாயமான 
நினைவுகள் !

அறுந்து போயின பாச 
பிணைப்புகள் !
மரத்து போயின என் மன
உணர்வுகள் !
புளுதி படிந்த வீதியும் 
அன்றைய நினைவுகளும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னுள் அன்று இழந்தவையோ 
இருக்கின்றன இன்னும் 
அணையாமல் நினைவெனும் 
நினைவிடத்தில் !

 

நினைவுகள்   அலை   போன்றன மீண்டும்மீண்டும்  ஆர்ப்பரித்துக்கொண்டே    இருக்கும் .........தொடருங்கள் 

Posted

நிட்சயமாக. ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறுந்து போயின பாச 
பிணைப்புகள் !
மரத்து போயின என் மன
உணர்வுகள் !
புளுதி படிந்த வீதியும் 
அன்றைய நினைவுகளும்...

 

உண்மைதான் ....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13.4.2017 at 10:47 PM, yakavi said:

உணர்வுகள் உருக்குலைந்தன
உறவுகளும் உடைந்துபோகின

நிதானமான என்னை நிர்கதியாக்கின 
அன்றைய நாள்...
என்னை நித்தமும் நிர்குலைய 
செய்கின்றன இறுதி வரை 
இணைந்திருந்த எம் மண் 
வாசனையின் நியாயமான 
நினைவுகள் !

இன்று... புலம் பெயர் தேசத்தில்,  பலருக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை இது. 
கவிதைக்கு நன்றி, யாகவி.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.